Archive for the ‘பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்’ category

ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057

கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை!

செப்ரெம்பர் 11, 2011

கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை!

மாறிவரும் ஜிஹாதின் கொலை ஆயுதங்கள், கருவிகள்: இடைக்காலத்திலிருந்து, நாகரிகம் வளர்ந்த நிலையில் ஜிஹாதின் உருவமும் பரிணாம வளர்ச்சிப் போன்று மாறித்தான் வந்துள்ளது. கத்தியிலிருந்து, குண்டுவெடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பாகிஸ்தானில் வெடிப்பது வேறு, இந்தியாவில் வெடிப்பது வேறு என்பதில்லை, எல்லாமே, காஃபிர்களுக்கு எதிராக நடத்துவது தான் ஜிஹாத். முஸ்லீம்கள், முஸ்லீகளுக்கு எதிராகவே ஜிஹாதை நடத்துவார்களா என்று கேட்டால், ஆமாம், நடத்துவார்கள். இஸ்லாம் உருவான சரித்திரமே அத்தகைய ஜிஹாத் சண்டைகள், கொலைகள், குரூரங்கள் தாம். பல இஸ்லாமிய விற்ப்பன்னர்கள், குரானைக் கரைத்துக் குடித்த வித்வான்கள் இதனை பலமுறை எடுத்துக் காட்டியுள்ளனர். ஒரு முஸ்லீம் அதுத்த முஸ்லீமை, ஒரு முஸ்லீம் குழுமம் அடுத்த முஸ்லீம் குழுமத்தை, ஒரு முஸ்லீம் சமூகம் அடுத்த முஸ்லீம் சமூகத்தை, ஒரு முஸ்லீம் நாடு அடுத்த முஸ்லீம் நாட்டை, “காஃபிர்கள்” என்று அறிவித்துவிட்டால்,  “ஜிஹாத்” துவங்கிவிடும், விளைவுகள் வெளிப்பட்டுவிடும். இதுதான் ஜிஹாதின் உண்மையானத் தன்மை[1].

07-09-2011 (புதன்கிழமை): டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற விஷயங்கள் எல்லாமே வழக்கம் போலத்தான் இருக்கிறது.

‘ப்ரீப்கேஸ்’ குண்டு: வெடிகுண்டு ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டுவிட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தசம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சந்தேகப் பேர்வழிகளின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஹூஜி அமைப்பிடமிருந்து  / பெயரில் வந்த இமெயில்கள் – அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம்[2]: இந்த நிலையில் நேற்று ஹூஜி அமைப்பிடமிருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த மெயிலில், டெல்லி குண்டுவெடிப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியிருந்தனர். வழக்கமாக ஹூஜி அமைப்பு இதுபோல மெயில் அனுப்புவது கிடையாது என்பதால், இந்த மெயில் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சியில் தேசிய புலனாய்வுப் படையினர் இறங்கினர். அதில் மெயில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட குளோபரல் சைபர் கபே என்ற இன்டர்நெட் மையத்தின் உரிமையாளரைப் பிடித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தினர்.

இன்டர்நெட், அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள்: இப்படி அத்தாட்சிகள் எளிதாக இருக்கும் போது, வழக்கம் போல விசாரணையின் இறுதியில், உரிமையாளரான 28 வயதான மகமூத் அஜீஸ் காஜா, அவரது சகோதரர் காலித் ஹூசேன், பணியாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இன்டர்நெட் மையத்திற்கு 18 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்தான் இந்த மெயிலை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்கள் பலர் உள்ளனர். 2005ம் ஆண்டு அயோத்தியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமான நபர் கிஷ்த்வாரில்தான் போலீஸார் நடத்திய வேட்டையின்போது கொல்லப்பட்டார். இதன் காரணமாக கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம் என்று முன்னதாக ஹூஜி மெயிலில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரமும், இஸ்லாமிய தீவிரவாதமும், ஜிஹாதும், குண்டுவெடிப்புகளும்:  உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இந்தியாவில் எங்குமே குண்டுவெடிக்காத நிலையை உருவாக்கி வைத்திருந்தார் என்று சில ஊடகங்கள்[3] கூறினாலும்,  ஜூலை 14ம் தேதியன்று மும்பையில் மூன்று இடங்களில் பலத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து 21 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வழக்கம் போல, “நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என்று சொன்னதோடு சரி”. காஷ்மீரத்தில் வளர்ந்து விட்டுள்ள ஜிஹாத்-இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்காமல், மெத்தகப் போக்கைக் கடைபிடித்து வந்து, இந்தியாவிற்கு பல வகைகளில் பிரச்சினைகளை காங்கிரஸ் வளர்த்தூள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முதலியவை கேலிகூத்தாகி விட்டது.

குண்டு வெடிக்கும் போதெல்லாம் அயல்நாடு சென்றுவிடும் மன்மோஹன் சிங்: ஜிஹாதிகள் குண்டு வெடிக்கும் போதெல்லாம், மன் மோஹன் சிங் அயல்நாட்டிற்குச் சென்று விடுவார், அங்கிருந்து வீராப்பாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். இதேபொலத்தான் இப்பொழுதும், வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை நசுக்க வேண்டும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார், குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்[4].

காங்கிரஸ் கவர்னரை அடுத்து, குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டுகிறதாம்[5]: இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது. ஆக ஜிஹாதி தீவிரவாதிகள், சோனியா காங்கிரஸுடன் சேர்ந்தே வேலை செய்வது போல உள்ளது.

08-09-2011 (வியாழக் கிழமை) மதவாத மசோதா, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், குண்டு வெடிப்பு: குண்டு வெடித்த அடுத்த நாளே, சோனியா இந்தியாவிற்கு வந்து விட்டாராம். ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல், அகமதுபடேல், அந்தோணி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது குணமடைந்துவிட்டதால். நாடு திரும்ப முடிவு செய்தார். இந்நிலையில் 08-09-2011 அன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியா வந்ததாக செய்திகள் கூறுகின்றன[6].

09-09-2011 (வெள்ளிக் கிழமை): உடனே தேசிய ஒருமைப்பாடு குழு, மதவாத கலவர மசோதா என்று ஆரம்பித்துவிட்டது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் வருவதால், முஸ்லீம்களை தாஜா செய்வதற்காகத்தான், இந்த மசோதாவை அறிமுகப்படுத்திறார்கள்[7] என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக விவாதத்தில் உள்ளது. இந்நிலையில் தான் குண்டுவெடிப்பில், ஸ்விடசைக் கண்டு பிடித்தோம், ஆனால் டைமரைக் காணோம்[8], போனை கண்டு பிடித்தோம், ஆனால் அது குண்டுவெடிப்பில் பரிதாபமாக இறந்தவருடையது என்றெல்லாம் கேவலமாக போலீஸார் சொல்லி வருகின்றனர்[9].

காஷ்மீரை மையமாக வைத்து வளர்ந்து வரும் ஜிஹாதி குண்டு வெடிப்புகள்: பிரிவினைவாதிகள், மனித உரிமைகள் பெயரில் அவ்வப்போது கவனத்தைத் திருப்பி, ஜிஹாதிகளுக்கு சாதகமாக வேலை செய்து வருவதால் தான், காஷ்மீர், ஜிஹாதியின் தலைநகராகி விட்டது. ஜிஹாதிகளுக்கு போத மருந்து, செக்ஸ் எல்லாம் கொடுத்து, தீவிரவாத பயிற்சியினையும் கொடுத்து அனுப்புகிறது. இப்பொழுது, அங்கு குண்டுகளையும் தயாரிக்கிறது என்று தெரிகிறது[10].

 

அம்மோனியம் நைட்ரேட்டும், பி.எ.டி.என்.னும், ஜிஹாதி தொழிற்நுட்பமும்: முன்பே பல அறிக்கைகளில், ஜிஹாதிகளின் குண்டு வெடிப்பு தொழிற்நுட்பங்கள், அவற்றிற்கு வேண்டிய மூலப் பொருட்கள், அவற்றை வாங்கி சேகரித்து வைக்கும் வியாபாரிகள், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றுதல் / கடத்துதல், அத்தகைய “சாதாராண முஸ்லீம்கள்” தெரிந்தே குண்டுவெடிப்பு ஜிஹாதிகளுக்கு உதவி வருதல் முதலியற்றை எடுத்துக் காட்டப் பட்டன. இப்பொழுது, மறுபடியும் அத்தகைய விவாதம் வந்துள்ளது. PETN (Penta-erythritol Trinitrate) என்ற ரசாயனப் பொருள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது[11]. காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு இதுதான் பிடித்தமான குண்டுவெடிப்பு மூலப் பொருளாம்[12]. ஏற்கெனவே லஸ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹித்தீன், அல்-குவைதா போன்ற ஜிஹாதி அமைப்புகளுக்கு, இது மிகவும் பிடித்தப் பொருளாக இருந்து வருகிறது[13]. முதுகல் சகோதர்கள் இந்த ரசாயன குண்டு தயாரிப்புகளில் வல்லவர்கள். அவர்கள் கெமிக்கல் இஞ்ஜினியரிங் படித்தது மட்டுமல்லாமல், மற்ற இளைஞர்களையும் ஊக்குவித்து, படிக்க வைத்து, தொழிற்சாலைகளை வைத்து, அதற்காக ரசாயனப் பொருருட்கள் வேண்டும் என்று இறக்குமதி செய்து, வாங்கி, சேகரித்து வைத்து விநியோகம் செய்து வருகின்றனர். பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் எல்லா சோதனைகளையும் ஏமாற்றி விடும், கண்டு பிடிக்க முடியாது என்று அறிந்துதான், இதை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்துகின்றனர்[14]. ஆனால், சோனியா காங்கிரஸின் அடக்குமுறையில், போலீஸார் மற்ற உளவு நிறுவனங்கள், இந்த விஷயங்களில் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றனர். அரசியல் முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே பார்த்து, ஓட்டு வங்கி சிதறிவிடும், ஆட்சி போய்விடும், கிடைக்கின்ற அனைத்துலக வசதிகள் போய்விடும் என்ற காரணங்களுக்காக, ஜிஹாதிகளையும், இஸ்லாமிய தீவிரவாதிகளையும் “முஸ்லீம்களாகவே” பார்க்கின்றனர். இங்குதான், இந்த போலித்தனமான அரசியல்வாதிகளும், முஸ்லீம்களும் ஏமாந்து விடுகின்றனர். இதனால் அத்தகைய வெடிப்பொருட்கள், ரசாயனங்கள் முதலியவற்றை விற்பது-வாங்குவது முதலியவற்றையும் கட்டுப்படுத்தாமல், சோனியா காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது[15]. பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்டை இறக்குமதி செய்பவர்கள், வாங்குபவர்கள்[16], உபயோகிப்பவர்க்ளை[17] விசாரித்தால், இந்த “நெட்வொர்க்கை”ப் பிடுத்துவிடலாம்.

வேதபிரகாஷ்

11-09-2011


[1] Rafiq Zakaria, The Struggle within Islam – the conflict between religion and politics, Viking, New Delhi, 1988.

[10] In the Mumbai serial bombings ammonium nitrate with traces of PETN mixed with fuel oil and a detonator were used in the three blasts, which, sources said, was a “trademark” IM explosive. However, in the Delhi blast the bomb was made up primarily of PETN with traces of ammonium nitrate. Interestingly, PETN is used heavily by militant outfits operating in the Kashmir Valley. “This clearly proves that IM is not alone in these operations. They are being assisted and backed by a Kashmir terror outfit, which, in all probability, could be the Lashkar-e-Tayyaba, though HuJI is also under the scanner,” a source said. Sources confirmed that a switch had been found at the blast site.

http://www.deccanchronicle.com/channels/nation/north/delhi-blast-bomb-makeup-shows-jk-outfit-hand-907

[12] PETN, which has become popular over the years because it does not get easily detected, is not used in isolation but is laced with more volatile explosives like Ammonium Nitrate or Potassium Nitrate to increase the intensity of the blast. The chemical normally used as vasodilator in the medical field gained notoriety in India between 2003-05 when militants in Jammu and Kashmir used it in many of their attacks with most deadly being a car bombing in Pattan, North Kashmir in 2003. In 2010 blast in Varanasi also the use of PETN was suspected by investigative agencies.

[14] PETN is one of the most powerful explosives and is difficult to detect. Because of its plastic nature, the explosive can easily pass metal detectors. Even bomb-sniffing dogs cannot detect it because of its low pressure molecules. The explosive allows terrorists to use only small quantities for causing enormous damage. Even 100 grams of PETN is enough to blast away a car.