Archive for the ‘பெண் சுன்னத்’ category

குதுபுதீன் நஜீம்– பள்ளி தாளாளரின் பாலியல் பிரச்சினை, மாணவிகள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தது, விவகாரம் வெளிப்பட்டு கைதானது!

பிப்ரவரி 6, 2023

குதுபுதீன் நஜீம் – பள்ளி தாளாளரின் பாலியல் பிரச்சினை, மாணவிகள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தது, விவகாரம் வெளிப்பட்டு கைதானது!

செக்யூலரிஸ பாலியல் பிரச்சினை, மதசார்பற்ற விவகாரங்கள், அணுகும் முறை: பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தேறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவாக சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. சென்ற வருடம், இத்தகைய இரச்சினை பற்றி தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. ஆனால், சிறுபான்மையினர் பள்ளிகளின் பாலியல் விவகாரங்கள் மறைக்கப் பட்டன. பிறகு, செக்யூலரிஸத் தனமாக, ஒன்று கிருத்துவப் பள்ளி, இன்னொன்று முஸ்லிம் பள்ளி என்று செய்தி வெளியிடப் பட்டு, பாலியல் குற்ற வழக்குகள் அமைதியாகி விட்டன. “சிவசங்கர் பாபா” போன்று துப்பறிய நக்கீரனும் குதிக்கவில்லை, துடிக்கவில்லை. இப்பொழுது, இன்னொரு வழக்கு செய்தியாக வருகிறது.

900 மாணவிகள் படித்துவரும் பள்ளியில் தாளாளரின் பாலியல் அத்துமீறல்: நெல்லையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பள்ளியின் தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்குத் துணையாக அவரின் மனைவியும் பள்ளித் தலைமை ஆசிரியையும் இருந்தது தெரியவந்திருக்கிறது. ஆக, திட்டமிட்டு, கூட்டாகத்தான் இந்த பாலியல் தொல்லை, செக்ஸ் குற்றம் அரங்கேற பெண்களே துணையாக இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் செல்கிற சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டுவருகிறது[1]. 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள அந்தப் பள்ளியில் 900 மாணவிகள் படித்துவருகிறார்கள்[2]. பள்ளியின் தாளாளராக குதுபுதீன் நஜீம் (47) என்பவர் இருக்கிறார்[3]. பள்ளியில் தலைமை ஆசிரியையாக காதரம்மாள் பீவி (57) பணியாற்றி வருகிறார்[4]. இந்தப் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம், தனது அறைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்[5]. பிறகு, மாணவிகள் ஏன், எதற்கு சென்றனர் என்று ஊடகங்கள் விவரிக்கவில்லை.

04-02-2023 அன்று விவகாரம் வெளிவந்தது: இரு தினங்களுக்கு முன்பு 04-02-2023 அன்று வழக்கம்போல குதுபுதீன் நஜீம் தனது அறைக்கு மூன்று மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்[6]. அதனால் அச்சம் அடைந்த மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், நடந்த விவரங்களை சக மாணவிகளிடம் சொல்லி அழுதிருக்கின்றனர்[7]. “அச்சம்” அடையும் நிலைக்கு, உச்சத்திற்கு அப்படி செய்தார் என்று தெரியவில்லை. அதாவது, இப்பொழுது இவ்விவகாரம் வெளிப்பட்டு விட்டது என்றாகி விட்டது. அறையிலிருந்து தப்பி ஓடும் அளவுக்கு அந்த காமுகன் அறைக்குள் என்னமோ செய்திருக்கிறான். அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்[8]. மேலும், பாலியல் தொந்தரவு சம்பவம் மூன்று மாதங்களாக நடந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன, என்று விகடன் கூறுகின்றது. பிறகு, மூன்று மாதங்களாக, ஏன் அமைதி காக்க வேண்டும், விசயங்கள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்று புரியவில்லை.

இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது: தகவலறிந்து வந்த பெற்றோர், இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது[9]. “இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது,” என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது. அதாவது, சிறுபான்மையினர், மைனாரிட்டி, முஸ்லிம்கள் என்றால், “நமக்கு எதற்கு பிரச்சினை, வம்பு……,” அல்லது, தாக்கப் படலாம்………………………போன்ற அச்சமும் உருவாகும் தன்மை அறியப் படுகிறது. இதனால், போலீஸாரும் மற்றவர்களும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்கு காணப் படுகிறது. இப்பொழுது, “வடக்கன், வடக்கத்தியர்……” என்றெல்லாம் பாகுபாடு பார்க்கப் படுகிறது, அவ்ர்களால் தான் பிரச்சினை, குற்றங்கள் என்ற நிலையில் விமர்சிக்கும் போக்கு, செய்தி வெளியிடல் போன்றவையும் சகஜமாகி விட்டது. ஆனால், பாலியல் குற்றங்கள் என்று வந்தால், “பத்மா சேஷாத்ரி” போன்ற வேகம், தீவிரம், துப்பறியும் தன்மை எல்லாம் வருவதில்லை, அப்படியே அடங்கி விடுகிறது. ஏதாவது, ஒரே ஒரு செய்தி இப்படி வெளிவந்து விட்டால், அதை மட்டும் பி.டி.ஐ பாணியில், அப்படியே போட்டு அடங்கி விடுவர். பிறகு, என்னவாயிற்று என்று கண்டுகொள்வதில்லை.

முதலில் பேச்சு வார்த்தை நடந்தது: சம்பவ இடம் வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[10]. அதனை ஏற்று பொதுமக்கள், முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஆக, அத்தனை அதிகாரிகள் வரவேண்டியுள்ளது போலும். உடனடியாக அங்கு சென்ற மேலப்பாளையம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அமைதியை ஏற்படுத்தினர்.

பிறகு முறையாக போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இந்த நிலையில், பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகாரளித்தனர். அதாவது சட்டப் படி நடவரிக்கை எடுக்க வேண்டிய முறை ஆரம்பிக்கப் பட்டது என்று தெரிகிறது. எனெனில், எங்களூகு எந்த புகாரும் வரவில்லை என்று போலீஸார் சொல்லலாம். மூன்று மாதங்கள் அவ்வாறே காலம் கடந்திருக்கலாம். இப்பொழுது, புகார் கொடுத்த பட்சத்தில், அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, போலீஸார் மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதாவது, விசாரணையே இப்பொழுது தான் ஆரம்பிக்கப் படுகிறது. அதில் பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது, என்று ஒரே வரியில் செய்தி முடிகிறது, அல்லது முடிக்கப் படுகிறது. அந்த விவரங்களும் கொடுக்கப் படவில்லை. .

05-02-2023 அன்று கைது செய்யப் படுவது: இது தொடர்பாக மாணவிகள் சிலர் ஏற்கெனவே பள்ளித் தலைமையாசிரியை காதரம்மாள் பீவியிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. அவரும் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர், தாளாளர்மீது புகார் தெரிவித்த மாணவிகளை அழைத்து பாடங்களில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்[11]. இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கின்றனர்[12]. இதெல்லாம் மாணவிகளை எந்த அளவுக்கு, மனரீதியில் மிரட்டப் பட்டு, கட்டுப் படுத்தி வைக்கப் பட்டுள்ளனர் என்பதனை காட்டுகிறது. இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[13]. அதனால் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தாளாளர் உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் 05-05-2023 அன்று கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்[14]. எனவே, இனி மேல் என்ன நடக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

05-02-2023.


[1] நக்கீரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தாளாளர் உள்பட மூவர் கைது, ப.ராம்குமார், Published on 06/02/2023 (16:06) | Edited on 06/02/2023 (16:45)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/3-people-including-school-principal-nellai-were-arrested-by-pocso

[3] நக்கீரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மூவர் போக்சோவில் கைது , நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/02/2023 (13:11) | Edited on 06/02/2023 (13:29).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tirunelveli-melapalayam-government-aided-school-incident

[5] தமிழ்.இந்து,  திருநெல்வேலி | பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைது, செய்திப்பிரிவு, Published : 06 Feb 2023 06:35 AM; Last Updated : 06 Feb 2023 06:35 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/939639-school-principal-arrested.html

[7] சமயம், நெல்லையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முதல்வர், தாளாளர் உட்பட 3 பேர் கைது..!, Authored by திவாகர் மேத்யூ | Samayam Tamil | Updated: 5 Feb 2023, 3:00 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/3-persons-including-the-principal-were-arrested-in-the-case-of-sexual-harassment-of-schoolgirls-in-nellai/articleshow/97621351.cms

[9] மாலைமலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது, By Maalaimalar, 5 பிப்ரவரி 2023 11:04 AM

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-harassment-case-school-principal-arrested-568756

[11] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளா் உள்பட மூவா் கைது, By DIN  |   Published On : 06th February 2023 07:12 AM  |   Last Updated : 06th February 2023 07:12 AM

[12] https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2023/feb/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3996171.html

[13] விகடன், நெல்லை: பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகைதான மூவர்!, பி.ஆண்டனிராஜ், Published: Today 06-02-2023 at 9 AM; Updated:Today at 9 AM.

[14] https://www.vikatan.com/news/crime/three-persons-arrested-including-a-school-correspondent-for-sexual-harassment

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

ஜூலை 13, 2018

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

FMG - India demonstrates

இஸ்லாமிய பெண்கள் ஏன் தங்கள் உரிமைகளுக்காக வழக்குகள் போடுகிறார்கள்?: இஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் [Female Genital Mutilatatiom – FGM] விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது[1]. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

FMG - India demonstrates-2

முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, பிஜேபி இஸ்லாத்தை எதிர்க்கிறது: உண்மையில் இஸ்லாம் பெண்கள் தான், இவ்வழக்குகளை போட்டது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத / தடை செய்யப்பட்ட வழக்கங்கள் இந்தியாவில் தொடவது, முஸ்லிம் பெண்களை அடக்கி ஆள்வதற்குத் தான் என்பதால், இப்பொழுது, அப்பெண்கள் வெளியில் வந்து வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மேலும் இக்காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் பெண்கள் நிலை எவ்வாறுள்ளது என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது, என்று “நக்கீரன்” கூறுகிறது[2].

FMG - India demonstrates-3

கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன: ஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில்  குறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் இது செய்தால் பெண்களை அதிக நேரத்திற்கு அனுபவிக்கலாம் என்ற எண்ணத்திலும் வலுக்கட்டாயமாக செய்யப்படுகிறது.

FMG - India demonstrates-4

கட்னா, காஃப்த் முதலிய பழக்கங்கள்:  இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்தோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.

FMG - India demonstrates-5
காங்கிரஸ் வழக்கறிஞர் சிக்வியின் வாதம்: சிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார்[3]. “கட்னா” போன்ற சடங்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது என்றும் வாதிட்டார்[4]. உண்மையில் அது ஆண்களுக்கு செய்யப்படுவது. இருப்பினும் இப்படி வாதிட்டு, வழக்கை தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டார்[5]. இந்த குழுமத்திற்காக, இப்படி சொன்னேன், இவர்களுக்கு இப்படி சொன்னேன் என்பதை விட, அல்லது சிங்வி ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்றெல்லாம் வாதிடுவதை விட, பொது மக்களுக்கு காங்கிரஸ் தன்னுடைய நிலைமை என்ன என்று எடுத்துக் கூறலாம்[6]. மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.

FMG - India demonstrates-6

இந்தியாவில் இதைப்பற்றிய நிலைமை: இந்தியாவில், இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இதுவரை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு முழுமையான தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், ஊடகங்களில் செய்திகல் அவர ஆரம்பித்துள்ளன. அதன்படி 2012-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் (Prevention of children from sexual offences act 2012) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என மனுதாரரின் சார்பில் குறிப்பிடப்பட்டது[7]. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ‘பெண்ணுறுப்பு சிதைப்பு’ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-7

[1] நக்கீரன், பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்?, ஆதனூர் சோழன், Published on 10/07/2018 (18:34) | Edited on 10/07/2018 (18:42)

[2] https://nakkheeran.in/special-articles/special-article/why-does-religion-allows-touch-female-genital-organ-sunnath-islam

[3] Senior advocate A.M. Singhvi, appearing for a Muslim group, said the matter be referred to a constitution bench as it pertained to the issue of essential practice of the religion which needed to be examined.

[4] The Week, Genital mutilation violates bodily ‘integrity’ of girl child: SC, PTI | New Delhi July 09, 2018 22:16 IST

[5] Singhvi, on the other hand, referred to the practice of male circumcision (khatna) in Islam and said that it has been allowed in all countries and this is the accepted religious practice and sought adjournment of the hearing.

https://www.theweek.in/news/india/2018/07/09/genital-mutilation-violates-bodily-integrity-of-girl-child-sc.html

[6] India Today, Viral Test: Does Congress support female genital mutilation, Anand PatelNikhil Dawar , New Delhi, July 12, 2018; UPDATED: July 13, 2018 14:07 IST

https://www.indiatoday.in/fact-check/story/viral-test-congress-singhvi-female-genital-mutilation-1284346-2018-07-12

[7] நியூஸ்18.ட்தமிழ், பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி, news18 , Updated: July 10, 2018, 3:07 PM IST.