Archive for the ‘புத்தகங்கள் எரிப்பு’ category

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

மார்ச் 10, 2013

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].

புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4].  குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!

ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது,  இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].

சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.

காந்திநேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

வேதபிரகாஷ்

10-03-2013


[2] Malik was seen sharing the dais with Jamaat-e-Dawa chief Hafiz Saeed, wanted for his involvement in the 2008 Mumbai terror attacks. The duo was photographed at a sit-in protest in Islamabad following the hanging of Afzal Guru. This created a flutter in the country and led to demands for cancellation of his Indian passport. No case has been registered against Malik so far either under the Passport Act or the Indian Penal Code.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-detained-at-Srinagar-airport-put-under-house-arrest/articleshow/1889

[4] The separatist leader said he had not invited Saeed, the 26/11 mastermind, at the rally called in Islamabad to protest hanging of Parliament attack convict Afzal Guru last month.”What’s the crime I have committed. I neither invited him nor was I organising the protest rally. I was an invitee myself,” said Malik, who was accompanied by S A R Gilani. Gilani was acquitted in the Parliament attack case. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-malik-srinagar-airport-hafiz-saeed-kashmir-house-arrest-reports/1/257282.html2106.cms

[7]Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!

பிப்ரவரி 1, 2012

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!

 

தேர்தல் ஜுரத்தில் காங்கிரஸ் இவ்வாறு செய்கிறதா? காங்கிரஸ் முஸ்லீம்களை தாஜாவ் செய்ய வேண்டும் என்று பலவேலைகளை செய்து வருகிறது. ராஹுல் காந்தி குல்லா போட்டுக் கொண்டு, தாடி வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்தாகி விட்டது. சோனியாவும் பைஜாமா குர்தா போட்டுக் கொண்டு, பிரச்சாரம் செய்து சென்று விட்டார். முல்லாயம் சிங் யாதவோ, தில்லி இமாமை கொண்டு வந்து ஆதரவைக் காட்டி விட்டார். சும்மா இருக்குமா, காங்கிரஸ், சல்மான் ருஷ்டியை அடுத்து தஸ்லிமா நஸ்ரினைப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரது புத்தகத்திற்கு தடை என்று ஆரம்பித்து விட்டது. புரிந்து கொண்ட முஸ்லீம்கள், புத்தக கண்காட்சி திடலுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். நல்ல வேளை, காங்கிரஸ் ஆட்சி நடக்காதத்தால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.

 

புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் தடை செய்வதேன்? ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா, சில அடிப்படைவாத முஸ்லீம்கள் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளது[1]. “தி சாட்டானிக் வெர்சஸ்” (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர். அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு மறுப்பு / தடை: இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவரது விசாவை புதுப்பிக்கக் கூட இந்திய அரசாங்கம் தயங்கியது. அதாவது, தேர்தல் ஜுரம் வந்து விட்டதால், கங்கிரஸுக்கு ஒனறும் புரியவில்லை. இந்நிலையில் அவர் எழுதிய “நிர்பஸான்” (தலைமறைவு வாழ்க்கை) என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா, கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 36வது புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

பிறகு எதிர்ப்புகளை மீறி, புத்தகம் வெளியிடப்பட்டது: “முதலில் அரங்கத்தில் நாற்காலிகள் இல்லை என்றார்கள், பிறகு வசதி இல்லை என்றார்கள்; பிறகு அடிப்படைவாதிகள் வெளியே எதிர்ப்பைத் தெரிவித்து நிற்கிறார்கள் என்றார்கள், கடைசியாக புத்தகம் அங்கு வெளியிட அனுமதி இல்லை என்றார்கள்”, என்று சிபானி முகர்ஜி என்ற புத்தக வெளியீட்டார் கூறினார்[2].  இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும், புத்தகம் வெளியீட்டாளர்களின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்[3]. அதாவது, விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மேடை / மண்டபத்திற்குவெளியே, அப்புத்தகம் வெளியிடப் பட்டது, அதனால், விற்பனைக்கும் வைக்கப் பட்டது[4]. நபரூன் பட்டாச்சார்யா என்ற எழுத்தாளர் மூலம், ஒரு புத்தக விற்பனைக் கூடத்தில் தஸ்லிமா நஸ்.ரீன் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது[5].


[2] “We had booked the auditorium but the organisers told us that it will not be available. Initially they told us that there are no chairs in the auditorium. On probing further they told us that that minority groups were protesting and had approached the city police over the release of the book. To prevent any disturbance in law and order we were asked to cancel the programme” said Shibani Mukherji, publisher, People’s Book Society, the publishers of the book series.

http://www.thehindu.com/news/states/other-states/article2850625.ece?homepage=true

[3] தினமலர், தஸ்லீமாநஸ்ரின்புத்தகம்வெளியிடஎதிர்ப்பு,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=397272

[4] Earlier, the Guild asked the publisher not to release the book after protests were reported from fundamentalists. Taslima’s publisher, People’s Book Society (PBS), thereafter released the autobiography outside the auditorium as a mark of protest.

http://timesofindia.indiatimes.com/india/Taslima-Nasreen-book-released-in-Kolkata-despite-protests/articleshow/11715067.cms

[5] The book was launched by author Nabarun Bhattacharya in the presence of Taslima’s supporters and human rights activists.

http://ibnlive.in.com/news/taslimas-book-launched-despite-protests/226224-40-100.html

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது!

பிப்ரவரி 11, 2011

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது!

பெண்களின் கல்வியை மறுக்கும் இஸ்லாமிய கூட்டங்கள்: ஆப்கானிஸ்தானிலிருந்து, வடமேற்கு பகுதியில் பாகிச்தானில் தாலிபான்கள் மற்றும் அதன் பிரிவுக் குழுக்கள் நுழைந்துள்ளன. இஸ்லாம் குரான் என்றுதான் பேசிக்கொண்டு, பெண்களை முழுவதுமாக அடிமைப் படுத்த எல்லா வழிகளையும் பின்பற்றி வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக, சிறுமியர்-பெண்கள் பள்ளிகளை குண்டு போட்டும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்து வருகின்றனர். இப்பொழுது, ஒரு பெண்கள் கல்லூரியைத் தாக்கியுள்ளனர். இதனனல், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், மக்களுக்கு போதிய அமைதி, பாதுகாப்பு முதலியன குறைந்து வருகின்றன் என்று தெரிகிறது.

அரசு கல்லூரியை தீயிட்டும், குண்டு வைத்தும் தாக்கிய தாலிபான் சார்புடைய கூட்டம்: பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்சாய் மாகாணத்தில் [Government Degree College for Women at Alamkhan Kali in Orakzai Agency] இருக்கும் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் ஆதரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இப்பகுதியில் இயங்கி வந்த ஒரே பெண்கள் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது[1].

ஆள் இல்லாத நேரமானதால், உயிர்சேதல் இல்லை: வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்ஸாய் பழங்குடியினர் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியை தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிவைத்து தகர்த்தனர். வெடிபொருள் வெடித்ததால் கல்லூரியின் 6 அறைகளும், ஒரு கணிப்பொறி ஆய்வகமும் சேதமடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இங்கு 150ற்கும் மேலான பெண்கள் படித்து வருகின்றனர். நல்லவேலையாக, அந்நேரத்தில் யாரும் இல்லாததால், தப்பித்தனர்.