Archive for the ‘பீவி’ category

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

huji Bangaladesh

huji Bangaladesh

என்.. (NIA) மற்றும் ஆர்..பி (RAB)சேர்ந்து வேலை செய்ய திட்டம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிற ஷேக் கவுசர், யூசுப் என்னும் இரண்டு பேர் உள்பட 12 பேர் தலைமறைவாக உள்ளனர். ஷேக் கவுசர், யூசுப் இவ்விருவரும் வங்காளதேச பிரஜைகள் என்பதால், என்.ஐஏ – தேசிய புலனாய்வு ஏஜென்சி படையினர் வங்காள தேசத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மேற்குவங்க போலீஸ் அதிகாரிகள் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதியில் வங்காளதேசம் செல்வதாக உள்ளது. இருநாடுகளின் புலனாய்வு குழுக்கள் [the National Investigation Agency (NIA) and Rapid Action Battalion (RAB)] இவ்விசயத்தில் ஒன்றாக வேலை செய்யவும், விவரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன[1]. இந்த வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் தொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ.10 லட்சமும், மீதி 7 குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கொடுப்போருக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசு வழங்குவதாக என்.ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குள் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

12-11-2014 (புதன் கிழமை) அசாமில் அன்று அசாமில் விசாரணை: அசாமில் உள்ள பார்பேடா என்ற இடம், ஜிஹாதிகளின் புகலிடமாக உள்ளது போலும். என்.ஐ.ஏ இங்கு கீழ்கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது[2]:

  1. கவான் புர்ஹா, கிராமத் தலைவர் [Gaon Burha (village headman)]
  2. ரஷீத் அலி அஹமது [Rashid Ali Ahmed],
  3. ஜஹிதுல் இஸ்லாம் [Jahidul Islam],
  4. படாஸி பேகம் [Batasi Begum],
  5. சைஃபுல் இஸ்லாம் [Saiful Islam] மற்றும்
  6. சைபர் அலி [Saibar Ali],

சஹனூர் ஆலம் [Sahanur Alam] பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேகிக்கப் படும் குற்றவாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மசூதியில் இவர்கள் இருந்ததனர்[3]. இவ்வாறு மசூதிகளில் தஞ்சம் அடைவது, ஒளிந்து கொண்டிருப்பது முதலியன புலன் விசாரணை செய்பவர்களுக்கு தர்ம சங்கடமாக, பிரச்சினையாக இருக்கிறது. சஹனூர் ஆலத்தின் மனைவி சுஜனா பேகம் [Sujana Begum] ஏற்கெனவே 07-11-2014 அன்று வெளியூர் பேருந்து நிலையத்தில் [interstate bus terminus -ISBT] கைது செய்யப் பட்டுள்ளாள்[4]. படாஸி பேகம் இவருக்கு நெருங்கிய நண்பராம். இப்பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது. ரஷீத் அலி அஹமது பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்துள்ளான். அவர்கள் எல்லோருமே “சதாலா” என்ற கிராமத்திலிருந்து மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, மாயமாகும் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு ஜிஹாதிகளாக மாற்றப் படுகிறார்கள் போலும். சஹனூர் ஆலம் மறைந்திருந்தாலும், அவனது சகோதரன் ஜகாரியாவும் [Jakaria] ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான்[5]. சஹனூர் ஆலம் வங்காளதேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியும் கணவனுடன் சேர்ந்து தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் அதிகமாக தெரிய வருகிறது. அதாவது, ஜிஹாதி-குண்டு தயாரிப்பு-குண்டுவெடிப்பு முதலியன ஏதோ குடும்பத் தொழிலாகி விட்டது போலிருக்கிறது.

jmb - Bangala terror

jmb – Bangala terror

அகில இந்திய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஜிஹாதிகளுக்கும் தொடர்புள்ளதா?: அசாமில் அகில இந்திய ஜனநாயக் கூட்டணி கட்சி தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகிறது. பங்காளதேச எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அசாம் சட்டசபையிலும் 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளதுமசாமில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை இக்கட்சி கண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சிக்கும் [All India United Democratic Front (AIUDF)] இதற்கும் தொடர்புள்ளது என்று ஒரு டிவி-செனல் குறிப்பிட்டதால்[7], ஹைதர் ஹுஸைன் போரா [Haidar Hussain Bora] என்ற அக்கட்சியின் தலைவர், ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்[8]. “இந்தியா-டிவி” செனல் மீதும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது[9]. அச்செனல் “நியூஸ்-எக்ஸ்” என்று இன்னொரு தளத்தின் மூலம் தெரிய வருகின்றது[10]. அசாம் அனைத்து ஜனநாயக பேரவை மற்றும் ஜமைத் உலமா இ-இந்த் ஒரு இளைஞர் குழுவை சுக்சார், தூப்ரி மாவட்டம், அசாமிலிருந்து ஜிஹாதி பயிற்சி பெற பங்களாதேசத்தில் உள்ள ரங்கப்பூர் என்ற இடத்திற்கு, கடந்த ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் அனுப்பி வைத்ததாக “நியூஸ் எக்ஸ்” செனல் குறிப்பட்டது[11]. முதல் குழுவில் உள்ளவர்களை முன்னணி தலைவர்களே பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர் என்றும், இரண்டாவது குழு நவம்பர் 2013ல் சென்றது என்றும் குறிப்பிட்டது[12]. இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஜிஹாதி நிறுவனங்கள் ஹுஜி, சிமி, மூல்தா – [ intelligence reports named jihadi organisations like HuJI, SIMI, MULTA.] முதலியன. அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) இதே மாதிரித்தான் சொல்லியிருந்தார்[13], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” முன்பு (29-10-2014) பிஜேபி, பஜ்ரங் தள் முதலியவை மௌலானா பதாருத்தீன் அஜ்மல் [Maulana Badruddin Ajmal ] கைது செய்யப் படவேண்டும் என்று போராட்டம் நடத்தின[14]. ஆனால் அக்கட்சி தங்களுக்கும் பங்களாதேசத்து ஜிஹாதி குழுமங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று அறிவித்துள்ளது[15].

 

வங்காளதேசத்தின் மெத்தனம்

வங்காளதேசத்தின் மெத்தனம்

ஜே.எம்.பியின் அம்ஜத் அலி சென்னைக்குத் தப்பிச் சென்றான் என்றது ஆனால் கைது என்றது (10-11-2014): ஜே.எம்.பியின் அம்ஜத் அலி ஷேக்கிற்கு [Amjad Ali Sheikh] அடைக்கலம் கொடுத்து உதவியதற்காக, சஸ்ஹஸ்த்ரா சீமா பல் [Sashastra Seema Bal] என்ற மத்திய அரசு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரனிடம் 10-11-2014 அன்று விசாரணை நடத்தப் பட்டது[16]. இவன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி வழியாக சென்னைக்குத் தப்பிச் செல்ல, அந்த வீரன் அம்ஜத் அலி ஷேக்கிற்கு உதவியுள்ளான்[17]. தில்லியில் அவனுக்கு இடம் கொடுத்துள்ளான், தில்லியிலிருந்து அவன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளான்[18]. அதாவது, சென்னையில் இத்தகைய ஆட்களுக்கு தங்கிக் கொள்ள அல்லது மறைந்து வாழ இடம் கொடுக்கப் படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. ஆகவே சென்னையில் “ஸ்லீப்பர் செல்கள்” உள்ளனவா அல்லது அறிந்தே ஜிஹாதிகளுக்கு, இங்குள்ள அடிப்படைவாதி முஸ்லிம்கள் உதவுகிறார்களா என்ற விசயம் நோக்கத்தக்கது. ஜே.எம்.பியின் அம்ஜத் அலி இப்பொழுது சென்னையிலுள்ளானா அல்லது வேறெங்காவது தப்பித்துச் சென்று விட்டானா எ இருக்கின்று தெரியவில்லை. அம்ஜத் அலி ஷேக் 10-11-2014 (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக “டெயிலி மெயில்” குறிப்பிடுகின்றது[19]. இவர்களுக்கு ஜார்கண்டிலும் தொடர்பு இருப்பதால், அங்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

சென்னையில் வாழும் குல்ஷன் பீபி என்றபோதைமருந்து ராணி[20]: என்.ஐ.ஏ குல்ஷன் பீபி என்ற “போதைமருந்து ராணி”யைத் தீவிரமாகத் தேடி வருகிறாதாம். கொல்கொத்தாவிலிருந்து சென்னைக்கு ஓடிவந்துவிட்ட அந்த பெண்மணி இப்பொழுதும் தனது “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் “போதைமருந்து வியாபாரத்தை” செய்துவருவதாக, என்.ஐ.ஏ-துப்பறிவாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை போலீஸாருக்கோ, போதைமருந்து தடுப்புத்துறையினருக்கோ, அப்பெண்மணியைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், மே.1.2014 குண்டுவெடிப்புக்கு முன்னர், இரண்டு ஜே.எம்.பி தீவிரவாதிகள் தங்க சென்னையில் இடம் கொடுத்துள்ளார். அவள் கிழக்குக் கடற்கரையில் மஹாபலிபுரம் வரையில் உள்ள ரிசார்ட்டுகளில் போதைமருந்து ஜல்ஸா பார்ட்டிகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பி.பி.ஓக்கள் மற்றும் கே.பி.ஓக்களில் வேலை செய்யும் இளம் ஆண்கள்-பெண்கள் தவிர, திரைப்பட உலகில் உள்ளவர்களும், இவளது வாடிக்கையாளர்களாம். ஆகஸ்ட்.1,1993 அன்று உத்தம் மண்டல் என்ற சி.பி.எம் தோண்டர், இந்த பெண்மணி ஒரு உருது பள்ளிக்கு வந்திருந்த போது எதிர்ப்புத் தெரிவித்தால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்பொழுது குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டாலும், பிறகு ஒரு சி.பி.எம் அமைச்சர் தயவால் தப்பி விட்டார். கொல்கொத்தாவில் தேசிய போதைமருந்து தடுப்புத்துறை மற்றும் போலீஸாரின் தொல்லை தாங்காமல், சென்னைக்கு தனது ஜாகையை மாற்ரிவிட்டதாக தெரிகிறது. எல்லொருக்கும் லஞ்சம் கொடுத்து கொல்கொத்தா-சென்னை ரயில்வழியில் தனது ஆட்சியை நடத்தி வருகிறாராம்[21]. இவ்வழக்கில் ஏற்கெனவே ஒரு குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டிருக்கிறாள், ஆனால், அவள் வேறு. பாகிஸ்தானில், இதே பெயரில் இன்னொரு போதை மருந்து ராணி இருக்கிறாள். அவளும் வேறு, ஆக இந்த சென்னையில் இருக்கும் ராணி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

 முந்தைய சென்னையுடனான தொடர்புகள்: முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[22]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  இது தவிர சென்னை கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் இவர்களது சம்பந்தம் உள்ளதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

17-11-2014

[1] http://www.hindustantimes.com/india-news/nia-bangladesh-s-rab-may-share-info-on-probe/article1-1285465.aspx

[2] http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[3] A NIA team led by Superintendent of Police Debojit Hazarika during their search in the village yesterday had directed the five to present themselves at the NIA office in Guwahati as they had attended a prayer meeting in a house in the village which was close to the one of Sahanur Alam, one of the main accused in the Burdwan blast case, they said.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[4] Batasi Begum is a close friend of Sahanur’s arrested wife Sujana Begum, they said adding, Rashid Ali Ahmed was called as many youths were missing from his Chatala village.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[5] In continuation of their search operation at Chatala village, the NIA searched Sahanur’s house yesterday (11-11-2014) for the third time, quizzed his father and brother about the accused. Alam is absconding and the NIA has recently declared a reward of Rs five lakh for anyone giving information leading to his arrest. Alam’s wife Sujana Begam was arrested in Guwahati on November 7 from the ISBT. So far eight persons, including Sujana and Sahanur’s brother Jakaria have been arrested in this connection.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[6] http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[7] The All India United Democratic Front (AIUDF) has slammed a criminal defamation case against a private news channel which had recently broadcast news about party’s alleged involvement with Jehadi elements.

http://twocircles.net/2014nov12/1415811473.html#.VGQtdPmSynU

[8] Meanwhile, the Badruddin Ajmal-led All India United Democratic Front (AIUDF) has filed a criminal case against a national TV channel on Monday. The party’s Dhubri district unit registered the case against the channel after accusing it of airing ‘defamatory’ content. Haidar Hussain Bora, an AIUDF leader, said, “A case has been registered. Seven officials of the TV channel have been accused of maligning the party’s image.”

http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[9] http://www.milligazette.com/news/11249-maulana-badruddin-ajmal-slaps-defamation-on-newsx-tv-channel

[10] http://twocircles.net/2014nov12/1415811473.html

[11] The New Delhi-based news channel, News X, claimed leaders of Assam’s All India United Democratic Front (AIUDF) and a leading Islamist organisation, Jamiat Ulama-e-Hind, had sent a group of youths from Sukchar area in the state’s Dhubri district for Jihadi training from terrorist organisations in Bangladesh’s Rangpur in June-July last year. http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[12] The channel, quoting intelligence reports, also said apart from the first batch of youths, the leaders of the AIUDF and the Jamiat Ulama-e-Hind personally handpicked the members of the second team that went to Bangladesh last November.

http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[13] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[14] http://indianexpress.com/article/india/india-others/bjp-bajrang-dal-bandh-demanding-aiudf-leader-ajmals-arrest-cripples-life-in-assam/

[15] http://www.thehindu.com/news/national/other-states/aiudf-refutes-links-with-bangladesh-jihadi-groups/article6547627.ece

[16] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[17] http://www.ndtv.com/article/india/nia-questions-soldier-who-reportedly-sheltered-key-burdwan-blast-suspect-619456

[18] After the blast in Burdwan on October 2, which was believed to be an accident, Sheikh reportedly fled to Delhi, where he was allegedly given shelter by the soldier. From Delhi, Sheikh reportedly escaped to Chennai through Basti in Uttar Pradesh. “The soldier helped Sheikh in this too,” sources said.

[19] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[20] http://www.newindianexpress.com/nation/Police-Clueless-as-Terror-Trail-Leads-to-Chennai-Drug-Queen/2014/11/16/article2525871.ece

[21] NIA is looking for a “drug queen” from Kolkata, now reportedly based in Chennai. Gulshan Bibi, who fled to Chennai years ago, still runs, through remote control, the narcotics business and sleuths have found connections between her and Islamic terrorists, said NIA sources. However, the police in Chennai have no clue about the drug queen. But NIA sources in Kolkata said Gulshan provided shelter to two Jamaat-ul-Mujahideen (JUMB) terrorists, who visited Chennai before the May 1 blasts at the Central railway station. Sources said she conducted rave parties in resorts at Mahabalipuram on the East Coast Road. Besides young men and women working in various call centres, BPOs and KPOs, her clientele reportedly included members of the film industry. On August 12, 1993, Uttam Mondal, a CPM worker protested the presence of a narcotics den in an Urdu medium school in Dakshindari in eastern Kolkata. Mondal, who used to tutor poor students, was brutally killed for taking on the drug mafia. Gulshan was arrested but due to the intervention of a CPM minister, went scot free. With the NCB and the Kolkata police hot on her trail, she shifted to Chennai. With money power growing, she could reportedly bribe police not only in Tamil Nadu and West Bengal but also states along the Kolkata-Chennai train route.

[22] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

மார்ச் 13, 2014

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

Nellai Muslim married 4 and tries for 5 - 2014

Nellai Muslim married 4 and tries for 5 – 2014

நதிரா பானு என்ற பெண் அன்சார் என்பவர் மீது புகார் (மார்ச்.2014): நெல்லை தச்சநல்லூர் பகுதியில் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நதிராபானு (வயது 25). இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகளுடன் நெல்லை கலெக்டர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: “எனக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்சார் (48) என்பவருக்கும் கடந்த 30.5.2009 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் பல இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். தனது முதல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலேயே, என்னை திருமணம் செய்து கொள்வதாக அன்சாரி கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே அவருக்கு ஏற்கெனவே இரண்டாவது மனைவி நூர்ஜஹான், மற்றும் மூன்றாவது மனைவி என்று மொத்தம் மூன்று மனைவிகள் இருப்பது பின்னர் தெரியவந்தது[1]. இதுதவிர அவர் ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளார் என்பதும் எனக்கு தெரிய வந்தது”. நான்கு மனைவியர் கூட ஐந்து, அதுவில்லாமல் மற்ற பெண்களிடம் தகாத தொடர்பு வைத்துள்ளது என்றால், இஸ்லாம் எப்படி இவற்றை அனுமதிக்கிறது, மற்றும் அதற்கும் குரான், ஷதீஸ் மற்றும் ஷரீயத்தில் ஆதாரம் உள்ளது என்று காட்டுவார்களா, அப்படியென்றால், முஸ்லிம் பெண்களின் கதியென்ன?

 

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

5வது திருமணம் செய்ய முயன்ற போது, 4வது மனை புகார்: நதிராபானு தொடர்கிறார், “சில நாட்கள் கழித்தே எனது கணவர் என்னை 4வதாக திருமணம் செய்தது தெரியவந்தது.  எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர்[2]. எங்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் என்னிடம், ‘‘எனக்கு 4 மனைவிகள், 14 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது”, என்றார். ஏழ்மை காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திடீரென அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி என்னை கையெழுத்து போட சொல்கிறார். நான் மறுக்கவே சாப்பாடு போடாமல் என்னை பட்டினி போடுகிறார். அவரது கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன்”[3]. அதாவது நான்காவதாகத்தான் இப்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார், பிறகு வற்புறுத்தி ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொண்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ள முயல்கிறார் என்றாகிறது.

 

நதிரா பானு - அன்சார் - 5-நிக்காஹ் 2014

நதிரா பானு – அன்சார் – 5-நிக்காஹ் 2014

4வது மனைவியைக் கொடுமைப் படுத்தியது: நதிராபானு தொடர்கிறார், “இதைத் தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து எனது அவரிடம் கேட்ட போது என்னை அடித்து சித்ரவதை செய்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். ஒரு முறை என்னிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, விரட்டியடித்தார். பின்னர் மறுபடியும் என்னிடம் வந்து தனியாக வீடு வாங்கி காஞ்சிபுரத்தில் குடிவைத்தார். என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். மீண்டும் நான் கார்ப்பமானோன். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி அதை கலைத்தார் அங்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பை வளர்த்து கொண்டார். இதை நான் கண்டித்தபோது, என்னை வீட்டில் அடைத்து வைத்து மேலும், மேலும் சித்ரவதை செய்தார். இந்நிலையில் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகிறார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு என்னை அடி த்து துரத்தி விட்டார்”[4].

 

5வது திருமணம் முஸ்லிம்

5வது திருமணம் முஸ்லிம்

முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது எதைக் காட்டுகிறது?: நதிராபானு தொடர்கிறார், “அதன் பின் அந்த வீட்டை காலி செய்து விட்டு மேல்பாளையம் வந்தோம். அங்கும் வேறொரு பெண்ணை அழைத்து வந்தார். தட்டி கேட்ட என்னை அடித்து மிதித்து வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் கூறியுள்ளார். எனவே  அடித்தும் மிரட்டியும் சித்ரவதை செய்த என் கணவர் அன்சாரி மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள மூத்த மனைவி நூர்ஜஹான், அவரது மகன் ரஷீத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[5]. இந்த சம்பவத்தால் மேலப்பாளையமே அதிர்ந்து போய் கிடக்கிறது.  மனு அளிக்கும் இயக்கத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஸ்ரீராம் உடன் இருந்தார். முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது, முறையான தாம்பத்தியத்தை, இல்லறத்தைக் காட்டுகிறாதா அல்லது அதற்கும் மீறிய காரியங்களைக் காட்டுகிறதா என்று மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தாம் விளக்க வேண்டும்.

 

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இது இஸ்லாம் பிரச்சினையா, பெண்கள் பிரச்சினையா அல்லது சமூகப் பிரச்சினையா?: மறைந்த அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சைக்கு மூன்று மனைவிகள். அவரது மகன் ஆசிக் மீராவின் மீது தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து சில நாட்கள் தாம் ஆகியுள்ளன[6]. அதற்குள் இப்படி இன்னொரு புகார் வந்துள்ளது. முன்னர் யுவன் சங்கர் ராஜாவே பலதார திருமணத்திற்காக இஸ்லாம் மாறினார் என்ற செய்திகள் வந்தன[7]. இணைதளங்களில் முஸ்லிம்கள், இதை ஏதோ பெரிய வெற்றி போல விவரங்களை வாரி அளித்தனர்[8]. ஆர். எஸ். அந்தணன் என்ற புனைப்பெயரில் இஸ்லாம் ஏதோ சாதிக்கிறது என்பது போல வரைந்து தள்ளினர்[9]. பைசூல்-பர்வீன் விவகாரமும் எப்படி இஸ்லாம் பலதார மணத்திற்கு உதவுகிறது, பெண்களை ஒரு அற்ப செக்ஸ்-பண்டமாக உபயோகப் படுத்த பயன்படுத்தப் படுகிறது என்று அவர்களே எடுத்துக் காட்டிக் கொண்டார்கள்[10]. அதில் ஒரு முஸ்லிம் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் செக்ஸுக்கு உட்படுத்தி கொள்ளலாம், பணம் கொடுத்து சரிகட்டலாம், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டலாம் என்றெல்லாம் கூட வெளியாகின[11]. இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[12]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[13]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[14]

இவ்விவகாரத்தில் குறிப்பாக, பைசூல் திருமணம் செய்து கொள்ளாமலேயே பர்வீனுடல் குடும்பம் நடத்தி வந்தார், உடலுறவு கொண்டார், அதனை வீடியோ எடுத்து பர்வீனை மிரட்டினார் என்ற குற்றங்கள் இருப்பதுக் கவனிக்கத் தக்கது.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்  கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[15]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[16]. இப்பிரச்சினை  பல உச்சநீதி மன்ற தீர்ப்புகளிலும் அலசப்பட்டு தான் 1995ல் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்ற ஒரு தீர்ப்பில் ஆணையிட்டது[17]. 2003 தீர்ப்பிலும் இது மறுபடியும் கூறப்பட்டது[18].

 

© வேதபிரகாஷ்

12-03-2014

 


[17] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[18] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp