Archive for the ‘பில்லி’ category

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

ஏப்ரல் 3, 2017

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

Sargohda - dargah - buildin black magic-sufism

ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது.  மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது.

Sargohda - bodies taken out

தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3].  என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

Sargohda - dargah - victim bodies taken out

தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4].  அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sargohda - dargah - building

ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை.

Attacks on shrines since 2005

பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை.

Sargohda - dargah - buildin black magic

ஷியாக்களின் பலியைசகிப்புத் தன்மையோடுஅனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

03-04-2017

Sargohda - dargah - surviving victim

[1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf

[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM

[4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf

[5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த  நாள். ஏப்ரல்.3, 2017, 00.05.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594

[7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017.

[8] http://www.bbc.com/tamil/global-39005133

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஓகஸ்ட் 31, 2016

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஆஸம் கான் பேச்சு

.பி.யில் கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது[1]: உ.பி.யில் கற்பழிப்புகள் தொடர்கதையாகி விட்ட நிலையில், கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது. உ.பி.யில் அடிக்கடி கற்பழிப்பு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வெள்ளி(27-07-2016)யன்று இரவில் நெடுஞ்சாலையில் ஒரு காரை வழிமறித்து தாயையும் மகளையும் ஒரு கும்பல் கற்பழித்தது. சுமார் 3 மணி நேரம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட அந்த கும்பல், துப்பாக்கி முனையில் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடுவதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தொடர்ந்து 3 முறை இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒரு ஆசிரியை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இப்படி தொடரும் இந்த கற்பழிப்புகளை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே நடத்துவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இப்போது சிடி வடிவில் விற்கவும் துணிந்துவிட்டார்கள். உபி கடைவீதிகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.rape-video sale in UP 30 வினாடி முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் என்று பெயர் சொல்லியே விற்கப்படுவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான சிடிக்கள் விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆபாச சிடி எல்லாம் காலம் கடந்தது. இப்போது இது நிஜத்தில் நடந்தது என்று கூறியே ஆக்ராவில் விற்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவரை கொண்டு கொடுத்தால், அதில் பதிவு செய்தும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி மாணவி தனது பாய்பிரண்டுடன் வந்தபோது, அவனை அடித்து விரட்டிவிட்டு கற்பழித்த கொடுமையான காட்சியை, மாணவியை பிளாக்மெயில் செய்வதற்காக மொபைலில் எடுத்துள்ளனர். அதுதான் தற்போது விற்பனை ஆவது தெரிய வந்துள்ளது[2]. இமாம், ஆஸன்கான் போன்றே பேசியிருப்பதும் நோக்கத்தக்கது.

Maulana Anwarul Haq Imam announced 51 lakhsதாய்மகள் கற்பழிப்பும், ஆஸம்கானின் ஆபாச பேச்சும்[3]: உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2016) இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்‌ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது. கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்[4]. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.  இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்‌ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார்[6].

Raped imam with CM Akhilesh Yadavபெண்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது: இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர். மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது[7]. ஆக, இவையெல்லாம் ஒரே நேரத்தில், வாரத்தில், மாதத்தில் நடப்பதாலும், பேச்சும்-செயலும்-நடவடிக்கைகளும் இருப்பதாலும், உண்மையில் சதி செய்வது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், இந்த இமாம் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

© வேதபிரகாஷ்

31-08-2016

Raped imam with Akhilesh Yadav

[1] தினமலர், கற்பழிப்பு வீடியோ கடைகளில் விற்பனை: உபியில் 150 ரூபாய்க்கு விலைபோகும் கொடூரம், 04 ஆகஸ்ட் 2016, 05:44 PM

[2] http://www.dinamalarnellai.com/cinema/news/12649

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய .பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல், By: Veera Kumar, Published: Monday, August 29, 2016, 12:44 [IST]

[4] மாலைமலர், புலந்த்ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது, பதிவு: ஆகஸ்ட் 09, 2016 00:01

[5] http://www.maalaimalar.com/News/National/2016/08/09000139/1031529/Three-more-persons-including-the-main-accused-in-the.vpf

[6] http://tamil.oneindia.com/news/india/bulandshahr-rape-remark-sc-pulls-up-azam-khan-261428.html

[7] http://www.thehindu.com/news/national/sc-takes-note-of-azam-khans-remark-on-bulandshahr-gang-rape/article9045527.ece

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

ஓகஸ்ட் 31, 2016

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.

Maulana Anwarul Haq booked for rape 19-08-2016பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.

Maulana Anwarul Haq caught on video for rape with woman 19-08-2016தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.

Maulana Anwarul Haq Imam caught on video for rape 19-08-2016ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.

Maulana Anwarul Haq Imam booked for rape 19-08-2016கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம்  என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.

Najibabad, imam caught in videoகற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

© வேதபிரகாஷ்

31-08-2016

Maulana Anwarul Haq Imam demanded death sentence for Kamalesh Tiwari

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am

[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].

[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST

[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.

http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html

[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.

[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html

[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/

[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516

காதர்பாஷா மற்றும் அபுசாத்கர் என்ற சாமியார்கள், நிர்வாண பூஜையில் சில்மிஷம் செய்ததால் கைது!

திசெம்பர் 30, 2014

காதர்பாஷா மற்றும் அபுசாத்கர் என்ற சாமியார்கள், நிர்வாண பூஜையில் சில்மிஷம் செய்ததால் கைது!

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது.3

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது.3

முஸ்லிம்கள் மந்திரதந்திர வித்தைகளில் ஈடுபடவது: செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் புதுப்பாக்கம் பகுதியில் மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட சேர்ந்த காதர்பாஷா (39), அபுசாத்கர் (30) என்ற போலி சாமியார்களை பொதுமக்கள் வளைத்து பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர், பிறகு பொலீஸார் அவர்கள் கைது செய்யப்பட்டனர்[1], என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, முஸ்லிம்கள் மாந்திரகத்தில் வல்லவர்கள் என்பது தெரிந்த விசயம். அதிலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற வேலைகளில் கைதேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கேரளாவில் இவர்கள் அதிகமாக இருக்கின்றனர். தெருவோரமாக வித்தை செய்து, மக்களைக் கவரும் அல்லது பள்ளிப் பிள்ளைகளை மிரட்டும் மந்திரவாதிகள், மோடி-மஸ்தான்களில் பலர் முஸ்லிம்கள் தாம். இருப்பினு, சமீபகாலத்டதில், முஸ்லிம்கள் அத்தகைய மாந்திரிகத்தில் ஈடுபடுவது “ஹராம்” என்று அடிப்படைவாத முஸ்லிம் இயக்கங்கள் சொல்லி வருகின்றன. ஆனால், செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். “பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம்”, என்ற புத்தகத்தை ஜைனுல் ஆபிதீன் புத்தகம் எழுதி, நபீலா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘பில்லி, சூனியம், எல்லாம் பொய். எனக்கு பில்லி, சூனியம், ஏவல் மூலமாக பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்’தின் மாநிலத் தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் சவால் விட்டிருந்தார்[2]. அந்தச் சவால்கள் போஸ்டர்களாக இணையத்திலும் பரபரப்பு வலம் வந்தன[3].

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது

இணைதள விளம்பரங்கள் செய்யும் முஸ்லிம் மாந்திரீகர்கள்: செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (30), பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (30) பட்டதாரிகளான இருவரும் கம்ப்யூட்டர் டிசைனர்கள்[4]. இவர்கள், சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பார்த்த விளம்பரத்தில், ‘குடும்ப கஷ்டமா? உடனே எங்களது செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். மாந்திரீகம் மூலம் உங்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அந்த செல்போன் நம்பருக்கு ராதாகிருஷ்ணன் போன் செய்துள்ளார்[5]. எதிர்முனையில் பேசியவர், ரூ.20 ஆயிரம் தந்தால் மாந்திரீக முறைபடி பூஜை செய்து பிரச்னைகளை தீர்ப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சூளைமேடு பகுதியை சேர்ந்த காதர்பாஷா (39), அபுசாத்கர் (30) ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்தனர்[6]. ராதாகிருஷ்ணனிடம் ரூ.20,000 பெற்றுக்கொண்டனர். தடபுடலாக வீட்டிற்கு ஒரு கூட்டாளியுடன் விஜயம் செய்தார்.

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது

பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று கேட்ட முஸ்லிம் மாந்திரீகர்கள்: பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என கூறியுள்ளனர்[7]. அதற்கு ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். 15 வயது சிறுமியையாவது அழைத்து வரும்படி ஆசாமிகள் கூறியுள்ளனர். அப்போது தான் மாந்திரீகம் பலிக்கும் என்றுள்ளனர்.  இதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். அப்படியானால் நீங்கள் பூஜையின்போது நிர்வாணமாக நின்றால் தான் பூஜை முழுமை பெறும் என கூறியுள்ளனர்[8]. ஒருவழியாக ராதாகிருஷ்ணன் டவல் கட்டிக்கொண்டு நின்றுள்ளார். பூஜை நடந்து கொண்டிருந்த போது அந்த ஆசாமிகள் திடீரென ராதாகிருஷ்ணன் கட்டியிருந்த டவலை அவிழ்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்[9]. அதாவது, முஸ்லிம் மாந்திரீகர்கள் ஓரின புணர்ச்சிக்கும் தயார் போன்று நடந்து கொண்டனர் போலும்.

பில்லி, சூனிய பித்தலாட்டம், ஜைனுல் ஆபிதீன் புத்தகம்

பில்லி, சூனிய பித்தலாட்டம், ஜைனுல் ஆபிதீன் புத்தகம்

பாலியல் சில்மிஷத்தால் பயந்து போன பக்தர்: டவலை அவிழ்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டனால் ராதாகிருஷ்ணன் முதலில் மிரண்டு போனார். பிறகு சமாளித்துக் கொண்டு, வீட்டில் இருந்த மிளகாய்பொடியை கொண்டுவந்து அவர்களது கண்ணில் தூவிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து கூச்சலிட்டார்[10].  சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் இருவரும் தப்பிஓட முயன்றனர். ஆனால், அவர்களை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து காதர்பாஷா, அபுசாத்கரை கைது செய்தனர்[11]. இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாந்திரீகம் மூலம் பிரச்னையை தீர்ப்பதாக ஏமாற்றி வாலிபரிடம் போலி சாமியார்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம்கள் எப்படி மந்திரவாதிகள்  அல்லது சாமியார்கள் ஆகினர்

முஸ்லிம்கள் எப்படி மந்திரவாதிகள் அல்லது சாமியார்கள் ஆகினர்

இஸ்லாம், முஸ்லிம்கள், மாந்திரீகம், முரண்பாடுகள்: ஜைனுல் ஆபிதீன் மற்றும் மணிகண்டன் இவர்களின் சவால்கள்-ஏற்புகள், பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அப்பொழுது தெளிவாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இப்பொழுதைய காதர்பாஷா மற்றும் அபுசாத்கர் பிரச்சினை இஸ்லாத்தில் மாந்திரீகம் உள்ளது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.  “போலி சாமியார்” என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், நடந்துள்ளவை அத்தகைய நிலையினைக் காட்டுகிறது. அலிபாபாவும் அற்புத விளக்கும், சிந்துபாதுவின் யாத்திரை கதைகள், அலிப் லைலா, ஆயிரத்தோரு இரவு கதைகள், சூப்பிக்களின் அதிசயங்கள் என பல விசயங்கள் இஸ்லாத்தில் மந்திர-தந்திர-மாயாஜாலங்களை உள்ளதைக் காட்டுகிறது. கேரளாவில் பல முஸ்லிம் மந்திரவாதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் கொடுத்துள்ளனர்; வேலைகளையும் செய்து வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளிலும், இவை சாதாரணமாகவே இருந்து வருகின்றன. இஸ்லாம் மயமாக்கும் முயற்சிகள் அவற்றைக் குறைத்து வந்தாலும், முழுமையாக நீக்க முடியவில்லை. தமிழகத்தில் அத்தகைய முஸ்லிம் மாந்திரீகர்கள் இருப்பதும் நிதர்சனமாகத்தான் தெரிகிறது.

முஸ்லிம், மாந்திரீகம், முரண்பாடு

முஸ்லிம், மாந்திரீகம், முரண்பாடு

© வேதபிரகாஷ்

30-12-2014


 

[1] தினகரன், மாந்திரீகத்தால் பிரச்னையை தீர்ப்பதாக கூறி, பூஜையின் போது சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 போலி சாமியார்களுக்கு தர்ம அடி, 29-12-2014: 00.08.00, சென்னை.

[2] http://news.vikatan.com/article.php?module=news&aid=32668&utm_source=vikatan.com&utm_medium=related&utm_campaign=36_97588

[3] http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97588

[4] http://www.tamilmurasu.com.sg/story/45315

[5] மாலைமலர், மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாண பூஜை செய்து வாலிபரிடம் சில்மிஷம், மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 29, 12:47 PM IST;பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 29, 12:48 PM IST

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1148852

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=124733.

[8] http://www.maalaimalar.com/2014/12/29124803/solve-the-problem-of-naked-you.html

[9] தினமலர், போலி சாமியார் இருவர் கைது, சென்னை, 29-12-204, 01:19.

[10]http://www.dinamani.com/latest_news/2014/12/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2593935.ece

[11] தினமணி, செங்கல்பட்டு அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்கள் கைது, By அமுதா, செங்கல்பட்டு

First Published : 29 December 2014 05:17 PM IST