Archive for the ‘பிக்ரிக் அமிலம்’ category

பர்த்வான், பீர்பும், புருலியா – எல்லாமே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது வினோதமே!

ஜனவரி 3, 2015

பர்த்வான், பீர்பும், புருலியா – எல்லாமே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது வினோதமே!

NIA-recovered-5-jars-of-picric-acid-used-for-making-explosives

NIA-recovered-5-jars-of-picric-acid-used-for-making-explosives

பெங்களூரில் குண்டுவெடிப்பும், வங்காளத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பும்: அக்டோபர் 2, 2014 அன்று பர்த்வனின் நடந்த குண்டுவெடிப்பு பங்காளாதேச தீவிரவாதிகளின் தொடர்புகளையும், அவர்களது சதிதிட்டங்களையும் வெளிப்படுத்திக் காட்டின. அந்நிலையில், மறுபடியும் அவ்விடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் குண்டு வெடித்தது, சிமியுடன் தொடர்புள்ளது என்று செய்திகள் வந்த வேளையில்[1], பீர்பும் மாவட்டத்தில் மன்கர் என்ற இடத்தில், பாலத்திற்கருகில், புத்புத் போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில், ஒரு வேனை மடக்கி 28-12-2014 அன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது, அதில் ஏராளமான வெடிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[2]. முதலில், அந்த வேனின் டிரைவர், வண்டியை விட்டு ஓடப்பார்த்தான், ஆனால், போலீஸார்பாவனை விரட்டிப் பிடிடுத்துள்ளனர், என்று எஸ்.எம்.எச். மீர்ஜா, சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் அறிவித்துள்ளார்[3]. விசாரித்ததில், அவன் பெயர் அப்துல் காதிர் ஷேக் என்று தெரியவந்துள்ளது[4]. இந்த பீர்பும் மாவட்டம், ஏற்கெனவே பல தீவிரவாத காரியங்களுக்காக – ஊடுருவிய பங்காளதேசத்தவர் இருப்பது, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது, போலீஸாரைத் தாக்கியது, திரணமூல்-பிஜேபிக்காரர்கள் அடித்துக் கொண்டது, குண்டுகளை எரிந்தது – செய்திகளில் அடிபட்டு, பிரபலமாகியுள்ளது. பிடிபட்ட அப்துல் காதிர் ஷேக் (47), ஜமூரியா போலீஸ் ஷ்டேசன் கட்டுப்பாடில் வரும் ஹிஜால்கர கிராமத்தைச் சேர்ந்தவன். ஒடிஸ்ஸாவில் உள்ள பலேஸ்வர் என்ற இடத்திலிருந்து, பீர்பும் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்லா கிராமத்திற்கு வெடிப்பொருட்களை எடுத்துச் சொல்வதை ஒப்புக்கொண்டான்[5].

The suspected SIMI

The suspected SIMI

வெடிப்பொருட்களை வாங்குபவர், எடுத்துச் செல்பவர், உபயோகிப்பவர் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கவேண்டுமா, என்ன?: அப்துல் காதிர் ஷேக், துர்காபூரில் உள்ள மேஜிச்ட்ரேட்டின் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுவான் என்று சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் கூறினார்[6]. மேலும் அவர், திரணமூல்-பிஜேபிக்காரர்கள் தாக்குதல்களுக்கும், இந்த வெடிப்பொருட்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பதையும் விசாரிக்கப்போவதாக கூறினார். பீர்புமில், மக்ராவில் அவர்கள் அடித்துக் கொண்டதில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்[7]. “200 ஜிலேட்டின் குச்சிகள் கொண்ட 15 கட்டுகள், மொத்தம் 3,000, நாங்கள் வண்டியிலிருந்து கைப்பற்றியிருக்கிறோம்”[8], என்றும், தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களை தீவிரவாதத்துடன் சேர்த்துக் குறிப்பிடக்கூடாது என்றெல்லாம் ஆர்பாட்டம், கலாட்டா செய்து எதிர்ப்புத் தெரிவித்தாலும், இப்படி, பிடிப்பட்டவர்கள் எல்லோரும் ஏன் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் விளக்குவதில்லை.  அதேபோல பங்களாதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து ஊடுருவி வந்துள்ள முஸ்லிம்கள், குறிப்பாக, இத்தகைய தீவிரவாத வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர்கள் விளக்குவதில்லை.

ISIS twitter from Bangalore executive

ISIS twitter from Bangalore executive

மேற்குவங்காளத்தில் தொடர்ச்சியாக குண்டுகள், வெடிப்பொருட்கள் மற்றும் ரசாயனப்பொருட்கள் கண்டெடுக்கப்படுவதுசிக்குவது (அக்டோபர், 2014): அக்டோபர்.11, 2014 அன்று, ஒரு மூட்டை நிறைய வெடிக்கவைக்கும் கருவிகள், 11 ஜிலேன் குச்சிகள் முதலியன, புருலியா என்ற இடத்திலிருந்து 30 கிமீ தொலைவில், ரகுநாத போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில், ஒரு வேனில் கண்டெடுக்கப்பட்டது. இதைப்பற்றிய தகவல் கிடைத்ததால், சாதாரண உடையில் சென்ற நீல்காந்த் சுதிர் குமார் என்ற புருலியாவின் சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், அந்த வண்டியை மடக்கிப் பிடித்து, வெடிப்பொருட்களைக் கைப்பற்றினார்[9]. மேற்கு வங்காளம், அசன்லாலிருந்து, ஜாம்செட்பூருக்கு அது எடுத்தச்செல்லப்பட்டதாக கூறினர். ஆனால், இப்படி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறுவது, சம்பந்தமே இல்லாமல் டிரைவர்களை உபயோகிப்பது, குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ்காரர்களுக்கு தொடர்பு இருப்பது முதலியவை போலீஸாருக்கு திகைப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது. 1995ல் நடந்த புருலியாவில் ஆயுதங்கள் விமானம் மூலம் போட்ட வழக்கு பிரசித்தமானது. இதனால், குண்டு, வெடிமருந்து என்றாலே, போலீஸார் மிகவும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. புருலியா ஆயுதவழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயக்கங்கள், அப்பொழுதைய கம்யூனிஸ்டு கட்சிகள் முதலியவை தொடர்பு கொண்டிருந்தன[10].

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

பர்த்வான் குளத்தில் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது (நவம்பர்.2014): 19-11-2014 (புதன்கிழமை) அன்று பர்த்வானில் உள்ள ஒரு குளத்தியிலிருந்து வெடிமருந்துகள் – மிக்க அபாயகரமான பிக்ரிக் அமிலம் (potentially dangerous picric acid) கண்டெடுக்கப்பட்டன[11]. ஆனால், விசித்திரமாக, அதில் சம்பந்தப்பட்டது மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கர் என்ற முஸ்லிம்கள் ஆவர். ஐக்கிய நாடுகள் சங்கம், இவர்களை உலகத்திலேயே மிகவும் தண்டிக்கப்படுள்ள சிறுபான்மை இனத்தவர்களுள் ஓரினம் என்று குறிப்பிடுகிறது. அப்படியென்றால், அவர்கள் இந்தியாவில் ஏன் இப்படி தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது புதிராக உள்ளது. மேலும் திகைப்பான விசயம், அந்த குளம் முன்னர் வெடிகுண்டு வெடித்த, காக்ரகரிலிருந்து ஒரு கிமீ தூடரத்தில் தான் உள்ளது. அந்த வழக்கில் ஷேக் அம்ஜத் என்ற ஜே.எம்.பி தீவிரவாதி கைது செய்யப்பட்டிருக்கிறான். ஹைதராபாதில் 17-11-2014 (திங்கட்கிழமை) அன்று மொஹம்மது காலித் என்ற மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கா முஸ்லிம் கைது செய்யப்பட்டான். தனக்கு அல்-குவைதா மற்றும் தெரிக்-இ-தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்று அவன் ஒப்புக்கொண்டுள்ளான்[12].

Amjad shekh, Picric acid, burdwan - changing technology

Amjad shekh, Picric acid, burdwan – changing technology

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும்: இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.

Why these men have Islamic names

Why these men have Islamic names

பிக்ரிக் அமிலம் கண்டெடுக்கப்பட்டது: ஹைதரபாதில் காலித், பர்த்வானில் ஷேக் அம்ஜத் மற்றும் பீர்புமில் சஜித் கொடுத்த தகவல்களின்படி, விசாரணை மேற்கொண்டதில், கேசப்கஞ் சடி என்ற இடத்தில் உ:ள்ள புலக் சாது (30) என்பவன் கடை மற்றும் வீட்டில் தான் பிக்ரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்தது என தெரியவந்தது. அம்ஜத் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான். அவன் கீழ்தளத்தை டோடோ ரிக்ஷா (மூன்று சக்கர வாகனம்) ஷோ ரூமாக மாற்றினான். அம்ஜத் ஒரு ஜே.எம்.பி-தீவிரவாதி என்று தெரியவந்ததும் அவன், பிக்ரிக் அமிலம் கொண்ட கலங்களை ரபீந்தர பவன் அருகில் உள்ள குளத்தில் எரிந்து விட்டான். புலக் NIA-குழுவை மீனவர்களுடன் அந்த குளத்திற்கு அழைத்துச் சென்றான். குளத்தில் தேடிப்பார்த்ததில் ஐந்து அமிலக்கலங்கள் கிடைத்தன, மீதம் ஐந்து கலங்கள் காணப்படவில்லை. ஷேக் அம்ஜத் தான் தான் அமிலக்கலங்களை போர்ஹத் கோடவுனில் (Borhat godown) வைத்திருந்ததாக தகவல் கொடுத்தான்[13].

the Four ISIS

the Four ISIS

பெங்களூரு குண்டுவெடிப்பு, சிமி மற்றும் தென்னிந்திய தொடர்புகள்: முந்தைய பிஜேபி அலுவலகத்திற்கருகில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், தமிழக-கேரள முஸ்லிம்களின் பங்கு வெளிப்பட்டது. இப்பொழுதைய சர்ச் ரோட் குண்டுவெடிப்பிலும் அதே தொடர்புகள் வெளியாகியுள்ளன. பர்த்வான் குண்டுவெடிப்பில் கைது செய்யப் பெண்களில் ஒருத்தி, சென்னையில் உள்ளவர்களிடன் பேசியுள்ளாள் என்று ஏர்கெனவே தெரியவந்துள்ளது. இந்தியாவில், மற்ற எந்த நகரத்தையும் விட, வியாபார தொடர்புகள் ரீதியில், பெங்களுரு, அமெரிக்காவுடன் நெருங்கியுள்ளது. அமெரிக்க “அவுட்-சுரோசிங்” கம்பெனிகள் பல அங்குள்ளன. பெங்களுரில் என்ன நொகழ்ந்தாலும், அது உலகசெய்திகளில் இடம் பெரும், விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில் தான், தொடர்ச்சியாக, பெங்களுரில், தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகிறார்கள். மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள கண்ட்வா சிறையிலிருந்து (Khandwa jail) ஐந்து சிமி தீவிரவாதிகள் தப்பி, கர்நாடகாவில், ஹோச்பெட், பெல்லாரி மற்றும் பெங்களூரு நகரங்களில் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது, ஆங்காங்கு இருக்கும் உள்ளூர் முஸ்லிம்கள் அவர்களுக்கு அவ்வாறு உதவி கொடுத்து வருகின்றனர் என்பது உறுதியாகிறது. மேலும், குண்டுவெடுப்பு ஆய்வாளர்கள், பிஜ்னோர், புனே மற்றும் சென்னை குண்டுவெடிப்புகளை சோதித்துப் பார்த்ததில் அவையெல்லாமே, ஞாயிற்ருக் கிழமை சர்ச் ரோடில் நடந்துள்ள குண்டுவெடிப்பை ஒத்துள்ளது தெரிகிறது. மெஹதி மஸ்ரூர் என்ற ஐசிஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்டு, அதன்பிறகு, அந்த கைஹிற்காக பழி வாங்கப்படும் என்ற மிரட்டல் டுவிட்டர் தகவல்கள் வெளிவந்து இரண்டு வாரங்களில் இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதால், அதன் தொடர்பு இருக்குமோ என்றும் ஆராயப்படுகிறது. பெங்களூரு தொடர்ந்து 2008, 2010 மற்றும் 2013 ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளைக் கண்டுள்ளது. 2008ல் ஒன்பது இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்; 2010ல் இரண்டு குண்டுகள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர், ஸ்டேடியத்திற்கு வெளியே வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர், ஒரு குண்டு செயலிழக்கப்பட்டது. 2013ல் பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் மல்லேஸ்வரத்தில், மாநில தேர்தலுக்கு முன்னர் குண்டுவெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர்[14].

© வேதபிரகாஷ்

31-12-2014

[1] http://zeenews.india.com/news/india/bangalore-blast-case-as-it-happened-on-monday_1521860.html

[2] http://www.financialexpress.com/article/miscellaneous/bangalore-bomb-blast-churst-street-ied-explosion-killed-one-woman/23950/

[3] NDTV, 3,000 Gelatin Sticks Seized by Police in Burdwan, All India | Press Trust of India | Updated: December 29, 2014 02:34 IST

[4] http://www.ndtv.com/article/india/3-000-gelatin-sticks-seized-by-police-in-burdwan-641001

[5] http://www.dnaindia.com/india/report-bengal-3000-gelatin-sticks-seized-by-police-in-burdwan-2047658

[6] http://zeenews.india.com/news/west-bengal/truck-full-of-explosives-seized-in-bengal_1521711.html

[7] DNA, Bengal: 3,000 gelatin sticks seized by police in Burdwan, Sunday, 28 December 2014 – 6:09pm IST Updated: Sunday, 28 December 2014 – 6:10pm IST | Place: Burdwan (West Bengal) | Agency: PTI

[8] Zeenews, Truck full of explosives seized in Bengal, Last Updated: Sunday, December 28, 2014 – 19:27

[9] DNA, Large quantity of explosives seized in West Bengal, Saturday, 11 October 2014 – 2:02pm IST | Place: Purulia (West Bengal) | Agency: PTI

[10] The Purulia arms drop case is the legal case regarding an incident on 17 December 1995 in which unauthorised arms were dropped from an Antonov An-26 aircraft in Purulia district in the state of West Bengal. The chief accused Kim Davy claims that it was a conspiracy of the Indian government together with RAW and MI5 to overthrow the communist government in West Bengal and he was given assurances from the central government about his safety and return to Denmark.While the true motive of the operation remains shrouded in mystery and conjecture, it has been alleged that arms were intended for the socio-spiritual organization Ananda Marga.This has been disputed by the prime accused in the case Kim Davy who claims the central government itself was behind the arms drop to counter the CPI(M) cadres. An Indian court in 1997 determined that the Ananda Marga group was indeed the intended recipient of the guns and ammunition. However, despite the passage of years, many details of the incident are wrapped in mystery, and there has been considerable speculation as to the purpose and modality of the operation. Five Latvian crew members along with arms dealer Peter Bleach was arrested in connection with the case, but key conspirator Davy managed to disappear from the airport. Davy, wanted in the case by the CBI, said he had orchestrated the dropping of the arms and ammunitions — including over 300 AK 47s — to fight the then communist government in West Bengal. Davy is a Danish author. He is the author of book They call me a terrorist. He claims to have been involved in a 14-year journey from 1982 that involved building schools in Guatemala, agricultural projects in India and attending tiger conferences in Russia. He is currently the manager of a company which sells houseboats. Around 1995 he was involved in humanitarian work for the people in West Bengal, which at that time was governed by the Communist Party of India. The authorities claim that he was involved in smuggling of weapons. He admits as much himself in his book, claiming that he made the weapon drop from a plane purchased in Latvia.A total of 4 tonnes of arms were trafficked during his dealings in West Bengal.

http://www.indiatvnews.com/crime/news/know-about-kim-davy-the-man-behind-purulia-arms-drop-2813.html

[11] Indian Express, Explosives seized from Burdwan pond, Debajyoti Chakraborty & Dwaipayan Ghosh, TNN | Nov 19, 2014, 07.35AM IST

[12] Rohingya Myanmar resident Mohammad Khalid, who was held from Hyderabad on 17-11-2014 (Monday) night, has revealed that he had close ties with Tehreek-e-Taliban-Pakistan that has links with AlQaeda.

[13] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Explosives-seized-from-Burdwan-pond/articleshow/45199256.cms

[14] http://zeenews.india.com/news/india/bangalore-blast-case-as-it-happened-on-monday_1521860.html