சானியா திருமணம் – படங்கள்!
திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.
மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.
சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?
மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.
மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.
தோழி கிண்டல் செய்கிறாரா?
மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்
குடும்பத்துடன் புகைப்படம்!
சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!
பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?
அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.
இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.
ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?
அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?
நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.
ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.
அண்மைய பின்னூட்டங்கள்