Archive for the ‘பார்த்தோ அல்லது பார்க்காமலோ’ category

சானியா திருமணம் – படங்கள்!

ஏப்ரல் 13, 2010

சானியா திருமணம் – படங்கள்!

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.

மாப்பிள்ளை சடங்கு

மாப்பிள்ளை சடங்கு

மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?

பெண்ணை வாழ்த்துதல்

பெண்ணை வாழ்த்துதல்

மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.

மகிழ்ச்சியான நேரம்

மகிழ்ச்சியான நேரம்

தோழி கிண்டல் செய்கிறாரா?

ஜோடியாக நிற்கிறார்கள்

ஜோடியாக நிற்கிறார்கள்

மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பத்துடன் புகைப்படம்!

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.

இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.

ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?

அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?

நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.

ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

மார்ச் 29, 2010

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

ஆமாம்,

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை

பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை

யாரோ வரைந்து விட்டாராம்!

சித்தரித்து விட்டாராம்!

மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!

ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].

பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?