Archive for the ‘பாத்திமுத்து’ category

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58