Archive for the ‘பாத்திமா’ category

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

ஜூன் 9, 2012

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

இஸ்லாத்தில் வெள்ளிக் கிழமை புனித நாளாகக் கருதப் படுகிறது. ஜிஹாதிகள் அன்றுதான் தொழுகைக்குப் பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தீர்மானம் எடுப்பர், அதன்படியே செயல்படுவர். முஹம்மது கதீல் சித்திக் (27 வயது) என்ற இந்திய முஜாஹத்தீன் மற்றும் பல வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளி / குற்ரஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நபர், புனேயில் உள்ள மத்திய எரவாடா சிறையில் அவனது கூட்டாளிகளால் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தான்[1]. இது வெறும் “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது” மாதிரியா அல்லது வேறுவகையா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயில் பாதுகாப்பில் தோய்வா, இந்திய முஜாஹத்தீனின் ஊடுருவலா-ஆதிக்கமா? பாதுகாப்பு மிக்க அச்சிறையில் அவன் கொல்லப்பட்டது, ஜெயில் பாதுகாப்பு முறையின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அவன் மூலம் வரும் உண்மைகளை மறைக்கவே அவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிகிறது. தினமும் பாத்திமா என்ற கர்ப்பவதியான அவனது மனைவி தினமும் போன் செய்து பிரார்த்தனை செய்யச் சொல்வாளாம். ஆனால், இன்று போன் எதுவும் வரவில்லை. ஏனெனில், அவள் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கணவன் கொலை செய்யப் பட்ட செய்தியை அறிந்தாளாம்[2]. அவனது பெற்றோர்களும் அவ்வாறே அறிந்துள்ளனர். இதனால், இதன் பின்னணியில் சதியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது[3]. அதிகமாக ஜாக்கிரதையாக தனியாக வைக்கப்பட வேண்டிய இவன் எப்படி மற்ற இரு குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப் பட்டான் என்று தெரியவில்லை[4]. அக்பர் முனிர் செயுக் மற்றும் பலு வெகைர், மஹோல் மற்றும் பலேராவ் என்ற உள்ளூர் / மாமூல் கொலையாளிகளால் அவன் கொல்லப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் கூறுகின்றனர் (Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui).

பல வழக்குகளில் சிக்கியுள்ளவன் கொல்லப்பட்டதால், வழக்குகள் பலவீனமாகின்றன: கோவிலில் குண்டு வைத்த வழக்கு விசாரணை இப்பொழுதுதான் முடிந்துள்ளது[5]. பட்கல் எப்படி சித்திக்கிற்கு பணம் கொடுத்து அத்தகைய குற்றங்களை செய்ய வைத்தான் என்ற விவரங்களை போலீஸார் விசாரணையில் அறிந்துள்ளனர்[6].

  • The IM had allegedly promised Siddiqui Rs 50,000 for planting the bomb at Halwai.
  • According to ATS officers, Bhatkal gained Siddiqui’s loyalty by offering him money during times of need. In the later part of 2009, when Siddiqui’s daughter was suffering from a rare illness, Bhatkal first offered Rs 1 lakh. The daughter eventually died, but Bhatkal had succeeded in gaining a loyal supporter.
  • An amount of Rs 25,000 was allegedly exchanged between him and Siddiqui before the Chinnaswamy Stadium blasts of 2010.

இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வைத்த வழக்கில், கர்நாடக போலீஸாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது[7]. யாசின் பட்கல் (தென்னிந்திய இந்திய முஜாஹத்தீனின் தளபதி) மற்றும் ரியாஸ் பட்கல் (Yasin Bhatkal and Riyaz Bhatkal) முதலியோர்க்குண்டான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் உள்ள நிலையில், இவ்வாறு அவன் கொலை செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது[8]. சித்திகின் பங்கு பல கொடிய வழக்குகளில் தெரிகிறது[9]. என்ன காரணத்திற்கோ, இவன் தில்லியில் கைது செய்யப் பட்டு, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, நேராக கடற்கரை ஊரான பட்கல்லிற்கு அழௌஇத்துச் செல்லப் பட்டான், ஆனால், பெங்களூருக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஒருவேளை மறைமுகமாக இவர்களுக்கு, இவ்வாறு சட்டரீதில்யில் உதவுகிறதா என்ற சந்தேகமும் நீதிமன்ற வளாகங்களில் எழுந்துள்ளது. அதற்கேற்றபடியே, சித்திக்கின் வழக்கறிஞர்கள் – ரெஹ்மான் மற்றும் கைனத் செயிக் இக்கொலையில் துப்புத்துலக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுயுள்ளனர்[10]. எதிர்பார்த்தப் படியே, பலிக்கடாவாக எஸ்.வி.கடவகா[11] என்ற ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!


[1]  Indian Mujahideen operative Mohammad Qateel Siddiqui, accused of executing terror attacks in Bangalore and Delhi and involvement in the attempt to blow up Pune’s famed Dagadusheth Ganapati temple, was strangled to death by two other prisoners in a high-security cell of Pune’s Yerawada central jail on Friday morning.

http://timesofindia.indiatimes.com/india/Top-terror-suspect-killed-in-high-security-Pune-jail/articleshow/13942693.cms

[4] Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui.

[9]  Siddiqui allegedly visited Bhatkal with Yasin to organize logistics for their terror missions.  “He was working with his uncle in his native Darbhanga, Bihar and was involved in gun running. He also supplied explosives to Indian Mujahiddeen and helped them in making bombs. Though he was not involved directly in the stadium twin blasts, he had always been a pillar of support for Yasin who allegedly planted the bombs in this instance,” said a source. Siddiqui was arrested from Delhi in November last year, but was never brought to Bangalore. But earlier this year, he was brought to Bhatkal to track down an explosives dump hidden in the coastal town.

[10] Meanwhile, Siddiqui’s lawyers A Rehman and Kainat Shaikh have demanded a CBI probe into the murder.

[11] The Maharashtra government on Friday ordered a CID probe into the case as home minister R R Patil has ordered the suspension of Yerawada jail superintendent S V Khatavka.

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

மார்ச் 25, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்[4]. இந்நிலையில், பாத்திமா முசாபர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது[5].

கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கொடிபிடித்த பாத்திமா முசாபர் வெளியேற்றப் பட்டாராம்: ஒரு சீட்டு, காங்கிரஸுக்குக் கொடுக்கப் பட்டதற்கு, பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்”, என்றார். ஆனால், 24-03-2011 அன்று, கட்சியின் விரோதமாக செயல்படுவதற்காக, அவர் கட்சியிலிருந்து வெளியெற்றப் பட்டுள்ளார்.

பாத்திமா முசாபர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார் : இந்திய யூனியன் முஸ்லிம் லீலிருந்து, அதன் தமிழ்நாடு மாநில மகளிரணி அமைப்பாளரான பாத்திமா முஸபர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-  “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வரும் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் அவர்கள், கடந்த சில தினங்களாக இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் இயக்க முடிவுகளுக்கு மாறான செய்திகள் வெளியிட்டும் வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் இன்று முதல் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார். இயக்கத் தோழர்கள் இயக்கம் சம்மந்தமாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சாதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

யார் இந்த பாத்திமா முசாபர்? அஹமத் வோர்ட் டிராவல்ஸ் டூர்ஸ் & கார்கோ பிரைவேட் லிமிடெட்[6] என்ற கம்பெனியின் இயக்குனரான, இவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும், மறைந்த அப்துல் சமதின் மகளாவார். . கணவர் அல்ஹஜ் அஹமத் மேனேஜிங் டைரக்டர்[7]. ஏப்ரல் 2009ல் பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் இவர் சி.பி.ஐ.யினால் கைது செய்யப்பட்டார்[8]. பாஸ்போர்ட் வாங்குவதற்கு அதிகமாக பணம் வசூலித்ததாலும், அதனால் பாற்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு லஞ்சம் கொடுத்ததாலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்[9]. ரவிச்சந்திரன் தனியாக ஒரு பாஸ்போர்ட் அலுவலகமே நடத்தி வந்தனராம்[10]. இவர் அன்பழகின் மறுமகள்[11] என்றும் செய்திகள் கூறுகின்றன[12]. தயாநிதி மாறன் டெலிகம் அமைச்சரானதும், 2004ல் இவர் பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப் பட்டாராம். இதனால் அவரும் கைது செய்யப் பட்டார்[13]. கனிமொழிக்கு வேண்டியவர். ரம்ஜான் கஞ்சிக் கொடுக்கும் நோன்புக்குத் தப்பாமல் இப்பொழுதெல்லாம் வந்து விடுகிறார்.

அன்பழகன் என்பதால்தான் இந்த நாடகமா? அன்பழகனின் தியாகம், பாத்திமாவை நிச்சயமாக வருத்தமடையச் செய்திருக்கும். ஏனெனில், ஏற்கெனவே, அன்பழகனுடைய மறுமகளுக்கு – சுமதி ரவிச்சந்திரனுக்கு, இவரால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், மறுபடியும், தங்கள் கட்சியால், அவருக்கு தொந்தரவு ஏற்பட்டிருப்பத் கண்டு, விசுவாசத்தின் அடிப்படையில், எதிர்த்திருப்பார்.

வேதபிரகாஷ்

25-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4), https://islamindia.wordpress.com/2011/03/22/1370-three-plus-three-muslims-get-six/

[5] தினமலர், 25-03-2011, சென்னை, பக்கம்.2

[6] We are group of Young and Energetic Professionals from Travel Industry having decades of Experience. We feel the best way to serve is to serve personally. That is exactly what we specialise at AHMED WORLD TRAVELS TOURS & CARGO PVT LTD. Since 1989

http://www.ahmedworldtravels.com/

[8] According to a Superintendent of Police of the CBI, Fathima Muzaffar Ahmed, a travel agent of Ahmed World Travels, T.Nagar, allegedly demanded Rs.9,000 as bribe to be paid to the Regional Passport Officer from P.Lakshmanan of MGR Nagar, who had applied for a passport under the tatkal scheme. This was in addition to the prescribed fee and service charge of Rs.1,000.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=51752&SectionID=136&MainSectionID=134&SEO=&Title=

[10] Sumathi’s husband Ravichandran too has been arrested by the CBI. He stands accused of running a ‘parallel passport office’.

http://ibnlive.in.com/news/cbi-arrests-passport-officer-on-corruption-charges/91138-3.html

[12] The CBI’s anti-corruption wing has arrested the Chennai regional passport officer, who is the daughter-in-law of finance minister K Anbazhagan of Tamilnadu. Sumathi, an Indian Postal Service officer, was appointed RPO in 2004 with the blessings of then Union communications minister Dayanidhi Maran of the DMK.
CBI arrests minister kin who is the daughter-in-law of finance minister K. Anbazhagan