இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா ஈடுபட்டது, இது வெறும் ஹவலா மோசடிதான், பாட்னா குண்டுவெடிப்புக்கு சம்பந்தம் இல்லை – இப்படி வக்காலத்து வாங்குவது ஏன்?
தேசியபுலனாய்வுஏஜென்சிமங்களுரில் ஒரு பெண்னை கைது செய்தது: பாட்னா நரேந்திர மோடி கூட்டத்தில்தொடர்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு உதவிய தம்பதியை மங்களூருவில் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் 13-11-2013 புதன்கிழமை அன்று ஆஜர்படுத்தினர். ஆங்கில நாளிதழ்கள் தேசிய புலனாய்வு ஏஜென்சி [The National Investigation Agency (NIA)], குறிப்பாக பாட்னா குண்டுவெடிப்பு விசாரணை செய்யும் குழு, கைது செய்தது என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[1]. கடந்த மாதம் 27ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குண்டுகள் வெடித்து 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித் சாயப், அன்சாரிகான் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5 கோடி ஹவாலா பணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின் மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது.
இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா மோசடியில் இறங்கினாராம்: புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்த பெண் ஆஷா என்கிற ஆயிஷா பானு என தெரியவந்தது[2]. கர்நாடக மாநிலம், மங்களூரு அருகேயுள்ள பஞ்சிமுகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (36). இவரது கணவர் ஜுபேர். குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பீரய்யாவின் மகளான இந்திரா, 18 ஆண்டுகளுக்கு முன்பு பஜ்பே பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் பணிபுரிந்த போது, ஜூபேரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், மதம் மாறி ஆயிஷா பானுவாக பெயரை மாற்றினார்[3]. பீடி முகவராக இருந்த ஜுபேர், பின்னர் துபைக்குச் சென்று பணிபுரிந்தாராம். இங்கும் பீடிதொழில் சமந்தம் வருவது நோக்கத்தக்கது. இவன் மூன்று பீடிகடைகளை வைத்துள்ளான்[4]. முதலில் வாடகை வீட்டில் இருந்த இவன்,. திருமணம் ஆனவுடன் சொந்த வீடு வாங்கிக் கொண்டானாம்[5]. அப்போது, இந்தியாவிலிருந்த ஆயிஷா பானுவை ஹவாலா பணம் மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது[6]. அப்படி என்ன பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளகவா இருக்கின்றனர்? இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மற்றியவுடன் விவரமாக சொல்லிக் கொடுத்திருப்பார்களே?
ஒருபெண்ணிடம்இவ்வளவுஇருக்குமா?: பாட்னா குண்டுவெடிப்பு குறித்து வழக்குப் பதிந்த போலீஸார், சிலரைக் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், மங்களூருவில் ஆயிஷாபானுவை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸார், புதன்கிழமை மங்களூர் 3-ஆவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தினர்[7]. விசாரணைக்குப் பிறகு ஆயிஷாபானுவை, பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆயிஷா பானு, குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிதி பெற்று, ரூ. 5 கோடி வரை உதவி செய்துள்ளார்[8]. 35 வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது[9]. அவளிடமிருந்து கீழ்கண்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[10]:
- ஏழு வங்கி கணக்குப் புத்தகங்கள் [seven bank passbooks],
- ஆறு ஏடிஎம் கார்டுகள் [six ATM cards, 10 mobile phones],
- பத்துஇ சிம் கார்டுகள் [10 SIM cards]
- 35ற்கும் மேலான சட்ட விரோதமான கார்டுகள் [more than 35 illegal ones]
- அதில் சுமார் 50 பாகிஸ்தானைச் சேர்ந்தவை [with around 50 numbers of Pakistan].
விவரமே தெரியாமலா, இவ்வளவையும் அவள் வைத்திருந்தாள்? ஒரு இந்துவாக இருந்தவள், முஸ்லிமாக மாறியப் பிறகு எதற்காக பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றத்தில் பீகார் போலீசார் அனுமதியை கேட்டனர். இதை ஏற்று கொண்ட நீதிபதி, இருவரையும் பீகார் போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பீகார் போலீ சார் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.
இதுவெறும்ஹவலாமோசடிதான், பாட்னாகுண்டுவெடிப்புக்குசம்பந்தம்இல்லை: வழக்கம் போல, முஸ்லிம் இணைதளங்கள் இதனை மறுக்கின்றன[11]. உள்ளூர் கன்னட நாளிதழும் இதற்கும் பாட்னா குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது[12]. பீஹாரின், லகிசராய் சூப்பிரென்டென்ட், “அவள் சட்டவிரோதமான பணமாற்ரத்திற்காகத்தான் கைது செய்யப் பட்டிருக்கிறாள். தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்துதவியதற்கு கைது செய்யப்படவில்லை”, என்றதாக எடுத்துக் காட்டுகின்றன[13]. மங்களூர் இஐஜிபி, பிரதாப் ரெட்டியும், இது தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட செயலாக இருக்காது என்று நம்புவதாக சேர்த்து எழுதியுள்ளன[14]. ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்ன இப்படிப்பட்ட சட்டமீறல்களைப் பற்றி உடனடியாக கருத்து சொல்லி விடுவாரா? “ஏசியன் ஏஜ்” என்றதன் படி, போலீசார் இதைப்பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது[15]. அதாவது, இப்பொழுதெல்லாம், இத்தகைய விவரங்கள் அதிகமாக வருகின்றன. ஆனால், குண்டுகள் தயாரிப்பது, அவற்றை வைப்பது, வெடிக்க வைப்பது போன்றவற்றைப் பற்றிய செய்திகளை மட்டும் ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
வெடித்தபிறகு செய்திகளை அள்ளிவீசுகிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களது எதிர்காலம் முதலியவற்றைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை.
© வேதபிரகாஷ்
15-11-2013
[1] http://newindianexpress.com/nation/NIA-arrests-woman-in-Patna-case/2013/11/13/article1887873.ece
[3] If reporting this easily discernible concocted story was not enough, the media outlets also went to the extent of digging Ayesha Banu’s past and wrote that ‘Ayesha’ was born ‘Asha’, a Hindu who later converted to Islam, after marrying a Muslim man. And it only looked like they were serving right-wing organisations’ agenda, when they included a press statement by Vishwa Hindu Parishad (VHP) and Bajrang Dal, in their reports, which said that the case of Ayesha’s arrest showed that Muslim men were luring Hindu woman “with love affairs and money and converted to Islam only to carry out dangerous and illegal activities like this. Hindu young women must be guard against Love Jihad which attract them towards colorful life in the beginning, but end up in jails, prostitution hubs, etc.” http://twocircles.net/2013nov13/malicious_reports_mangalore_womans_connection_patna_blast_rubbished_police.html
[4] http://newindianexpress.com/nation/NIA-arrests-woman-in-Patna-case/2013/11/13/article1887873.ece
[5] http://articles.timesofindia.indiatimes.com/2013-11-14/mangalore/44072636_1_bihar-police-bihar-cops-lakhisarai
[6]http://dinamani.com/india/2013/11/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article1890096.e
[7]http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=201119&n_tit=Mangalore%3A%20Aysha%20has%20no%20connection%20to%20Patna%20blasts%3F
[9] தினமணி, பாட்னா குண்டு வெடிப்பு: எதிரிகளுக்கு உதவியதாக மங்களூருவில் பெண் கைது, First Published : 14 November 2013 04:06 AM IST
[11]http://twocircles.net/2013nov13/malicious_reports_mangalore_womans_connection_patna_blast_rubbished_police.html
[12] In a twist to the story, another leading Kannada daily from Mangalore has revealed that there is no connection between Aysha’s arrest and Patna bomb blasts.
[13] Rejecting the malicious reports, Bihar’s Lakhisarai Superintendent of Police, Mr. Rajiv Sharma said that, her arrest was in connection to illegal financial activities and not in connection to terrorism financing.
[14] Mangalore city’s Inspector General of Police (Western Range) Mr. Prathap Reddy said that, he is confident that there is no terror activity taking place in the western range of the region, and proclaimed that “no investigation agency has contacted us in relation to any such activities.”
[15] Local police sources refused to officially confirm the arrest but admitted that the woman who had been detained lived in a house at Panjimogeru, about 9 kms from Mangalore with her three children and that she was arrested by a police team comprising of Bihar police and local police officials. Local corporator elect and CPI(M) leader Dayanand Shetty confirmed the arrest and said that she was brought back to her house along with her husband for further enquiries on Tuesday evening.
http://www.asianage.com/india/was-patna-blast-financed-mangalore-woman-205
அண்மைய பின்னூட்டங்கள்