பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது!
பெண்களின் கல்வியை மறுக்கும் இஸ்லாமிய கூட்டங்கள்: ஆப்கானிஸ்தானிலிருந்து, வடமேற்கு பகுதியில் பாகிச்தானில் தாலிபான்கள் மற்றும் அதன் பிரிவுக் குழுக்கள் நுழைந்துள்ளன. இஸ்லாம் குரான் என்றுதான் பேசிக்கொண்டு, பெண்களை முழுவதுமாக அடிமைப் படுத்த எல்லா வழிகளையும் பின்பற்றி வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக, சிறுமியர்-பெண்கள் பள்ளிகளை குண்டு போட்டும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்து வருகின்றனர். இப்பொழுது, ஒரு பெண்கள் கல்லூரியைத் தாக்கியுள்ளனர். இதனனல், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், மக்களுக்கு போதிய அமைதி, பாதுகாப்பு முதலியன குறைந்து வருகின்றன் என்று தெரிகிறது.
அரசு கல்லூரியை தீயிட்டும், குண்டு வைத்தும் தாக்கிய தாலிபான் சார்புடைய கூட்டம்: பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்சாய் மாகாணத்தில் [Government Degree College for Women at Alamkhan Kali in Orakzai Agency] இருக்கும் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் ஆதரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இப்பகுதியில் இயங்கி வந்த ஒரே பெண்கள் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது[1].
ஆள் இல்லாத நேரமானதால், உயிர்சேதல் இல்லை: வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்ஸாய் பழங்குடியினர் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியை தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிவைத்து தகர்த்தனர். வெடிபொருள் வெடித்ததால் கல்லூரியின் 6 அறைகளும், ஒரு கணிப்பொறி ஆய்வகமும் சேதமடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இங்கு 150ற்கும் மேலான பெண்கள் படித்து வருகின்றனர். நல்லவேலையாக, அந்நேரத்தில் யாரும் இல்லாததால், தப்பித்தனர்.
அண்மைய பின்னூட்டங்கள்