ஐ.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?
ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது (அக்டோபர்.2015): ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை 27-10-2015 அன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். [Anti Vice Squad, AVS] என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இந்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது[1].
புழல் சிறையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் ஏற்பட்ட தொடர்பு: பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது[2]. மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார்[3]. நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்[4]. அதாவது, ஒரே ஆள் பலகுற்றங்களை செய்வது என்பது, இவர்களில் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த போக்கு அல்-உம்மாவிலிருந்தே காணப்படுகிறது.
ஐசிஸ் ட்–சர்ட் புகைப்பட விவகாரம் (ஜூலை–ஆகஸ்ட்.2014): ஜுலை 29, 2014 தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்[5]. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்[6]. ஆனால், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண்களையே கற்பழிக்கின்றனர், முதலிய காரியங்களை அவர்கள் அறியாமல் போனது விந்தையே! இந்த நிலையில், ஆகஸ்ட்.4, 2015 அன்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்[7]. அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், அத்தகைய ட்-சர்ட்டுகளை அச்சடித்து தயாரித்தது, விற்றது யார் என்ற கேள்விகளும் எழுகின்றன. இதெல்லாம் தெரியாமல் செய்தது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்[8]. இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சிறையிலடைக்கப்பட்டது[9]: இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, ” ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்[10]. இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக”த் தெரிவித்தார். இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார். இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார். ஆகஸ்ட்.4, 2014 அன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்[11].
© வேதபிரகாஷ்
23-11-2015
[1] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7821818.ece
[2] தினமணி, ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது, By காரைக்கால், First Published : 29 October 2015 12:31 AM IST
[3] தமிழ்.இந்து, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு?– மத்திய உளவுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட காரைக்கால் இளைஞர் சிறையில் அடைப்பு, Published: October 30, 2015 09:10 ISTUpdated: October 30, 2015 09:10 IST.
[4]http://www.dinamani.com/tamilnadu/2015/10/29/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article3102332.ece
[5] தமிழ்.வெப்துனியா, ஐஎஸ்ஐஎஸ் டி–ஷர்ட்: தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது, புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:17 IST).
[6] http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ramanathapuram-iraq-isis-t-shirt-two-young-men-arrested-114080600007_1.html
[7] பிபிசி.தமிழ், ஐசிஸ் டி – ஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது, ஆகஸ்ட்.5, 2015.
[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது– 24 பேர் விடுவிப்பு, Posted by: Sutha, Published: Tuesday, August 5, 2014, 17:24 [IST].
[9] https://www.youtube.com/watch?v=k8PUdCqY-XE
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-arrested-tamil-nadu-over-group-photo-isis-t-shirts-207779.html
[11] http://www.bbc.com/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests
அண்மைய பின்னூட்டங்கள்