முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார்.
இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.
சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள்.
ஏனெனில் ரத்தப்பந்தத்தைவிட, முலைப்பால் பந்தம் இஸ்லாத்தில் உயர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெண்கள் ஆடவர்களுக்கு, அதிலும் அந்நியர்களுக்கு எப்படி முலைப்பால் கொடுப்பார்கள், கொடுக்கவேண்டும் ……………..என்றெல்லாம் விவரிக்கப் படவில்லை.
இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!
வளைகுடா நாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.
அண்மைய பின்னூட்டங்கள்