Archive for the ‘பஜரங் தள்’ category

தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!

ஜூலை 16, 2013

தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!

வழக்குகள் நடத்தப்படுவது,  தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏகுகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன எற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்ன்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.

இந்திய முஜாஹித்தீன்என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.

தீவிரவாதத்தின் நிறம்,  திசைத் திருப்பல்  –  செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் டாஸ்க் போர்ஸ்உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].

முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].

சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும்,  கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].

Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” –

ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].

வேதபிரகாஷ்

© 16-07-2013


[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.

http://www.deccanchronicle.com/130712/news-politics/article/rahman-khan-kicks-row

[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.

http://ibnlive.in.com/news/rahman-khan-does-a-uturn-on-setting-up-task-force-for-muslims/406472-37-64.html

[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.

http://www.ndtv.com/article/assembly-polls/salman-khurshid-in-trouble-over-muslim-quota-speech-165484

[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.

http://ibnlive.in.com/news/muslim-quota-is-in-congress-manifesto-says-salman-khurshid/219917-37-64.html