“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல்கள்: 1971ல் நடந்த போர்க்குற்றங்களுக்காக, .டெலேவார் ஹொஸைன் சையிதீ என்ற தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமித் தலைவருக்குத் தூக்குத்தண்டனையளித்தப் பிறகு கலவரம் ஏற்பட்டதில் ஏற்படுத்தப்பட்டதில் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் 28-03-2013 (வியாழக்கிழமை) அன்றுலிருந்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களாக இந்த கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள்: 1971 குரூர-போர்க்குற்றங்களைப் போலவே, இப்பொழுதும் நடந்தேறியுள்ள திட்டமிட்டத் தாக்குதலிகளில், ஆயிரக்கணக்கான சிறுபான்மையினரின் வீடுகள், 150 வழிபாட்டு ஸ்தலங்கள் கடந்த இரு தினங்களில் தாக்கப்பட்டிருக்கின்றன, என்று பங்களாதேசத்தின் இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் பொது செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ராணா தாஸ் குப்தா என்பவர் கூறியுள்ளார். இப்பொழுது, எந்த குற்றங்களுக்காக, டெலேவார் ஹொஸைன் சையிதீ குற்றஞ்சாட்டப் பட்டு, தண்டனைப் பெற்றுள்ளாரோ, அதே மாதிரியான குற்றங்கள், இன்றும் நடக்கின்றன, அதாவது 2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள் என்று அவர் எடுத்துக் காட்டுகிறார்.

இந்துக்கள் தாக்கப்பட்டுள்ள ஊர்கள் / இடங்கள்: சிட்டகாங், குல்னா, படிசால், நோவகாலி, கலிபந்தா, ரங்கப்பூர், சைல்ஹெட், தாகுர்காவ், பகேரெத் மற்றும் சபைனவாப்கஞ்ச் முதலிய இடங்களிலுள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டிருப்பதாக, சிட்டகாங் பிரஸ் கிளப்பில் நடந்த கூட்டத்தில் நிருபர்களுக்கு கூறினார். ஆனால், இந்திய ஊடகங்கள் மௌனியாக இருக்கின்றன.

ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் – தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்: ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் முதலிய இயக்கங்களின் குரூரக்கொடுமைகளுக்காகக் குற்றஞ்சாட்டினார். சத்கானியவில் நடந்த தாக்குதல்களுக்கு சோரோடி யூனியன் பரிஷத்தின் சேர்மேன் ரெஜைவுல் கரீம் மற்றும் பன்ஸ்காளியில் நடந்த தாக்குதல்களுக்கு முனிசிபல் கவுன்சிலர்களான அபு மற்றும் சலீம் முதலியோர் மீது குற்றஞ்சாட்டினார்.

உள்ளூர் முஸ்லீம் தலைவர்களே காரணம்: 2003ல் பன்ஸ்காளியில் சில்பாரா என்ற இடத்தில் 11 பேர் அடங்கிய ஒரு இந்து குடும்பத்தை உயிரோடு எரித்ததற்கும், மற்றும் பன்ஸ்காளியில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியதற்கும், அமினுர் ரஹ்மான் சௌத்ரி என்பவர் மீது குற்றஞ்சாட்டினார். அதாவது பத்தாண்டு காலமாகியும் அக்கொலையாளிகள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசுக்கு வேண்டுகோள்: இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், குற்றம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது உரிய முறையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பலிகடா ஆனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இடித்தழிக்கப்பட்ட வீடுகள்-கோவில்களைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவும் அரசாங்கத்தை இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

சாம்பலாகிப் போன வீடுகள்: குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று இரவுகளாக தூக்கம் இல்லாமல், என்ன நடக்குமோ என்று திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழ் உயிருக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”, என்று மினோதி ராணீ தாஸ் என்ற பெண்மணி கூக்குரலிட்டுக் கதறினார், “சந்தோஷமான குடும்பம் எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது எங்களுக்கு எதுவுமே இல்லை, கூரையில்லை, உணவில்லை, சமைக்க இடமில்லை, பாத்திரம் இல்லை, எதுவும் இல்லை. இங்கிருப்பதெல்லாம் கொஞ்சம் சாம்பல் தான்”.

பல இந்து குடும்பங்களின் கதி: மினோதி ராணீ தாஸ் மட்டுமல்ல, அவரைப்போல, சுற்றி வாழும் 76 இந்து குடும்பங்களின் கதிட்யும், இதே கதிதான். தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வீடுகள் சூரையாடப் பட்டு, எரியூட்டப்பட்டன. பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். எல்லாம் முடிந்த பிறகு தான் போலீஸார் வந்து பார்வையிட்டனர்.

இந்துக்கள் சாட்சி சொன்னதற்காக தாக்குதல் நடத்தப் பட்டனவாம்: சையதீ குற்றாஞ்சாட்டப்பட்டதற்கே, பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், அதனால் தான், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிரரியக்கங்களைச் சேர்ந்த 250-300 பேர் அப்பகுதிகளில் வந்து அத்தகைய கொடிய செயல்களைச் செய்துள்ளனர். முகமூடிகளை அணிந்து கொண்டு, “சையதீக்கு ஏதாவது நேர்ந்தால், ஒவ்வொரு வீட்டையும் கொளுத்துவோம்”, என்று கத்திக் கொண்டே அடித்து நொறுக்கினர்.

இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புத் தரப்படவில்லை?: . தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். பிறகு கலவரத்தில் 42-45 மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றார்கள். ஆனால், பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், சையதீக்கு தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எக்ஷழுகின்றது. மேலும் போலீஸார், எல்லாம் நடந்த பிறகு வந்தனர் என்பது, போலீஸாரும் முஸ்லீம்கள், அதனால், முஸ்லீம்கள் செய்ததை ஆதரித்தது போலாகிறது.

“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”: இதன் அர்த்தம் என்ன? 1947ல் இந்தியா மதரீதியில் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பலகோடி இந்துக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர். ஏனெனில் அவர்களில் பலருக்கு அந்த விஷயமே தெரியாது. அதுபோல பங்களாதேசத்தில் தங்கி விட்ட இந்த பெண்மணி கூறுகிறார். மேலும், 1971ல் பங்களாதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு, நிலைமை சரியாகி விடும் என்று தொடர்ந்துத் தங்கியிருக்கலாம். ஆனால், பங்களாதேசமும் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இஸ்லாம் மயமாக்கல் தொடர்ந்தபோது, இத்தகைய குரூரங்கள் தொடர்ந்தன. இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். கற்பழித்து மதமாற்றம் செய்தனர். தடுத்த, எதிர்த்த பெற்றோர்களையும் மதமாறும்படி வற்புறுத்தினர் அல்லது மறுத்தவர்களைக் கொன்றனர்.
© வேதபிரகாஷ்
03-03-2013
அண்மைய பின்னூட்டங்கள்