சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

துருக்கி–சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டாலும் சிரியாவுக்குச் செல்ல ஆசைப்படும் பெங்களூரு சாப்ட்வேர் ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது. இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள் ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.

பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].

அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது

முகமது ஆரிப் கைது பற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: “உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெங்களூரில் தங்கி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். நம் நாட்டில் மத உணர்வுகளை துாண்டி விட்டு, அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்த நபரும் ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.
© வேதபிரகாஷ்
12-02-2023.

[1] தினமலர், பெங்களூருவில் அல் குவைதா பயங்கரவாதி கைது!, Updated : பிப் 12, 2023 03:58 | Added : பிப் 12, 2023 03:56.
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3240036
[3] தினத்தந்தி, பெங்களூருவில் பயங்கரவாதி கைது, பிப்ரவரி 12, 2:50 am.
[4] https://www.dailythanthi.com/News/India/nia-arrests-suspected-al-qaeda-terrorist-in-bengaluru-897842
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர் கைது – அல்–கொய்தாவுடன் தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.
[6] https://tamil.asianetnews.com/india/suspected-terrorist-alleged-to-be-linked-with-al-qaeda-has-been-arrested-in-bengaluru-rpwhvd
[7] தினமணி, பெங்களூருவில் அல்–கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!, By DIN | Published On : 11th February 2023 04:20 PM | Last Updated : 11th February 2023 06:10 PM
[8] https://www.dinamani.com/india/2023/feb/11/nia-conducts-searches-in-mumbai-bengaluru-against-suspects-linked-to-isis-al-qaeda-3999212.html
[9] தினசரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது, Sakthi K. Paramasivam, February 11, 2023: 2.41 PM.
[10] https://dhinasari.com/india-news/277683-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, பெங்களூர் ஐடி ஊழியர் பேருக்குதான்.. பின்னணியில் தீவிரவாதி! பொறி வைத்து பிடித்த என்ஐஏ, By Vigneshkumar Updated: Saturday, February 11, 2023, 16:21 [IST]
[12] https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-techie-turned-terrorist-arrested-by-nia-officals-498246.html
[13] குளோபல்.தமிழ்.நியூஸ், அல்கய்தாவுடன் தொடர்பு? கர்நாடகாவில் IT ஊழியர் கைது!, February 11, 2023.
[14] https://globaltamilnews.net/2023/187397/
[15] நியூஸ்.4.தமிழ், தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!, By Amutha, Published 20.00 hours February 11, 2023
[16] https://www.news4tamil.com/al-qaeda-terrorist-who-was-ready-to-network-in-the-isi-was-arrested-in-bangalore-nia-took-action/

அண்மைய பின்னூட்டங்கள்