Archive for the ‘பக்ருதீன்’ category

பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ஒக்ரோபர் 20, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

Malleswaram blast 04-2013

ஏப்ரல் 17, 2013 அன்று பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர்; 23 வாகனங்கள் நாசமடைந்தன; 56 கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் கீழ்கண்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது[1].

poi valakku copy

எண் பெயர் பெயர் / வயது இடம் / ஊர்
1 ஜே. பாஷிர் என்ற பஷீர் J Baasir alias Basheer, 30; (from Tirunelveli);
2 எம். கிச்சன் புஹாரி என்கின்ற புகாரி M Kichan Buhari alias Bugari, 38; (from Tirunelveli);
3 எம். முஹம்மது சலீம் M Mohammed Salin, 30; (from Tirunelveli);
4 பன்னா இஸ்மாயில் என்ற முஹம்மது இஸ்மாயில் Panna Ismail alias Mohammed Ismail, 30;  (from Tirunelveli);
5 பறவை பாஷா Paravai Basha, 32, (from Tirunelveli);
6 ஆலி கான் குட்டி Ali Khan Kutti (from Tirunelveli);
7 செயிட் அஸ்கர் அலி என்ற செயிட் Sait Asgar Ali alias Sait, 29;  (from Coimbatore)
8 எஸ். ரஹமத்துல்லா S Rahmatulla, 32; (from Coimbatore)
9 வலயில் ஹக்கீம் என்ற ஹக்கீம் Valayil Hakeem alias Hakeem, 32;  (from Coimbatore)
10 சையது சுலைமான் என்ற தென்காசி சுலைமான் Syed Suleiman alias Tenkasi Suleiman, 24;  (from Coimbatore)
11 மன் பாய் என்ற சுலைமான் என்ற ஓலங்கோ Man Bhai alias Suleiman alias Olango, 31;  (from Coimbatore)
12 ஜுல்பிகர் அலி Zulfikar Ali, 24 (from Coimbatore)
13 பிலால் மாலிக் Bilal Malik alias Bilal, 28 (from Madurai)
14 பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் Fakruddin alias Police Fakruddin, 30 (from Madurai).

Tamil Jihadis used woman-children as shield

7,445 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில், 200 ஆவணங்கள் மற்றும் 260 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சிலர் அல்-உம்மா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வியக்கம் 1998ம் ஆண்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்தியது. அதுவும் அத்வானியைக் குறிவைத்ததாகும். அக்டோபர் 2, 2013 அன்று ஆந்திரபிரதேசத்திலிருந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருத்தீன் பிடிபட்டனர். பறவை பாஷா மற்றும் அலி கான் குட்டி இருவரும் இதுவரை பிடிபடவில்லை[2].

Malleswaram blast 04-2013.2

இந்தியகுற்றவியல்சட்டம், வெடிப்பொருட்கள்சட்டம், 1908, பொதுஇடங்களுக்குசேதம்ஏற்படுத்துதல்தடுப்புசட்டம் 1984 மற்றும்சட்டவிரோதமானகூடுதல்தடுப்புசட்டம் 1967 இவற்றின் கீழ் வழக்கு போட்டுள்ளது போதுமா?: 20-10-2013 சனிக்கிழமை நகர முதன்மை கூடுதல் மாஜிஸ்ட்ரேட் முன்னர், ஓம்காரைய்யா, ஜே.சி.நகர் ACP மற்றும் புலன் விசாரிக்கும் அதிகாரி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், 1908, பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்பு சட்டம் 1984 மற்றும் சட்டவிரோதமான கூடுதல் தடுப்பு சட்டம் 1967 [IPC sections 120 (B), 121, 121 (A), 123, 332, 307, 435 and 201 and under Section 3, 4, 5 and 6 of The Explosive Substances Act, 1908 and under Section 4 of Prevention of Damage to Public Property Act 1984 and under Section 10, 13, 15, 16, 17, 18, 19 and 20 of Unlawful Activities (Prevention) Act, 1967] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது[3]. குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி வழக்கு போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், ஏற்கெனவே, ஆதாரங்கள் இல்லை, என்று இத்தகைய ஜிஹாதிகள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, பிறகு வெளியே வந்தவுடன், மறுபடியும் அதே குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு?

Malleswaram blast 04-2013.3

கைது செய்யப் பட்ட நிலையிலேயே “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட முறை: இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப் பட்டபோதே, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் என்று பலவித முறைகளை, அவர்களின் மனைவிகள் மூலம் செய்விக்கப் பட்டன. ஏதோ தங்கள் கணவன்மார்களை அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றெல்லாம் வாதிடப் பட்டன. “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் தாராளமாக இவர்களுக்கு விளம்பரத்துடன் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டது. ஆனால், படுகாயம் அடைந்தவர்கள் பற்றி கவலைப் படவில்லை. ஷகீல் அஹமது, திவிஜய் சிங் போன்ற காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தது, இதனால் பிஜேபிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்கூசாமல், மனசாட்சி இல்லாமல் பேசினர், எழுதினர். பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவும் இதைப் பற்றிக் கண்டிக்கவில்லை. மாறாக, ஊழலைப் பற்றி பேசி, வெற்றியும் பெற்றனர். அதர்கு உள்ளூர் அறிவு-ஜீவிகள் தீவிரவாதத்தையும் மறந்து காங்கிரஸுக்குத் துணை போயினர். மோசமாக விமர்சனம் செயத காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கவில்லை. அதாவது, சாமர்த்தியமாக குண்டுவெடிப்பை ஆதரித்தனர் என்றேயாகியது. அதனால் தான், குண்டு வைத்தவர்கள், இத்தகைய முரண்பாட்டை, சித்தாந்த குழப்பங்களை, இந்துக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

Auditor Ramesh murder - moaned by wife etc

தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மறப்பது, மறைப்பது, மறுப்பது: சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கக் கூடாது, செய்யப் படக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குண்டுவெடிப்பில் அநியாயமாகக் கொல்லப் பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், அவர்களின் மனைவி-மக்கள் முதலோரின் கதி என்ன என்பதை, இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அப்படி மனிதநேயம், ஈரம், உணர்வு, மனசாட்சி முதலியவை உள்ளன, இருந்திருந்தன என்றால், அவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு, இத்தகைய குரூரக் குற்றங்களை செய்யாதே, குண்டுகளை வைக்காதே, அப்பாவி மக்களைக் கொல்லாதே என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். அப்பொழுதெ இவையெல்லாமே தவிர்க்கப் பாட்டிருக்கக் கூடும். தொடர்ந்து, இவ்வாறு ஜிஹாத் என்ற மதவெறியோடு இந்துக்களைக் கொல்வோம் என்று வெளிப்படையாக குரூரக்குற்றங்கள், கொலைகள் முதலியவற்றை செய்து கொண்டிருந்தால், மக்களுக்கு அவர்கள் எதை உணர்த்த செய்கிறார்கள் என்பதை அவர்கள் தாம் புரிந்து கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

20-10-2013


தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

ஒக்ரோபர் 5, 2013

தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsதிருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். முன்­ன­தா­க ­போ­லீ­சார் உயிரிழந்ததா­க ­கூ­றப்­பட்­ட­து. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

TN POLICE announcementபிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். க­த­வை ­ தட்டிய­போ­து இரண்டு  ­ ­போ­லீ­சா­ரை ­அ­ரி­வா­ளால் ­வெட்­டி­னர், இ­தில் ­இ­ரு­வ­ரும் படுகாயமுற்­ற­­னர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Abubakkar Siddique - TN police noticeதில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக ­போ­லீஸ்கா­ரர் ­ 2 பேர் காயமுற்றனர். முன்­ன­தா­க போலீசார் ­இ­றந்­த­தா­க கூறப்பட்ட­து[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

CBCID_NOTICEதமிழகத்தின் அல்முஜாகிதீன் படை[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

Dinamalar-TN-Jihadis-arrest.6பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்: போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம்  “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.7தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால்  சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.2பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!

® வேதபிரகாஷ்

05-10-2013


[5] According to the local people, four people, who claimed to be working in the beedi manufacturing industry, had taken the house on rent a few months ago. Locals said that they had no information about these people as they only came back home late in the night.

http://www.rediff.com/news/report/andhra-pradesh-police-raid-terrorist-hideout-constable-killed/20131005.htm

[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report

HyderabadA policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed.  Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.

http://www.ndtv.com/article/south/firing-between-suspected-militants-and-police-in-andhra-pradesh-one-cop-killed-report-428105