தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [2]
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலை: டெல்லி நிஜாமுதீன் மேற்குப் பகுதியில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் 31-03-2020 அன்று தெரிவித்தார்[1]. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சமூக விலக்கல் மூலமே கரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்பதால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளிேய வரவேண்டாம் என்று ஒன்று கூட வேண்டாம் என்று தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள நிஜாமுதீன் காலணியில் தப்லிக் சர்வதேச தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கு நிஜாமுதீன் மர்காஸ் என்று பெயர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கிருந்து 200 பேர் பல்வேறு அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மத மாநாட்டில் பங்கேற்றதையும் டெல்லியில் உள்ள சர்வதேச தப்லிக் ஜமாத்தில் 1,400 பேர் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் பலருக்கும் கரோனா அறிகுறிகள் இருந்ததும், பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் தெரியவந்தது.
தில்லியில் உரிய நடவடிக்கை எடுத்தாகி விட்டது: இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேச தப்லிக் ஜமாத்தில் தங்கியிருந்த 1,033 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 700 பேர் மாநாட்டில் பங்கேற்றதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 335 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மத வழிபாடு மாநாட்டை நடத்திய முஸ்லிம் மவுலானாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவல் உத்தரவிட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில், அவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. இப்பொழுதுள்ள நிலை உயிர்களை பாதுகாப்பது ஆகும். அந்நிலையில், மதம், பிரச்சாரம், ஜிஹாத் போன்றவற்றை ஓரங்கட்டி விட்டு, ஒத்துழைப்புக் கொடுத்து, வைரஸ் நோயைஓழிக்க வேண்டும். இவ்வளவு எச்சரித்தும், உல்க சுகாதார அறிவுரை இருந்தும், இறந்த துலுக்கரின் உடல் எரிக்காமல் புதைக்கப் பட்டுள்ளது. அதனால், பாதிப்பு என்ன என்பதனை விஞ்ஞான பூர்வமாக அறியாத நிலையில், துலுக்க அடிப்படைவாதத்தினால், அவ்வாறு பிடிவாதமாக புதைத்திருக்கிறார்கள்.
தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்து விட்டனர், தமிழகத்தில் ஒருவர் பலி: டெல்லி மாநில அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தப்லிக் தலைமை அலுவலகத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துவிட்டனர். ஜம்மு காஷ்மீர், தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபர் ஆகியவற்றில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டளளது. ஹைதராபாத்தில் திங்கள்கிழமை இறந்த ஒருவர் தப்லிக் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தெலங்கானாவில் 194 பேர், தமிழகத்தில் 981 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வெளிநாடுகளைச் சேர்ந்த 250 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தோனேசியாவில் இருந்து 200 பேர், தாய்லாந்தில் இருந்து 30 பேர், கிர்கிஸ்தானில் இருந்து 10 பேர், மலேசியாவில் இருந்து 15 பேர் அடங்குவர்” எனத் தெரிவித்தனர். ஆகவே, பாதிக்கப் பட்டவர்களில் இன்னும் எத்தனை பேர் இறப்பர், குடும்பத்தினர் பாதிக்கப் படுவர் என்பது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும்.
மதுரை பலி – 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது 25-03-2020 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தது: மதுரை துலுக்க போதகருக்கு COVID-19 இருந்தது 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது. இருப்பினும், அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்றெல்லாம் தான் செய்திகள் வெளியிடப் பட்டன[2]. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி 25-03-2020 அன்று மதியம் இறந்து விட்டதாக கூறப்பட்டது[3]. அதனை 25-03-2020 அன்று நள்ளிரவு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்த அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[4]. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியானவர் உடலை எரிக்க வேண்டும் என்று அவரது உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர். மத வழக்கப்படி புதைக்க வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது[5]. அதாவது, இதில் கூட துலுக்கர் பிரச்சினை செய்தது தெரிகிறது. அவரது உடலை மதுரையில் உள்ள ஜமாத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்[6]. அதாவது, இறந்தது முஸ்லிம் என்று சொல்லாமல், செய்திகள் இவ்வாறு வெளியிடப் படுகின்றன.
தமிழகத்திற்கு திட்டத்துடன் இரண்டு அயல்நாட்டு குழுக்கள் வந்திருக்க வேண்டும்: தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் உள்ள விவரங்களிலிருந்து, கீழ் கண்ட விவரங்கள் பெறப் பட்டன. அவற்றை விஜயம் செய்த மசூதிகள், தேதிகளுடன் முறைப்படுத்தினால், இவ்வாறு வருகின்றது:
12-03-2020 | சூரமங்கலம், ரஹ்மத் நகர் மசூதி |
13-03-2020 to 15-03-2020 | செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மசூதி |
16-03-2020 to 18-03-2020 | அய்யம்பேட்டை, ஷேக் உமர் மசூதி |
19-03-2020 to 21-03-2020 | சந்நியாசிகுண்டு, புகாரியா மசூதி |
22-03-2020 | ஜமாத்-உல்-பிர்தௌஸி மசூதி |
இது வரை, ஊடகங்கள், இந்த போதகர்கள் இப்படி மசூதியிலிருந்து மசூதிக்கு சென்று வந்துள்ள நிலையில், கோவிட்-19 அச்சுருத்தும் நிலையில், நோய் பரவும் பயங்கரத்தையும் மறைத்து விதவிதமாக செய்திகளை போட்டு வருகிறார்கள். உள்ளூர் மசூதி காஜிகள், இமாம்கள் போன்றவர்களும், நிலை அறிந்தும், அரசு அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.
இதே போல, இன்னொரு குழு சென்று வந்துள்ளது தெரிகிறது. பிப்ரவரி 26, 2020 தேதியிலிருந்து, 16 போதகர்கள் சுற்றி வந்துள்ளார்கள். இதோ, அந்த விவரங்கள்:
06-03-2020 to 08-03-2020 | மதுரை |
08-03-2020 to 10-03-2020 | ராமநாதபுரம் |
10-03-2020 to 12-03-2020 | மேர்வாடி |
12-03-2020 to 14-03-2020 | வல்லக்குளம் |
14-03-2020 to 16-03-2020 | ஒப்பிலான் |
16-03-2020 to 20-03-2020 | கிழசெல்வனூர் |
20-03-2020 to 23-03-2020 | தேரவேலி |
மசூதிக்கு மசூதிக்குச் சென்று, எவ்வாறு தொழுகை செய்ய வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. அப்படி என்ன தமிழகத்து துலுக்கருக்கு தொழுகை செ ய்யத் தெரியாதா, அயல்நாட்டிலிருந்து வந்து தான் சொல்லித் தர வேண்டுமா என்று கேட்கலாம். ஒருவேளை, புதியதாக மதம் மாறியவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் போலும்.
பதட்டமான நிலையில் உண்மையான செய்திகளை மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும்: கரோனா விசயத்தில் மதத்தை நுழைக்க யாரும் விரும்பவில்லை. ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். கேரள ஊடகங்கள், தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், அரசு அறிக்கைகள் எல்லாம் ஏதோ “செக்யூலரிஸ ரீதியில்,” ஜனரஞ்சகரமான போக்கில், பரபரப்பு செய்திகள் போல வெளியிட்டிருப்பது தான் வியப்பாக இருக்கிறது. ட்டுரிஸ்ட் விசா மூலம் மதப் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சினைகள் செய்வது, மதமாற்றம் செய்வது, விசா காலம் முடிந்தும் தங்குவது, பல ஆண்டுகள் அப்படியே இருந்து விடுவது போன்றவை ஏற்கெனவே அதிகமாக இந்தியாவில் நடந்துள்ளன. கேரளாவில் ஷேக்குகள் வந்து ரகசியமாக சுற்றிப் பார்த்து சென்றிருக்கின்றனர். பிறகு அது பிரச்சினையான போது, விவரங்கள் வெளி வந்தன. இப்பொழுது, எல்லாமே கரோனா வைரஸ் போக்கில் பார்க்கப் படுகிறது. அந்நிலையில், அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதும் தடுக்கப் படவேண்டும்.
© வேதபிரகாஷ்
31-03-2020
[1] தமிழ்.இந்து, டெல்லி நிஜாமுதீன் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா உறுதி: அமைச்சர் தகவல், Published : 31 Mar 2020 13:21 pm. Updated : 31 Mar 2020 13:21 pm
[2] தமிழ்.முரசு, கொவிட்-19: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு, 25 Mar 2020 09:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2020 09:26
[3] https://www.tamilmurasu.com.sg/india/story20200325-41809.html
[4] ஏசியா.நெட்.நியூஸ், வெளிநாட்டில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் பரவிய கொரோனா… மதுரை இறப்பின் பரபர பின்னணி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Mar 2020, 11:53 AM IST, Last Updated 11:54 AM IST.
[5] https://tamil.asianetnews.com/politics/coronation-by-foreigners-from-abroad-q7qkfo
[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை, By Vishnupriya R | Updated: Wednesday, March 25, 2020, 22:12 [IST].
அண்மைய பின்னூட்டங்கள்