நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?
பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர். திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].
இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].
ரபீக்ராஜா –இமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7] –
- என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
- எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
- எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
- ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].
தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.
பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –
- கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
- எங்கு தயாரிக்கிறார்கள்?
- அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
- அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
- யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
- கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].
பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.
யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.
இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.
பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு : பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].
வேதபிரகாஷ்
07-04-2013
[3] http://www.thehindu.com/news/national/tamil-nadu/former-bjp-councillor-hacked-to-death/article4526530.ece
[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mercenaries-hired-to-murder-bjp-man-in-paramakudi/article4590370.ece
[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.
[16] Read more at: http://tamil.oneindia.in/news/2011/11/03/spl-police-team-search-police-fakruddin-chennai-aid0091.html
[17] http://dravidianatheism2.wordpress.com/2011/10/29/terror-bomb-manufacture-attacks-in-tamilnadu/
[18] http://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilnadu/
அண்மைய பின்னூட்டங்கள்