Archive for the ‘நெருப்பு’ category

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (5)

நவம்பர் 12, 2015
The Sword of tipu sultan - praises Allah for killing kafirs

The Sword of tipu sultan – praises Allah for killing kafirs

மைசூர் மஹாராஜாவும், திப்பு சுல்தானும்: திப்பு சுல்தான் உடையாரிடமிருந்து அரசை அபகரித்துக் கொண்டான். தானாக எந்த அரசையும் உருவாக்கிவிடவில்லை. அப்பொழுது, கர்நாடகம் “மைசூர்” கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. “மைசூர் மஹாராஜா” என்று ஒரு மதிப்பு இருந்தது. “நீ என்ன பெரிய மைசூர் மஹாராஜாவா?” என்று சாதாரண மக்கள் கேட்கும் அளவுக்கு அவர் இருந்தார். கலை, விஞ்ஞானம், இசை போன்றவை ஆதரிக்கப்பட்டன. இதனால், “மைசூர்” என்ற அடைமொழியுடன் பல வார்த்தைகள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இசை, கலை என்று பல உருவாகின. சமையலைப் பொறுத்த வரையில் மைசூர் பாகு, மைசூர் ரசம், மைசூர் போண்டா, மைசூர் பகோடா, என்று அன்றும், மைசூர் சந்தன சோப், மைசூர்பா என்று இன்றும் பல தோன்றின. கர்நாடக சங்கீதம், இசை என்ற வழக்கும் உருவாகின. கலைஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், என்று பலரும் மைசூர் அரசால் ஆதரிக்கப்பட்டனர். ஆனால், திப்புவின் ஆட்சியில் பாரசீகத் திணிப்பு இவற்றை தடுத்தது. ஜிஹாதி மதவெறியில் அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பது மட்டில், அவன் இந்திய தேசியவாதியாகி விட முடியாது. தன்னுடைய வாழ்விற்காக அவன் பலவழிகளைக் கையாண்டான். பிரான்ஸ், இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அதற்காகத்தான். ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று தனது கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

Studio fire during shooting of tele-serial 'The Sword of Tipu Sultan kills more than 40- 1989

Studio fire during shooting of tele-serial ‘The Sword of Tipu Sultan kills more than 40- 1989

கத்தி அல்லது குல்லாமற்றும்திப்புவின் கத்தி: “கத்தி அல்லது குல்லா” என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தான்[1]. ஆனால், முஸ்லிம் ஆசிரியர்கள் அவற்றை வேறுவிதமாக திரித்து விளக்கம் கொடுத்து, அவனை “ஆங்கிலேருக்கு எதிரான போராளி” போன்று சித்தரிக்கின்றனர்[2]. “கத்தி” என்றால் கத்தி முனையில் மதமாற்றம், அதாவது, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள் அல்லது செத்து மடி”, என்ற குரூரமான கொள்கையைக் கடைபிடித்தான். அதனால் “கத்தி” என்றால், “இந்துக்களுக்கு சாவு” என்ற பொருளாகியது. அதனால் தான் “திப்புவின் கத்தி” (The sword of Tipu Sultan) என்றபோது, அவர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அது அவர்களின் மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய கௌரவத்தை இழிவுபடுத்துவதாக இருந்தது. ஆனால், மல்லையா போன்றவர்கள் அதனை ஆதரிக்க முயன்றனர். கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், அப்பொழுதைய கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[3].

Tipu letters - cap or sword policy followed

Tipu letters – cap or sword policy followed

திப்புமற்றும்திப்புவின் கத்தி” – தீயசக்திகளின் சின்னங்கள்: கர்நாடகா மற்றும் கேரள கடற்கரையில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றும், மதமாற்றம் செய்தும், குரூரங்களை செய்ததால், திப்பு ஒரு தீயசக்தி, துர்தேவதை (evil force), விலக்கப்பட வேண்டியது ஒன்று, “சபிக்கப்பட்ட பெயர்” (cursed name) என்ற விதத்தில் கருதப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் கூட அப்பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பதில்லை. அவர்களது பாஷையில் சொல்வதானால், இரண்டுமே “சைத்தானின் சின்னங்கள்” ஆகும்[4]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது கர்நாடகாவில் காங்கிரஸ் போன்ற  கட்சிகள் அத்தகைய தீய சக்தி, தீய சின்னங்களை வைத்து ஆதாயம் தேட பார்க்கின்றன. ஆனால், இவற்றைப் பின்பற்றியவர்கள் அழிவைத்தான் தேடினர்.

Tipu satanic force killing many Hindus- Hindukush

Tipu satanic force killing many Hindus- Hindukush

தியசக்தி திப்பு அழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபனமானது: திப்பு சுல்தான் கத்தி [“Sword of Tipu Sultan”] என்ற தொலைக்காட்சி தொடரை தூர்தர்ஷனில் 1990ல் காண்பித்தனர், பிப்ரவரி 8. 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர்[5]. இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[6]. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது. கத்தியை வாங்கிய மல்லையாவும் திவாலா நிலையை அடைந்து, பல குடும்பங்களின் வாழ்க்கையினைக் கெடுத்தான். இப்பொழுதும், சித்தராமைய்யாவின் “திப்பு ஜெயந்தி” இரண்டு உயிர்பலிகளைக் கொண்டது. இன்னும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும்.

Tipu satanic force killing many kafirs- Hindukush

Tipu satanic force killing many kafirs- Hindukush

திப்புவின் ஜோதிட நம்பிக்கை: திப்புவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருந்தது. இதனால், தனது அரசவையில் பிரத்யேகமாக ஜோதிடர்களை வைத்திருந்தான். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தான். இவ்விதத்தில் தான் அவன் சில கோவில்களுக்கு மானியம் கொடுத்தது, பூஜை செய்தது போன்றவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் மீதான மதிப்பு அல்லது உண்மையிலேயே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் 1790ற்குப் பிறகு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதால், அவனது அத்தகைய ஈடுபாடு அதிகமாகியது. சிருங்கேரி சங்கராச்சாரியுடனான தொடர்பும் இவ்வகையில் ஏற்பட்டது தான். அவருடைய காலில் விழுந்தான் என்றும் குறிப்புகள் உள்ளன[7]. இதையெல்லாம், ஆசாரமான முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

The real Tipu sultan, tyrant- believing horoscope

The real Tipu sultan, tyrant- believing horoscope

ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி: ஔரங்கசீப் கூட கோவில்களுக்கு மானிய வழங்கினான் என்று சில சரித்திராசிரியர்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம், இக்கால கருணாநிதி போன்றது. அவரும் தங்களால் தான் திருவாரூர் ஆழித்தேர் ஓடியது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அந்த ஆளின் இந்து-விரோதத்தை எல்லோரும் அறிவர். அவர் காலத்திலும் சில கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்தது. அதாவது முதலமைச்சர் என்ற ரீதியில், இந்து அறநிலைத் துறையின் கீழ் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதால், அழைப்பு இதழ்களில் முதல் பக்கத்திலேயே, கருணாநிதியின் புகைப்படம் தான் போடப்பட்டது. இதெல்லாம் சாதாரண விசயம். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும், அவை தானாக நடந்திருக்கும். அதாவது பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதினால், அரசு ஆதரவு இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், காலக்கிரமப்படி நடக்கவேண்டிய கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.  கருணாநிதிக்கும் ஜோதிட நம்பிக்கை உள்ளது. ஆகவே, இவர்கள் (ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி) கோவில்களுக்கு மானியம் கொடுத்தது அந்த ரீதியில் தான்! இனி திப்பு விவகாரத்தை விவரரமாகப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-11-2015


[1] Tipu Sultan’s notorious jihâd – Islamic war-slogan – was SWORD (death) or CAP (Islamic honour, i.e. forcible conversion), a cruel option for a hapless Hindu population.

[2]  Prof. B. Shaik Ali, International Relations of Tipu Sultan, Islamic Voice, Monthly,   Vol 13-02 No:146    *   FEBRUARY 1999/ RAMADAN 1419H ;email: editor@islamicvoice.com

http://islamicvoice.com/february.99/tippu.htm=

[3] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

[4] If Tipu Sultan was a much-loved and respected Muslim ruler, as claimed by his present-day admirers, why is it that even Muslim do not name their children as Tipu, either in Mysore or in Malabar? Obviously, the name itself is a cursed name. Anyway, that is the belief in the entire West Coast and Mysore

[5] http://indiatoday.intoday.in/story/studio-fire-during-shooting-of-tele-serial-the-sword-of-tipu-sultan-kills-more-than-40/1/323127.html

[6] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[7] When the astrologers predicted an approaching malefic period from 1790 onwards and the combined forces of the British, the Nizam and the Marathas started surrounding Srirangapatanam, Tipu Sultan panicked and therefore did some good deeds – offering land-grants and even pujas and feeding Brahmin – mainly to ward off the evil effects and to get assistance from his Hindu subjects in his war efforts. He was reported to have even fallen prostrate before His Holiness Sringeri Shankaracharya and sought the latter’s pardon and blessings (Sakthan Thampuran by P. Raman Menon, and History of Mysore by Lewis Rice).

இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இந்திய  சுதந்திரப்  போரில்  தியாகம்  புரிந்தவர்களின்  நினைவிடத்தை  சூரையாடிய 

வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்?  நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:

Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.

An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”

“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.

The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”

மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.

சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.

இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

 

இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.

வேதபிரகாஷ்

15-08-2012


[5] The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

http://www.mid-day.com/news/2012/aug/140812-Mumbais-most-wanted.htm

தாவூதை துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது?

நவம்பர் 12, 2011

தாவூதை துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது?

தாவூத் சுன்னியா, ஷியாவா? ஷியா தனிமதச் சட்டவாரியத்தின் காரியதரிசி மற்றும் மதத்தலைவரான மௌலானா ஜஹீர் அப்பாஸ் ரிஸ்வி, “நாங்கள் அவனை இந்தியன் என்றே கருதவில்லை”, என்றாராம்[1]. ஆனால் “முஸ்லீம் / ஷியா” இல்லை என்று சொல்லாததைக் கவனிக்க வேண்டும். அப்படியென்றால், முஸ்லீமாக அவன் இங்கு புதைக்கப் பட ஒப்புக்கொள்கிறாரா? பொதுவாக ஷியாக்காரர்கள் கொஞ்சம் மனிதாபிமாக இருப்பார்கள் என்பார்கள். பிறகு எப்படி இவன் சுன்னித்தீவிர-பயங்கரவாதிகளையும் மிஞ்சிவிட்டான் என்று தெரியவில்லை.

தீவிரவாதத்தில்-பயங்கரவாதத்தில் சுன்னி-ஷியா ஒன்றாக வேலை செய்கின்றனரா? பொதுவாக இந்தியர்களுக்கு, குறிப்பாக பெரும்பாலான இந்துக்களுக்கு சுன்னி[2], ஷியா[3], என்றாலோ கூட போரா, அஹ்மதியா[4] என்றெல்லாம் சொன்னால் ஏதாவது புரியுமா என்று தெரியவில்லை. இருப்பினும், தீவிரவாதத்தில்-பயங்கரவாதத்தில் சுன்னி-ஷியா ஒன்றாக வேலை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. அல்லது “காஃபிர்களுக்கு” எதிரானது “ஜிஹாத்” என்பதினால் ஒன்றுபட்டு, பிறகு தமக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள்[5] போலும்!

துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது? பலநாடுகளின் பாஸ்போர்ட்டுகளை தாவூத் இப்ராஹிம் உபயோகப்படுத்திவருகிறான். டொமினிகா என்ற நாட்டின் பாஸ்போர்ட்டை உபயோகப் படுத்தப்பட்டதால், அந்நாட்டின் குடிமகன் அந்தஸ்து கொடுக்கப்பட்டது என்று தெரியவந்தது[6]. ஆனால், திடீரென்று அந்நாடு அதனை மறுத்தது[7]. இருப்பினும் ஏன் அவனது மகள்கள், மறுமகன்கள் முதலியோர்களுக்கு குடிமகன் / குடிமகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது என்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் பதில் சொல்லவில்லையாம்[8].

காஃபிர் நாட்டில், காஃபிரிஸ்தானில் புதைத்தால் உயித்தெழ முடியுமா? பாவம், தாவூத் இப்ராஹிம், தனது ஆட்களை விட்டு தனது சமாதிக்கு இடம் தேட சொல்லியுள்ளான். ஆனால், இந்தியா / பாரதம் ஒரு “காஃபிர்கள்”[9] வாழும் நாடு, அதாவது “நம்பிக்கையில்லாதவர்கள்” வாழும் நாடு[10]. அங்கு “மோமின்கள்” புதைக்கப் பட்டால், சொர்க்கம் கிடைக்குமா, உயித்தெழ முடியுமா அல்லது நரகத்திற்குச் செல்வார்களா? முஸ்லீம் அன்பர்கள் / நண்பர்கள் / பண்பாளர்கள் / பேராளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்!

“இஸ்லாம்” பெயரில் இந்தியாவிற்குக் கிடைக்கப் போவது என்ன? “இஸ்லாம்” என்றால் “அமைதி” என்று உறுதியாக விளக்கம் அளிக்கும் முஸ்லீம் அன்பர்கள் / நண்பர்கள் / பண்பாளர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவை “சுடுகாடாக” இல்லை[11] “இடுகாடாக” மாற்ற விரும்புகிறார்களா அல்லது “அமைதிப் பூங்கா”வாக இருக்க விரும்புகிறார்களா?

வேதபிரகாஷ்

11-11-2011


[1] Maulana Zaheer Abbas Rizvi, general secretary, Shia Personal Law Board, said the community didn’t consider Dawood an Indian.

http://www.mumbaimirror.com/index.aspx?page=article&sectid=15&contentid=20111110201111100251338024fb09ea2

[2] இப்பொழுது “சன்னி” என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

[3] சுன்னி-ஷியா என்பது இஸ்லாமில் உள்ள இரண்டு முக்கியமான பிரிவுகள். அலியை இமாமாக ஏற்றுக் கொள்பவர்கள் (அலியைப் பின்பற்றுபவர்கள்), அவரது பிள்ளைகளின் தியாகத்தை மதிப்பவர்கள் ஷியாக்கள்.

[4] இவையெல்லாம், இஸ்லாமில் உள்ள “சாதி/ஜாதி அமைப்பு” அல்லது அதற்கும் மேலான பிடுப்புள்ள பிரிவுகள் ஆகும். இதில் சமுக-இறையியல் பிரச்சினைகள் சேர்ந்துள்ளன.

[5] ரஃபிக் ஜக்கரியா “இஸ்லாமில் உள்ள சண்டைகள் / போராட்டங்கள்” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.

[6] Weekly Blitz wanted to know from the government of Dominica about the accusations of granting citizenship to notorious mafia don Dawood Ibrahim and his daughters and son-in-laws. In response to a question in a radio show, Anthony Astaphan bluntly denied that no such citizenship or passport has ever been granted in favor of Dawood Ibrahim. Subsequently he said if any such citizenship or passport has ever been found, it would have been fake. He also told the radio show that issuance of passport to Dawood Ibrahim will put him into “shock”.

http://www.weeklyblitz.net/1918/dawood-ibrahim-using-dominica-passports

[8] Meanwhile, the government of Dominica in a press announcement has refused the allegation of granting any citizenship of passport to Dawood Ibrahim, while it did not comment on the allegation of issuing passport and granting citizenship to daughters and son-in-laws of the notorious mafia don. Similarly Anthony Astaphan has failed to reply to the questions from Weekly Blitz related to granting of citizenship to Dawood Ibrahim’s daughters and son-in-laws.

[9] “காஃபிர்கள்” என்றால் “நம்பிக்கையில்லாதவர்கள்” அதாவது முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பொருள். அதுமட்டுமல்லாது அவர்கள் “குஃப்ரு” கொண்டவர்கள் அழுக்கு, அசுத்தம், கொண்டவர்கல், தூய்மையில்லாதவர்கள் என்றும் பொருள்படும். அதாவது முஸ்லீம்கள் மிகவும் தூய்மையானவர்கள், சுத்தமானவர்கள் என்று பொருள். அதனால் தான் அலி சகோதர்கள் காந்தியைப் பற்றி குறிப்பிடும் போது அவ்வாறு சொன்னார்.

[10]  காஃபிர்மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்என்றஎண்ணம்இருக்கும்வரையில்முஸ்லீம்முஸ்லீமாகத்தான்இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்.

https://islamindia.wordpress.com/2011/10/26/afganisthan-support-pakistan-in-a-war-against-india/

Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

[11] இந்துக்கள் இறப்பவர்களை எரிக்கவும், புதைக்கவும் செய்வார்கள், ஆனால் முஸ்லீம்கள் எரிக்கமாட்டார்கள், புதைப்பார்கள். இந்துக்களில் புதைப்பவர்களுக்கு, முஸ்லீம்களைப் பொலவோ, கிருத்துவர்களைப் போலவோ, அப்படியே உயித்தெழுவர் என்ற நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.