செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)
ஷாபானு வழக்கின் விளைவு, தனி சட்டம் உருவானது (1986): இஸ்லாம் மதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கமுள்ளதால், முறையால் பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டரீதியில் சென்றால் கூட, பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1986ல் ராஜிவ் காந்தி காலத்தில் “ஷாபானு வழக்கு” மூலம் பிரச்சியானது, பலரால் விவாதிக்கப் பட்டது. இருப்பினும், இஸ்லாமிய அடிப்படைவாத அழுத்தத்திற்கு, மிரட்டல்-உருட்டல்களுக்கு ராஜிவ் காந்தி பயந்து, உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாக, தனி சட்டத்தை உருவாக்கினார். உண்மையில், சிவில் சட்டம் [Code of Criminal Procedure] 125வது பிரிவின் படி, விவாக ரத்து செய்யப்படும் பெண்ணிற்கு, கணவன் உரிய ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது. இதனால், ஷாபானு, தனக்கு அளிக்கப் படும் ஜீவனாம்சம் போதவில்லை என்று, மேற்குறிப்பிட்ட சரத்தின் படி வழக்கு தொடர்ந்தாள். ஆனால், கணவன் மொஹம்மது கான், இஸ்லாமிய சட்டமுறையில், தான் விவாகரத்து செய்திருப்பதால், அச்சட்டத்தின் படியே மஹர் / ஜீவனாம்சம் கொடுக்க தீர்மானித்ததால், அச்சட்டம் [S.125 CrPC] தனக்கு பொறுந்தாது என்று வாதாடி, உயர்நீதி மன்றத்தில் வெற்றிபெற்றான். ஆனால், உச்சநீத் மன்றத்தில், அதை தள்ளுபடி செய்து, ஷாபானுக்கு உரிய ஜீவனாம்சம் அளிக்கும்படி ஆணையிட்டது[1].
ஷாபானு வழக்கிற்கு எதிர்ப்பு, மத–அரசியலின் ஆரம்பம்: இதனால், முஸ்லிம்கள் தங்களது மதச்சட்டத்தில் அரசு அல்லது நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ஆர்பாட்டம் செய்தனர்[2]. 125ற்கு விலக்கு அளித்தது. தனியாக, முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் விவாக ரத்து சட்டம், 1986 [The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986] என்று உருவாக்கப்பட்டது. இங்கு ஷாபானு என்பது 70 வயதிற்கும் மேலான மூதாட்டி என்று குறிப்பிடத் தக்கது. அத்தகைய நிலையில், பெண்கள், என்ன பாடு படுகிறாள் என்பது உலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும், செக்யூலரிஸ மற்ற சித்தாந்திகள் அதனை பெண்கள் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளாமல், மதப்பிரச்சினை, முஸ்லிம்களின் உள்விவகாரம் அதில் மற்றவர்கள் நுழையக் கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அந்நிலையிலும், பொது சிவில் சட்டம் தேவை என்ற கருத்தும் உருவாகி, விவாதத்திற்கு வந்தது. அப்பொழுது, பிஜேபி ஆட்சியில் இல்லை, மேலும், அது அக்கட்சியினையும் தொடர்பு படுத்தவில்லை. ஆனால், தேர்தல் வாக்குருதிகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டது.
1995ல் சர்ளா முதுகல் – பொது சிவில் சட்ட ஞாபகவூட்டல் தீர்ப்பு: 1995ல் சர்ளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1949லிருந்து, 41 வருடங்களாக இந்த 44 பிரிவு குளிர்பெட்டியிலேயே வைத்திருக்கிறார்கள். அரசுகள் வந்தன, சென்றன, ஆனால், இருப்பினும், இந்திய மக்கள் அனைவரையும் இணைக்கும் முறையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் தோல்வி அடைந்துள்ளனர்”, என்று நீதிபதி பதிவு செய்தார்[3]. இது எப்படி ஆண்கள் இரண்டாவது திருமணத்தை முகமதிய மதம் மாறி சட்டப்படி செய்து கொள்கிறார்கள், அதனால், முதல் மனைவி, இந்துவாக இருப்பதனால் பாதிக்கப்படுகிறாள் என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[4]. செக்யூலரிஸம், பெண்ணுரிமைகள் சமநீதி, சமூகநீதி என்றெல்லாம் பேசும், பேசிய வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜரால், தேவ கௌடா முதலியோர் கண்டுகொள்ளவில்லை. ”என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பிஜேபி எப்பொழும் “பொது சிவில் சட்டத்திற்கு” ஆதரவாக குரல் கொடுத்து வருவது தெரிந்த விசயமே. ஆனால், அது “கம்யூனலிஸம்” என்று முத்திரைக் குத்தப்பட்டு, ஒதுக்கப்படுவது, மனித உரிமைகள் பேசும் கூட்டங்களின் போக்காகவே இருந்து வருகின்றது. இந்துக்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும் போன்ற வாதங்களும் வைக்கப்பட்டன. ஆனால், மதரீதியில், எந்த இந்து பெண்ணும் / ஆணும், இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அல்லது வேறெந்த சட்டமும் தனக்கு பொறுந்தாது, தனது மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று யாரும் வழக்குத் தொடரவில்லை. இருக்கும், சிவில்-கிரிமினல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் தான் எதிர்த்து வருகின்றனர். கிருத்துவர்கள் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
பொது சிவில் சட்டம் எதிர்ப்பு, முத்தலாக் ஆதரிப்பு: பொது சிவில் சட்டம் இவ்வாறு, செக்யூலரிஸ்டுகள், முஸ்லிம்கள் மற்ற சித்தாந்திகள் எதிர்த்து தங்களது வாதங்களை வைத்டுள்ளனர்:
- இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, பல மதங்கள் இருப்பதனால், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளலாம். அதற்கான உரிமைகள் அரசியல் நிர்ணய சட்டம் கொடுத்துள்ளது.
- மதரீதியில் மக்களை செக்யூலரிஸப்படுத்தலாம், ஆனால், சட்டரீதியில் அவர்களை செக்யூலரிஸப்படுத்த முடியாது.
- மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது.
- பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும்.
- எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.
- இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது.
- அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை.
- பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன.
- முஸ்லிம்கள், தாமாகவே முன் வந்து, அத்தகைய சட்டத்தை ஏற்றுகொள்ள முன்வரும் வரை வற்புருத்தக் கூடாது.
- அதுவரை, அவர்களுக்கு ஷரீயத் சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த வேண்டும்.
செக்யூலரிஸ ஊடகங்கள், 1995லிருந்து, இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றன. ஆனால், இணைதள விவரங்கள், செய்திகள் முதலியவை பரவி வருவதால், பொது மக்களுக்கு பற்பல உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் தாமாகவே முத்தலாக் முறையற்றது, பெண்களின் உரிமைகளைப் பறிப்பது என்று வாதிட வந்தது, வழக்குத் தொடுத்தது: முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும் பா.ஜ.க அரசின் சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில், பா.ஜ.க முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை “தலாக்” என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016 சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
© வேதபிரகாஷ்
11-04-2017
[1] Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844; Author: Y Chandrachud; Bench: Chandrachud, Y.V. ((Cj), Desai, D.A., Reddy, O. Chinnappa (J), Venkataramiah, E.S. (J), Misra Rangnath; PETITIONER: MOHD. AHMED KHAN Vs. RESPONDENT:SHAH BANO BEGUM AND ORS.; DATE OF JUDGMENT23/04/1985.
[2] https://indiankanoon.org/doc/823221/
[3] “I do not think that at the present moment the time is ripe in India for me to try to push it through”. It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.
[4] Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: K Singh; Bench: Kuldip Singh (J); PETITIONER: SMT. SARLA MUDGAL, PRESIDENT, KALYANI & ORS. vs. RESPONDENT: UNION OF INDIA & ORS. DATE OF JUDGMENT10/05/1995
https://indiankanoon.org/doc/733037/
அண்மைய பின்னூட்டங்கள்