Archive for the ‘நான்கு பெண்டாட்டிகள்’ category

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (1)?

பிப்ரவரி 13, 2014

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (1)?

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிம்களின்  பங்கு  வெளிப்படுகிறது: “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம்[1] பற்றி அலசிவிட்டு, “முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது” என்று முடித்திருந்தேன்[2].

 

  1. இஸ்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்றது, இல்லை முஸ்லிம் ஆகிவிட்டேன் என்றது.

 

  1. பெண்ணில்லை, விவாகம் செய்து கொள்ளவில்லை என்றது, ஆனால், அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள், என்றது,

 

  1. குடும்பத்தார் எதிர்க்கவில்லை என்றது, பிறகு எதிர்த்துள்ளார் என்று விவரங்கள் வெளிவருவது.

 

  1. ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள் – என்று இணைதளத்தில் வெளியிடுவது!

 

  1. “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.

 

  1. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[3],

 

  1. யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[4].

 

  1. ஒருவருடமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதெல்லாம் பொய். இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது பெண் வலை விரித்திருக்கிறாள், விழுந்திருக்கிறாள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பொஇக்கையும் இல்லை.

 

  1. ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.

 

  1. யுசரா தானாக மதம் மாறினாலும், திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றினாலும், இது ஒரு மோசடி என்றே தெரிகிறது.

 

உடனே, முஸ்லிகள் இதனை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். சாணக்கியன், நஞ்சுண்ட மூர்த்தி என்று இந்து பெயர்களில் ஆரம்பித்துவிட்டனர்[5]. இவர்களும் தங்களுடைய உண்மையான அடையாளங்களுடன் விவாதத்தில் இறங்க தைரியம் இல்லை. உண்மையினை எதிர்கொள்ள முடியாமல், “பிராமண விரோதம்” அடிப்படையில் முஸ்லிம் இறங்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது[6].

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

சினிமா  தொழில், வியாபாரம்  மற்றும்  நுகர்வோர்  பொருள்  என்று  வந்துவிட்ட  பிறகு,   காசு  கொடுத்துப்பார்க்கும்  ரசிகர்கள்  தங்களது  விருப்புவெறுப்புகளை  வெளியிடத்தான்  செய்வார்கள்: மதம் என்பது தனிப்பட்ட விசயம் எனும்போது, மதம் மாறுவது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம், கட்டாயம் அல்லது தேவை என்று எந்த காரணத்தின் அடிப்படையிலும் இருக்கலாம். அதைப் பற்றி மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனலாம். ஆனால், மற்றவர்களை கவரும் வகையில், சிந்திக்கவைக்கும் முறையில், பாதிக்கும் வழியில், ஒரு தனிநபர் மதம் மாறியிருக்கிறார் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார் என்றால், நிச்சயமாக மற்றவர்களும் அதில் கவனம் செல்லுத்தவேண்டியத் தேவை வந்துவிடுகிறது. இங்கு சட்டதிட்டங்கள் மீறும் போது, நீதிமன்றங்களும் வருகின்றன. சினிமாக்காரர் என்பதால் தான், மக்கள் இவர்களை கவனித்து வருகிறார்கள். இல்லையென்றால், யாரும் சீண்டமாட்டார்கள். ஒரு குப்புசாமி, கோவிந்தசாமி, மதம்மாறி விட்டார் என்றால், அது செய்தியும் ஆகாது, யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், புகழ், பிரபலம், ஆதரவு என்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. சினிமா தொழில், வியாபாரம் மற்றும் நுகர்வோர் பொருள் என்று வந்துவிட்ட பிறகு, காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்கள் தங்களது விருப்பு-வெறுப்புகளை வெளியிடத்தான் செய்வார்கள்.

 

யுவன் முஸ்லிம் பெண்

யுவன் முஸ்லிம் பெண்

அந்தரங்க  விசயங்கள்  அரங்கேறுவதும், மதம்மாறுவது  ஜனநாயக  உரிமையாகுவதும்  எவ்வாறு: மதமே வேண்டாம் என்கின்ற குழப்பவாதிகளே, இப்பிரச்சினையால் குழம்பிப் போனதும் சில இணைதளப் பதிவுகளில் காணமுடிகின்றது[7]. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கவேண்டும் என்றால், இந்துமதத்தையும் குறைகூறியாக வேண்டும் என்ற நிலையில் விமர்சிக்கும் போக்கும் காணப்படுகிறது, “சமூக வலைத்தளங்களில் இருமதங்களிலும் இருக்கும் ஜனநாயக உணர்வு கொண்டோர் அவர்கள் சிறுபான்மை என்றாலும் இந்த மதமாற்றம் ஒரு தனிநபரது அந்தரங்க விசயம், அதை விவாதிப்பது சரியல்ல எனவும், முற்போக்கு மற்றும் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவர்கள் கூடுதலாக இதை பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவதற்காக விவாதிக்கின்றனர். எனினும் இருதரப்பு மதவாதிகளின் விவாதம்தான் இவற்றில் முன்னணி வகிக்கிறது”, என்று ஒரு இணைதளம் கூறுகிறது[8]. தொடர்ந்து “இவையெல்லாம் இப்படித்தான்னென்பது போல விவரித்து விட்டு, “அந்த வகையில் ஒரு மனிதனுக்குரிய மதம் மாறும் ஜனநாயக உரிமையை மற்ற எவரையும் விட இந்த மதவாதிகள்தான் மறுக்கிறார்கள். அந்த மறுப்பை வேரறுக்கும் விதமாக மதங்களின் விஷப்பல்லை முறியடிக்கும் வேலையினை நாம் தொடர்வோம்”, என்று முடிக்கப்பட்டுள்ளது. சித்தாந்தரீதியில் –

  • எதையும் ஆதரிக்கலாம்-எதிர்க்கலாம்,
  • ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்றால், மற்றதை எதிர்க்கவேண்டும்,
  • ஒன்றை எதிர்க்கவேண்டும் என்றால், மற்றதை ஆதரிக்க வேண்டும்
  • இல்லை இரண்டையும் எதிர்த்தால் தான் இன்னொரு கூட்டத்தினரிடமிருந்து சான்றிதழ் கிடைக்கும் என்றால், இரண்டையும் எதிர்ப்பது
  • இல்லை இரண்டையும் ஆதரித்தால் தான் மற்றும் இன்னொரு கூட்டத்தினரிடமிருந்து சான்றிதழ் கிடைக்கும் என்றால், இரண்டையும் எதிர்ப்பது

இப்படியும், குழப்பவாட்ஹத்தை மிஞ்சும் சர்வ-சமரசசித்தாந்திகள் போல எழுதிவரும் போக்கும் கிளாம்பி விட்டது. அதாவது, உண்மையினை உண்மை என்று சொல்ல திராணியில்லை, தைரியம் இல்லை.

 

அல்ஹம்துலில்லா! (இறைவனுக்குநன்றி!): இந்தியா இப்பொழுது இஸ்லாமிய தீவிரவாதத்தால், ஜிஹாதி பயங்கரவாதத்தால், முகமதிய அடிப்படைவாத வெறித்தனத்தால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நிலையில் “ நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன்”, என்று விளம்பர ரீதியில் அறிவித்தால், விசயங்களை அறிந்துள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள். “அல்ஹம்துலில்லா!” என்றால், என்னடா அர்த்தம் என்று கேட்கத்தான் செய்வார்கள். தினமலர்[9]  அதனை, இறைவனுக்கு நன்றி!” என்று மொழிபெயர்த்துப் போட்டால், அவர்கள் ஏமாறமாட்டார்கள். அப்படியென்றால், இஸ்லாமிய தீவிரவாதத்தை, ஜிஹாதி பயங்கரவாதத்தை, முகமதிய அடிப்படைவாத வெறித்தனத்தை ஆதரிக்கிறாராயா என்றுதான் கேட்பார்கள். நாளைக்கு குண்டு வெடிக்கும் போது, “ஏய், ஏதோ பெருமையாக சொல்லிக் கொண்டாயே, இப்பொழுது அல்லாவிடம் கேட்டு ஏன் குண்டு வைத்தார்கள் என்று கேட்டு சொல்லமுடியுமா? அல்லது அல்லாவே குண்டு வைக்காதே என்று தடுக்க முடியுமா”, என்று கேட்கத்தான் செய்வார்கள். சினிமாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ஜிஹாதி பயங்கரவாதத்தை, முகமதிய அடிப்படைவாத வெறித்தனத்தை விமர்சித்தால் காண்பித்தால் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள், பிறகு அவை ஏன் நடக்கின்றன, நடத்தப் படுகின்றன என்று கேட்டால் பதில் சொல்லியாகவேண்டுமே?

 

சிம்புவின்சான்றிதழ்தேவையா?: குழந்தை நட்சத்திரமாக, நடிகைகளுடன் ஆட ஆரம்பித்த சிம்பு, இளைஞனாகி நடிகைகளுடன் ஆட ஆரம்பித்தான். நடிகைகளின் மீது சிம்புவுக்கு ஆரம்பத்திலிருந்தே, இரு கண், கிரக்கம், மயக்கம் எல்லாம் உண்டு. நயனதாராவுடன் “ரொமான்ஸ்” செய்த காட்சிகள் இணைதளங்களில் வெளிவந்தன. மற்ற நடிகைகளுடனும் இணைத்துப் பேசப்பட்ட செய்திகள் வெளிவந்தன. பல பெண்களுடன் உறவு வைக்க விரும்பும் இவர்களின் நிலை சமூகத்திற்குத் தேவையா என்று பார்க்கும் போது, அத்தகைய சிம்புவே, இதெல்லாம் தனிப்பட்ட நபரின் விவகாரம் என்று சொல்லிவிட்டாராம். [STR ‏@iam_STR  Feb 9 @Raja_Yuvan no matter what our support and love is always there for u :)], என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அந்த சிம்புவே, ஏன் டுவிட்டரில் காணாமல் போய்விட்டாயே என்று கேட்கவில்லை. சிம்பு அவ்வாறு, யுவராவை ஆதரிக்கும் பட்சத்தில், நாளைக்கு குண்டு வெடித்தால், அவரையும் (சிம்புவையும்) ரசிகர்கள் கேள்வி கேட்பார்கள்! பலதார இல்லறங்களில், கற்பற்ற தாம்பத்தியங்களில் ஜனநாயகம் என்றெல்லாம் இருக்கிறாதா என்று அத்தகைய சித்தாந்தப் பண்டிதர்கள் தான் விளக்க வேண்டும்.

 

டுவிட்டரில்பயந்துஓடிவிட்டயுசரா: முதலில் “நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன் என்று ஆரம்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்.

Yuvanshankar Raja ‏@Raja_Yuvan  Feb 8

I’m not married for the third time. That news is fake and yes I follow Islam and I’m proud about it. Alhamdhulillah

Expand

க்டும்பப் பிரச்சினையான பிறகு, “எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை”, என்று புலம்பிவிட்டு,

Yuvanshankar Raja ‏@Raja_Yuvan  Feb 8

My family supports my decision and there is no misunderstanding between me and my dad.

Expand

“எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா! (இறைவனுக்கு நன்றி !)”, என்று முடித்த விதமே உண்மையை மறைக்கும் விதமாக இருந்தது. இப்பொழுதோ, யுவராவின் நிலையை டுவிட்டர் மூலம் அறியலாம் என்று சொடிக்குப் பார்த்தால்; “மன்னிக்கவும், நீங்கள் தேடிய பக்கம் காணப்படவில்லை. எல்லாம் முன்போல வந்துவிட்டால் சரிசெய்ய முயல்கிறோம்” என்று வருகிறது[10] [Sorry, that page doesn’t exist! Thanks for noticing—we’re going to fix it up and have things back to normal soon]. ஆனால், நன்றாகவே தஎரியும், இதெல்லாம் சரிசெய்ய முடியாத “கேசுகள்” என்று! ஆகவே, டுவிட்டரிலிருந்து ஓடி ஒளியும் அளவிற்கு ரசிகர்கள் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், அவற்றிற்கு பதில் சொல்ல முடியாமல், கணக்கை மூடி ஓடிவிட்டார் என்று தெரிகிறது. ஏன், ஆண்டவன் இதற்கு தைரியம் கொடுக்கவில்லையா? என்று ஆத்திகர்களும், நாத்திகர்களும் கூட கேள்வி கேட்பார்களே? டுவிட்டர், பேஸ்புக்கெல்லாம், ஏதொ தினமும் அத்தியாவசிய தேவைகள் போலாக்கி விட்டு, இளைஞர்களை போதைக்குள்ளாக்கி விட்டு, கக்கூஸ், குளியல் தவிர போனும் கையுமாக அலைய விட்டு, ஓடிவிட்டால், அவர்கள் விட்டுவிடுவார்களா?

 

ரசிகர்களுக்குபதில்சொல்லியாகிவேண்டும்: யுவன் சங்கர் ராஜாவுக்கு, இளைஞர்களிடம் ஒரு ஆதரவு, ரசிகர்கள் கூட்டம் என்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர், இந்த மதமாற்றத்தை விரும்பவில்லை. டுவிட்டர் மூலம், தான் முஸ்லிமாக மாறியது உண்மைதான், ஆனால், மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அறிவித்ததால் [ “I follow Islam and I’m proud about it. Alhamdhulillah.” Feb.9, 2014 ], பதிலுக்கு டுவிட்டரில், ரசிகர்கள் அவரை சாட ஆரம்பித்துவிட்டனர்[11] [quits Twitter after being abused by his followers.  His statement had surprised many. While it did not have an impact on the majority of his fans, a section of followers opposed his decision ‘to convert to the Islam religion’. His faith and belief were questioned and was abused by them.]. இதை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனால், டுவிட்டரில் தனது பதிவுகளை நிறுத்திவிட்டார்[12]. சினிமா பொருள் என்றால், ரசிகர்கள் அதன் தராதரம் பார்ப்பார்கள். நஸ்ரியா தொப்புளைக் காட்டிவிட்டார்கள் என்று கலாட்டா செய்தபோதே, சினிமாவிலும் எப்படி இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதி பயங்கரவாதம், முகமதிய அடிப்படைவாத வெறித்தனம் முதலியவை வேலை செய்கின்றன என்று தெரிந்து விட்டன. “விஸ்வரூபம்” பெரிதாகவே காட்டிவிட்டது.

 

வேதபிரகாஷ்

© 13-02-2014


[3] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

[6] சாணக்கியன், நஞ்சுண்டா மூர்த்தி இவர்களின் பதில்களை பார்க்கவும்.

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது!

ஜனவரி 10, 2011

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது

தொடர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் பல இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்தி வருவதில் மேலும் ஒரு அம்முனுத்தீன் என்றவன் சேர்ந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. முன்பு முகமது அனிபா என்ற டிரைவர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[1]. முரளி என்ற அப்துல் ரஹ்மான் ஐந்து பெண்களை மணந்துள்ளான்[2]. அப்துல் வாஹித் என்பவன் குழந்தை பிறக்கவில்லை என்ரு 15 பென்களை மணந்தான்[3]. மொஹம்மது மௌதூத் கான், தான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஆறு பெண்களை மணந்தான்[4]. இதே மாதிரி முஹமது ரஹ்மான், இலியாஸ் முதலியோரும் பல பெண்களை மணந்தனர், ஆனால், கைது செய்யப்பட்டனர்[5]. லியாகத் அலிகான் என்பவன் ஏற்கெனவே இணைதாலத்தில் வலைவீசி 50 மேல் பண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[6]. பிறகு மன்சூர் அலிகான்………………..இப்படி தொடர்கிறது!

ஆர்க்குட் போய் ஃபேஸ்புக் வந்தது: ஆர்க்குட் மூலம் மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் முதலியோர் ஏமாற்றப்பட்டு சீரழைக்கப் பட்டப் பிறகு, அது தடை செய்யப் பட்ட நிலைக்கு போய்விட்டப் பிறகு, ஃபேஸ்புக் பிரபலமடைய ஆரம்பித்து விட்டது. ஃபேஸ்புக்கில் அக்கோண்ட் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு, அதில் தன்னைப் பற்றி விவரங்களைத் தரவேண்டும் – பெயர், வயது, பிறந்த தேதி, ஈ-மெயில்-ஐ-டி, விருப்ப-வெறுப்புகள் / பொழுதுபோக்குகள் (ஹாபிஸ்), ……..முதலியன. புகைப்படமும் சேர்த்து கொள்ளலாம். இதே மாதிரி எத்தனை ஈ-மெயில் ஐ-டி உள்ளனவோ, அத்தனை ஃபேஸ்புக்கில் அக்கோண்ட்டுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது, ஒரே நபரே இப்படி பல புனை / போலிப்பெயர்களுடன், அவதாரங்களுடன் பலருடன் உரையாடலாம், உறவாடலாம்! இன்றைய இளைஞர்-இளைஞிகள் இத்தகைய விளையாட்டில் ஈடுப்படுள்ளது சாதாரணமான விஷயம்தான்.

அமீன்[7] என்ற அம்முனுத்தீன்[8] ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது: இதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் புனை / போலிப்பெயர்கள் மூலம் தொடர்பு கொண்டு நேரத்தை விரயம் செய்து கொண்டு சேட்டிங் / உரையாடல் செய்வது வழக்கமாகியது. இதில் முக்கியமாக நட்பு என்ற போர்வையில் இளம் பெண்கள் / மாணவிகள், இளம் ஆண்கள் / மாணவர்கள் கூட சேட்டிங் / உரையாடல் என்று ஆரம்பித்து பிறகு “காதல்” என்ற பெயரில் செக்ஸ் / பாலியல் விஷயங்களை மறைமுகமாக நேரிடையாக பரிமாறிக் கொண்டு, திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆரம்பிப்பது, அந்நிலைக்கு முன்னரே, இருபாலர்களும் செல்போன், முகவரி, குடும்பப் பின்னணி முதலியவற்றை அறிந்துகொள்வதும் உண்டு. இதில்தான், இளம் ஆண்கள் / மாணவர்கள் அல்லது அவர்களைப் போன்று நடிக்கும் வலைவீசும் காமக்கயவர்கள் / செக்ஸ் வக்கிரக்காரர்கள் உள்ளே நுழைந்து இளம் பெண்கள் / மாணவிகளை ஏமாற்ற ஆரம்பிக்கின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், சீரழைக்கப் படுவது பெண்கள்தாம். இந்த அம்மூனுத்தீனும் அதே முறையைத்தான் கையாண்டுள்ளான்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன: மற்ற காம-வக்கிர மோசடி பேர்வழிகளைப் போல அம்முனுத்தீன் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளின் தந்தையாக உள்ளான். இருப்பினும் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. எப்படி இது மனைவிக்குத் தெரியாமல் இருந்தது என்பது வியப்பிற்குரிய விஷயம்தான். இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு, அவன் பல முறை வெளியே சென்றிருக்க வேண்டும். ஆகவே, இவன் விஷயத்தில் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர் என்பது தெரிகின்றது.

பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு வலை வீசியது: 19-21 வயதான இளம் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி அனுபவம் உள்ள அம்மீனுத்தீன், பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு காதல் வலையை வீசியுள்ளான். அப்பெண்ணும் மாட்டியுள்ளாள். முன்பே திட்டமிட்டபடி, தந்தை இல்லாத பெண்களாக சேர்ந்தெடுத்துள்ளான். நேரிடையாக தாயாருடன் பேசி திருமணம் செய்து கொள்வதாக வாய்ப்பளித்துள்ளான். ஆனால், அப்பெண்ணின் தாயார் விவரமாக அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்துள்ளார். கல்யாணத்திற்கு முன்னர் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்படுத்த அம்முனித்தீனின் தாயார் போல ஒரு பெண் மலேசியாவிலிருந்து அவருடன் பேசியுள்ளார். “உமது பெண்ணை என் பையனே கல்யாணம் செய்து கொள்வான். மற்றெந்த பையனையும் பார்க்கவேண்டாம். இதையே முடித்துவிடலாம்”, என்பது போல பேசினாள். ஆனால், நேரில் யாரும் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. புதன் கிழமை திருமணம் எனும்போது அதற்குள் மற்ற பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஆகவே போலீஸாரிடம் புகார் கொடுத்தவுடன், அம்மீனுத்தீன் கைது செய்யப்பட்டான்.

ஆசையினால் / சபலத்தினால் ஏமாற்றப்பட்ட / சீரழைந்த மாணவிகள் / இளம்பெண்கள்: சில பெரிய நடிகர்களைத் தெரியும், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றெல்லாம் ஆசைக் காட்டி பணம், நகை முதலியவற்றையும் பறித்துள்ளான். அவர்களுடன் செக்ஸும் வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப் பட்ட மாணவிகள் தற்கொலை வரை சென்றதுதான் முடிவான கட்டம்.

இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம்? இங்கு சம்பந்தப் பட்டுள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதனால், அவர்களுக்கேயுரிய மனோதத்துவ ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன.

இவ்வாறு நடப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வேதபிரகாஷ்

10-01-2011


[7] சன்டிவியினர் 09-01-2011 அன்று தொடர்ந்து பலமுறை இச்செய்தியை போட்டு வந்தாலும், அமீன் என்ற பெயரை அனில் என்பது போல உச்சரிக்கப்பட்டது. அவன் காண்பிக்கப் பட்டாலும், அவன் முஸ்லீம் என்று சொல்லப்படவில்லை.

[8] பர்தா போட்டு வந்த ஒரு பெண்மணி தான் பெண் கெட்டுவந்தவன் அம்மீனுத்தீன் என்று குறிப்பிட்டார், அப்பொழுதுதான், அவன் முஸ்லீம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. இல்லையென்றால் பொதுவாக, யாரோ ஒரு இளைஞன் இம்மாதிரி பெண்களை ஏமாற்றிவந்தான் என்பது போலத்தான் செய்தி பார்ப்பவர்கள் / கேட்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

 

அப்துல் ரஹீம் மூன்று, முஹமது இலியாஸ் நான்கு பெண்களை திருமணம் செய்ததால் கைது!

ஜூலை 13, 2010

நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030

தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.

  1. சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
  2. ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
  3. சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ்,  மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
  4. மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!

முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.

மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.

முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].

இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.


[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது,  First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81

[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2