Archive for the ‘நாகூர்’ category

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

05-03-2022 – சிறுமியின் உடலை வாங்க மறுப்பு: இந்த நிலையில் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து தும்பைப்பட்டிக்கு சென்று விட்டனர்[1]. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் தும்பைப்பட்டியில் சிறுமியின் வீட்டு முன்பு திரண்டனர்[2].  அதாவது அதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை போலிருக்கிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது பற்றி அறிந்ததும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்[3]. அரசு அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்[4]. இந்த நிலையில் அங்கு வந்த பா.ஜ.க. மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், இந்து மகா சபா மாநில துணை தலைவர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவர்களுடன் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்[5]. தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்[6].

பிரச்சினை மக்கள் போராட்டமானதுசாலை மறியல்போலீஸ் தடியடி: சிறுமியின் சாவில் உள்ள மர்மத்தை போலீசார் மறைப்பதாக கூறி கோஷமிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், பா.ஜ.க. நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விவசாய அணி தலைவர் பி.வி.தர்மலிங்கம், மேலூர் நகர் தலைவர் எவரெஸ்ட் தென்னரசு, காந்திநகர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து தும்பைப்பட்டியில் மதுரை- திருச்சி நான்குவழிச்சாலையில் மாலை 5.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்[7]. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்[8]. மற்ற அரசியல்வாதிகள் இதில் கலந்து கொள்வது, பொது பிரச்சினை அரசியலாக்கப் படுகிறாதா என்று யோசித்தாலும், உண்மைகளை மறைக்கும் போக்கு நன்றாகவே தெரிகிறது. மயக்கமாக உள்ள சிறுமியை எவ்வாறு திருப்பரங்குன்றம், ஈரோடு என்று கூட்டிச் சென்று பிறகு, மதுரையில் தனது தாயாரிடம் கொண்டு சேர்த்தான் என்று புரியவில்லை. தூக்கிக் கொண்டு வந்தானா, காரில் வைத்து கொண்டு வந்தானா, அப்பொழுது யாரும் ஒன்றும் கேட்கவில்லையா போன்ற கேள்விகளும் எழும்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக என்ற நிலை பிம்பம் ஏன் உருவானது போன்றவை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும்[9], அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரவிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 06-03-2022 அன்று காலை அச்சிறுமி மரணமடைந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[10]. மேலும் மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்[11]. 20 நாட்களாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[12].  ஆனால், போலீஸார் இப்பொழுது, அத்தகையை கருத்தை முன் வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: இருப்பினும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது[13]: “சிறுமி தனது காதலர் நாகூர் ஹனிபாவுடன் காதலர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார். “போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர்ஹனிபாவின் தாயார் விட்டுசென்றுள்ளார். மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது…….சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கூட்டுப் லியல் வல்லுறவு நடக்கவில்லை, உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும் கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான தடயமே உள்ளது எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. …….சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்….இந்த விவகாரத்தில் போக்சா வழக்கு பதிவாகியுள்ளதால் சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது ……,” என்றும் அவர் கூறினார்[14].

எலிமருந்து சாப்பிட்ட காதலன்காதலி, காதலன் மட்டும் தப்ப்பித்துக் கொண்ட மர்மம்: இந்த எலிமருந்து சாப்பிட்ட படலமே பல கேள்விகளை எழுபுகிறது. ஊடகங்கள் சொல்வதாவது:

  1. போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்….
  2. இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர்.
  3. இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[15].
  4. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.
  5. இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[16].
  6. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[17].
  7. சாப்பிடுவது போன்று சாப்பிட்டு துப்பி விட்டேன்…….
  8. சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார்.

அப்படியென்றால், 16-17 வயதுடைய சிறுமி உடன்பட்டே விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டான் என்று தொணிப்பது போலிருக்கிறது. பிறகு ஏன் எலிமருந்து கொடுத்து கொல்ல வேண்டும்?  அதையும், அவளே விருப்பப் பட்டு சாப்பிட்டாள் என்பார்களா? பிறகு உண்மையான காதலன், காதலியுடன் இரண்டு வாரங்கள் ஜாலியாக உடலுறவு கொண்டு, கணவன் – மனைவி போன்று வாழ்ந்து, விசம் கொடுத்து அவள் சாக, இவன் தப்பித்துக் கொள்வானா? இல்லை, சாப்பிட்டுவது போல சாப்பிட்டு துப்பி விட்டான் என்றால், அந்த விசம் சாப்பிட்ட நாடகம் ஏன்? இரண்டு வாரம் “எஞ்சாய்” பண்ணுவேன், பிறகு கொன்று விடுவேன் என்பது என்ன? சரி “உலக பெண்கள் தினம்” என்றுள்ளதே, ஏன் எந்த பெண்ணியங்களும் இதைக் கண்டு கொள்ளவில்லை?

©  வேதபிரகாஷ்

07-03-2022


[1] பாலிமர் செய்தி, மாமமான சிறுமி மரணம், இளைஞன் உட்பட 8 பேர் கைது, மே.07, 2022. 07:11:15 AM.

[2] https://www.polimernews.com/amp/news-article.php?id=170722&cid=1

[3] தினமணி, மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி உயிரிழப்பு:இளைஞா், குடும்பத்தினா் உள்பட 8 போ் ‘போக்சோவில் கைது, By DIN  |   Published on : 06th March 2022 11:04 PM  |  Last Updated : 06th March 2022 11:04 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/mar/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3803401.html

[5] புதியதலைமுறை, மதுரை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்புமேலூரில் உறவினர்கள் சாலைமறியல்,    Veeramani Published :06,Mar 2022 07:37 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/131526/Madurai-Melur-girl-dies-after-treatment–8-persons-arrested-in-POCSO

[7] நக்கீரன், மதுரை மேலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி!, செய்திப்பிரிவு, Published on 07/03/2022 (09:58) | Edited on 07/03/2022 (10:11).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-melur-girl-incident-police-beat-relatives-involved-struggle/

[9] விகடன், மதுரை: மாயமான சிறுமி மரணம்; போக்சோவில் இளைஞர் உட்பட 8 பேர் கைது! –கொதித்த ஊர் மக்கள்.. நடந்தது என்ன?, செ.சல்மான் பாரிஸ், Published: 06-03-2022 at 7 PM; Updated: 06-03-2022  at 7 PM

[10] https://www.vikatan.com/social-affairs/crime/girl-went-on-missing-died-in-hospital-at-madurai-police-arrested-8-members

[11] சமயம், மதுரை சிறுமி பலாத்காரம், நடந்தது என்ன..? படிக்க படிக்க அதிர்ச்சி..!, Divakar M | Samayam TamilUpdated: 6 Mar 2022, 2:16 pm.

[12] https://tamil.samayam.com/latest-news/crime/missing-minor-girl-rescued-in-critical-condition-at-madurai/articleshow/90029814.cms

[13] பிபிசி தமிழ், மேலூர் சிறுமி மரணம், 8 பேர் கைது: பேருந்துகள் மீது கல் வீச்சுநடந்தது என்ன? போலீஸ் விளக்கம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக, 7 மார்ச் 2022.

[14] https://www.bbc.com/tamil/india-60644716

[15] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[16] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[17] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!

திசெம்பர் 2, 2016

ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரைகுறி அத்வானி முதல் மோடி வரை!

dm-nia-arrested-al-queda-men-at-madurai-29-11-2016மதுரையில் வளர்ந்த குண்டுதயாரிப்பு, வெடிப்பு நிகழ்வுகள்: மதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவித்து வளர்த்தது, இப்பொழுது எல்லைகளைக் கடந்து விட்டன. தொடர்ந்து குண்டு தயாரிப்பு, குண்டுவெடித்தல் மற்றும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி, ஆள்-சேர்ப்பு என அனைத்தும் நடைபெறுவது ஒரு சாதாரண மதுரைவாசிக்குக் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. மலைகளை வெடித்து, பாறைகள் எடுக்கும் தொழில் போர்வையில், வெடிமருந்துகள் வாங்கப்பட்டு அவை, குண்டு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. வெடிமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்தும், அவர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைத்து வருகின்றன. சிவகாசி அருகில் இருப்பதால், அவர்களது வேலை அமோகமாக நடந்து வருகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா, கரன்சி மாற்றுதல், பணப்பரிமாற்றம், ரெயில்-பஸ் முன்பதிவு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், இத்தகைய வேலைகளை செய்து வர சுலபமாக இருந்து வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியும்-தெரியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன.

nia-detains-four-youths-the-hindu-29-11-2016மதுரையில் அல் கொய்தா இயங்கி வருவது: மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை கைது செய்து உள்ளது[1]என்று செய்தி இப்பொழுது தான் வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் எப்படி மறைந்திருந்தது என்று தெரியவில்லை. பிரதமர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 22 தலைவர்களை கொல்ல இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 6 நாட்டு தூதர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர்[2]. தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், 29-11-2016 அன்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார்[3]. என்.ஐ.ஏ முகவும் ஜாக்கிரதையாக செய்ல்பட்டு, இக்கைதுகளை செய்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

nia-arrested-connected-with-five-blasts

கோர்ட் வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய விவரங்கள்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி குண்டு வெடித்தது. இதுபோன்று, ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[4].

  1. ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில்4.2016-ல்[5],
  2. கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில்6.2016-ல்,
  3. கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில்6.2016-ல்,
  4. ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில்9.2016-ல்,
  5. கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில்11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன.

நீதி, நீதிமன்றம், முதலியவை எல்லாம் எங்களுக்கு துச்சம், நாங்கள் இந்நாட்டு சட்டங்களை மதிக்க மாட்டோம் என்பதை காட்டவும், பீதியைக் கிளப்புவும், இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.

nia-took-the-arrested-to-melur-court-dm-30_11_2016_005_004_001மைசூர் குண்டுவெடிப்பு, கைது, விசாரணை இத்தீவிரவாதிகளைக் காட்டிக் கொடுத்துள்ளது: மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் (என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது[6]. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ‘தி பேஸ் மூவ்மெண்ட்’ என்ற அமைப்பின் பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ் உள்பட பல்வேறு தடயங்களும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தன. அந்த அமைப்பு ‘அல்கொய்தா‘ தீவிரவாத அமைப்பின் பெயரின் ஆங்கில மொழியாக்கத்தில் இயங்கியது என்றும் விசாரணையில் தெரியவந்தது[7]. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.  இதில், –

  1. மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
  2. மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் 28-11-2016 அன்று கைதாகினர்[8].

இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்ற சென்னையில் உள்ள TCS ஐடி நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினனியரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர்[9]. இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.

© வேதபிரகாஷ்

02-12-2016

two-arrested-by-nia-in-mdurai-out-of-six

[1] தினத்தந்தி, மதுரையில் அல் கொய்த அடிப்படை இயக்கம் நடத்திய 3 தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST

[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/28155132/In-Madurai-The-basic-movement-Al-koyta–3-terrorists.vpf

[3] தினகரன், மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம், Date: 2016-11-30@ 00:53:25

[4] தினத்தந்தி, மைசூரு கோர்ட்டு வளாக குண்டு வெடிப்பு: கைதான பயங்கரவாதிகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல், மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST.

[5] The Indian Express, Chittoor blast: NIA arrests, interrogates three Al-Qaeda suspects in Madurai, By Express News Service  |   Published: 28th November 2016 08:31 PM  |

Last Updated: 29th November 2016 08:12 AM.

http://www.newindianexpress.com/nation/2016/nov/28/chittoor-blast-nia-arrests-interrogates-three-al-qaeda-suspects-in-madurai-1543528.html

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9400836.ece

[7] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2016/12/01043306/Mysore-Campus-Court-blast.vpf

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467

[9] The Times of India, TCS techie who ‘plotted’ to target PM Narendra Modi held in Tamil Nadu, TNN | Updated: Nov 29, 2016, 06.20 PM IST

457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

ஏப்ரல் 6, 2014

457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

 

சந்தனகூடு தீவிபத்து 2014

சந்தனகூடு தீவிபத்து 2014

சந்தனகூடு  தீப்பற்றி  எரிந்தது[1]: நாகைமாவட்டம்  நாகூர்  ஆண்டவர்  தர்கா  உலகபிரசித்தி  பெற்றது,   ஏனெனில்,  இங்கு   ஆண்டுதோறும்  சந்னக்கூடு  விழா  நடைபெறும்[2].   அதாவது  தேரோட்டம்  போன்று  முகமதியர்   “சந்தனக்கூடு”  என்ற  வடிவத்தைத்  தயாரித்து  அதனை  ரதம்  போன்று  விளக்கு  சகிதம்  அலங்காரங்களுடன்  தெருக்களில்  எடுத்துச்  சென்று,   தர்காவிற்குள்  கொண்டு  வைப்பார்கள்.   அமாவாசைக்கு  அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  உண்மையில்  அக்காலத்தில்  புத்தாண்டு  வருவதையொட்டி  கொண்டாடப்பட்டு  வந்தவிழாவை  அப்பகுதியில்  முஸ்லிம்கள்  தமதாக்கிக்  கொண்டார்கள்  போலும்.  முன்னும்,  பின்னும்  தெலுங்கு  மற்றும்  தமிழ்  புத்தாண்டுகள்  வருவதையும்  காணலாம்.   வேண்டிக்  கொண்டு,  திருப்பதி-திருமலை-பழனிப்  போன்று  இங்கு  வந்து  மொட்டையும்  அடித்துக்கொள்கிறார்கள்.  இதில்  பெரிய-பெரிய  அதிகாரிகள்,   மந்திரிகள்  முதலியோர்  அடங்குவர்.  இந்நிலையில்   04-04-2014 அன்று  சந்தனக்கூடு  கட்டும்போது,   எரிந்ததாக  தகவல்கள்  வெளியாகியுள்ளன. 

 

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா

முஸ்லிம்  சமாதியின்  கதை: ஹஜரத்  சையது  ஷாஹுல்  ஹமீது  காதிர்  வாலி  [Hazrath Syed Shahul Hameed Quadir Wali] என்பருடைய  சமாதி  நாகூரில்  உள்ளது[3]. இவர்  முகமது  நபியின்  வழி   23வது  சந்ததியர்  என்று  கூறப்படுகிறது. அந்த  வாலி  இறந்த  தினத்தை  முஸ்லிம்கள்  இங்கு 14-நாள்   விழாவாகக்  கொண்டாடுகின்றனர்[4]. “ஷாஹூல்  ஹமீது  பாதுஷா  நாயகம்” தர்கா  453ம்  ஆண்டு  கந்தூரி  விழா, 01-04-2014 இரவு கொடியேற்றத்துடன்துவங்கும்.நாகை  மீராபள்ளிவாசலில், தர்காவின்  ஐந்துமினவராக்களிலும்  ஏற்றப்படும்  கொடிகள்  வைக்கப்பட்டு   ‘துவா’ ஓதப்படும். பின்னர்  அலங்கரிக்கப்பட்ட  பெரியரதம், சின்ன  ரதம்  மற்றும்  செட்டிப்  பல்லக்கு, கப்பல்கள்  போன்று  வடிவமைக்கப்பட்ட  இரண்டு  வாகனங்களில்,   மங்கள  வாத்தியங்கள்  முழங்க  கொடிகள்  ஏற்றிவைக்கப்பட்டு,   ஊர்வலமாக  நாகை, நாகூரின்  முக்கிய  வீதிகளில்  வலம்  வந்து  இரவு  நாகூர்  தர்கா  வந்தடையும்.   இவ்விதமாக   14 நாட்கள்  அமர்க்களமாக  விழா  கொண்டாடப்படும்[5]. ஆட்டம்,  பாட்டம்,  கொண்டாட்டம்  என்று  விழா  கொண்டாடுவது  சகஜமாகிவிட்டது. ஆஜ்மீர்  போன்ற  தர்காக்களிலும்  இவையெல்லாம்  நடக்கின்றன[6].

 

Inside Nagore Dargha pillars like Hindu temple

Inside Nagore Dargha pillars like Hindu temple

கோவிலா,  தர்காவா,  கப்பல் விழாவா?: இந்த  தர்காவின்  உட்புறம்  ஒரு  இந்துகோவிலைப்  போன்றே  உள்ளது.  உட்பகுதியும்,  உள்ள  தூண்களும், தெப்பக்குளமும்  கோவில்  என்று  காட்டுகிறது.   உயர்வாக  உள்ள  கட்டிடங்கள் / மினராக்கள்  கலங்கரை  விளக்கங்களாக  உபயோகப்படுத்தப்பட்டன.   இதைப்  போன்ற  அமைப்பு  சனீஸ்வரன்  கோவிலின்  வாசலிலும்  இருப்பதை  காணலாம். தர்காவில்  உள்ள   5 மினராக்களில்  பாய்மரம்  ஏற்றி  இப்பொழுது  கந்தூரிவிழா  கொண்டாடப்படுகிறது.   இப்பொழுது “பாத்திமா”   என்ற  யானையையும்  வைத்திருக்கிறார்கள்[7].   அமாவாசைக்கு  அடுத்தநாளில்  கொடியேற்றம்  நிகழ்ச்சிலிருந்து  பௌர்ணமி  வரை 14-நாட்கள்விழாவில்கொண்டாடப்படுகிறது. இதன்படி, இம்மாதத்தில், வருகிற 9–ந்தேதி (புதன்கிழமை) பீர்  வைக்குதல்  நிகழ்ச்சி  நடைபெறுகிறது. பின்னர்  விழாவின்  முக்கிய  நிகழ்ச்சியான  சந்தனக்கூடு  ஊர்வலம்  வருகிற   10–ந்தேதி  (வியாழக்கிழமை)  மாலை  தொடங்கி 11–ந்தேதி  காலை  சந்தனம்  பூசும்  நிகழ்ச்சி  நடைபெறும். இதை  தொடர்ந்து   12–ந்தேதி  (சனிக்கிழமை) பீர்  ஏகுதல்  நிகழ்ச்சி  நடைபெறுகிறது.   14–ந்தேதி  கொடியிறக்கம்  நடக்கிறது[8].

 

Hindu temple like dargha Nagore

Hindu temple like dargha Nagore

தர்கா-மசூதி  ஏற்படும்  விதம்  மற்றும்  அமையும்  தன்மை: இஸ்லாத்தைப்  பொறுத்தவரைக்கும்  ஆண்டவன்  இறுதிதீர்ப்புநாளில்  பிறந்த  அதே  உடலில்  உயிர்த்தெழச்  செய்வான்.   அதாவது,   தான்  செய்த  காரியங்களுக்கேற்ப  தண்டனை  அல்லது  பரிசு  பெற  தயாராக  இருப்பான்.   அதனால்  தான்  உடல்  எரிக்கப்படாமல்,   புதைக்கப்  படுகிறது. புதைத்தாலும், மக்கிவிடுமே, என்றாலும், உயிர்த்தெழும்  போது,   வேறொரு  உடலைத்  தருவதாக  நம்புகிறார்கள். இவ்வகையில்  அவுலியாக்கள்  மேம்பட்டவர்கள்  என்பதனால்,   அவர்கள்  புதைக்கப்பட்டாலும்,   ஜீவசமாதியில்  இருப்பது  போல, உயிரோடு   இருந்து  கொண்டு,   மக்களின்  குறைகளை  தீர்த்து  வைப்பதாக  முஸ்லீம்கள்  நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை  எழுந்து  ஆசீர்வாதித்தது, குரல்  எழும்பி  பதில்  சொன்னது, மூச்சு  சுவாசம்  பட்டு  வியாதி  மகுணமாகியது,   ஒளிவட்டம்  தோன்றியது  என்றெல்லாம்  சொல்லி  வருகின்றனர். இறந்த  பிறகும்  மறுபிறப்பு  உண்டு  என்பது,   ஒரு  காலத்தில்  உலகம்  முழுவதும்  பரவியிருந்த  வேதமதத்தின்  நம்பிக்கையாகும்.   இது  எல்லா  மதஞானிகளும்  ஏற்றுக்  கொண்டுள்ளார்கள். அதன்  படியே,   அவரவர்  புனிதநூல்களில்  அங்கங்கே  அத்தகைய  விவரங்கள்  உள்ளன  என்று  அறிஞர்கள்  எடுத்துக்  காட்டுகிறார்கள்.

 

Inside dargah Hindu temple like structure

Inside dargah Hindu temple like structure

தர்கா  வேறு, மசூதி  வேறு: உருவ  வழிபாடு  கூடாது  என்ற  நோக்கத்தினால், ஆசாரமான  முஸ்லீம்கள்,   இந்த  தர்கா  வழிபாட்டை  தடுக்க, மாற்ற,  அறவே  ஒழிக்க  முனைந்துள்ளார்கள். தர்காவை  இணைத்து  மசூதிகள்,  மதரஸாக்கள்,  மற்றவை  கட்டப்பட்டன.  பிறகு, தர்கா  வேறு, மசூதி  வேறு  என்றுகாட்ட,   இடையில்  சுவர்களும்  எழுப்பப்பட்டன. இப்படி  ஆசாரமான  முஸ்லீம்கள்  பலவித  முயற்ச்சிகள்  மேற்கொண்டாலும், தர்கா  வழிபாட்டை  ஒழிக்க  முடியவில்லை. இன்னும்  அதிகமாகித்தான்  வருகின்றது.   இந்தியாவில்,   இடைக்காலத்தில்,  பிணங்களைப்  புதைத்து இடங்களை  ஆக்கிரமித்தது  தான்  முகலாயர்களின் /  முகமதியர்களின்  வேலையாக  இருந்தது. கோவில்கள்,  மடங்கள்,  நதிக்கரை  புனிதஇடங்கள்  (கட் / காட்) முதலியவை  அவ்வாறு  ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு  இந்துக்களின்  கோவில்கள்  இடிக்கப்பட்டு, மசூதிகள்  கட்டப்பட்டன. தர்கா  வழிபாடே  ஹராம் /  இஸ்லாமிற்குப்  புரம்பானது  என்று  அத்தகைய  ஆசாரமான  முஸ்லீம்கள்  வாதிடுவது  உண்டு. பிறகு  எப்படி  இத்தகைய  நாடகங்கள்  அரங்கேற்றப்  படுகின்றன? மற்ற  விஷயங்களுக்கு  ஆர்பாட்டம்  செய்யும்  தமிழக  முஸ்லீம்கள்  மௌனிகளாக  இருக்கின்றார்கள். உண்மையில்  அவர்கள்  நாகூர், ஆஜ்மீர்  போன்ற  இடங்களுக்குச்  சென்று  போராட்டம்  நடத்தியிருக்க  வேண்டுமே,   ஆனால்  செய்ய  வில்லையே?

 

Sufi dance dailyfresher.com

Sufi dance dailyfresher.com

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில்  நடந்த  விழாவின்  போது  எடுக்கப்பட்டப்  புகைப்படங்களைப்  பார்க்கும்  போது, பெண்கள்  ஆடுவது, மேளதாளங்கள்  ஒலிப்பது, அவர்களை  சூழ்ந்துகொண்டு  முஸ்லீம்கள்  இருப்பது  முதலியகாட்சிகள்  தெரிகின்றன. வெளிப்புறம்  என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி,  நடனம்  என்ற  நிகழ்சிகள்  நடப்பது  புகைப்படங்கள்  ஊர்ஜிதம்  செய்கின்றன. இவற்றை  முஸ்லீம்கள்  எதிர்ப்பதாகத்  தெரியவில்லை.   இல்லையென்றால்,   அமைதியாக  அவை  காலங்காலமாக  நடந்து  கொண்டிருக்க  முடியாது. மேலும்,   பாகிஸ்தானிய  அரசியல்வாதிகள்,   பெரிய  செல்வந்தர்கள், புள்ளிகள்,   சினிமாக்காரர்கள், நடிகைகள்  என  அனைவரும்  இங்கு  வந்து  போகின்றனர். அதனை, அந்த  தர்கா   இணைத்தளமே  பெருமையாக  புகைப்படங்களை  வெளியிட்டு  வருகின்றன. நாகூரிலும் “நாச்” என்ற  பெண்களை   வைத்துக்கொண்டு  நடனம்  முதலியவை  நடந்து  வருகின்றன.

 

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

Jawahirullah getting blessing from Aadheenam, Mayildauthurai

தர்கா  வேறு  மசூதி  வேறு  என்றால், தர்காவில்  தொழுகை  ஏன்?: இறைவனைத்  தவிர  வேறு  ஒருவனையும்  வணங்கக்கூடாது  என்றால், இஸ்லாத்தில்  தர்கா  வழிபாடு  இருக்கக்கூடாது. எப்படி  உருவவழிபாடு  கூடாது  என்றாலும், அது  நிஜவாழ்க்கையில்  முடியாதோ,   அதாவது,   வெளிப்புறத்தில்  உருவத்தினால்  தான்எல்லாமே  அடையாளம்  காணப்படுகிறது. உருவம்,  சின்னம்,  அடையாளம்,  குறியீடு,  என  எதுவும்  இல்லை  என்றால், இவ்வுலகத்தில்  எதுவுமே  நடக்காது. அதனால்தான்  குரான்  புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை  நிறம்  முதலியன  இஸ்லாத்தில்  சின்னங்களாக  உபயோகப்  படுத்தப்பட்டு  வருகின்றன. அதனால்தான், முஸ்லீம்அரசியல்வாதிகள்இந்துகடவுளர்கள்இல்லைஎன்றுவாதிட்டாலும், தேர்தல்  மற்றும்  மற்ற  நேரங்களில்  கோவில்களை, மடாதிபதிகளைச்  சுற்றி  வருவார்கள்.

 

Ajmer Sharif Mannat

Ajmer Sharif Mannat

 

தர்கா  வழிபாடும், ஆசார  இஸ்லாமும், திராவிடமும்: அடிப்படைவாத  முஸ்லிம்கள்  இது  இஸ்லாத்திற்கு  விரோதமானது  என்று  பிரச்சாரம்  செய்து  வருகின்றனர்.   தர்கா வேறு,   மசூதி  வேறு  என்பதனை  எடுத்துக்  காட்டும்  விதமாக,   மேலே  எடுத்துக்  காட்டியுள்ளபடி  சில  இடங்களில்  குறுக்கே  சுவர்களை  எழுப்பி  பிரித்துக்  காட்டுகின்றனர். தர்கா  இருக்கும்  இடங்களில்  மசூதிகளைக்  கட்டிப்  பிரித்தும்  காட்டுகின்றனர்.   திராவிட  அரசியல்வாதிகள்  கடவுள்  இல்லை  என்றெல்லாம்  கூப்பாடு  போட்டு  வந்தாலும்,  காயதே  மில்லத்  இறந்தநாளை  தவறாமல்  ஞாபகத்தில்  வைத்துக்  கொண்டு  சமாதிக்கு  மலர்வளையம்   / பச்சை  துணி  வைத்து  மரியாதை  செய்து  கும்பிட்டுவிட்டு  செல்கின்றனர். இதில்  கருணாநிதி,   ஜெயலலிதா  போன்றொருக்கும்  போட்டித்  தான்.   முஸ்லிம்களும்  ஒரு  பக்கம்  இதெல்லாம்  இஸ்லாத்திற்கு  விரோதமானது  என்றெல்லாம்  சொல்லிக்  கொண்டாலும், அத்தகைய  கூத்துகள்  நடந்து  கொண்டிருக்கின்றன[9].

 

Qawwali  dance ajmeeri dargah

Qawwali dance ajmeeri dargah

2014ல் சந்தன கூடு எரிவது: நாகூர்  தர்காவில்  நடைபெறும்  கந்தூரி  விழாவுக்காக  தயார்  செய்யப்பட்ட  சந்தனக்கூடு  வெள்ளிக்கிழமை  அதிகாலை  தீப்பற்றி  எரிந்தது  பக்தர்களிடையே  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது[10]. இதனால்  இஸ்லாமியர்கள்  மத்தியில்  சோகமும், பதட்டமும்  ஏற்பட்டது[11].   நாகூர்  ஆண்டவர்  தர்கா  கந்தூரி  விழாவை  ஒட்டி  நாகப்பட்டினம்  நகரில்  இருந்து  அலங்கரிக்கப்பட்ட  கூட்டில்  வைத்து  சந்தனம்  ஊர்வலமாக  எடுத்துச்  செல்லப்  படுவது  வழக்கம்.  சந்தனம்  எடுத்துச்  செல்லும்  கூடு  நாகப்பட்டினம்  ஜமாத்தினரால்  செய்யப்படும். மூங்கில்களால்  கூடு  செய்து  அதற்கு  வண்ணம்  தீட்டி,   அதனை  வண்ணகாகிதங்கள், பூக்களைக்  கொண்டு  அலங்கரித்து  அதில்  சந்தனத்தை  வைத்து  எடுத்துச்  செல்வார்கள்[12].   கூடு  செய்யும்  வேலை  கடந்த  சில நாட்களாக  நாகப்பட்டினம்  அபிராமி  அம்மன் கோயில் திடல்  அருகே   ஒரு  கட்டிடத்தில்  நடைபெற்று  வந்தது.  ஐம்பது  சதவீத  பணிகள்  முடிவடைந்திருந்த  நிலையில்  வெள்ளிக்கிழமை (04-04-2014) அதிகாலையில்  அக்கூட்டின்  ஒருபகுதியில்  திடீரென  தீப்பற்றி  எரிந்தது.   அதனைக்  கண்ட  கூடுதயாரிக்கும்  பணியில்  ஈடுபட்டிருந்த  பாபுஜி (எ)   காதர்  நாகப்பட்டினம்  தீயணைப்புத்  துறைஅலுவலகத்துக்கும்  நாகப்பட்டினம்  ஜமாத்  தலைவரான  லாசா  மரைக்காயருக்கும்  தகவல்  தெரிவித்தார்[13].   தீயணைப்பு  அலுவலர்கள்  வந்து  தீயை  அணைத்தனர்.   ஆனாலும்  கூட்டின்  ஒருபக்கம்  பெருமளவு  எரிந்துவிட்டது.

 

Khushi dance at Ajmir Sharif Urs

Khushi dance at Ajmir Sharif Urs

“இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்”தின்  மீது  பொய்  வழக்கு  போடப்  பட்டுள்ளது[14]:   பொய்  வழக்கு  போட்ட  காவல்துறையைக்  கண்டித்து  இந்திய  தவ்ஹீத்  ஜமாத்  கண்டன  ஆர்ப்பாட்டம்  அறிவித்துள்ளது.   இது  குறித்து  அக்கட்சியின்  மாநில   செயலாளர்  முஹம்மது  ஷிப்லி  வெளியிட்டுள்ள  அறிக்கையில்:   “நாகூருக்கு  எடுத்துச்  செல்வதற்காக  நாகப்பட்டினத்தில்  வைக்கப்  பட்டிருந்த  சந்தனக்கூடு  கடந்த   4.4.2014   தேதி  இரவு  சமூகவிரோதிகள்  சிலரால்  தீவைத்து  கொளுத்தப்  பட்டிருக்கிறது.   இதனையடுத்து  சந்தனக்கூடு  வைத்த  தரப்பினரால்  காவல்துறையில்  புகார்  அளிக்கப்பட்டுள்ளது.   அந்தப்  புகாரில்  எவருடைய,   எந்த  இயக்கத்தின்  பெயரையும்  குறிப்பிடப்படாமல்  இருந்த  நிலையிலும்,   இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  மாவட்ட  மற்றும்  நகர  நிர்வாகிகள்  மீது  எந்த  அடிப்படையும்  இல்லாமல்  பொய்வழக்கு  போட்டுள்ளது  காவல்துறை.   சமூகவிரோதசெயலில்  யார்  ஈடுபட்டாலும்  அது  கண்டிக்கத்  தக்கது  என்பதில்  எவருக்கும்  மாற்று  கருத்து  இருக்க  முடியாது.   ஆனால்  எந்தவித  முகாந்திரமும்  இல்லாமல்,   புகார்  அளித்தவர்கள்  சந்தேகப்படும்  நபர்களின்  பெயரையோ  எந்த  அடையாளத்தையோ  புகாரில்  குறிப்பிடாத  நிலையில்  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  மீது  காவல்  துறை  பொய்வழக்கு  போட்டிருப்பது  வன்மையாக  கண்டிக்கத்  தக்கது.

 

 

“நாகை  பகுதிகளில்  சமூக  சீர்திருத்தப்  பணிகளையும்,  மனிதநேயப்  பணிகளையும்  முன்னெடுத்து  வருவதோடு  முஸ்லிம்களுக்கு  மத்தியில்  புரையோடிப்போயிருக்கும்  இஸ்லாத்திற்கு  முரணான  செயல்களையும்  கண்டித்து  விழிப்புணர்வு  பிரசாரங்களை  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  செய்து  வருகின்றனர்.   இந்தப்பணிகளை  முடக்க  நினைக்கும்  சக்திகளின்  தூண்டுதல்  காரணமாகவே  இந்த  பொய்வழக்கை  போட்டிருக்கிறது  காவல்துறை.

 

“இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  ஜனநாயகதின்  மீதும்  அறவழி  போராட்டங்களின்  மீதும்  நம்பிக்கை  கொண்ட  அமைப்பு.  இந்த  அமைப்பின்  தொண்டர்கள்  பொது  அமைதிக்கு  பங்கம்  நேரும்  எந்த  செயலிலும்  ஈடுபடமாட்டார்கள்  என்பது  தமிழக  அரசுக்கும்  காவல்  துறைக்கும்  நன்கு  தெரியும்.   அப்படியிருந்தும்  நாகை  காவல்துறை  உள்நோக்கம்  கொண்டயாரோ  சிலரின்  தூண்டுதலின்  பேரில்  இந்த  பொய்  வழக்கை  போட்டிருக்கிறது.

 

“எனவே, உண்மை  குற்றவாளிகளை  காவல்துறை  அடையாளம்  காணவேண்டும்.   அதோடு,  சம்பவத்திற்கு  சற்றும்  தொடர்பில்லாத  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  மீது  போடப்பட்ட  பொய்வழக்குகளை  உடனடியாக  திரும்ப  பெறவேண்டும்  நாகை  மாவட்ட  காவல்  துறையின்  நியாயமற்ற  இந்தசெயலை  கண்டித்து   (இறைவன்  நாடினால்) எதிர்வரும் 10.4.14 அன்றுமாலை 4 மணியளவில்  நாகூரில்  மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்தை   நடத்த  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  தீர்மானித்திருக்கிறது.”  இவ்வாறு  அந்த அறிக்கையில்  கூறப்  பட்டுள்ளது[15].

 

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது

சந்தனக்கூடு  வைத்த  தரப்பினரால்  காவல்  துறையில்  புகார்  அளிக்கப்  பட்டுள்ளது: நாகை  ஜமாஅத்  தலைவர்  லாசா  மரைக்காயர்  கொடுத்த  புகாரின்  பேரில்  நாகப்பட்டினம்  நகரகாவல்  நிலைய  போலீஸார்  வழக்குப்பதிந்து  நாசவேலையா, மின்கசிவா விசாரணை  நடத்தி  வருகின்றனர்.   இந்நிலையில்   தீவிபத்து  நடந்த  இடத்தை  நாகூர்  தர்கா  டிரஸ்ட்  ஷேக்  ஹசன்  சாஹிப்,   நாகூர்  டவுன்  ஆலோசனை குழுதலைவர்  சையது  முகமது  கலிபா  சாஹிப் மற்றும்  நிர்வாகிகள்  நேரில்  பார்வையிட்டனர்.   பின்னர்  சையது  முகமது  கலிபா  சஹிப்,   “நாகூர்  ஆண்டவர்  தர்கா  பெரிய  கந்தூரி  விழாவிற்கு  கடந்த  ஆண்டைவிட  அதிக  அளவில்  இஸ்லாமியர்களும், சுற்றுலா  பயணிகளும்  வரவிருப்பதால்,   அனைத்து  வசதிகளும்  சிறப்பாக  செய்யப்  பட்டுள்ளன. இதைப்  பொறுக்காத  சில  மர்ம  நபர்கள்  இந்த  நாசவேலையைச்  செய்துள்ளனர்[16].   இதை  நாங்கள்  வன்மையானக்  கண்டிக்கிறோம். தன்  கைகளால்  தனது  கண்ணை  மறைக்க  முடியுமே  தவிர,   சூரியனை  மறைக்க  முடியாது.   அது  போல  யார்  என்ன  முயற்சி  செய்தாலும்  நாகூர்  ஆண்டவரின்  தொடர்ந்த  படிதான்  இருக்கும்”, என்று  உறுதியாகக்  கூறினார்[17].

 

Inside Nagore Dargha pillars, lamps etc

Inside Nagore Dargha pillars, lamps etc

புகார்  கொடுத்ததும்,   சந்தேகங்களும்: சந்தனக்கூடு  திடீரென்று  எரிந்ததால்,   இது  குறித்து  லாசா  மரைக்காயர்  கொடுத்த  புகாரின்  பேரில்  நாகப்பட்டினம்  நகரகாவல்  நிலைய  போலீஸார்  வழக்குப்  பதிந்து  நாசவேலையா,   மின்கசிவா என்று அறிய விசாரணை  நடத்தி  வருகின்றனர்[18]. “நாகூர்  தர்கா  விழாவில்  மர்மமான  தீ” என்று  ஒரு  ஆங்கில  இணைதளம்  விவரிக்கின்றது[19]. இதனால், அப்பகுதியில்  பதட்டம்  நிலவுகிறது[20].   அதாவது  முஸ்லிம்களே  முஸ்லிம்களின்  மீது  புகார்  கொடுத்துள்ளனர்.   இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  என்ற  இயக்கம்  வேண்டுமென்றே  தமது  நிர்வாகிகள்  மீது  காவல்துறை  பொய்வழக்கு  போட்டிருக்கிறது  என்று  மேற்கூறியப்படி  கண்டனம்  தெரிவித்துள்ளனர்.   பெண்களோ  இதனை கெட்டசகுனமாக  கருதி  கவலையுடன்  இருக்கின்றார்கள்.   இதற்கு  பரிகாரம்  எதாவது  செய்ய  வேண்டும்  என்றும்  தீவிரவாதமாக  யோசித்து  வருகின்றனர்.

 

© வேதபிரகாஷ்

06-04-2014

 

[1]திஇந்து, சந்தனகூடுதீப்பற்றிஎரிந்தது, சென்னை, 06-04-2014

[2]தினகரன், நாகூரில்கந்தூரிவிழாசந்தனக்கூடுதீபிடித்துநாசம், சென்னை, 06-04-2014

[3] http://www.business-standard.com/article/pti-stories/holy-car-partially-burnt-in-mysterious-fire-114040400583_1.html

[4]Tension prevailed for almost whole day today at the famous Dargah at Nagore near here, after a mystery fire accident which partially burnt the Sandanakoodu (holy car decorated with sandal paste).According to official sources the Sandanakoodu made out of bamboo sticks with sandal paste on it and is taken out in a procession is as part of the 14-day annual Kandoori festival, incidentally which is under way currently. The Dargah of Saint Hazrath Syed Shahul Hameed Quadir Wali at Nagore is more than 500 years old. It has a golden dome, flanked by five minarets. Saint Hazrath Syed Shahul Hameed is known to be the 23rd descendant of Prophet Muhammad (Sal).The death anniversary of this Saint is celebrated as ‘Kandoori Festival’ every year for 14 days. The 457th annual festival commenced with hoisting of the holy flag on Tuesday last 01-04-2014.

[5]https://islamindia.wordpress.com/2010/05/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/

[6] https://islamindia.wordpress.com/2013/03/10/how-music-dance-entertained-inside-before-mosques-dargahs/

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nagore-dargah-elephant-joins-camp/article5485906.ece

[8] http://www.dailythanthi.com/2014-03-30-khanduri-festival-minarakkal-mounted-on-the-mast-nagai-news

[9] https://islamindia.wordpress.com/2010/06/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

[10] http://timesofindia.indiatimes.com/city/trichy/Fire-damages-festival-chariot-under-construction/articleshow/33252952.cms

[11] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/

[12] http://www.maalaimalar.com/2014/04/04121947/Nagore-Dargah-fire-accident.html

[13]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article5875440.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

[14] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html

[15] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html

[16]  இந்நிலையில்நேற்றுஇரவுமர்மநபர்கள்சந்தனக்கூட்டிற்குதீவைத்தனர். இதனால்சந்தனக்கூடுசேதமடைந்துள்ளது. இச்சம்பவம்நாகையில்பதற்றத்தைஏற்படுத்திஉள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=119324

[17] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/

[18] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=86352

[19] webindia123, Mysterious fire at dargah during ‘Kandoori festival’ at Nagore, 04-04-2014.

[20] http://news.webindia123.com/news/Articles/India/20140405/2370117.html