Archive for the ‘நவாஸ்’ category

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?

மே 12, 2013

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?

PAK candidatesகடந்த நாட்களில் குண்டுவெடிப்பு, வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது[1]. தலிபான்கள் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதனாமது, பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், பெண்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்[2]. பாகிஸ்தானின் 14வது தேசிய மற்றும் மாகாண தேர்தல் நடந்துள்ளது. 372 கீழ்சபை மற்றும் 728 தேசிய அசெம்பிளி என்று சேர்ந்து தேர்தல் நடக்கின்றது. இன்னும் மக்கள் தெளிவாக வாக்களிக்கவில்லை என்கிறார்கள். ஏனெனில் யாருக்கும் அதிக இடங்கள் கிடைக்கவில்லை[3].

PAK-2013 constituenciesநவாஸ்செரிப்கட்சிமுன்னணியில்இருக்கின்றது: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரிப் கட்சி முன்னணியில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது[4]. இப்பொழுதுள்ள நிலவரங்களின் படி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தனிக்கட்சி என்றுள்ளது[5]. இம்ரான் கான் பரிதாப அலையில் ஒருவேளை முன்னணியில் வருவார் என்று நினைத்தார்கள், ஆனால், நடக்கவில்லை[6].

PAK-2013 election position2கட்சிகளின் நிலவரம்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) [Pakistan Muslim League-Nawaz (PML-N)], பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் [Pakistan Tehreek-i-Insaf (PTI)] மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan Peoples party (PPP)] என்பவைதான் பிரதான கட்சிகளாக இருக்கின்றன.

கட்சியின் பெயர்

தலைவர் / பிரதம மந்திரி வேட்பாளர்

ஆங்கிலத்தில்

கிடைத்துள்ள இடங்கள்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) நவாஸ் செரிப்பின் கட்சி Pakistan Muslim League-Nawaz (PML-N)[7]

120

தெஹ்ரீக்-இ-இன்சாப் இம்ரான் கான் Pakistan Tehreek-i-Insaf (PTI)[8]

30

பாகிஸ்தான் மக்கள் கட்சி யூசுப் ராஜா ஜிலானி,ஆளும் கட்சி Pakistan Peoples party (PPP)[9]

35

Nawaz Sherrif - next PMநவாஸ் செரிப் மறுபடியும் பிரதமர் ஆகிறார்: 13 ஆண்டுகள் கழித்து, நவாஸ் செரிப், முன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிறார்[10]. 1990 மற்றும் 1997ல் பிரதமராக இருந்தார், ஆனால், இருமுறைகளிலும், குலாம் இஸாக் கான் மற்றும் பெர்வீஸ் முசாரப் என்கின்ற ஜனாதிபதிகளினால் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டார்[11].

Age-wise-Voter-list-2013-Elections-Pakistanஇம்ரான் கானின் கிரிக்கெட் கவர்ச்சி வேலை செய்யவில்லை: இம்ரான் கானின் கிரிக்கெட் பேச்சு, மற்றவர்களைப் பற்றித் தாக்கிப் பேசிய பேச்சு, பரிதாப அலை எதுவும் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது[12]. கூட்டங்களில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதில், தனக்கு நிகர் தாந்தான் என்ற ரீதியில் பேசி வந்தார். இந்தியாவில் அம்பயர்கள் தனக்கு எதிராக அல்லது சாதகமாக இல்லை என்றாலும், தான் வென்றாதாகக் கூறிக் கொண்டார். எனினும் நிறைய இடங்களைப் பிடிக்கவில்லை. இதனால், எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவோம் என்று கட்சியினர் கூறியிருக்கிறார்கள்[13].

PAK Election 2013 Islamicமக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைகளாகவே உள்ளன: ஓட்டு போட்டவர்களின் சதவீதம் 50 முதல் 60 வரை இருக்கிறது[14]. பொது மக்களைக் கேட்டால், அவர்களும் தண்ணீர், மின்சாரம், வேலை வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள், அதாவது பொருளாதாரப் பிரச்சினைகள் தாம் முக்கியமாக இருக்கின்றன[15].

Paki women vote

பெண்கள் வந்து ஓட்டுப் போட்டது

PAKI women vote with faith or fear

© வேதபிரகாஷ்

12-05-2013


[7] Pakistan Muslim League (N) – Although, the party claims to be the extension of the All India Muslim League under the leadership of Mohammad Ali Jinnah that led the Muslims of sub-continent India to establish Pakistan, a separate country for the Indian Muslim but due to almost a dozen parties under the same name it is a bit difficult to confirm the claim.

[8] Pakistan Tehrik-e Insaf (PTI) – This party has gained considerable momentum over the last two years. Imran khan, once the hero of the Pakistan cricket who brought the 1992 champion trophy of the Cricket World Cup—established PTI in February 1996.

[9] Pakistan People’s Party- Since its inception in 1967, PPP in Pakistan’s recent history remained the only political party, having grass root level representation having liberal democratic norms. The charisma of its founding leader Zulfiqar Ali Bhutto based its manifesto on secularism and social equality, and ruled over the hearts and minds of the millions of Pakistanis for decades.

[11] Nawaz Sharif has remained prime minister two times in 1990 and 1997 but both of his government wre prematurely dismissed, once by then president Ghulam Ishaq Khan and then his second government was ousted in 1999 in a military coup by former military ruler Gen (r) Pervez Musharraf.

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

who will be next prime minister of pakistan 2013பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடக்கிறது: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[1], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டார்கள்[2]. 73,000 ஓட்டு சாவடிகள் இருந்தன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் என்று காவல் இருந்தார்கள்.

quaid-e-azam-and-liaquat-ali-khan-was-the-prime-minister-smokingபாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் முஸ்லீம்கள் இல்லை: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தால், எல்லா முஸ்லீம்களும் அங்கு சரிசமமாக நடத்தப் படுவதில்லை, ஏன் முஸ்லீமாகக் கூட கருதப்படுவடில்லை. சுன்னி / சன்னி முஸ்லீம்கள் தாம் உயர்ந்தவகள், அதற்கடுத்து ஷியா முஸ்லீம்கள். ஆனால், அவர்களும் பலமுறைத் தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்கள் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. பிறகு அஹ்மதியா[3], காதியான், பஹாய் போன்றோர் முஸ்லீம்களே இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்[4]. முஸ்லீம்-அல்லாவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆக ஓட்டுரிமை அவர்களுக்கு இல்லை[5]. அஹ்மதியர் ஓட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி அமெரிக்காவே வக்காலத்து வாங்கியுள்ளது[6].

Veero Kolhiபெண்கள் ஓட்டுரிமை, வாக்களிப்பு,  முதலிய பிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[7]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[8]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 42% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[9].

Nawaz vs Imranஅடுத்த பிரதம மந்திரி யார்: அடுத்த பிரதம மந்திரி யார் என கெட்டதற்கு[10], “நான் தான், ஏனெனில் இம்ரன் கானுக்கு அத்தகைய வாய்ப்பு என்றும் இருந்ததில்லை” என்று மௌலானா பசல்-உர்-ரஹ்மான், அமீலர் ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் என்ற இயக்கத்தின் தலைவர் கூறியிருக்கிறாராம்[11]. இருப்பினும் நவாஸ் செரிப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Bindia Rana - transgender contest PAK-ele-2013முதல் முறையாக  திருநங்கை தேர்தலில் போட்டி: முதல் முறை, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[12]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர்.

© வேதபிரகாஷ்

11-05-2013


[8] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[10] Amir Jamiat Ulema-e-Islam (JUI-F), Maulana Fazl-ur-Rehman said on 08-05-2013 it was likely that he becomes the next prime minister of Pakistan but the Pakistan Tehreek-e-Insaf Chief Imran Khan neither had any such chance before nor now