Archive for the ‘நட்பு’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

ஏப்ரல் 17, 2014

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

 

பாகிஸ்தானில் ஒரு  பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1].  இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர்.  இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3].  ஆனால்,  அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி,  சக்-19  போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது,  பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந்தான்.  ஆனால், உடம்பு  தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் –  மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான்.

 

பாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும்.

 

  • மாடல்டவுன்போலீஸ்ஷ்டேசனில்ஹபீப்என்பவன் 13-வயதுசிறுமியைகற்பழித்ததற்காககைதுசெய்யப்பட்டுள்ளான்[4].

 

  • ஜோஹர் டவுன் போலீசார்,  அஸ்லம் என்பவனை  4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5].

 

 

 

  • குஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6].

இவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும்.

 

பாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில்  பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம்.

  • இதற்குகட்டணம்ஆயிரக்கணக்கில்.
  • பணம்கொடுத்ததும், உள்ளேவரச்சொல்வானாம்.
  • பிரசாதத்துடன்மயக்க / போதைமருந்துகொடுத்துநினைவிழக்கச்செய்வானாம்.
  • மயங்கிவிழுந்ததும், அவனுடையவிருப்பம்தான்.
  • ஆசைத்தீரஅனுபவிப்பானாம்.
  • மயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்!
  • அதாவது, வரும்போதெல்லாம், இதேசிகிச்சைதான்!

இவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன.

 

40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால்,  மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.  உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம்,  ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த  40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8].  எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை.  இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை.  இப்போது  16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும்  “சச்கா சாம்னா’  போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10].  இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது.

 

சரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா,  உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்! அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால்,  அந்த ஷேக்கோ,  சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து,  ஷோக்காக  ஐந்து  நாட்கள்  கற்ப்பழித்தானாம்[11]!  பாவம்,   லெனின்,  சன்டிவி,   நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால்  “புளு ஃபிலிமே’  எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும்  விற்றிருப்பார்கள்!  @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்! பாவம்,  ஷேக்பாபா!  தப்பிவிட்டார்!இந்தஅப்துல்வாலித்ஏன்  மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை!  சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார்! பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித் திற்கு இல்லையா  என்று தெரிந்திருக்கும்!

 

© வேதபிரகாஷ்

17-04-2014

 

[1]The Nation, Fake amil arrested for rape, Lahore, Pakistan,Thursday, 17 April, 2014

[2] http://www.nation.com.pk/national/16-Apr-2014/fake-amil-arrested-for-rape

[3] A fake amil (spiritual healer) was arrested for allegedly raping a 14-year-old girl by police today (16-04-2014). According to details, the fake amil named Ghulam Rasool, resident of Tandlianwala, had allegedly raped the girl when she came with her family for treatment of her illness two days ago. He went into hiding after committing the heinous crime. However, he was arrested from Sumandri area today. The police said that literature which was normally used by fake amils to lure people was recovered from the suspect’s custody. Nasrullah, an investigation officer, said that the amil was being interrogated in the light of girl’s statement. “We have decided to conduct his DNA test to ascertain the truth,” he said.

[4] The International News, Fake Pir, accomplice rate teen, 16-04-2014.

[5] Meanwhile, Model Town police arrested a man, Habib, on charges of abusing a 13-year-old boy.Johar Town police arrested a man, Aslam, on charges of trying to rape a four-year-old girl.

[6] http://www.thenews.com.pk/Todays-News-2-244470-Fake-Pir,-accomplice-rape-teen

[7]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார்
நவம்பர் 10,2009,00:00 IST

[9] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690

[10]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[11]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

ஓகஸ்ட் 18, 2013

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

Abdul Karim Tunda - hand amputated

கடினமானஉழைப்பிற்குப்பிறகுதுண்டாவைப்பிடித்தது: இந்திய புலன்விசாரணைக் குழுக்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான், இவனைப் பிடித்திருக்கிறார்கள்[1]. இன்டர்போலில் விவரங்களைக் கொடுத்து, தொடர்ந்து எல்லை போக்குவரத்து, நேபாளத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிப்பது, ஆப்கானிய தீவிரவாதிகளின் ஊடுருவல் முதலியவற்றை பின்பற்றித்தான் இவனைப் பிடிக்க முடிந்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜிஹாதி தீவிரவாதத்தை, இந்தியாவிற்கு எதிராக, ஒரு மாற்றுப் போராக உருவாக்கியது, இந்த துண்டா, தாவூத் இப்ராஹிம் மற்ற பயங்கரவாதிகள் தாம். லஸ்கர்-இ-தொய்பாவின் சித்தாந்தியாக செயல்பட்டவன் பிடிபட்டதில் பல உண்மைகள் தெரியவருகின்றன[2]. இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதி செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போய்விடும். அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன.

Tunda brother - he should be punished

அப்துல்கரீம்துண்டாவின்குடும்பத்தாரின்நிலை: அப்துல் மாலிக் என்ற அவனுடைய சகோதரர், அவன் பிடிபட்டது பற்றி கூறும் போது, “அவன் மரவேலை செய்து கொண்டிருந்தான் என்றுதான் எனக்குத் தெரியும். 1991க்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை பார்த்தால், செய்துள்ள இக்காரியங்களால்நீ செய்த சாதித்தாய்?”, என்று கேட்பேன்[3]. அவனுடைய மைத்துனி தஹிரா கூறும் போது, “அவனுக்குரிய தண்டனை கிடைக்கவேண்டும். அவனால்தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடித்ததோ அப்பொழுதெல்லாம் போலீஸார் எங்களிடம் வந்து விசாரிப்பார்கள்”,  என்றார்[4]. தொடர்ந்து, “துண்டாவின் இரு மனைவிகள்ஜரினா மற்றும் மும்தாஜ் மற்றும் ஆறு குழந்தைகள் 1993ல் ஒரு இரவில் எங்கோ சென்றுவிட்டனர். துண்டா மறைந்த பிறகு அதற்குப் பிறகு அவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை”, என்றும் சொன்னார்[5]. போலீஸார், துண்டாவிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க விரும்பவில்லை என்றான்[6]. ஒருவன் தீவிரவாதியாக மாறும் போது, குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்றும் தெரிகிறது.

Dawood-with-Chota-shakeel

தாவூத்இப்ராஹிமைப்பற்றிபத்துநாட்களில்செய்திகள்வந்துக்கொண்டிருக்கின்றன: பத்து நாட்களுக்கு முன்னால் தான், ஷார்யார் கான் என்ற பாகிஸ்தானின் சிறப்பு தூதர் “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்தான். ஆனால், அவன் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டான். அப்படி அவன் இருந்தால், பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவேண்ட்டும். அவன் அமீரகத்தில் [United Arab Emirates] இருக்கக்கூடும்”, என்றார்[7]. வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு சொர்க்க பூமி போல உள்ளதும் தெரிய வருகிறது. துபாயில் எப்படி யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றால், சவுதியில், வேண்டிய உதவி, பயிற்சி முதலியவற்றைப் பெறலாம் என்றுள்ளது. ஹாவிஸ் சையது இங்கு வந்து படித்துச் சென்றதை கவனிக்க வேண்டும். துண்டாவின் நெருங்கிய நண்பர்தான் ஹாவிஸ் சையது. அதற்கு முன்னால் 14-08-2013 அன்று லண்டனில் தாவூதின் வலதுகை போன்றிருந்து வேலை செய்து வந்த இக்பால் மிர்சி (63) என்பவன் ஹார்ட்ட் அட்டாக்கினால் இறந்து போனான் என்ற செய்தி வந்தது[8]. 1994ல் இந்தியா இன்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை கொடுத்திருந்தது. ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸாரால் 1995ல் பிடிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அனுப்ப உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்[9]. அதுமட்டுமல்லது இங்கிலாந்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஹாவிஸ் சையதிடம் தாவூத் இப்ராஹிமை தான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று துண்டா ஒப்புக் கொண்டுள்ளான்[10]. அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ, சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்ஸாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்தது என்பதையும் உறுதி செய்தான்[11] என்ற விவரங்கள் வருகின்றன. மொத்தமாக, பாகிஸ்தான் எப்படி இந்திய விரோதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.

Kaskar-group-Dawood

டெல்லிகாமன்வெல்த்போட்டியில்குண்டுவைக்கதிட்டமிட்டான்: துண்டாவிடம்நடந்தவிசாரணையில்தகவல்:[12] டெல்லியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அப்துல் கரீம் துண்டாவிடம் சிறப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லஷ்கர்–இ– தொய்பாவின் முக்கிய தலைவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்? இந்தியாவில் எங்கெங்கு ரகசிய ஆதரவாளர்கள் உள்ளனர்? எங்கெல்லாம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது? அவை எப்படி நடத்தப்பட்டன என்பன போன்று பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அப்துல் கரீம் துண்டா 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி மிகப்பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டதாக கூறினான். ஆனால் குண்டு வெடிப்பை நடத்த இருந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதால் தனது தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினான். 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தான். 1980ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்பின்னர் வங்க தேசம் சென்ற இவர் லஷ்கர் இயக்கத்தின்  தலைவர் ஷகிவுர் லக்வியின்  நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது[13]. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதிகள் அடுத்து எத்தகைய தாக்குதல் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் துண்டாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

Indian flag burned

பாகிஸ்தானின்ஜிஹாதிப்போரைஇந்தியாஎதிர்கொள்ளவேண்டும்: இந்தியாவில் பிறந்தும், முஸ்லிம் அடிப்படைவாதம், மதவாதம் என்ற சித்தாந்திங்களால், முஸ்லிம்கள் எளிதில் ஜிஹாதி வெறியினால், தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் ஊக்குவிக்கும் போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் நட்பு, பேச்சு வார்த்தை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மறுபக்கத்தில் தொடர்ந்து, தீவிரவாததை இந்தியாவின் மீது ஜிஹாதாக – புனிதப் போராக நடத்தி வருகிறது. அதாவது, மதரீதியில் போரை நிகழ்த்தி வருகிறது. 1965, 1972, 2003 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரிடையான போர்களைத் தவிர்த்து, இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதல்களை போராக நடத்தி வருகின்றது. அதே நேரத்தில், எல்லைகளிலும், “தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை – நாடற்ற மக்களின் வேலை” என்று சாக்கு சொல்லிக் கொண்டு, எல்லைமீறல் தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதெல்லாம், பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ அல்லது நடக்கப் போகின்றதோ, அந்நேரத்தில் இப்படி, அழுத்தத்தை ஏற்பட எல்லைகளில் சுடுதல், ஊடுருவல், எல்லைகளில் வாழும் மக்களைத் தாகுதல், பீதி கிளப்புதல் முதலிய வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம். ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தொடைநடுங்கிப் பேர்வழிகளாக இருப்பதனால், பாகிஸ்தான் அத்தகைய செக்யூலரிஸ நிலையை சாதகாமாக ஆக்கிக் கொள்கிறது.

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

மனிதஉரிமைஆட்கள்இந்தஉண்மையினைஅறிந்துசெயல்படவேண்டும்: அருந்ததி ராய், தாரிக் அலி, ஷப்னம் ஹஸ்மி, போன்றோர் மனித உரிமைகள் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு உபன்யாசம் செய்து வந்துள்ளனர். ஆனால், இத்தகைய நேரத்தில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விடுவர். நட்சத்திர ஹோட்டல்கள், பாதுகாப்பாக உள்ள ஏசி அரங்குகள் முதலியவற்றில் தான் இவர்களது சொற்பொழிவுகள் இருக்கும். பொது நிகழ்சிகளில் அவ்வாறு பேச மாட்டார்கள். இருப்பினும் “தி ஹிந்து” போன்ற பிரபல நாளிதழ் முதல் “பாம்பேட் கம்யூனலிஸம்” போன்ற வடித்தெடுத்த மதவெறி பிரச்சார ஏடுகள் வரை இவற்றைப் பற்றி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும். ஆனால், இவ்வாறான தீவிரவாதிகள் பிடிபடும் போது, குண்டுகள் வெடிக்கும் போது காணாமல் போய்விடுவர். செய்திகள் வாசிக்கப்படும் அல்லது அச்சடிக்கப் படும், தலையங்கத்தில், நடுபக்கத்தில் அவர்களை எதிர்த்து எதுவும் எழுதப்பட மாட்டாது. மனித உரிமை ஆட்கள் தங்களது போலித்தனத்தை மாற்றிக் கொண்டு, உருப்படியான பேச்சுகளை பேச வேண்டும்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

செக்யூலரிஸசித்தாந்தத்தைவைத்துக்கொண்டுபாகிஸ்தானைஎதிர்கொள்ளமுடியாது: இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதிகள் செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற தாஜா செய்யும் வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன. இங்கு இந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ போர்வையில் இந்த தீவிவாதிகளுக்கு, தங்களது கொள்கைகளினால், மெத்தனமான போக்குகளால்,  மறைமுக ஆதரவினால் உதவி வருகிறார்கள். இதனால் தான். “உள்ளூர் தீவிரவாதம்” என்பதனை கண்டு கொள்ளாமல், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், ஓட்டு கிடைக்காமல் போகுமே என்று கணக்கு போடுகின்றனர்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியமுஸ்லிம்கள்தீவிரவாதத்தைக்கண்டறிந்துஅதனைஇஸ்லாத்திலிருந்துபிரித்துப்பார்க்கவேண்டும்: இந்திய முஸ்லிம்கள் இப்பொழுதுவது, இத்தகைய இந்திய விரோத செயல்களை அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், முஸ்லிம்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாகிஸ்தானிலேயே, இஸ்லாம் பெயரில் முஸ்லிம்கள் அடித்துக் கொள்கின்றனர், குண்டுவெடிப்பு நடத்துகின்றனர், மசூதிகளில் கூட முஸ்லிம்களை கொலை செய்கின்றனர் என்பதனையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளும். இஸ்லாம் தான் தீர்வு என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

18-08-2013


[3] On the possibility of him now meeting Tunda after his arrest, Mr. Malik said: “The fact that he is in police custody rules out a meeting anytime soon and I myself am not very keen on meeting him. But if we ever meet, I will ask him what he achieved by doing all this. His family is not with him and we don’t want to have any relations with him.”

http://www.thehindu.com/news/national/i-never-knew-what-he-was-up-to/article5033051.ece?ref=relatedNews

[7] For the first time, Pakistan has admitted to the presence of one of India’s most wanted terrorists Dawood Ibrahim but said he has been “chased out” and could be in the United Arab Emirates. “Dawood [Ibrahim] was in Pakistan but I believe he was chased out of Pakistan. If he is in Pakistan, he should be hounded and arrested. We cannot allow such gangsters to operate from the country,” said Shahryar Khan, Pakistan Prime Minister Nawaz Sharif’s special envoy for improving relations with India.

http://www.thehindu.com/news/national/dawood-chased-out-of-pakistan-shahryar-khan/article5008042.ece?ref=relatedNews

[9] Underworld don Dawood Ibrahim’s close aide Iqbal Mirchi, an accused in the 1993 Mumbai serial blasts case, died of a heart attack in London on Wednesday night. Mirchi, 63, the right-hand man of India’s topmost terrorist, was also facing drug smuggling charges in India. He had been living in a large six-bedroom home in an exclusive part of Hornchurch, a town in Essex, north-east of London. Ranked among the world’s top 50 drug barons, Muhammed Iqbal Memon or Iqbal Mirchi had been issued an Interpol Red Corner Notice in 1994 on Central Bureau of Investigation’s request. In April 1995, officers from Scotland Yard had raided Mirchi’s home and arrested him on drugs and terrorism charges in connection with the blasts in Mumbai. However, an extradition request by India was turned down by magistrates here. Scotland Yard’s investigation of Mirchi, which ended in 1999, found no evidence of criminal activity and in 2001 the UK Home Office granted him indefinite leave to remain in the U.K. India’s most-wanted criminal Dawood Ibrahim is on FBI’s list of top terrorists in the world.

[10] Abdul Karim Tunda alias Abdul Quddooss has confirmed that he was in touch with the Pakistani terror links and also said that he was the one who introduced Dawood Ibrahim to the Lashkar founder Hafiz Saeed.

http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html

[11] He also revealed that LeT (Lashkar-e-Taiba) and the Pakistan’s premeire intelligence service ISI aided Khalistani militant organization “Babbar Khalsa” also known as Babbar Khalsa International (BKI). Read more at: http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html