Archive for the ‘தொந்தரவு’ category

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை)!

ஜனவரி 29, 2014

தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை)!

 

தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம்

 

“மைனாரிடி”களுக்கு “இடவொதிக்கீடு” நடக்கும் போட்டாபோட்டி:  சச்சார் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, முஸ்லிம்கள் “இடவொதிக்கீடு” விசயத்தில் தீவிரமாகியுள்ளனர். “மைனாரிடி” என்றாலே, “முஸ்லிம்கள்” என்ற நிலை போய், இப்பொழுது “ஜைனர்கள்” கூட “மைனாரிடி” அந்தஸ்த்தைக்   கேட்டுள்ளனர். காங்கிரஸ் ஒப்புக் கொண்டு பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் நீதிமன்றங்களில் இதைப் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல, மாநிலங்களில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு “பிற்பட்டவர்” பட்டியிலில்  “இடவொதிக்கீடு” கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்.சிக்கான “இடவொதிக்கீடிலிருந்து” கருணாநிதி 3.5% முஸ்லிம்கள் மற்ரும் கிருத்துவர்களுக்கு கொடுத்தார். இதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் மற்ற மாநிலங்களில் உள்ளன.

 

முஸ்லிம்கள் போராட்டம் தாம்பரம் 28-01-2014..ஆட்டோவில் விளம்பரம்.

முஸ்லிம்கள் போராட்டம் தாம்பரம் 28-01-2014..ஆட்டோவில் விளம்பரம்.

தவ்ஹீத்ஜமாஅத்சிறைநிரப்பும்போராட்டம்: இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்[1] என்ற செய்திகள் வந்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை வலியுறுத்தி சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. விளம்பரங்கள் அளவிற்கு அதிகமாகவே செய்யப்பட்டது. சுவர்கள், சுவரொட்டிகள் என இருந்தன. அவர்களின் வாகனங்களில் கூட பதாகைகள் வைக்கப் பட்டன. பிரச்சாரமும் செய்யப்பட்டது.

 

முஸ்லிம்கள் போராட்டம் 28-01-2014.. வேனில் விளம்பரம்..

முஸ்லிம்கள் போராட்டம் 28-01-2014.. வேனில் விளம்பரம்..

போராட்டத்திற்குஅனுமதிவழங்ககூடாதுஎன்றுசிலஇந்துஅமைப்புகள், போலீஸ்கமிஷனர்அலுவலகத்தில்புகார்அளித்தன: இந்த போராட்டத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.  எனவே, போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று சில இந்து அமைப்புகள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தன[2]. என்று தினகரன் குறிப்பிட்டாலும், அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப் பட்டதா என்று குறிப்பிடவில்லை. சென்ற ஆண்டு, இதே பாணில்யில் பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார், “கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த கல்வி உதவித் தொகையை ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலையில் போராட்டம் நடைபெறும்பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் தமிழக பாஜ சார்பில் வரும் 22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.பி.என்.சீனிவாசனை ஆதரிக்கிறோம். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். தேர்தல் ஆணையரை நியமிக்க குழு வேண்டும் என்று அத்வானி கூறிய கருத்தை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதை பாராட்டுகிறேன்”, என்றார்[3]. ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.

 

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014..சுவர் விளம்பரம்

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014..சுவர் விளம்பரம்

தமிழகத்தில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டம் (28-01-2014): முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (28-01-2014) போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 62 ஆயிரம் பங்கேற்றனர்[4]. சென்னையில் நடந்த போராட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடும், மாநில அளவில் 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும், மும்பை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என மூன்று இடங்களிலும் சிறைச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

முஸ்லிம்கள் போராட்டம் சென்னை 28-01-2014..ஆபிதீன்

முஸ்லிம்கள் போராட்டம் சென்னை 28-01-2014..ஆபிதீன்

பி.ஜைனுல்ஆபிதீன்தலைமையில் சென்னையில் நடந்த ஆர்பாட்டம்: சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்[5]. போராட்டத்துக்கு அந்த அமைப்பின் நிர்வாகி பி. ஜைனுல் ஆபிதீன் தலைமை வகித்து பேசுகையில் ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை தர ஏற்பாடு செய்வதாக அதிமுக மற்றும் திமுக உறுதியளித்தது ஆனால் அது  நிறைவேற்றப்படவில்லை. வரும் தேர்தலில் எங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை யார் தருகிறார்களோ அவர்களுக்கே ஆதரவு அளிப்போம். மற்றவர்களுக்கு எதிராக வாக்களிப்போம்‘ என்றார்[6]. இவரது பேச்சை இங்கு கேட்கலாம்[7]. போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.    ஆகவே, வரும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும், இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிகிறது.

 

முஸ்லிம்கள் போராட்டம் சென்னை 28-01-2014

முஸ்லிம்கள் போராட்டம் சென்னை 28-01-2014

போராட்டம்காலை 10 மணிக்குதொடங்கிநண்பகல் 2 மணிவரைநடைபெற்றதால்எழும்பூர்பகுதியிலும், அண்ணாசாலையிலும்போக்குவரத்துபாதிக்கப்பட்டது: இந்த போராட்டத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்றதால், மார்ஷல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேறு சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்[8]. மேலும் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 2 மணி வரை நடைபெற்றதால் எழும்பூர் பகுதியிலும், அண்ணாசாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014.. ஊடக விளம்பரம்.

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014.. ஊடக விளம்பரம்.

சென்னையில்ஆர்ப்பாட்டம்நடத்தியதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்அமைப்பினர் –கைதுஇல்லை: சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. கோவை, நெல்லை: இதேபோல கோவை, திருச்சி, நெல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் 25 ஆயிரம் பேரும், திருச்சியில் 15 ஆயிரம் பேரும் கோவையில் 8 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் பங்கேற்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்[9].

 

சென்னையில் டிஜிட்டல் பேனர் விதவிதமாக

சென்னையில் டிஜிட்டல் பேனர் விதவிதமாக

சிறை நிறப்பும் போராட்டம்: இந்த சித்தாந்தமே முறையற்றதாக, சட்டவிரோதமாக இருக்கிறது, ஏனெனில், இருக்கின்ற சட்டங்கள், விதிமுறைகள் முதலியவற்றை மீறினால், கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டால், பிறகு மாஜிஸ்ட்ர்ரெட் / நீதிமன்றம் காவலில் வைக்க ஆணையிட்டால்தான் சிறையில் வைக்க முடியும். ஆனால், அவையெல்லாம் இல்லாமலேயே, ஊர் முழுக்க இப்படி விளம்பரம் செய்து கலாட்டாவில் இறங்கியிருப்பதனால், இது முழுக்க பிரச்சார ரீதியில் செய்யப்பட்ட ஆர்பாட்டமே என்றாகிறது. இல்லை, அவ்வாறு நாங்கள் சட்டங்களை மீறுவோம் என்றால், அவ்வாறும் ஒன்றும் செய்யவில்லை, கத்தி, போக்குவரத்தை பாதிக்க வைத்து, அலுவலகங்களுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்து, கலைந்து சென்றுள்ளனர். ஆனால், இதற்கு ஏகப்பட்ட அளவில் விளம்பரத்தைச் செய்துள்ளனர், ஆடகளை வண்டிகளில் கூட்டி வந்துள்ளனர். இதற்கு இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டிய அவசியம் என்ன? இப்படி எல்லோரும் கலாட்டா செய்தால், கேட்டது கிடைத்துவிடுமா? தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை) ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரிகிறது. தங்களுக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும், பொது மக்கள் அவதிப்பட வேண்டும். இந்த அளவிற்கு ஒற்றுமை இருப்பதால் தான், ஒரு முஸ்லிம் சையது ஜுபைர் அஹமது [Syed Zubair Ahmad] ஒரு முஸ்லிம், “அரவிந்த கேசரிவால் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், நடைமுறையில் முஸ்லிமாக இருக்கிறார்”, என்று எடுத்துக் காட்டியுள்ளார்[10].

 

வேதபிரகாஷ்

© 29-01-2014


[2] தினகரன், 15 ஆயிரம்பேர்திரண்டனர்முஸ்லிம்களுக்குகல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதஇடஒதுக்கீடுகோரிசிறைநிரப்பும்போராட்டம், 29-01-2014

[8] மாலைமலர், சிறைநிரப்பும்போராட்டம்: சென்னையில்ஆயிரக்கணக்கில்திரண்டமுஸ்லிம்கள், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி,  29-01-2014.

[9] தினமணி, முஸ்லிம்களுக்கானஇடஒதுக்கீட்டைஅதிகரிக்கக்கோரிதவ்ஹீத்ஜமாஅத்ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 29 January 2014 02:53 AM IST

 

நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!

ஜூலை 7, 2013

நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!

TMMK defying ban court July 2013தடையை மீறி தமுமுக சென்னையில் ஊர்வலம் (06-07-2013): தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து இந்த பேரணி அதன் தலைவர் ரிபாயி தலைமையில் செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. இட ஒதுக்கீடு, திருமண சட்டத்தில் திருத்தம், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடப்பதாக இருந்தது.  சென்னையில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. கோட்டை நோக்கி செல்லும் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை[1]. இதனை எதிர்த்து தமுமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் 05-07-2013 அன்று தள்ளுபடி செய்தது[2]. எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது[3]. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயிருந்து பேரணி நடத்த தீர்மானித்தனர். ஆனால் த.மு.மு.க.வினர் ஒன்று திரண்டு பேரணியாக செல்ல திட்டமிட்டனர்[4]. அவர்களின் திட்டத்தை முறியடிக்க போலீசார் உஷாரானார்கள். இதையடுத்து பேரணிக்கு வாகனங்களில் வந்த தமுமுகவினரை சென்னைக்கு வெளியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தனர். ரயில் மூலம் சென்ட்ரல், எழும்பூர் வந்தவர்களும் தடுத்து நிறுதத்ப்பட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 1,500 பேரை போலீஸார் கைது செய்தனர்.

TMMK defying ban court July 2013.2பஸ் – ரெயிலில் வந்த கூட்டம், கைது: பேரணியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் எழும்பூர் நிலையம் வந்த தொண்டர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500 தொண்டர்கள் ரெயில் நிலைய வாசலில் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். த.மு.மு.க. தொண்டர்கள் திடீரென கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்ரு தெரியவில்லை. ஆனால் போலீசார் எழும்பூர் பகுதி முழுவதும், ரெயில் நிலையம் முன்பும் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களது போராட்டம் முறியடிக்கப்பட்டது. இப்படி செய்தி வெளியிட்டிருப்பதே வேடிக்கையாக இருக்கிறது.

TMMK leaders - Ribayi, Harun Ismail, Abdul Ajis, Kuthbudhin, Zakir Hussaiதமுமுகவின்  மூன்று கோரிக்கைகள்: தமுமுக வைத்துள்ள கோரிக்கைகள் இவைதான்:

  • முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்;
  • 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்;
  • திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

இவற்றை ஆழமாக அலசினால், அவர்கள் இந்தியாவில் ஏதோ தனியான மக்கள் போலவும், இந்நாட்டு சட்ட-திட்டங்கள் தமக்கு ஓத்துவராது போலவும் தெரிக்கிறது. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதை எஸ்.சிக்கள் எதிர்த்துள்ளனர். ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் ஏனிப்படி இடவொதுக்கீடு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. பிரச்சினைகளை பாரபட்சமாக அணுகுவது தமுமுகவின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது[5]. லிங்கம் பெருமாள் என்ற தமிழக வீரர் காஷ்மீரத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது[6], சிமி தொடர்புகள், அயல்நாட்டு பணம் பெற்றது முதலிய விஷயங்களில் சந்தேகமற்ற நிலையில்லாமல் இருப்பது[7] என்பன சில உதாரணங்கள்.

TMMK 2011 December 6 protestடிசம்பர் 6 2011ல் ஆர்ப்பாட்டம்

ஆதித்தனார் சிலை ரவுண்டானாவில் போராட்டம்[8]: இந்நிலையில் மாலை 3 மணியில் இருந்து எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகே தமுமுகவினர் குவிந்தனர். போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பேரணியாகச் செல்ல முடியாததால் தமுமுகவினர் அங்கேயே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் மட்டுமன்றி அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர்[9]. பின்னர் தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதை முன்னரே செய்யாமல், இவ்வாறு ஆர்பாட்டம் செய்து, பிறகு செய்தது எதைக் காட்டுகிறது?

TMMK  demonstration in Udhagamandalam Feb 2013பிப்ரவரி 2013 – உதகையில் போராட்டம்

போக்குவரத்து பாதிப்பும், மக்கள் தொந்தரவு அடைந்ததும்[10]: தமுமுகவினரின் இந்த பேரணியால் சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இன்று மாலை மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணி காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இப்படி பிடிவாதமாக நடந்து கொள்வதால் சாதிப்பது என்ன ஆல்ல்லட்து இவர்கள் பொது மக்களுக்கு என்ன அறிவிக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொது மக்கள் என்ன நினைப்பார்கள், இதனால், ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. விடுமுறை நாட்களில் பொதுவாக சென்னையில் கடைகளுக்குச் செல்வது என்று தான் இருப்பார்கள்.

M H Jawahirullahஜவாஹிருல்லா எம்.எல்.., கூறியதாவது[11]: “மாநிலம் தழுவிய பிரச்னைகளுக்கு, பேரணி நடத்த உரிமை உண்டு. நாங்கள், மூன்று அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்னை என்பதால், சென்னையில், கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டோம்; பேரணிக்கு அரசு தடை விதித்துள்ளது. “மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு தடை விதிப்பதுஎன, முடிவு செய்து, முதலாவதாக எங்களில் இருந்து ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், தடையை மீறி பேரணிக்கு குவிந்துள்ளோம். சட்டம்ஒழுங்கை மதிக்கவும் தெரியும்; எங்கள் உரிமையை வென்றெடுக்கவும் தெரியும். இரவு முதலே போலீசார், எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்து, ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளனர்; நாங்கள் எல்லாரும் அமைதியாக கைதாவோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

chennai_usconsulate_attack-by muslim party ibnliveசென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது

tmmk Hyder Aliவழக்கமான கைதும், விடுவிப்பும்: இந்த போராட்டத்தில் தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் வழக்கம் போல விடுவிக்கப்பட்டனர்[12]. சிரித்துக் கொண்டே பஸ்சில் ஏறியவர்கள், சிரித்துக் கொண்டே கைகளை உயர்த்தி ஆட்டிக் கொண்டு வெளியே வந்துவிட்டனர் போலும்!

TMMK taking everybody a raidசட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனவா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர்  தப்பித்துக் கொள்கின்றனரா:  தமுமுகவின் தடையை மீறி செய்யப்படும் இத்தகைய சட்டமீறல்கள் வழக்கமாக, பழக்கமாக, வாடிக்கையாக தொடர்ந்து இருந்து வருவது தெரிக்கிறது. குறிப்பிட்ட நபர்கள் செய்யும் அதே குற்றமீறல்களை (repeated violations of the provisions of the same Act and Rules) மறுபடி-மறுபடி செய்யும் போது, அச்சட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனரா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர் (habitual offenders) என்ற நிலையினை அடைகின்றனரா என்று சட்ட வல்லுனர்கள் ஆராய வேண்டும். வருடாவருடம், இம்மீறல்கள் நடைபெறுவதால், இது ஒரு சட்ட-வேடிக்கை நிகழ்வாக ஆகிவிட்டது. “காலையில் கைது–மாலையில் விடுதலை” என்ற அரசியல் வேடிக்கையாகவும் மாறி வருகிறது. ஆனால், ஏற்படும் பாதிப்பு அவ்வாறில்லை. நடந்தது நடந்ததாகத்தான் இருக்கிறது. விரயம் ஆனது விரயமானது தான், திரும்ப வராது. இழந்த நேரம், இழந்ததுதான்.

கீழ்கண்டவை உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:

Business Standarad, Hundreds of TMMK members held in Chennai for defying ban, Chennai  July 6, 2013,  Last Updated at 23:18 IST[13]Special Correspondent, TMMK volunteers arrested for defying ban, The Hindu, Saturday, May 10, 2008[14].
Special Correspondent, TMMK man arrested in Ramnad, January 3, 2009, The Hindu,  RAMANATHAPURAM: The Tamil Nadu Muslim Munnetra Kazhagam district president Salimulla Khan was on Friday arrested under the Tamil Nadu Public Property Damage and Loss Act. Sources said when the cadres of TMMK led by him were taken to the police station by vans after being arrested for blocking the rail traffic in Ramanathappuram on December 6 they reportedly damaged seats of the police vans[15].

Tims of India, Hundreds arrested for defying ban, SWATI DAS, TNN | Dec 6, 2004, 05.48 PM IST[16]

வேதபிரகாஷ்

© 07-07-2013


[1] மாலைமலர், சென்னைபேரணிக்குஅனுமதிமறுப்பு: ரெயிலில்வந்த.மு.மு.. தொண்டர்கள் 500 பேர்கைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 06, 3:26 PM IST

[8] தினமணி, தடையை மீறி முஸ்லிம் அமைப்ப்பினர் போராட்டம்: 1500 பேர் கைது, ஜூலை 7, 2013.

[12] தினமலர், தடையைமீறிகோட்டைநோக்கிபேரணிக்குமுயற்சி : .மு.மு..,வினர் 3,400 பேர்கைது, பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013,00:20 IST