Archive for the ‘தேசவிரோத செயல்கள்’ category

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல்குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

பிப்ரவரி 12, 2023

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

துருக்கிசிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டாலும் சிரியாவுக்குச் செல்ல ஆசைப்படும் பெங்களூரு சாப்ட்வேர் ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது.  இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சாப்ட்வேர் இன்ஜினியர்சொந்தமாக, .டி., நிறுவனம்பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள்  ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.

பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

என்..., அதிகாரிகள் கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].

அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது

முகமது ஆரிப் கைது பற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: “உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெங்களூரில் தங்கி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். நம் நாட்டில் மத உணர்வுகளை துாண்டி விட்டு, அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்த நபரும் ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.

© வேதபிரகாஷ்

12-02-2023.


[1] தினமலர், பெங்களூருவில் அல் குவைதா பயங்கரவாதி கைது!, Updated : பிப் 12, 2023  03:58 |  Added : பிப் 12, 2023  03:56.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3240036

[3] தினத்தந்தி, பெங்களூருவில் பயங்கரவாதி கைது, பிப்ரவரி 12, 2:50 am.

[4] https://www.dailythanthi.com/News/India/nia-arrests-suspected-al-qaeda-terrorist-in-bengaluru-897842

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர் கைதுஅல்கொய்தாவுடன் தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.

[6] https://tamil.asianetnews.com/india/suspected-terrorist-alleged-to-be-linked-with-al-qaeda-has-been-arrested-in-bengaluru-rpwhvd

[7] தினமணி, பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!, By DIN  |   Published On : 11th February 2023 04:20 PM  |   Last Updated : 11th February 2023 06:10 PM

[8] https://www.dinamani.com/india/2023/feb/11/nia-conducts-searches-in-mumbai-bengaluru-against-suspects-linked-to-isis-al-qaeda-3999212.html

[9] தினசரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது, Sakthi K. Paramasivam, February 11, 2023: 2.41 PM.

[10] https://dhinasari.com/india-news/277683-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, பெங்களூர் ஐடி ஊழியர் பேருக்குதான்.. பின்னணியில் தீவிரவாதி! பொறி வைத்து பிடித்த என்ஐஏ, By Vigneshkumar Updated: Saturday, February 11, 2023, 16:21 [IST]

[12] https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-techie-turned-terrorist-arrested-by-nia-officals-498246.html

[13] குளோபல்.தமிழ்.நியூஸ், அல்கய்தாவுடன் தொடர்பு? கர்நாடகாவில் IT ஊழியர் கைது!, February 11, 2023.

[14] https://globaltamilnews.net/2023/187397/

[15] நியூஸ்.4.தமிழ், தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!, By Amutha, Published 20.00 hours February 11, 2023

[16] https://www.news4tamil.com/al-qaeda-terrorist-who-was-ready-to-network-in-the-isi-was-arrested-in-bangalore-nia-took-action/

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

24-10-2022 (திங்கட் கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –

  1. முகமது தல்கா (25),
  2. முகமது அசாருதீன் (23),
  3. முகமது ரியாஸ் (27),
  4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
  5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26)

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1].  இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில்  ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].

அமைதியை விரும்பினால், இளஞர்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம்.  கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.

முகமது தல்கா (25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார்.  நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.

முகமது அசாருதீன் (23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

முகமது ரியாஸ் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

ஃபிரோஸ் இஸ்மாயில் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

முகமது நவாஸ் இஸ்மாயில் (26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

25-10-2022 (செவ்வாய் கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10]

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தமிழ்.இந்து, ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத், செய்திப்பிரிவு Published : 26 Oct 2022 06:11 AM; Last Updated : 26 Oct 2022 06:11 AM.

[2]  https://www.hindutamil.in/news/tamilnadu/887654-jamesha-mubins-body.html

[3] News.18.Tamil, ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.

[4] https://tamil.news18.com/news/coimbatore/jamaat-authorities-did-not-come-forward-to-bury-jamoza-mubeens-body-in-coimbatore-824997.html

[5] தினத்தந்தி, 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவரின் மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது, By தந்தி டிவி 27 அக்டோபர் 2022 12:27 PM.

[6] https://www.thanthitv.com/latest-news/1998-coimbatore-blast-case-inmates-son-arrested-in-car-blast-incident-144934

[7] காமதேனு, வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!, Updated on : 27 Oct, 2022, 11:24 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/jamesha-mubin-bought-the-explosives-by-ordering-them-from-amazon-and-flipkart-police-department-shocked

[9] மக்கள் குரல், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கிய ஜமேஷா முபின், Posted on October 27, 2022

[10]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

Police warns about spreading false details - 16-02-2020

உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

News cutting, police dissatisfied 16-02-2020

தமுமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2].  இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை.

Sweden support washermenpet demo- nakkeeran-16-02-2020

14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Washermenpet Muslim poster Feb 2020-2

சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6].

Muslims against AIADMK govt.6

முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது.

Muslims against AIADMK govt.4

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

Muslims against AIADMK govt.1

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது.

Muslims against AIADMK govt.3

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

 

Muslims - Modi, Amit Shah effigy burnt-2

உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது

Washermenpet Muslim poster Feb 2020-3

எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Vikatan undue support to Muslis Feb 2020

[1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்),  Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ்

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest

[3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள்சென்னை சிஏ.. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/

[5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ரகளை, கலவரம், போலீசாரின் மீது தாக்குதல்!

பிப்ரவரி 19, 2014

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ரகளை, கலவரம், போலீசாரின் மீது தாக்குதல்!

 

முஸ்லிம்கள் ரகளை ராமநாதபுரம் 2014

முஸ்லிம்கள் ரகளை ராமநாதபுரம் 2014

பாப்புலர்  பிரண்ட்  ஆப்  இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது?: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[1], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[2], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[3].

பாப்புலர் பிரென்ட் தினம் 2014.போலீசாரைத் தாக்கும் முஸ்லிம்கள்

பாப்புலர் பிரென்ட் தினம் 2014.போலீசாரைத் தாக்கும் முஸ்லிம்கள்

கேரள அரசு அம்மாநிலத்தில் நடந்துள்ள 27 கொலைகளுக்கு (மார்க்சிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உட்பட) இவ்வியக்கங்கள் தாம் காரணம் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள தன்னிலை விளக்கத்தில் கூறியுள்ளது[4]. தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தனர் இவ்வாறு புதிய இயக்கங்களாக மாறிவருவதாகவும் தெரிகிறது[5]. 2006ல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நீதி பாசறை, ஃபோரம் பார் டினிடி ஆப் கர்நாதகா [Forum for Dignity of Karnataka] என்று முறையே கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உருவாக்கப் பட்டன. இவற்றிற்கு இஸ்லாத்தைக் காப்போம், மைனாரிட்டிகளின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் என்ற கொள்கைகள் இருப்பதாகப் பறைச்சாற்றிக் கொண்டாலும், அங்கத்தினர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர், பல வழக்குகளிலிலும் சிக்கியுள்ளனர். தெற்கிலிருந்து வடக்காக இவ்வியக்கத்தின் தாக்கம் நகர்வதாகத் தெரிகிறது. இதற்காக திடீரென்று கூட்டம் சேர்க்கப்பட்டு வருகிறது[6]. ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை   இந்த PFI ஆள் வெட்டியபோது[7] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[8]. இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[9]. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது.

பாப்புலர் பிரென்ட் தினம் 2014.போலீஸ் தடியடி

பாப்புலர் பிரென்ட் தினம் 2014.வாக்குவாதம், கல்லெறிதல், போலீஸ் தடியடி

பாப்புலர்  பிரண்ட்  ஆப்  இந்தியா  அமைப்பின்  இயக்கதினம் (17-02-2014): திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கும், போலீசாருக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன[10]. அதே பாணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இயக்க தினம் (17-02-2014) ராமநாதபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதே அமைப்பு உடுப்பியில் ஊர்வலம் சென்றபோது, ஒன்றும் நடக்கவில்லை[11], ஆனால், ராமநாதபுரத்தில் கலவரம் போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டனர். இதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஊர்வலத்திற்காக மதுரை – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டனர்.  ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை  தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதித்தனர். இதன்படி, ராமேஸ்வரம் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில், குமரையா கோவில் பகுதியில், 17-02-2024 அன்று மதியம், 3:30 மணிக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், ஊர்வலமாக சென்றனர்[12]. அப்போது சிலர் திடீரென்று வெள்ளை சீருடை அணிந்து டிரம்செட் வாசித்தபடி ஊர்வலத்தில் செல்ல முயன்றனர். அனுமதி இல்லாததால் இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் செல்ல மட்டுமே அனுமதி வழங்கியுள்ளோம். டிரெம்செட் மற்றும் சீருடை அணிந்து செல்ல கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

பாப்புலர் பிரென்ட் தினம் 2014

பாப்புலர் பிரென்ட் தினம் 2014

ராமநாதபுரத்தில்   தடையை  மீறி  ஊர்வலம் : கலவரத்தில்  கல்  வீச்சு: போலீஸ்  தடியடி[13]: சீருடை ஊர்வலம் தடுக்கப்பட்டதால், கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செல்கிறார்கள், நாங்கள் செல்லக்கூடாதா, நாங்களும் இந்தியர்களாம், எங்களுக்கும் உரிமைகள் உள்ளன, என்றெல்லாம் வாதிட்டனர். அப்போதும், சிலர் தடையை மீறி டிரெம்செட் வாசித்தபடி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது சிலர் கல்வீசி தாக்கினர். இதைப்பற்றியும் போலீசார் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆட்களைக் குற்றஞ்சாட்டுகின்றனர், ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆட்களோ, யாரோ கல் எரிந்தனர், மறைந்து விட்டனர் என்று சொல்கிறார்கள்[14]. இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கூட்டத்தின் பின்பகுதியில் இருந்து மேலும் சில கற்கள் வீசப்படவே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதுவும் வழக்கமான விசயங்கள். பி.எப்.ஐ / எஸ்டிபிஐ இவ்விசயங்களில் இம்மாதிரியான கலவரம் ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளை நடத்துவதில் வல்லவர்கள். இதனால் அங்கு கலவர சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கமுதி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, திண்டுக்கல் ஆயுதப்படையை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன், திரவியசெல்வன், ஜெயமுருகன் / ஜெயமுகுந்தன்  உட்பட 18 காயமடைந்தனர். இதேபோல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

PFI attack police 2014

PFI attack police 2014

சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு முதலியன: இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரத்தில் பதட்டம் உருவானது. கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.  போலீசாரை கண்டித்து, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதன்பின், மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்[15]. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங், ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதலும் கூறினர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 2 சிறப்பு காவல்படை பட்டாலியன், சிவகங்கை மற்றும் விருதுநகரில் இருந்து ஆயுதப்படை பட்டாலியன், ராமநாதபுரம் வரவழைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது[16].

PFI photo from their website

PFI photo from their website

பி.எப்.ஐ மற்றும் போலீசார் பரஸ்பர குற்றச்சாட்டுகள்: காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டனர்[17]. அதன்படி ஐ.ஜி. அபய் குமார்சிங், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி ஆகியோர் வீடியோவை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக கூடுதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் 1011 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[18]. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் இஸ்மாயில் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி[19]: “நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலவர தடுப்பு படையினர், கண்ணீர்  புகை குண்டு வாகனத்தை ஏற்பாடு செய்தது சந்தேகம் அளிக்கிறது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு எழுத்து பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டு இருந்ததுஆனால் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டதுஇதுகுறித்து நிர்வாகிகள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது கண்ணீர் புகை  குண்டு வீசப்பட்டது. தேவையின்றி ஒரு கலவர சூழ்நிலை போலீசாரால் ஏற்படுத்தப்பட்டதுஇந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று தெரிவித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது[20].

PFI lathicharged 2014

PFI lathicharged 2014

இராமநாதபுரத்தில்  முஸ்லிம்கள்  பேரணியில்  போலீஸ்  துப்பாக்கிச்  சூட்டுக்குஎஸ்.டி.பி.  கண்டனம்[21]: இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இராமநாதபுரத்தில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான பிப்ரவரி 17 ம் தேதி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், பேரணி துவங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள்அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசமிகள் சிலர் கூட்டத்தின் மீது கல்வீசி தாக்கினர். இதை காரணம் காட்டி கூட்டத்தினர் மீது மிக கொடூரமாக காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதோடு தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்தும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெற்றது. கல்வீசிய விசமிகள் சிலரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது. காவல்துறையின் வன்முறை வெறியாட்டமும், துப்பாக்கிச் சூடும் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தமிழக அரசிற்கு எதிராக முஸ்லிம்களை திருப்ப முயற்சி செய்திருப்பது, அரசுக்கு எதிரான காவல்துறையின் சதியா என்ற கோணத்தில் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினர் மீதான இந்தத்தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் .டி.எஸ்.பிவெள்ளத்துரை ஆகியோரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக அமைதியான முறையில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது. நாடு முழுவதும் எத்தனையோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடைபெறும் போது, முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது[22]. இங்கு ஏதோ மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதைப் போல கூறியிருக்கிறார். ஆனால், “வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென மர்ம நபர்கள் கூட்டத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 6 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அப்பகுதியல் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”, என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது[23].

PFI lathicharged 2014.4

PFI lathicharged 2014.4

http://tamil.oneindia.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள்: இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும். நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்[24]. நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது…..வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோஅடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்….!! இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.

பாப்புலர்  பிரண்ட்  ஆப்  இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது, என்று அவர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்: முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக இந்தியாவில் குண்டுகளை வெடிக்கும் போ

Manitha neya pasarai.2

Manitha neya pasarai.2

தோ, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் போதோ, தினம்தினம் காஷ்மீரத்தில், மற்ற பகுதிகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிக்கின்றபோதோ, இந்த இஸ்லாமிய அமைப்புகள் தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. அப்பொழுது தீவிரவாதத்திற்கு எதிராக ஊர்வலம் போவோம் என்று வருவதில்லை. மேலும், மக்கள் என்ற பொதுப்பெயரை உபயோகித்திருந்தாலும், குறுகிய நோக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தீவிரமாக கடைபிடுக்கும் போக்கு தான் இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளினின்று வெளிப்பபட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது, என்று அவர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்.

வேதபிரகாஷ்

© 19-02-2014


[4] The Kerala government today told the high court that the Popular Front of India is the ‘resurrection’ of banned SIMI in another form and along with National Democratic Front, had “active involvement” in 27 murder cases, mostly of cadres of CPI-M and RSS. The objectives of NDF and PFI were similar. However, NDF felt that if it were to remain confined to Kerala, it would be branded as any other communal organization and to spread its activities to other states, PFI was formed on December 19, 2006 at a meeting of NDF, Manitha Neethi Passrai (MNP- Tamil Nadu) and Forum for Dignity of Karnataka, held at Bangalore. Though PFI had claimed that it was formed to safeguard human rights and protection of minority, they were “clandestinely engaged in wholetime criminal activities with the object to defend Islam”, it was submitted. http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[6] Cadres of banned Students Islamic Movement of India (SIMI) are understood to have been fast regrouping under the banner of Popular Front of India (PFI), an outfit which has expanded its tentacles to north after carrying out initial recruitment in south India. SIMI has since been banned thrice by the government and the organisation has lost its case in the Supreme Court seeking lifting of the ban.

[7] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers.

[8] According to a government paper,starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF),the PFI now has more than 80,000 members and sympathisers,with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry,states that the PFI has a militant core cadre,radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month,subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[9] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும்,  தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார்.   முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது  நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும்  கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159

[18]மாலைமலர், ராமநாதபுரம்ஊர்வலத்தில்கலவரம்: 1011 பேர்மீதுவழக்குப்பதிவு, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 18, 11:28 AM IST

[19]  தினகரன், போலீசைதாக்கியதாக 1000 பேர்மீதுவழக்கு: ராமநாதபுரத்தில்போலீஸ்குவிப்பு, மாற்றம் செய்த நேரம்:2/19/2014 2:54:22 AM

[21] ஒன் இந்தியா தமிள்,  இராமநாதபுரத்தில்முஸ்லிம்கள்பேரணியில்போலீஸ்துப்பாக்கிச்சூட்டுக்குஎஸ்.டி.பி.கண்டனம், Karur Vadivel,

Updated: Tuesday, February 18, 2014, 14:20 [IST]