செக்ஸ் படங்கள் வெளியிடும் பாகிஸ்தானிய தியேட்டர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!
அமைதியான இஸ்லாமிய பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இஸ்லாம் என்ற அமைதியான மதம் இருக்கிறது. அந்த அமைதிக்காகத்தான், ஜின்னா என்ற முஸ்லிம், பாரதத்தை உடைத்து இந்த அழகான நாட்டை உருவாக்கினார். ஆனால், ரத்தத்தில் உருவான, இந்நாட்டில் எப்பொழுதும் ரத்தம் சிந்திக் கொண்டுதான் வருகிறது. இஸ்லாம் இருந்தாலும், அமைதி இல்லை. கைபர் பக்துன்வா [Khyber Pakhtunkhwa] என்ற மாகாணத்தின் தலைநகராக இருக்கும் பெஷாவர், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த நகரமாகும். பாகிஸ்தானில் திரையரங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (11-02-2014) நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்[1]. 20 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் புகழ் பெற்ற பிலோர் குடும்பத்தினருக்குச் சொந்தமான “ஷமா’ என்ற தியேட்டரில் செவ்வாய்க்கிழமை சுமார் 80 ரசிகர்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் 3 கையெறி குண்டுகளை அடுத்தடுத்து வீசியெறிந்ததில் 12 பேர் உடல் சிதறி பலியானார்கள்[2]. இக்குண்டுகள் சைனாவில் உற்பத்திச் செய்யப் பட்டவை என்று குறிப்பிடத் தக்கது[3]. தலிபான்களின் சைன தொடர்பும் இதில் வெளிப்படுகிறது. ஒரு குண்டு தியேட்டர் உள்ளே வெடித்தது, மற்றவை வெளியே வெடித்தன. ஏற்கனவே இப்பகுதியில் தீயேட்டர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது[4].
பாகிஸ்தான் தியேட்டரில் குண்டுவெடிப்பு: ‘பலான’ படம் பார்க்க வந்த 10 பேர்பரிதாபப்பலி[5]: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் ஆபாச சினிமா காட்டப்படுவதாக தலிபான் ஆதரவு அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இது போன்ற படங்களை திரையிடும் தியேட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது[6]. பெஷாவரில் உள்ள பழமை வாய்ந்த ஷமா சினிமா தியேட்டரில் ஆபாச படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வந்துள்ளன[7]. காயமடைந்த 20 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த தியேட்டரில் ஆபாச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இந்திய திரைப்படங்களும் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன. தீவிரவாதிகளிடம் இருந்து தியேட்டர் உரிமையாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததாக பெஷாவர் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தி படங்கள் பெயரில் செக்ஸ் / புரோன் படங்கள் காண்பிக்கப்படுவது: பொதுவாக பாலிவுட், அதாவது இந்தி திரைப்படங்கள் பிரபலமாக இருந்து வருகின்றன. லாஹூரில் கூட படங்கள் காட்டப்படுகின்றன. இதுதவிர, நடுவில் செக்ஸ் படங்களும் காட்டுவது வழக்கமாக இருக்கிறது[8]. “ட்ரைலர்” என்ற பெயரிலும் சில காட்சிகள் காட்டப்படுகின்றன. அவற்றில் பெண்கள் படுக்கைகளில் உருளுவது போலவும், பாப் பாடல்களுடம் அக்காட்சிகள் இருக்கின்றன[9]. இதற்கு பிறகு, படம் ஆரம்பிக்கிறது. அதிலும் செக்ஸ் காட்சிகள் இருக்கின்றன[10]. ஏற்கெனவே இந்தி படங்கள் காட்டக் கூடாது என்ற எதிர்ப்பிஉ இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி படங்கள் பெயரில் புரோனோ / செக்ஸ் படங்கள் காண்பிக்கப் படுவது, இந்தியவிரோதத்தை வளர்ப்பதற்கு என்றே தெரிகிறது. மேலும், உண்மையான முஸ்லிம்கள் என்றால், அவர்கள் எப்படி அத்தகைய படங்களைக் காட்டுகிறார்கள், மக்களும் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
தலிபான் ஆதிக்கத்தில் உள்ள பாகிஸ்தான் பகுதிகள்: பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. கடந்த வாரத்தில் ஒரு தற்கொலைப் படை ஜிஹாதியினால் ஒரு ஓட்டலில் குண்டுவெடிப்பு நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்தனர்[11]. பெஷாவர் நகரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு தியேட்டரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து பெஷாவரில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சினிமாவும், இசையும் இஸ்லாத்துக்கு எதிரானது என தலிபான் தீவிரவாதிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தேர்தல்களில் எப்படி பெண்கள், இசை முதலியவை உபயோகப்படுத்தப் பட்கின்றன என்பதை முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
வேதபிரகாஷ்
© 13-02-2014
[1]http://www.dinamani.com/latest_news/2014/02/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article2051624.ece
[2] தினமலர், பாகிஸ்தான்திரையரங்கில்குண்டுவீச்சு : 12 பேர்பலி, By Somasundaram Thirumalaikumarasamy, பெஷாவர், First Published : 12 February 2014 07:33 AM IST
[3] http://news.nationalpost.com/2014/02/12/terrorists-toss-hand-grenades-into-audience-at-last-porn-cinema-in-peshawar-killing-at-least-10-people/
[5] http://tamil.oneindia.in/news/international/ten-dead-16-wounded-blast-at-pakistan-cinema-officials-193402.html
[7] தினத்தந்தி, ஆபாசபடம்திரையிடும்சினிமாதியேட்டரில்குண்டுவெடித்ததில் 10 பேர்பலி, பதிவு செய்த நாள் : Feb 12 | 09:17 am
,
[9] http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/10631443/Bombers-attack-Pakistani-cinema-for-playing-porn-films.html
[10] It shows popular Bollywood hits made in Lahore, Pakistan’s film capital. One screen was reserved for pornographic films, or “sexy movies” as a moustached usher had told The Daily Telegraph during a recent visit to the cinema. A show began with trailers showing women rolling around on unmade beds to pop songs. Then came the main feature, drawing cheers from the audience. Titled Friendship, it described a family’s attempt to marry off a son despite an affair, told with frequent sexual scenes.
[11] A week ago a suicide bomber blew himself up near a hotel restaurant in Peshawar, killing nine people and injuring more than 30 others, according to local officials.
http://edition.cnn.com/2014/02/11/world/asia/pakistan-cinema-blasts/
அண்மைய பின்னூட்டங்கள்