துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)
முன்னுக்கு முரணான வர்ணனை கட்டுக்கதை என்பதனை வெளிப்படுத்துகிறது:
சொல்லப்பட்ட விவரங்கள் | பெறப்படும் விவரங்கள் |
1. ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரக… | ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர்.
ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது. |
2. விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள் | பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்தது தில்லியில் என்றால், விக்கிரகம் அங்குதான் இருக்க வேண்டும் |
3. பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது ….. | அப்படியென்றால், தில்லி சுல்தான் ஶ்ரீரங்கத்தின் மீது இரண்டாம் முறை படையெடுத்து வந்து, விக்கிரகத்தை கொள்ளையெடித்தானா? |
4. பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட …. | இதன் படி பார்த்தால், மகள் ஶ்ரீரங்கம் வந்தாள், என்றாகிறது. நிச்சயமாக, துலுக்கன் தனது மகளை அப்படி அனுப்பப் பாட்டான், மாறாக கொலை செய்வான். |
5. அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். | வைணவர்களுக்கு அந்த அளவுக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர். ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது. என்றெல்லாம் ஆரம்பித்து இப்படி முடிப்பதே விசித்திரமாக உள்ளது. |
இது இந்து கோவில் என்பதால், அத்தகைய விளக்கமே தேவையில்லை. ஒருமசூதியில் அவ்வாறிருந்து, அங்கு விக்கிரகம் இல்லையென்றால், அத்தகைய விளக்கம் பொறுந்தும். எனவே, பொய்கதையை எப்படியெல்லாம் வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது.
மேல்கோட்டையில் இன்னொரு துலுக்க நாச்சியார் / பீவிநாச்சியார்: “இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டை திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்த துலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும்”, என்றும் அக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது. அப்படியென்றால், இரண்டு இடங்களிலும், துலுக்கர்கள் விக்கிரங்களை, கோவில்களை இடித்து எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு இடங்களிலும், இரண்டு துலுக்கநாச்சிகள் ரங்கநாதனிடம் காதல் கொண்டு ஐக்கியமாகி இருக்கவேண்டும். வைணவர்கள் இவ்வாறு கதைகளைக் கட்டி விட்டாலும், துலுக்கர்கள் / முஸ்லிம்கள் இக்கதைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பிறகு இவர்கள் ஏன் இப்படி துலுக்கச்சியைக் கட்டிக் கொண்டு அழவேண்டும்? ஏற்கெனவே, மாலிகாபூர் வந்து இடிக்க முற்பட்டபோது, விக்கிரங்கள் மறைத்து வைக்கப் பட்டன, என்ற குறிப்புகள் உள்ளன, அந்நிலையில், செக்யூலரிஸத்தை வளர்க்கும் முறையில், இத்தகைய கட்டுக் கதைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
பாரதியார் பாடல்களில் துருக்கர்: பாரதியும் துருக்கர் என்ற பிரயோகத்தை தன்னுடைய பாடல்களில் செய்துள்ளதைக் காணலாம். “நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்,” என்று குறிப்பிட்டதை சிலர் திரிபு விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால், துருக்கரது கொடுமைகளை அறிந்துதான்,
“தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபடு துருக்கர்” (வரிகள் 44-46)
என்று பாடினார். ஆனால், இப்பொழுது, சில செக்யூலரிஸ்டுகள் அல்லது துருக்கர் ஆதரவு கோஷ்டிகள்,
இதில் “நவைபடு துருக்கர்” என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.
சோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! (வரிகள் 83-84)
இதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் எப்படி பாடல்களை எடுத்து, இடைசெருகல்கள் செய்தனரோ, அத்தகைய மோசடிகள் இப்பொழுதும் நடைபெறுகிறது.
இந்துக்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள்: முகமதியர், தங்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள், வற்புருத்தினார்கள். பிறகு, அரேபிய-உருது பிரயோகங்களின் மூலம் வரும் வார்த்தைகளைப் புகுத்தினார்கள். சுன்னி என்பதை சன்னி, மெக்காவை மக்கா என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் இந்துக்கள் அவற்றின் தன்மையினை அறிந்து கொள்ளவில்லை. அடிப்படைவாதத்தை, தம் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் உணரவில்லை. ஆகவே, கீழ் காணும் விவரங்களை கருத்தில் கொள்ளவேண்டும்:
- இந்துக்கள் துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம், என இவர்களுடன் யாதாவது ஒரு முறையில், வழியில், சமயத்தில் உரையாடல், சந்திப்பு என ஆதாவது நிகழ்ந்திருந்தாலும், அவர்களைப் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
- துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியோர் 600 வருடங்கள் இந்தியாவின் பகுதிகளை ஆண்டுவந்தோம் என்ற மமதை இன்றும் இருக்கிறது.
- உண்மையில் இந்துக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திரதரைக்கடல் நாடுகளில் இருந்தனர். 675 முதல் 710 வாக்கில் இஸ்லாத்தின் தாக்குதல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் மதம் மாற்றப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மலைகள், காடுகள் போன்ற மறைவிடங்களில் வாழ்ந்தனர்.
- சோழர்கள் காலம் (13ம் நூற்றாண்டு வரை) வரையில் அவர்களால் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்த முடியவில்லை.
- அவர்கள் இந்துக்கள் பற்றி எதிர்மறையான விசயங்கள் தெரிந்து வைத்திருப்பதால், அடிக்கடி விமர்சித்தில் ஈடுபடுகிறார்கள்.
- ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு, இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.
- துருக்கியர் முகமதியர், முசஸமான், முஸ்லிம் என்ற வார்த்தைகளுக்கு உள்ள வேறுபாடு தெரியாது.
- உருவ வழிபாடு பற்றி இந்துக்களை அதிகமாக விமர்சிப்பார்கள். ஆனால், அவர்களது உருவ வழிப்பாட்டை பற்றி அப்படியே மறைத்து, மற்றவர்களை குறைகூறுவார்கள்.
- பௌத்தம் மத்திரதரைக்கடல் நாடுகளில் அதிகமாகப் பரவியிருந்ததால், அதன் தாக்கம் கிருத்துவம் ,மற்றும் இஸ்லாம் இரண்டின் மீதும் அதிகமாக இருக்கும்.
- பௌத்தம் ஏற்கெனவே, இந்துமதத்தில் உள்ளவற்றை தலைகீழாக மாற்றியுள்ளதால், இஸ்லாத்தில் அத்தகைய பழக்க-வழக்கங்களை எளிதாக அறிந்து கொள்ளமுடிகிறது.
எனவே இப்பொழுதுள்ள இந்துக்கள் தங்களது மதநூல்களை படிக்க வேண்டும் , பிறகு வ்அவர்கள் மதநூல்களை படிக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுடன் சரியானபடி உரையாடல் நடத்த முடியும்.
© வேதபிரகாஷ்
30-11-2017
அண்மைய பின்னூட்டங்கள்