Archive for the ‘துருஷ்க’ category

மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னி-ஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்-சந்தோஷம் ஏன்?

ஓகஸ்ட் 11, 2022

மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னிஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்சந்தோஷம் ஏன்?

பாரம்பரிய முறைப்படி மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்:  மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்[1]. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான் கான் சாலையிலிருந்து ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர்[2]. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரணியாகச் சென்றனர். ராயபேட்டையில் நடக்கும் இந்த சடங்குகள் மற்ற ஊர்வலங்கள் எல்லாம் ஊடகங்களில் காட்டுவதில்லை. தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மொஹரம் பண்டிகை கிராம விழாவாக கொண்டாடப்பட்டது. ஊரின் மையப் பகுதியில் உள்ள அல்லாசாமி கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமானோர் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சில இடங்களில், இந்துக்களும் கலந்து கொண்டார்கள் போன்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

மொஹரம் ஏன், எப்பொழுது?: மொஹரம், முஃகர்ரம் (முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரிகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது / மாறுவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் / ஜிஹாத் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட இடங்களில் வன்முறைகள் இருக்கின்றன. சில இஸ்லாமியர் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழக்கமாகும். முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில்ஆஷுரா / ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று ஷியா இஸ்லாமியர் உண்ணாதிருப்பர். மொஹரம் மதத்தின் 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். சுன்னி-ஷியாக்களில் நாளைக் கணக்கிடுவதில் வேறுபாடு உள்ளது.

ஷியாக்களுக்கு துக்கநாள், சுன்னிகளுக்கு கொண்டாடும் நாள்: ஹுசைன் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் விடப்பட்டு எதிரி வீரர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை இது குறிக்கிறது. இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அது ஒரு துக்க நாள். அதன்படி இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை ஷியாக்களால் நினைவுகூறப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அல்லாத சுன்னி இஸ்லாமியர் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் / எகிப்து அரசன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக வழிபடும் நிகழ்வு. ஆக ஷியாக்களுக்கு துக்கம், சுன்னிகளுக்கு மகிழ்ச்சி.

ஷியா முஸ்லிம்கள் என்று குறிப்பிட ஏன் தயங்க வேண்டும்?: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்[3]. இப்படி ஊடகங்கள் குறிப்பிட்டாலும், யார் அந்த “இரு தரப்பினர்” என்று குறிப்பிடவில்லை. பொதுவாக, இந்துக்கள் மற்றும் இந்துக்கள்-அல்லாதவர் என்று குறிக்க, ஊடகங்கள் அத்தகைய சொற்பிரயோகங்கள் செய்வதுண்டு. “சிறுபான்மையினர்” என்று குறிப்பிட்டால், முஸ்லிம், கிருத்துவர் என்றாகும். இங்கு சுன்னி மற்றும் ஷியா பிரிவினர் என்று சொல்ல ஏன் தயங்குகின்றனர் என்று தெரியவில்லை. இதே கோணத்தில், பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும், இங்கிருக்கும் முஸ்லிம்கள் கண்டு கொல்ல மாட்டார்கள். பிறகு, சென்னை-ராயபேட்டையில் அத்தனை முகமதியர் மொஹரம் கொண்டாடும் பொழுது, அவர்கள் ஷியாவாகத்தான் இருக்க வேண்டும். பிறகு, அவர்களும் பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும் ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று விசித்திரமாக இருக்கிறது.

ஃபதிஹா / அஷுரா ஆகூர் தர்காவில் தடுக்கப் பட்டது ஏன்?: முகம்மது நபியின் பேரனான இமாம் ஹுஸைன் இபின் அலியின் தியாகத்தை நினைவு கூற, மொஹரத்தின் ஒன்பதாவது நாளன்று, ஃபதிஹா என்றதை ஓதி, தொழுகை நடத்தி போற்றுவது ஷியாக்களின் கடமை. கர்பலாவில் நடந்த அந்த உயிர்தியாகத்தை, அஷுரா என்றும் தம்மை துன்புருத்திக் கொண்டு நினைவு கூர்வார்கள். இது நாகை அடுத்த நாகூர் ஹஸரத் ஷாஹுல் ஹமீது தர்காவில், ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கூடி  ஃபதிஹா ஓதி, தொழுகை செய்வது வழக்கம். இம்முறை தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது[4]. பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்[5]. இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., என். முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது[6].

மொஹரம் தொழுகை ரத்து செய்யப்பட்டது: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோட்டாட்சியரின் தடையை மீறி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உண்மையில் ஊடகத்தினர், இந்த மொஹரத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல், “பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது,” என்றெல்லாம் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது உண்மையில் ஒரு துக்ககரமான நிகழ்ச்சி, ஏனெனில், கர்பலா போரில், ஹுஸைன் மற்றும் அஸன் கொல்லப் படுகின்றனர், அந்த உயிர்பலி, தியாகத்தை நினைவு கூருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது: இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது[7]. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். “தலைமுறைகளாக என்னுடைய முன்னோர்கள், இந்த ஃபதிஹா சொல்லி தொழுகை செய்து வருகின்றனர். அதனால், நான், இதை நிறுத்த முடியாது,” என்றார்[8]. தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையே, ஜீ.நியூஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது[9], “இந்த நிலையில், நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹர்ரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு துவாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்”.  கோலாகலமாக நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவில் குவிந்து வரும் நிலையில், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக தர்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

10-08-2022


[1] ஜெயா.நியூஸ், நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தீ மிதித்து வழிபாடு, Aug 9 2022 5:13PM

[2] http://jayanewslive.com/spiritual/spiritual_189099.html

[3] தினமலர், மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை, Added : ஆக 10, 2022  07:19

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3096668

[5] நியூஸ்.7.தமிழ், நாகூர் தர்காமுஹரம் பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட சர்ச்சை, by EZHILARASAN DAugust 9, 2022.

[6] https://news7tamil.live/nagor-dargah-controversy-over-the-celebration-of-muharram.html

[7] Indian Express, Nagapattinam: Trustee board fallout leads to cancellation of Muharram prayers at Nagore Dargah, Published: 10th August 2022 05:58 AM  |   Last Updated: 10th August 2022 05:58 AM.

[8] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/aug/10/nagapattinam-trustee-board-fallout-leads-to-cancellation-of-muharram-prayers-at-nagore-dargah-2485906.html

[9] ஜீ.நியூஸ் .இந்தியா, Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை, Written by – Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 02:30 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/muharram-2022-controversy-in-nagore-dargah-muharram-celebrations-405760

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

திசெம்பர் 7, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

Sikandar Dragah - Tirupparangundram.entrance

லண்டனில் வழக்கு: தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sikandar mosque - Tirupparangundram

ராஜகோபால் உயிர்த் தியாகம்: ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால்,  திருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.

 Sikander Dargah, 2014 HC stayed, The Hindu 04-12-2014

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.

Sikandar mosque claim

ஹிந்து முன்னணி தொடர் போராட்டம்: ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Sikandar Dragah - Tirupparangundram.sign board

ஆகஸ்ட் 2017ல் நீதிமன்ற உத்தரவு[1]: அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,’கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நிறுத்தப் பட்டது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்[2].  இது, சுல்தான் சிக்கந்தர் அவூலியா தர்காவிற்கு [Sulthan Sikkandhar Avulia Dargha] அருகில் உள்ளது. போலீஸார் மற்றும் கோவில் நிர்வாகம், அவ்வாறு அனுமதி அளித்தால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் கலவரம் ஏற்படும் என்று தெரிவித்து அனுமதி மறுத்தனர். எந்த தனி இயக்கமும், அத்தகைய உரிமையைக் கோர முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்[3]. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், மதுரையில் மதவாதப் பிரச்சினையுள்ளதால், அங்கு விளக்கேற்ற அனுமதி கொடுக்க முடியாது, மாறாக, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் விளக்கேற்றலாம் என்றும் கூறினார். தனிநீதிபதநெம். வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார்[4]. இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு[5]: “சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்,”என்றனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, எனும்போது, அறநிலையத் துறை எவ்வாறு அந்த சமாதியை / தர்காவை அனுமதித்தது என்று தெரியவில்லை.

Tirupparangundram - 2012 position - TOI

இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது.  சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது.  இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

06-12-2017

Sikandar Dragah - Tirupparangundram.1805

[1] தினமலர், கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.01, 2017. 00:56.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1824074

[3]  The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday. Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said. According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition. On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department.

 

The Hindu, HC says no to lighting Mahadeepam close to Dargah, Mohamed Imranullah S., MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST, UPDATED: APRIL 07, 2016 02:52 IST.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[4] He said that the High Court too had recognised the right way back in 1996 itself. Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also. However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[5] http://www.dinamalar.com/district_detail.asp?id=1824074&dtnew=8/1/2017&Print=1

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)

Malikafur, Ranganatha, Tulukka nachi

முன்னுக்கு முரணான வர்ணனை கட்டுக்கதை என்பதனை வெளிப்படுத்துகிறது:

சொல்லப்பட்ட விவரங்கள் பெறப்படும் விவரங்கள்
1.       ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரக ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர்.

ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது.

2.       விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள் பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்தது தில்லியில் என்றால், விக்கிரகம் அங்குதான் இருக்க வேண்டும்
3.       பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது ….. அப்படியென்றால், தில்லி சுல்தான் ஶ்ரீரங்கத்தின் மீது இரண்டாம் முறை படையெடுத்து வந்து, விக்கிரகத்தை கொள்ளையெடித்தானா?
4.       பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட …. இதன் படி பார்த்தால், மகள் ஶ்ரீரங்கம் வந்தாள், என்றாகிறது. நிச்சயமாக, துலுக்கன் தனது மகளை அப்படி அனுப்பப் பாட்டான், மாறாக கொலை செய்வான்.
5.       அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். வைணவர்களுக்கு அந்த அளவுக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர். ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது. என்றெல்லாம் ஆரம்பித்து இப்படி முடிப்பதே விசித்திரமாக உள்ளது.

இது இந்து கோவில் என்பதால், அத்தகைய விளக்கமே தேவையில்லை. ஒருமசூதியில் அவ்வாறிருந்து, அங்கு விக்கிரகம் இல்லையென்றால், அத்தகைய விளக்கம் பொறுந்தும். எனவே, பொய்கதையை எப்படியெல்லாம் வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது.

Location of Tulukka nachi in temple

மேல்கோட்டையில் இன்னொரு துலுக்க நாச்சியார் / பீவிநாச்சியார்: “இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டை திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்த துலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு  ஒப்பு நோக்கத்தக்கதாகும்”, என்றும் அக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது. அப்படியென்றால், இரண்டு இடங்களிலும், துலுக்கர்கள் விக்கிரங்களை, கோவில்களை இடித்து எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு இடங்களிலும், இரண்டு துலுக்கநாச்சிகள் ரங்கநாதனிடம் காதல் கொண்டு ஐக்கியமாகி இருக்கவேண்டும். வைணவர்கள் இவ்வாறு கதைகளைக் கட்டி விட்டாலும், துலுக்கர்கள் / முஸ்லிம்கள் இக்கதைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பிறகு இவர்கள் ஏன் இப்படி துலுக்கச்சியைக் கட்டிக் கொண்டு அழவேண்டும்? ஏற்கெனவே, மாலிகாபூர் வந்து இடிக்க முற்பட்டபோது, விக்கிரங்கள் மறைத்து வைக்கப் பட்டன, என்ற குறிப்புகள் உள்ளன, அந்நிலையில், செக்யூலரிஸத்தை வளர்க்கும் முறையில், இத்தகைய கட்டுக் கதைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Bharathiyar, poem and Turukkar

பாரதியார் பாடல்களில் துருக்கர்: பாரதியும் துருக்கர் என்ற பிரயோகத்தை தன்னுடைய பாடல்களில் செய்துள்ளதைக் காணலாம். “நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்,என்று குறிப்பிட்டதை சிலர் திரிபு விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால், துருக்கரது கொடுமைகளை அறிந்துதான்,

 

 “தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபடு துருக்கர்  (வரிகள் 44-46)

என்று பாடினார். ஆனால், இப்பொழுது, சில செக்யூலரிஸ்டுகள் அல்லது துருக்கர் ஆதரவு கோஷ்டிகள்,

இதில் “நவைபடு துருக்கர்” என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.

 

சோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! (வரிகள் 83-84)

இதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் எப்படி பாடல்களை எடுத்து, இடைசெருகல்கள் செய்தனரோ, அத்தகைய மோசடிகள் இப்பொழுதும் நடைபெறுகிறது.

Tamil muslim map, Joshua project

இந்துக்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள்: முகமதியர், தங்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள், வற்புருத்தினார்கள். பிறகு, அரேபிய-உருது பிரயோகங்களின் மூலம் வரும் வார்த்தைகளைப் புகுத்தினார்கள். சுன்னி என்பதை சன்னி, மெக்காவை மக்கா என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் இந்துக்கள் அவற்றின் தன்மையினை அறிந்து கொள்ளவில்லை. அடிப்படைவாதத்தை, தம் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் உணரவில்லை. ஆகவே, கீழ் காணும் விவரங்களை கருத்தில் கொள்ளவேண்டும்:

  1. இந்துக்கள் துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம், என இவர்களுடன் யாதாவது ஒரு முறையில், வழியில், சமயத்தில் உரையாடல், சந்திப்பு என ஆதாவது நிகழ்ந்திருந்தாலும், அவர்களைப் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
  2. துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியோர் 600 வருடங்கள் இந்தியாவின் பகுதிகளை ஆண்டுவந்தோம் என்ற மமதை இன்றும் இருக்கிறது.
  3. உண்மையில் இந்துக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திரதரைக்கடல் நாடுகளில் இருந்தனர். 675 முதல் 710 வாக்கில் இஸ்லாத்தின் தாக்குதல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் மதம் மாற்றப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மலைகள், காடுகள் போன்ற மறைவிடங்களில் வாழ்ந்தனர்.
  4. சோழர்கள் காலம் (13ம் நூற்றாண்டு வரை) வரையில் அவர்களால் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்த முடியவில்லை.
  5. அவர்கள் இந்துக்கள் பற்றி எதிர்மறையான விசயங்கள் தெரிந்து வைத்திருப்பதால், அடிக்கடி விமர்சித்தில் ஈடுபடுகிறார்கள்.
  6. ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு, இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.
  7. துருக்கியர் முகமதியர், முசஸமான், முஸ்லிம் என்ற வார்த்தைகளுக்கு உள்ள வேறுபாடு தெரியாது.
  8. உருவ வழிபாடு பற்றி இந்துக்களை அதிகமாக விமர்சிப்பார்கள். ஆனால், அவர்களது உருவ வழிப்பாட்டை பற்றி அப்படியே மறைத்து, மற்றவர்களை குறைகூறுவார்கள்.
  9. பௌத்தம் மத்திரதரைக்கடல் நாடுகளில் அதிகமாகப் பரவியிருந்ததால், அதன் தாக்கம் கிருத்துவம் ,மற்றும் இஸ்லாம் இரண்டின் மீதும் அதிகமாக இருக்கும்.
  10. பௌத்தம் ஏற்கெனவே, இந்துமதத்தில் உள்ளவற்றை தலைகீழாக மாற்றியுள்ளதால், இஸ்லாத்தில் அத்தகைய பழக்க-வழக்கங்களை எளிதாக அறிந்து கொள்ளமுடிகிறது.

எனவே இப்பொழுதுள்ள இந்துக்கள் தங்களது மதநூல்களை படிக்க வேண்டும் , பிறகு வ்அவர்கள் மதநூல்களை படிக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுடன் சரியானபடி உரையாடல் நடத்த முடியும்.

 

© வேதபிரகாஷ்

30-11-2017

Sri Lankan Arabic inscription- clearly made from Hindu sculpture

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)

Goods, items mentioned with Tulukka

துலுக்கர் என்ற அடைபொழியில் வழங்கும் சொற்கள்[1]: இன்னும், இந்த துருக்கர்”, துலுக்கர்” என்ற சொற்களை வேராகக் கொண்டு பல புதிய தமிழ்ச் சொற்கள் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளன அவை :

துருக்கம் – செல்லுதற் கரிய இடம், காடு, மலையரசன்

துருக்கம் – கஸ்துாரி, குங்குமம்

துருக்க வேம்பு – மலை வேம்பு

துருக்கற்பொடி – செம்பிளைக் கற்பொடி

துருக்கமாலை –  குங்கும மலர்மாலை

துருக்கத்தலை –கரு நிறமுள்ள கடல் மீன் வகை

துலுக்கி – சிங்காரி

துலுக்கடுவன் – ஒருவகை நெல்

துலுக்கப்பூ – துலுக்கச் செவ்வந்தி

துலுக்க மல்லிகை – பிள்ளையார் பூ என வழங்கப் படும் மலர், செடி

துலுக்க பசளை –  கீரை வகை

துலுக்க பயறு – பயறு வகை

துலுக்க கற்றாழை – கரிய பவளம் (நாட்டு மருந்து)

மற்றும், துருக்கர்நாடு’ என்ற நிலக்கூறு இருந்ததை பதின்மூன்றாவது நூற்றாண்டு இலக்கிய கர்த்தாவான பரஞ்சோதி முனிவர், தமது திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ளதும் இங்குபொருத்தமுடையதாக உள்ளது[2]. மற்றும், தமிழில், ஷர்பத், சிப்பாய், மணங்கு, தர்பார், தைக்கா, வக்கீல், அமீர், உலமா, காஜி, ஜாகிர், ஜமீன்தார் போன்ற துருக்கி மொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களாக வழக்கிற்கு வந்துள்ளன.

Engraving of Tamil calendar for prayer found inside the mosque -as claimed

நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள் து, துருக்கர், துலுக்கர், துலுக்கி – பற்றி சொல்வது: இனி நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள், இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதனை பார்க்கலாம்.

  1. “து” என்றாலே “வெறுப்பு” என்பதால், வெறுப்பை வெளிப்படுத்தும் சொற்களுடன் வருகிறது (துப்பு, துவேசம், துவர்ப்பு, முதலியன).
  2. துக்கம், துச்சம், துணுக்கம் (அச்சம், பயம், திகில், பீதி), துண்ணிடல் (திடுக்கிடல், பயமுருத்தல்),
  3. துத்து (பொய், ஏமாற்றுதல்), துப்பு, தும்பன் (கெட்ட எண்ணம் கொண்டவன்), துயர், துயரம்,
  4. துணக்கம் (திடுக்கிடுதல், பயமடைதல், பீதியடைதல்), துணுங்கர் (தீய காரியங்களால் அத்தகைய நிலையை ஏற்படுத்துபவர்கள்). திருஞானசம்பந்தர் இதனை ஜைனர் மற்றும் பௌத்தர்களுக்கு உபயோகப்படுத்தினார்.
  5. துர (செலுத்து, ஓடி போதல்), துரக்கம் (குதிரை), ரத-கஜ-துருக்க-பதாதி என்பதிலிருந்தும் அறியலாம்.
  6. துருக்கம் (காடு, பாலைவனம், குழப்பம்),
  7. துருக்கு, துலுக்கு (துருக்கி நாடு, துருக்கியர், துருக்கி மொழி, முகமதியர்)
  8. துர் (எதிர்மறை உண்டாக்கும் சொற்களுக்கு முன் வருவது) துர்மார்க்கம், துராச்சாரம், துராசை, துர்க்குணம், துர்புத்தி, துர்மரணம், முதலியன.
  9. துர்க்கம் (கோட்டை)
  10. துலுக்கு (முகமதியன், பாஷை, பேச்சு, ஆட்டுதல், ஆடுதல், தலையை-உடலை ஆட்டிக் கொண்டு நடத்தல், “துலுக்கி-துலுக்கி” நடத்தல், ”அவ்வாறு செய்யும் பெண் துலுக்கி எனப்பட்டாள்)
  11. துலுக்கி (சிருங்காரி, மயக்கி, மயக்கும் பெண், துலுக்கர் பெண்களை வைத்து மயக்கியதால், அத்தகைய பெண்கள் அவ்வாறே அழைப்பட்டனர்)

இவற்றிலிருந்து அச்சொற்கள் எல்லாமே, எதிர்மறையான, ஒவ்வாத, தீய, கொடிய, திகில்-பீதி-பயங்கரம் முதலியவற்றைக் குறிப்பதாகவே உள்ளது. அதாவது, அத்தகைய கொடிய-குரூர-பீதியைக் கிளப்பும் மக்களைக் குறிக்க பிறகு உபயோகப்படுத்தப் பட்டது தெரிகிறது. மேலும், இவையெல்லாம் பொது வழக்கில் இருந்ததால், 60 ஆண்டுகள் வரையிலும் இருந்ததால், அவற்றின் தாக்கத்தை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

Yagaush yamuhyidheen- temple converted-front

சீனப் பொருட்கள் போலத்தான் துலுக்கப் பொருட்களும்: பெரும்பாலும் அரேபியர், துருக்கர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விசயமே. அவர்கள் குறிப்பிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்றதால், அவர்கள் பெயரில் அப்பொருட்கள் அறியப்பட்டன. சீனப்பொருட்கள் எப்படி, சீனா பீங்கான், சைனா பொம்மை, சீன படிகாரம், சீன சுண்ணாம்பு……என்றெல்லாம் அழைக்கப்பட்டனவோ, அதுபோல, அவையெல்லாம், துலுக்கர் / துலுக்கன் / முஸ்லிம் பொருட்கள் என்று சொல்ல முடியாது. இன்றும் கற்பூரம், பன்னீர், சந்தனம், ரோஸ் வாட்டர், சமித்துகள், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜைப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை முஸ்லிம்கள் தான் அதிகமாக கடைகள் வைத்து விற்கிறார்கள். ஆனால், அவற்றை, துலுக்க சந்தனம், துலுக்க கற்பூரம், துலுக்க பன்னீர், துலுக்க சமித்து, துலுக்க சாம்பிராணி, துலுக்க வெற்றிலை, துலுக்க பாக்கு, துலுக்க ஜவ்வாது……………………..என்றெல்லாம் பெயர் வைத்து விற்பதில்லை.  அதாவது, துலுக்கராக / முஸ்லிமாக இருந்தும், தங்களது அடையாளங்களை அமுக்கி வாசித்தும், மறைத்தும் தான் வியாபாரம் செய்கின்றனர் என்பதுதான் நிதர்சனம், உண்மை. ஆனால், பெருமையாக, தங்களை வெளிப்படுத்திக் கொண்டு அப்பொருட்களை அவ்வாறு விற்பதில்லை. துலுக்கர் என்பது பெருமையான பெயர், பிரயோகம் என்றால், இன்றும் தாராளமாக வெளிப்படையாக உபயோகிக்கலாம்.

Tuluka nachi added in Ramanuja film 2013

ஶ்ரீரங்கத்தில் ஒரு  துலுக்கநாச்சியார் / பீவிநாச்சியார்: 2013ல் ஶ்ரீநாமானுஜர் திரைப்படம் விசயத்தில், சரித்திர ஆதாரம் இல்லாத “துலுக்க நாச்சியார்” விசயத்தையும் இதில் சேர்த்துள்ளனர்[3]. “ ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள். பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும் முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல் பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம் இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் நடந்துவருகிறது.       துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை பெறுகிறார்.” என்றெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன[4]. ஆனால், இதற்கு ஆதாரங்கள் எவையும் இல்லாமல், வாய்வழி வந்தவை பிறகு எழுதி வைத்ததாகத் தெரிகிறது[5].  இஸ்லாமியர்களுக்கு உருவ வழியாடு இல்லை என்பதால் இந்தச் சந்நிதியில் துலுக்க நாச்சியார் வண்ணச் சித்திரம் மட்டுமே இருப்பதைப் பார்க்கலாம்[6], என்கிறது ஒரு இணைதளம்.

 

© வேதபிரகாஷ்

30-11-2017

Kilakkarai temple converted into mosque

[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.

[2] பரஞ்சோதிமுனிவர் – திருவிளையாடற்புராணம்-மாணிக்கம் விற்ற படலம். பாடல் : எண் 65,

[3] https://evilsofcinema.wordpress.com/2014/02/07/ramanuja-filming-adding-controversies-in-incorporating-myths/

[4] http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=3

[5] 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு, ஆசிரியர்:
டாக்டர். வைணவச் சுடராழி, ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி; http://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584

[6]http://thtsiteseminars.wordpress.com/2013/04/04/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)

Tuluka in inscriptions- Tamilnadu

கல்வெட்டுகளில் துருக்கர் / துலுக்கர் பிரயோகம்; துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளைடைவில் துதக்கர் – எனவும் மருவி வழங்கியுள்ளது[1] என்று சிலர் விளக்கம் அளித்தாலும், எந்த இடத்தில், காலத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று கவனிக்க வேண்டும். இந்தச் சொல் வடமொழி, தெலுங்கு, இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் ‘துருஷகா / துருஷ்கா” என பயன்படுத்தப்பட்டு உள்ளது.

  1. “மேத்த சனி கார துலுஸ்க தானுஸ்க,’’ என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும்[2].
  2. விஜய நகர மன்னர்களுக்கு [1336-1646] ‘துலுக்க மோகந் தவிழ்ந்தான்’ ‘துலுக்க தள விபாடன்’ என்பனவும், அவர்கள் விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரிய வருகிறது[3].
  3. வீரபாண்டிய தேவரது [1309-1345] நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, “கிழக்கு புரட்டலுக்கு மேற்கு, துலுக்கன்பட்டி நேற் மேற்கு,” என வரையறுத்துள்ளது[4].
  4. கொங்குநாட்டில், துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்துவிட்டதை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது.
  5. மற்றும் தாராபுரம் கல்வெட்டு துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாமலாகிவிட்ட[5]….’ என்ற 14வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும்
  6. முன்னாள் ராஜராஜன் பூரீ.சுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில் … …” என்ற திருக்களர் கல்வெட்டும்[6]:
  7. “துலுக்கர் பலசேமங்கள் தப்பித்து ….” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும், துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டு காட்டுகின்றன.

Tulukka patti, kulam, kurichi etc

துலுக்கப்பட்டிகள் / துலுக்கர் வாழ்ந்த இடங்கள்: இன்றைக்கும் தமிழ்நாட்டில், சில பகுதிகளில் உள்ள சிற்றுார்கள் “துலுக்கர்’ குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவைகளின் ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. அவை,

  1. துலுக்கபட்டி – வில்லிபுத்துர் வட்டம்
  2. துலுக்கபட்டி – சாத்துரர் வட்டம்
  3. துலுக்கபட்டி – விருதுநகர் வட்டம்
  4. துலுக்கன் குளம் – நெல்லை வட்டம்
  5. துலுக்கன் குளம் – ராஜபாளையம் வட்டம்
  6. துலுக்கன் குளம் – அருப்புக்கோட்டை வட்டம்
  7. துலுக்கன் குறிச்சி – முதுகுளத்துார் வட்டம்
  8. துலுக்க முத்துார் – அவினாசி வட்டம்
  9. துலுக்க மொட்டை – கோவை வட்டம்
  10. துலுக்க தண்டாளம் – காஞ்சி வட்டம்

Horses imported Vijayanagar

பதவிகளில் இருந்த துருக்கர் / துலுக்கர் / நாயக்கத் துருக்கர்: பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்துளர் கல்வெட்டில் துலுக்கராயன் குழி’ என்ற நில அளவை குறிப் இடப்பட்டுள்ளது[7]. இதிலிருந்து துலுக்கர்களில் சிறப்புடையவரன் ..துலுக்கராயன்’ என அழைக்கப்பட்டாரன் என்பது புலனாகிறது என்று கமால் கூறுகிறார். ஆனால், இடைக்காலத்தில், இந்து அரசர் ஆண்ட காலத்தில் ராணுவங்களில் கூட துருக்கர் / துலுக்கர் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். அதனால், அவன், நாயக் என்ற பதவியை அடைந்தபோது, துலுக்க நாயக் என்றழைக்கப் பட்டான் என்பதில் எந்த வியப்பும் இல்லை. மேலும், தமிழகத்தில் இந்த துலுக்கர்களது குடியிருப்பை குறிக்க துலுக்காணம் என்ற புதிய சொல் வழக்கில் வந்துள்ளது. இந்தச் சொல்லும் அதே 12ம் நூற்றாண்டில் உருவானதாக இருக்கவேண்டும். “துலுக்காணம்”  என்ற பெயரில் இன்றும் தனி நபர்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள். திரிகடராஜப்பகவிராயரது திருக்குற்றாலக் குறவஞ்சியிலும்[8], இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி பற்றிய வண்ணத்திலும்[9]‘ இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. இத்தகைய துலுக்காணத்தில் இருந்த நாயக்கர் ஒருவரது பெயரில் இந்தச் சொல் ஒட்டிக் கொண்டுள்ளதை பதினாறாவது நூற்றாண்டு கல் வெட்டு செய்திகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெயர் ஏரமஞ்சி துலுக்கான நாயக்கர் என்பதாகும். இவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். அதன் காரணமாக சேலம் ஆறகழுர் வட்டம் பணத்தளை என்ற ஊர், ”துலுக்கான நாயக்கர் பேட்டை” என்ற புதுப் பெயருடன் வழங்கப்பட்டது[10].

Horses imported Vijayanagar-Persian trader

துலுக்காணம், துலுக்காயம், துலுக்க ராஜ்யம் முதலியன; இவை போன்றே துலுக்கரது ஆட்சியைக் குறிக்க துலுக்காணியம்’ என்ற புதுச் சொல் உருவாக்கப்பட்டது. பதினான்காவது நூற்றாண்டில் மதுரையைச் ஆட்சி செய்த மதுரை சுல்தான்களின் ஆட்சியை துலுக்கானியமாக இருந்து” என மதுரைத் தல வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது[11]. காளையார் கோவிலில் உள்ள கி.பி. 1532 ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, தமிழகத்தில் நிலவிய துலுக்கர் ஆட்சியை துலுக்க அவாணம்’ துலுக்க அவாந்தரம்” எனவும் குறிப்பிடுகிறது[12]. இன்னும், ‘துருக்கர் ராச்சியமாய் பல சேமங்கள் தப்பித்து’ என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும்[13]. துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டுகின்றன.

Madurai sultanate

துலுக்கு-தீய செயல் செய்யும் இந்துவையும் குறித்தது: இன்னும் ‘துலுக்கர் இனத்தைக்” குறிப்பிட, “துலுக்கு’ என்ற சொல் கூட கையாளப் பட்டுள்ளது. வடவிந்தியாவைப் போல, கொடுமைகளை செய்பவரை, துலுக்கன் என்று உருவகமாக குறிக்கப்பட்டதும் தெரிகிறது. திருவிழிமழலை திருக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் புரிந்த அட்டுழியத்தை தத்துவப் பிரகாசர் என்ற புலவர், விஜயநகரப் பேரரசருக்கு ஒரு செய்யுள் மூலமாக தெரிவித்தார்.

ஊழித் துலுக்கல்ல, ஒட்டியான் துலுக்குமல்ல

வீழித்துலுக்கு வந்துற்றதே … … …'”[14]

என்பது அந்தக் கவியின் பகுதியாகும். இவ்விதம் துலுக்கர் என்ற சொல், “துலுக்கு’ என மருவி பிற்காலத்தில் மலுக்கு’ என்று கூட பிரயோகம் பெற்றிருப்பதைப் பல நூல்களில் காணலாம். இல்லை, இதனை, துலுக்கர் கோவிலுக்கு எவ்விதமாக இடித்தல், கொள்ளையடித்தல் போன்ற அட்டூழியங்களை செய்வதால், அத்தகைய அநியாயங்களை செய்பவர்களையும், அவ்வாறே குறிப்பிட்டனர் போலும். இக்காலத்தில் நாத்திகர் போர்வையில் திராவிட ஆட்சியாளர்களும், துலுக்கர் போலவே கோவில்களைக் கொள்ளையடித்து வருவதாலும், அவர்கள் துலுக்கருடன் அந்நியோன்யமாக இருப்பதாலும், அவர்களும் அவ்வாறே கருதப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயமாகிறது. கருணாநிதி, ஸ்டாலின் போன்றோரது இந்து-விரோத செயல்களும் மக்களால் அறியப்பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

30-11-2017

Madurai sultanate-coins issed

[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.

[2] தென்னிந்திய கோவில் சாசனங்கள் எண் 309AD-2949-1 தாராபுரம்

[3] சுப்பிரமணியம் பூ – மெய்கீர்த்திகள் (1885) பக் 294-95 கணோச 68/D – 2871

[4] தென்னிந்திய கோயில் சிலாசாசனங்கள் (l) தொகுதி சாசனம் பக்கம் 309/D2949 – 1.

[5] A. R. 642/1902 திருக்களர்

[6] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி – – எண். 523. பக்கம். 82-17

[7] வள்ளியம்மை – திருப்புத்துரர் (1981) பககம் 17

[8] மக்கம், மராடம், துலுக்காணம், மெச்சி குறமகளும் … பாடல் எண் 63-1 திரிகூடராசப்ய கவிராயர் – திருக்குற்றால குறவஞ்சி

[9] வழுமன் மரகதர், துலுக்காணர், சோழர் …” திருமலை ரகுநாத சேதுபதி வண்ணம் (செந்தமிழ் தொகுதி)

[10] A. R. * 4O9, 406 | 1913.

[11] மதுரைத்தல வரலாறு – (மதுரை தமிழ் சங்க பதிப்பு

[12] A. R. 587 / 1902

[13] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி 1.L.R. 52, திருவொற்றியல்.

[14] பெருந்தொகை : மதுரை தமிழ் சங்கப்பதிப்பு (1935) பாடல் எண் 1638