Archive for the ‘தி இந்து’ category

“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

மே 6, 2018

தலித்முஸ்லிம்மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

Dalit-muslim clash near Theni, The Hindu 06-05-2018

தேனி சுற்றியுள்ள பகுதிகளில்இருதரப்புமோதல்கள் என்பது, அவ்வப்போது, செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன: ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்[2]. டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசினர்[3]. இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டன. தெருவிளக்குகள் உடைந்தன.. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்[4].ஜனவரி 16-01-2018 அன்று தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது[5]. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்[6]. போலீஸாரைத் தாக்குதல், பெட்ரோல் குண்டுகள் வெடிப்பது, பொங்கலை அடுத்து கலவரங்கள் ஏற்படுத்தல் என்பன, ஒரு திட்டமிட்ட போக்கை எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாக அதில் எஸ்.சிக்களுக்கு பங்கில்லை.

Periyakulam, Muslims attack Hindu houses-news cutting english

ஏப்ரலில் [24—004-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதெல்லாம் கிராமங்களில் அனுசரித்து நடந்து கொள்ளும் பழக்க-வழக்கங்கள் ஆகும். இவரது உடலை மயானத்திற்கு “முஸ்லிம் தெரு” வழியாக எடுத்து செல்லும்போது, முஸ்லிம்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு, சமரசம் செய்தலால், இறுதி சடங்கு நடத்தி முடிக்கப் பட்டது[8]. முதலில் தெருவுக்கு “ஜாதி” பெயர் இருக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் போது, “முஸ்லிம் தெரு” என்று பெயர் உள்ளதே வகுப்புவாதத்தை வளர்க்கும் கோஷ்டிகள் அங்கிருப்பது தெருகிறது. அதே போல “காலனி தெரு” என்று குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சடங்கு நடந்த பிறகு, இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது[9].  இறப்பு முதல்லிய சடங்குகளில் முகமதியர் அந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கக் கூடாது. அமைதியாக இருந்திருந்தால், சாதாரண பிரச்சினை, இவ்வாறான மோதல்-கலவரத்தில் முடிந்திருக்காது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு, 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது[10].

Periyakulam, Muslims attack Hindu houses-6

மே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்க்ம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது[11]. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவற்றை இவ்வீடியோவில் காணலாம்[12].

Periyakulam, Muslims attack Hindu houses-2

சமதர்மம், சமத்துவம் பேசினால் மட்டும் போறாது, கடைப் பிடிக்க வேண்டும்: சமரசப் பேச்சிற்குப் பிறகும், எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது[13]. மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[14]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, பலர் ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. ஏப்ரலில் தொல்.திருமாவளவனின் படம் தாக்கப்பட்டதிலிருந்து, இருதரப்பினருக்கும் விரோதம் இருப்பதாக, உள்ளூரில் சொன்னதாக, “தி இந்து” குறிப்பிடுகிறது[15]. “மனித நேயம்” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொள்வது, மேடைகளில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் இருந்து, நடப்பு வாழ்க்கையில், இவ்வாறு பிணம் விசயத்தில் கூட, கொடூரமாக நடந்து கொண்டது, திகைப்பாக இருக்கிறது. செக்யூலரிஸ நாட்டில், இந்தியர், எங்கு வேண்டுமானாலும், வீடு வாங்கலாம், வாழலாம், என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும் போது, இவ்வாறு, “எங்கள் தெருவுக்கு வராதே……” என்ற நிலை இருப்பது, சமதர்மம் ஆகாது. “தலித்-முஸ்லிம் மோதல்”, தேனி அருகில் – தி இந்து – அடித்தது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய், செக்யூலரிஸப் பழமாக அழுகிய செய்தியைக் கொடுத்துள்ளது! ஏனெனில், “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படி கூடாது என்றாலும், உபயோகித்தது மற்றும் இதுவரை “இரு பிரிவினர் மோதல்” என்று தலைப்பிட்டு, யார்-யார் மோதிக்கொண்டார்கள் என்று மறைக்கும் நிலையில், அவ்வாறு குறிப்பிட்டு, தலைப்பிட்டு போட்டுள்ளது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், “தி இந்து” அவ்வாறு செய்யாது, ஆனால், இப்பொழுது செய்துள்ளது. எனவே இதன் பின்னணி என்ன என்பதும் ஆராய வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

05-05-2018

Periyakulam, Muslims attack Hindu houses-5

[1] புதியதலைமுறை, தேனி அருகே இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: கலை நிகழ்ச்சியின் போது வன்முறை, Web Team, Published : 18 Jan, 2016 01:21 pm

[2] http://www.puthiyathalaimurai.com/news/districts/463-clash-between-two-groups-in-theni.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்பெட்ரோல் குண்டு வீச்சு! – வீடியோ, Posted By: Suganthi Published: Wednesday, April 12, 2017, 10:47 [IST]

[4]  https://tamil.oneindia.com/news/tamilnadu/auto-drivers-throw-petrol-bomb-theni-279543.html

[5] தினகரன், தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது, 2018-01-17@ 08:35:34

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367818

[7] தினகரன், தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு, 2018-05-06@ 02:24:15.

[8] According to the police, when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. They chose the new route as there was another death ritual going on in their regular route. When the procession entered the Muslim Street, some residents protested and a minor clash followed. The police pacified both sides and the Dalits managed to complete the funeral that day. Later, the village witnessed minor skirmishes between the two groups.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-muslim-clash-near-theni/article23791161.ece

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=399384

[10] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு, Posted By: Hemavandhana Published: Sunday, May 6, 2018, 10:47 [IST]

[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/car-vehicles-were-set-on-fire-riots-near-periyakulam-318931.html

[12] தேனி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: போலீசார் ,Published on May 5, 2018; https://www.youtube.com/watch?v=RX_wlPP3bO8

[13] தினமணி, பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்: வீடுகள், வாகனங்களுக்கு தீவைப்பு: 20 பேர் கைது, By DIN | Published on : 06th May 2018 09:16 AM

[14] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2914420.html

[15] The locals said the two groups had been harbouring enmity against each other ever since a portrait of VCK leader Thol. Thirumavalavan was damaged last month.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/clash-between-dalits-and-muslims-near-theni/article23789937.ece?utm_source=tp-tamilnadu&utm_medium=sticky_footer

“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] – “தி இந்துவை” தொடர்ந்த என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016)!

பிப்ரவரி 6, 2016

உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] – “தி இந்துவைதொடர்ந்த என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016)!

NDTV - The Hindu secukar nexus operating

என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd[1] என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது[2]. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது. தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. அந்நிலையில் தினத்தந்தி நிர்வாகம் அதனை வாங்கி, ஏப்ரல் 14ம் தேதி 2012 தமிழ்புத்தாண்டு முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. அதாவது அளவுக்கு அதிகமாக பிரச்சார ரீதியில் செயல்பட்ட அச்செனல் மக்களிடம் எடுபடவில்லை. இருப்பினும், இவ்விரண்டும் பிரச்சார பீரங்குகளை முடுக்கிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  பொதுவாக இவ்வூடகங்கள் இந்திய நலன்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதும், கருத்துருவாக்கம் புனைவதும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

Lions Of India - Usood ul Hind - The Mujahideen of Ansar ut Tawheed For Hind

உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016):  31-01-2016 அன்று, என்.டி.டிவி செனலில் “உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்ற நிகழ்ச்சியை ஒலி-ஒளிபரப்பியது[3]. சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் இதை விவரிக்கின்றனர். “இதுவரை ஐசிஸ்ஸின் இந்தியாவின் மீதான அச்சுருத்தல் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐசிஸுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில், ஒருசிலரே அதனுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கடந்த வாரத்தில் 14 பேரை கைது செய்துள்ளதால், இந்தியா அதற்கான ஆதாரத்தைப் பெற்று விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது”. இந்தியாவில் இத்தனை வெடிகுண்டுகள் வெடித்தும், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாகக் கொலையுண்டும், இன்னும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாக கை-கால்கள் இழந்து படுகாயம் அடைந்தும், இன்று வரை அந்த பீதி, கலவரம், மனப்பிராந்தி, மனவுலைச்சல் முதலியவற்றிலிருந்து விடுபட இயலாமல் அவதியுற்று இருக்கும் நிலையில், இவர்களது முகாந்திரம், ஏதோ தீவிரவாதத்தை ஆதரிப்பது போலிருந்தது. நடுநடுவே, அஜய் சஹானி [Ajai Sahni, Executive Director, Institute for Conflict Management, Delhi] பர்வீன் ஸ்வாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் [Prveen Swami, National Editor, Strategic & nternational Affairs, Indian Express] இவர்களின் கருத்துகளைக் கேட்பது போல காண்பிட்தாலும், அவர்கள் சொன்ன முழு கருத்துகளை போடாமல் மறைத்திருப்பது தெரிகிறது.

Mumbai blast victims - none bothers about their rightsஎன்டிடிவியின்எடிட்செய்யப்பட்ட, தீவிரவாதஆதரவு நிகழ்ச்சி: அஜய் சஹானி என்பவர், “இவர்கள் எல்லோருமே தீவிரவாத சித்தாந்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அவர்களது தலைவர்கள் இங்கும், பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள்”, என்று சொல்லி முடிக்கும் முன்னரே கட்டாகி விடுகிறது. இதிலிருந்து, அவர் மேலே சொன்னது இவர்களுக்கு சாதகமாக இல்லை என்றாகிறாது. உடனே சீனிவாசன் தோன்றி, இதற்கெல்லாம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றனர், கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே, கொடுத்துள்ள வாக்குமூலம் வழியாகத்தான் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன. பதிலுக்கு, பர்வீன் சுவாமி “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாம் தான் எந்த அளவிற்கு சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது”, என்றார். பல இடங்களில் குற்றஞ்சாட்டப்படுவதற்கேற்றபடியான, ஆவணங்கள், ஆதாரங்களை வைத்துதான், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இல்லையென்றால், அவர்கள் பெயர்கள், விவரங்கள் எப்படி தெரிய வரும்?

செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப்புகள் போன்றவை அதிகமாக வைத்திருந்தால் தீவிரவாதிகளாகி விடுவார்களா?: சபி அஹமது என்கின்ற யூசுப் அல்-ஹிந்தி, பட்கல், இவர்களின் இணைப்பாளனாக உள்ளான். இவன் இந்தியன் முஜாஹித்தீனின் பிரிவின்  தலைவனாக உள்ளான். இது அல்-குவைதாவின் பிரிவும் ஆகும். என்.ஐ.ஏ கீழ்கண்டவற்றை கைப்பற்றியுள்ளனர்:

  1. 45 செல்போன்கள்.
  2. 29 சிம் கார்டுகள்
  3. 9 லேப்டாப்புகள்
  4. 3 ஹார்ட்-டிரைவ்
  5. 3 பென் ட்ரைவ்

இதிலுள்ள விவரங்களை வைத்து மற்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்று தீர்மானித்து விடமுடியுமா என்று சீனிவாசன் கேட்பது வியப்பாக உள்ளது. அதற்கு ஒத்து ஊதுவது போன்று, மனஸ் ரோஷன், ஆகையால் தான் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளன, என்பது அதை விட வேடிக்கையாக இருக்கிறது. பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட், குச்சிகள் மற்ற ரசாயனப் பொருட்கள் [Potassiium Chlorate, Potassium Nitrate, sticks and other chemicals] வேடிக்கைக்காக வைத்திருந்தார்களா? முஸ்தாக் செயிக் வெடிகுண்டுகளைத் [Improvised expolosive devises (IED)] தயாரிக்கக் கட்டளையிட்டான். என்.ஐ.ஏ இவற்றையும், டைமர்களையும் மும்பை மற்றும் ஹைதராபாத் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கைப்பற்றியது[4]. 31-01-2016 அன்று சாகர், மத்திய பிரதேசத்தில் 132 டிடோனேடர்கள் உடபட்ட 1,000 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன[5]. ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் ஜிஹாதி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன[6]. ஒருவன் எதற்காக பத்திற்கும் மேலாக செல்போன்கள், சிம்கார்டுகள் முதலியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்? வைத்துக் கொண்டு சிரியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் உள்ளவர்களிடம் ஐசிஸ் பற்றி பேசவேண்டும்? இத்தனை உபகரணங்களை வைத்துக் கொண்டு, ஐசிஸ் தொடர்பாளர்களுடன் பேசியது முதலிய விவரங்கள் விளையாட்டிற்காக செய்யப்பட்டது போல அவர்கள் பேசுவது கேவலமாக இருக்கிறது.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பவர்களைக் கண்டிக்க வேண்டுமே தவிர ஆதரிக்கக் கூடாது: இந்திய முஜாஹித்தீன் எப்படி வெடிகுண்டுகளைத் தயாரித்தது என்பது நன்றகவே தெரியும். பிறகு முன்றாண்டுகளாக இவர்கள் ஐசிஸ் தொடர்புகளுடன், இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்க சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன்களுக்கு தெரியாயமலா இருக்கும்? சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அங்கங்கு செல்கிறார்கள். ஆனால், 14 பேர்களையும் நாங்கள் சந்திக்க முடியவில்லை, என்று ஒப்புக் கொள்கிறார்கள். என்.ஐ.ஏவில் இருப்பவர்களை, இவர்கள் என்ன பேட்டிக் காண்பது? இவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்றால், முன்னமே வந்து அறிவுரை சொல்லியிருக்கலாமே, அல்லது கவுன்சிலிங்கிற்கு அனுப்பியிருக்கலாமே? இப்பொழுது, இவர்கள் போலீஸாருக்கு, என்.ஐ.ஏவுக்கு அறிவுருத்துவது, ஆலோசனைக் கூறுவது தமாஷாக இருக்கிறது. மேலும், அவர்களது பெற்றோர், மற்றோர்களுக்கு எங்கு புத்தி போயிற்று? தங்கள் மகன்கள், மகள்கள் இவ்வாறு செய்து வருவதைக் கண்டிருத்து இருக்கலாமே, ஏன் தடுத்திருக்கலாமே? மனைவி-மக்களுடம் ஒழுங்காக வாழப்பா என்று மாமனார்-மாமியார் கூட கெஞ்சியிருக்கலாமே?

மௌலானா மோயின் கான், ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார்: முப்ரா என்ற இடத்திற்கு சென்ற போது, இப்படி கமென்ட் அடிக்கிறார்கள். பொதுவாக மும்ப்ராவில், முஸ்லிம்கள் போலீஸுக்கு எதிராகத்தான் ஆர்பாட்டங்கள் நடத்துவார்கள், ஆனால், இப்பொழுது ஐசிஸ்ஸுக்கு எதிராக நடத்தியுள்ளார்கள் என்று காண்பிக்கப்படுகிறது. மௌலானா மோயின் கான், ஜாமியா காத்ரியா அஸ்ரபியா மத்ரஸா, மும்ப்ரா, மும்பை, ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஐசிஸ்ஸுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிறகு, மேலே எழுப்பியுள்ள கேள்விகள் இங்கும் பொறுந்துகிறது. பெற்றோர், உறவினர், நண்பர்கள், மற்றவர்கள் தங்களது கடமைகளினின்று தப்பிக்க முடியாது. அவர்களது நடவடிக்கைகளை அறிந்தும் அமைதி காத்திருக்கிறார்கள், ஆதரித்திருக்கிறார்கள் என்றாகிறது.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] Media group New Delhi Television Ltd (NDTV) and Kasturi and Sons Ltd (publisher of The Hindu newspaper) are selling their two-year-old joint venture Metronation Chennai Television Ltd that runs the city-based English news channel, to Educational Trustee Company Pvt Ltd, for Rs 15 crore.

http://in.reuters.com/article/idINIndia-59798520111010

[2] http://www.ndtv.com/convergence/ndtv/corporatepage/ndtv_hindu.aspx

[3] http://www.ndtv.com/video/player/truth-vs-hype/truth-vs-hype-of-isis-indian-franchise/401485

NT-TV, Truth Vs Hype Of ISIS’ Indian Franchise, PUBLISHED ON: JANUARY 31, 2016 | DURATION: 22 MIN, 22 SEC

[4] http://economictimes.indiatimes.com/news/defence/arrested-islamic-state-men-were-using-matchsticks-to-make-bomb/articleshow/50799696.cms

[5] Three men arrested with 1000 kg explosives, 132 detonators in Madhya Pradesh, Besides the massive haul of explosives, around 132 detonators and other materials were also seized by the police. Meanwhile, the questioning of the three men is underway. Further details awaited.

http://www.dnaindia.com/india/report-three-men-arrested-with-1000-kg-explosives-132-detonators-in-madhya-pradesh-2172232

[6] Other than Mushtaq among those arrested include Mohammad Nafees Khan of Mohammad Shareef Mounuddin Khan from Hyderabad, Najmul Huda of Mangalore and Mohammad Afzal of Bengaluru. NIA and central agency sleuths seized 42 mobile phones, including eight from ‘amir’, sources said.  Explosive material, detonators, wires, batteries and hydrogen peroxide besides ‘jihadi literature’ was also seized from those arrested.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3412561/India-s-Islamic-State-crackdown-NIA-pounces-14-desi-terror-recruits-attempt-procure-improvised-explosive-device.html