Archive for the ‘திருப்பரக்குன்றம்’ category

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

திசெம்பர் 7, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

Sikandar Dragah - Tirupparangundram.entrance

லண்டனில் வழக்கு: தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sikandar mosque - Tirupparangundram

ராஜகோபால் உயிர்த் தியாகம்: ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால்,  திருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.

 Sikander Dargah, 2014 HC stayed, The Hindu 04-12-2014

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.

Sikandar mosque claim

ஹிந்து முன்னணி தொடர் போராட்டம்: ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Sikandar Dragah - Tirupparangundram.sign board

ஆகஸ்ட் 2017ல் நீதிமன்ற உத்தரவு[1]: அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,’கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நிறுத்தப் பட்டது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்[2].  இது, சுல்தான் சிக்கந்தர் அவூலியா தர்காவிற்கு [Sulthan Sikkandhar Avulia Dargha] அருகில் உள்ளது. போலீஸார் மற்றும் கோவில் நிர்வாகம், அவ்வாறு அனுமதி அளித்தால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் கலவரம் ஏற்படும் என்று தெரிவித்து அனுமதி மறுத்தனர். எந்த தனி இயக்கமும், அத்தகைய உரிமையைக் கோர முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்[3]. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், மதுரையில் மதவாதப் பிரச்சினையுள்ளதால், அங்கு விளக்கேற்ற அனுமதி கொடுக்க முடியாது, மாறாக, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் விளக்கேற்றலாம் என்றும் கூறினார். தனிநீதிபதநெம். வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார்[4]. இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு[5]: “சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்,”என்றனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, எனும்போது, அறநிலையத் துறை எவ்வாறு அந்த சமாதியை / தர்காவை அனுமதித்தது என்று தெரியவில்லை.

Tirupparangundram - 2012 position - TOI

இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது.  சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது.  இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

06-12-2017

Sikandar Dragah - Tirupparangundram.1805

[1] தினமலர், கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.01, 2017. 00:56.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1824074

[3]  The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday. Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said. According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition. On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department.

 

The Hindu, HC says no to lighting Mahadeepam close to Dargah, Mohamed Imranullah S., MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST, UPDATED: APRIL 07, 2016 02:52 IST.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[4] He said that the High Court too had recognised the right way back in 1996 itself. Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also. However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[5] http://www.dinamalar.com/district_detail.asp?id=1824074&dtnew=8/1/2017&Print=1

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: திருப்பரங்குன்றத்தின் மீது தர்கா உண்டானது, தீபம் ஏற்றுவது தடைப் பட்டது (3)

திசெம்பர் 7, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: திருப்பரங்குன்றத்தின் மீது தர்கா உண்டானது, தீபம் ஏற்றுவது தடைப் பட்டது (3)

Ibn Battuta, traveller

துருக்கரின் குரூர மாபாதக செயல்கள்இபின் பதூதாவின் புத்தகத்தின்படி[1]: இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான். தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான். கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது.

What mohammedan rule brought to Madurai

மதுரை சூரையாடியதைப் பற்றி கங்காதேவியின் விளக்கம்[2]: கங்கா தேவி தனது மதுரா விஜயம் என்ற நூலில், இவ்வாறு மதுரைவாசிகளின் நிலையை பதிவு செய்துள்ளார்[3], “கோவில்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன, அவற்றில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. ……….மதுரையைச் சுற்றியுள்ள தோட்டங்கள் எல்லாம் சீரழிந்து கிடந்ததைப் பார்க்கும் போது மிக்கத் துயராமாக இருந்தது. ………………….எல்லா புறங்களிலும் வரிசையாக கொம்புகள் நடப்பட்டிருந்தன, அவற்றில் மனித மண்டையோடுகள் செருகப்பட்டிருந்தன. ……………..தாமிரபரணி ஆற்றில் பசுக்களின் ரத்த ஓடிக் கொண்டிருந்தது. வேதங்கள் மறக்கப்பட்டன நீதி ஓடிவொளிந்து கொண்டது……………திராவிடவாசிகளின் முகங்களில் சோகமு அப்பிக் கொண்டிருந்தது.” அந்நூல் பாண்டியரது மிகப்பழமை வாய்ந்த, பாரம்பரிய அரசு கத்தி எவ்வாறு கம்பண்ணாவிடம் சென்று விட்டது என்பதையும் குறுப்பிடுகிறது. பாண்டியர் தமது சக்தியை இழந்ததால், அகத்தியர் கொடுத்த கத்தி, கம்பண்ணாவிடம் சென்று விட்டது. பாண்டியரால் முடியாததால், மதுரையை துலுக்கர்களிடமிருந்து மீட்கும் பணிக்காக அது அவனிடம் சென்று சேர்ந்தது[4]. ஆக மொத்தத்தில், மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்கள் துலுக்கரால் கொள்ளையடிக்கப் பட்டது, இடிக்கப்பட்டது, நிரூபனமாகிறது.

Kambanna saw the broken linga by Malikafur
விஜயநகர பேரரசு [1336-1646] முதல் நாயக்கர் காலம் வரை: விஜயநகர பேரரசு 1336-1646 வரை சிறந்து விளங்கி, துலுக்கரால் அழிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. 300 வருட ஆட்சியில், தென்னிந்தியா பல வழிகளில் சிறந்தோங்கியது. துலுக்கர்களுக்கும் படை, அரசு முதலியவற்றில் வேலைகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் நாணயமாக செயல்பட்டனரா அல்லது ரகசியங்களை அவ்வப்போது, துலுக்க அரசுகளுக்கு தெரிவித்தனரா என்பது கேள்விக்குரியது. இருப்பினும், 1565ல் தலைக்கோட்டைப் போரில், பீஜப்பூர், பீடார், பேரார், அஹமது நகர், கோல்கொண்டா, முதலிய கூட்டு சுல்தான் படைகளால், விஜயநகர பேரரழு வீழ்த்தப்பட்டது, நகரமே சூரையாடப் பட்டது. பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது என்று இக்காலத்து செக்யூலரிஸ எழுத்தாளர்கள் பறைச்சாற்றிக் கொண்டலும்[5], 1347-1527 வரை நடந்த இவர்களது ஆட்சியில், தக்காணப் பகுதியிலுள்ள பகுதிகள், அதிக அளவில் சூரையாடப்பட்டன. அவ்விழிவிகளிலிருந்து தான், இப்பொழுதைய சரித்திரமே எழுதப் பட்டுள்ளது. பிறகு நாயக்கர்கள் ஆட்சியில், ஓரளவிற்கு, உயிர்த்தெழுந்தது. அவர்களால் மறுபடியும் கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன.  பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தாலும், ஓரளவிற்கு, சுரண்டல்கள் அவர்களின் யுக்திகளில் நடந்தேறின. சுதந்திரம் பிறகும் நிலைமை மாறாவில்லை.

Woman with mustache, beard

சுதந்திரத்திற்குப் பிறகு செக்யூலரிஸமும், ஜிஹாதி பயங்கரவாதமும் சேர்ந்த நிலை: அப்பொழுது துலுக்கர் குதிரைகள் மீது வந்து கொள்ளையடித்தனர் என்றால், இப்பொழுது, கடைகள் வைத்துக் கொண்டு, கள்ளக்கடத்தல், பதுக்கல், போலிப் பொருட்கள், கள்ளப்பணம், ஹவாலா, வரியேய்ப்பு முதலியவற்றில் ஈடுபட்டு பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை வளைத்துப் போட்டு, தங்களது சட்டமீறல் காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். கோவில் கொள்ளை இப்பொழுது, வேறு விதமாக நடந்து வருகிறது. முதலில், கிராமப் புறங்கள், ஒதுக்குப் புறமாக இருக்கும் கோவில்களுக்கு அருகில் குடிசை போட்டுக் கொண்டு வாழ ஆரம்பிக்கின்றனர். பிறகு மின்சார இணைப்பு முதலியவற்றைப் பெற்று, பட்டா வாங்கிக் கொள்கின்றனர். குடிசை வீடுகளாகி, மசூதியும் கட்டிக் கொள்கின்றனர். கோவில் நிலம், அருகில் உள்ள மண்டபங்கள் முதலியவற்றை அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டு மாற்றி விடுகின்றனர். கடந்த 150 ஆண்டுகளாக, இந்த முறைதான் கையாளப்பட்டு வருகின்றது, இனி, திருப்பரங்குன்ற தர்கா விசயத்தைப் பார்ப்போம்.

Sikander Dargah, Kuthirai sunai thittu

திருப்பரங்குன்றம் மலை உச்சியில்குதிரை சுனை திட்டுஎனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண்: இவ்விவரங்கள் “விஜய பாரதம்” இதழில் வந்துள்ளது என்று இணைய தளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துக் கொண்டு அலசப் படுகிறது. திருப்பரங்குன்றம்,  அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஹிந்து சமுதாயத்தின் அபிலாஷையை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்து முன்னணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இது பற்றிய விபரங்களை ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் மதுரை முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்….    – ஆசிரியர் [விஜயபாரதம்].

 Sikandar Dragah - Tirupparangundram.light attempted 2014

நின்றுபோன கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் நமது கோயில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள்.

 Sikandar mosque claim.PFI

மலையில் பச்சை பிறைக் கொடி: முஸ்லிம்கள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய பிணத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார். திருப்பரங்குன்ற மலை மீதுள்ள முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்ன கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார்.

 

© வேதபிரகாஷ்

06-12-2017

Woman with broken hands

[1] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm

[2] Madurā Vijayam (Sanskrit: मधुरा विजयं), meaning “The Conquest of Madurai”, is a 14th-century C.E Sanskrit poem written by the poet Gangadevi. It is also named Vira Kamparaya Charitham by the poet. It chronicles the life of Kumara Kampanna Udayar or Kumara Kampanna II, a prince of the Vijayanagara Empireand the second son of Bukka Raya I.

[3]  K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p. 242

[4]  K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37.

[5] Wikipedia – போன்றவையும் சேர்த்து.

மதுரையில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடப்பது ஏன் – வெடிக்கும் குண்டு தயாரிப்பில் தொழிற்நுட்பம் ஒற்றுமை காட்டுவது, பின்னணி என்ன?

மார்ச் 19, 2014

மதுரையில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடப்பது ஏன் – வெடிக்கும் குண்டு தயாரிப்பில் தொழிற்நுட்பம் ஒற்றுமை காட்டுவது, பின்னணி என்ன?

மதுரை குண்டு  2014

மதுரையில்  மட்டும்  தொடர்ந்து  குண்டுவெடிப்பது  ஏன்,   யார்  என  தெரிந்தும்  வேடிக்கை  பார்க்கும்  போலீஸ்[1]: மதுரையில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் (2011-2014), அடுத்தடுத்து, ஐந்து குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன[2]. ஏழு இடங்களில், குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளில், ஒருவர் கூட, இதுவரை கைது செய்யப்படவில்லை. குண்டை யார் வைக்கின்றனர் என, போலீசுக்கு தெரிந்திருந்தும், ‘ஆதாரம்’ இல்லை; ‘விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகி விடும்’ என்ற காரணத்திற்காக, வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாலேயே, தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன. இப்போது மதுரையில், எதற்கெடுத்தாலும், சிறிய அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குண்டு வைப்பது சகஜமாகி விட்டது, என்று தினமலரில் இரண்டாவது முறையாக, இவ்விவகாரத்தைப் பற்றி விளக்கமான செய்தியை வெளியிட்டுள்ளது.

மதுரை பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு மார்ச்.2014

மதுரை பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு மார்ச்.2014

மார்ச்.13, 2014 நெல்பேட்டை  மசூதி  முன்பு,பொட்டாசியம்  நைட்ரேட்குண்டுவெடிப்பு: மதுரை நெல்பேட்டையில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன் குண்டு வெடித்தது[3]. இதில் ஜமாத் செயலாளரின் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன் (40). இவர் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளராகவும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் செயலாளராகவும் உள்ளார். இவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெறுவதால், இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளை, பள்ளிவாசல் அருகேயுள்ள சகோதரர் சிக்கந்தர் வீட்டின் முன் நிறுத்தி வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5.10 மணி அளவில் மோட்டார் சைக்கிள் அருகே வெடிகுண்டு வெடித்து சிதறிக் கிடந்தது[4]. மாநகர துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா மற்றும் போலீஸார் வந்து சோதனை செய்தனர். அதன்பின் அவர்கள் கூறுகையில், ‘பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தி இந்த வெடிகுண்டை தயாரித்துள்ளனர். குண்டு வெடித்ததும், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியும் வகையில் பெட்ரோல் டேங்க் கீழேயுள்ள டூல்ஸ் பாக்ஸிற்குள் வெடிகுண்டை வைத்துள்ளனர். வீரியம் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை’ என்றனர். துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா கூறுகையில், ‘சுங்கம் பள்ளிவாசலில் கேமரா பொருத்தியது தொடர்பாக தற்போது பதவியில் இருப்பவர் களுக்கும், இப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த முன்விரோதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றார். இப்பள்ளிவாசல் ஜமாத்தின் துணைத் தலைவராக உள்ள வழக்கறிஞர் அக்பர் அலியின் காரில் 20.11.2013 அன்று வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒரு குற்றவாளிகள்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[5].

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

மக்களை  கவர  குண்டு  வைத்தேன்‘ : நக்சலைட்  திருச்செல்வன்  “திடுக்: “மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்கள் எழுச்சிக்காகவும், மத்திய அமைச்சர்களின் வீடு, தனியார் வணிக வளாகத்தில், பைப் குண்டு வைத்தேன்,” என, மதுரையில் கைதான நக்சைலட், திருச்செல்வன், வாக்குமூலம் கொடுத்துள்ளார்[6]. புதுச்சேரி மத்திய அமைச்சர், நாராயணசாமி வீட்டு வாசலில், கடந்த ஜன., 30ம் தேதியிலும், மதுரை, உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில், பிப்., 11ம் தேதியிலும், இரும்பு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த திருச்செல்வன், தங்கராஜ், கவியரசனை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செல்வன், போலீசாரிடம் கூறியதாவது: தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டியது. இதற்கு நாராயணசாமியும் ஒரு காரணம் என்பதால், நானும், கார்த்திக்கும் மதுரையில் குண்டு தயாரித்து, டூவீலரில் புதுச்சேரி சென்று வைத்தோம்; நோட்டீஸ்களையும் போட்டு விட்டு வந்தோம். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு முக்கியம். இதனால், சிவகங்கையில் உள்ள அவர் வீட்டின் பின்புறம் புதரில், என் சகோதரர் காளைலிங்கம், பைப் குண்டு வைத்தார். அது வெடித்து சிதறியது. ஆனால், அதை யாரும் அறியவில்லை. அங்கு நாங்கள் போட்டுவிட்டு சென்ற நோட்டீஸ், காற்றில் பறந்து, போலீஸ் கையில் சிக்கிய பின்தான், சிதம்பரத்திற்கு மிரட்டல் வந்ததாக செய்திகள் வந்தன. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்களுக்கு எழுச்சியூட்டவும் தான் வைத்தோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். காரைக்குடி அருகே, மானகிரியில் அமைச்சர் சிதம்பரம் வீட்டின் பின்புறம், வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள்  மட்டுமல்ல  நக்சலைட்டுகளும்  தமிழகத்தில்  குண்டுவெடிப்புகளை  நடத்துகிறார்கள்: தினமலர், மேற்குறிப்பிடப்பட்ட குண்டுவெடிப்பிற்கும் மற்றவைக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துக் காட்ட, “கடந்த, பிப்.,11 2014ல், மதுரை உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இரும்பு பைப் வெடிகுண்டு தவிர, மற்ற குண்டுவெடிப்பு, குண்டு கண்டெடுப்பு சம்பவங்களில் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர்”, என்று குறிப்பிட்டது.டைது ஒருவேளை, தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் முஸ்லிம் குண்டுவெடிப்புகளை விட வேறானது, என்று எடுத்துக் காட்ட குண்டு வெடி வெடிக்கப்பட்டதா, அல்லது முஸ்லிம்கள் மட்டுமல்ல நக்சலைட்டுகளும் தமிழகத்தில் குண்டுவெடிப்புகளை நடத்துகிறார்கள், எனவே இது பொதுப் பிரச்சினையாகும், முஸ்லிம் அல்லது ஜிஹாதிப் பிரச்சினை என்று கருத்தக் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம் போலிருக்கிறது.

madanee-sufi-bomb

madanee-sufi-bomb

2011ம்  ஆண்டு, ஏப்.,30ல், மதுரை, மாட்டுத்தாவணி,  டாஸ்மாக்கடையில்,  ‘டைம்பாம்: மறைமுக அமைப்பு கடந்த, 2002ல், மதுரையைச் சேர்ந்த, இமாம்அலி மற்றும் அவரது கூட்டாளிகள், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களில் சிலர், ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட துவங்கினர். இதற்கு, அரசு தடை விதித்தது. இதுநாள் வரை, அந்த அமைப்பினர் மறைமுகமாக செயல்படுகின்றனர். இமாம்அலியை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவும் திட்டமிட்டு, 2011ம் ஆண்டு, ஏப்.,30ல், மதுரை, மாட்டுத்தாவணி, டாஸ்மாக் கடையில், ‘டைம் பாம்’ வெடிக்க செய்தனர். கடந்த மாத தினமலரில், இச்செய்தி இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது[7].

ied-cutout01

போலீஸ்  அதிகாரி  ஒருவர்  கூறியதாவது  (பிப்ரவரி 2014)[8]: “இமாம்அலி ஆதரவாளர்களை கொண்டு, ரகசியமாக செயல்படும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் மீது சந்தேகம் உள்ளது.காரணம், கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின்போதுதான், இமாம்அலியும், கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அ.தி.மு.க., அரசின்மீது அவரது ஆதரவாளர்கள் சிலர் வெறுப்படைந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் குண்டு வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, அதற்கென உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவுகளிடம் அனைத்து வழக்குகளையும் ஒப்படைத்தால், விரைவில் குற்றவாளிகள் கைதாக வாய்ப்புள்ளது. இதற்கு, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்.பி., விஜயேந்திர பிதரி அரசுக்கும், டி.ஜி.பி., ராமானுஜத்திற்கும் பரிந்துரைக்க வேண்டும்”, இவ்வாறு கூறினார்.

ied-cutout01

30-09-2011 அன்று  புதுார்  பஸ்டிப்போவில், பஸ்சிலிருந்து, ‘டைம்பாம்கண்டெடுக்கப்  பட்டது: அதே ஆண்டு செப்.,30ல், புதுார் பஸ் டிப்போவில், பஸ்சிலிருந்து, ‘டைம்பாம்’ கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், மதுரையில், ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி மேற்கொண்டார். அவர் செல்ல திட்டமிட்டிருந்த, திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில், சக்தி வாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. எகிறும் போலீஸ் பி.பி., தேசிய தலைவர் விவகாரம் என்பதால், சம்பவம் நடந்த மூன்று நாட்களில், ‘போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் உட்பட சிலரை, போலீசார், குற்றவாளிகள் என, அறிவித்தனர். அதேசமயம், ‘டைம்பாம்’ வழக்குகளில் குற்றவாளிகள் யார் என, அறிவிக்காத நிலையில், டிச.,7ல் திருவாதவூர் பஸ்சில், ‘டைம் பாம்’ இருந்தது, போலீசாரின் ரத்தக் கொதிப்பை எகிற வைத்தது.

நவம்பர் 2012 திருப்பரங்குன்றம் குண்டு

நவம்பர் 2012 திருப்பரங்குன்றம் குண்டு

01-05-2012  அண்ணாநகர்  ராமர்கோவில்  சுற்றுச்சுவரையொட்டி  நிறுத்தியிருந்த  சைக்கிளில்,   ‘டைம்பாம்‘  வெடித்தது: பின், நான்கு மாதங்கள் போலீஸ் விசாரணை இழுத்து கொண்டிருந்த நிலையில், 2012, மே 1ம் தேதி, அண்ணாநகர் ராமர் கோவில் சுற்றுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளில், ‘டைம்பாம்’ வெடித்தது. இதைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[9]. அதைத் தொடர்ந்து, போலீசார், ‘விசாரணையிலேயே’ இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம், சவுராஷ்டிரா சமூகத்தினரின் மாநாட்டிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘டைம்பாம்’ வைக்கப்படக் கூடும் என, போலீஸ் கருதிய நிலையில், மதுரை தெற்குகிருஷ்ணன் கோவிலில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும், உமர்பாரூக் என்பவரின் கடைக்கு, ‘டைம் பாம்’ வந்து சேர்ந்தது.  ஒரு மாநில முதல்வர், அடுத்த மாநிலத்திற்கு செல்லலாம், ஆனால், இது மாதிரி குண்டுவெடிப்பு நடத்துவோம் என்று முஸ்லிம்கள் இருப்பார்களா என்ன? நாளைக்கு ஜெயலலிதா மற்ற மாநிலத்திற்கு சென்றால், அங்குள்ளவர்கள் பதிலுக்கு இப்படி மிரட்டினால் என்னாகும்?

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

ஈகோபிரச்னையா, போலீசார்  பயப்படுகின்றனரா?: இதில், புகார்தாரரான உமர் பாரூக்கையே, தெற்குவாசல் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன், சில மாதங்களுக்கு பின், கைது செய்தார். இதற்காக, மோகனுக்கு பாதுகாப்பு கருதி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசாரே பயப்படுகின்றனர் என்றால் எஸ்.ஐ.டி போன்ற தீவிரவாத தடுப்புப் பிரிவுகளுக்கு வழக்கை ஒப்படைத்து விடவேண்டியதுதானே? இந்நிலையில், நவ.,2ல் திருப்பரங்குன்றம் மலையில், சிலர், ‘டைம் பாம்’ தயாரிப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு நடத்தி, உதிரி பாகங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கை, உள்ளூர் போலீசார், அப்போதைய கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில், விசாரித்தனர். இவர்களுக்கும், மத அமைப்பினரை கண்காணிக்கும், சிறப்பு பிரிவு போலீசாருக்கும், ‘ஈகோ’ பிரச்னை ஏற்பட, விசாரணை ஓராண்டுக்கும் மேலாக இழுத்தது[10].

ராமர் கோவில் அருகே குண்டு மதுரை.

ராமர் கோவில் அருகே குண்டு மதுரை.

குண்டு  தயாரிப்பில்  காணப்படும்  தொழிற்நுட்பம்ஒரே  ஸ்டைல்: இதுவரை கைப்பற்றிய குண்டுகள் அனைத்தும், டைமர், பேட்டரி, ஒயர், கரிமருந்து என, ஒரே, ‘ஸ்டைலில்’ இருந்ததால், ‘குறிப்பிட்ட நபர்களே இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்’ என, போலீசார் முடிவுக்கு வந்தனர். அவர்களும் போலீஸ் கண்முன்னேயே நடமாடியபடி இருந்தனர். ஆனால், ஆதாரம் இல்லாததால், அவர்களை விசாரிக்கக் கூட, போலீசார் பயந்தனர்.  இந்நிலையில், நிச்சயமாக, இவ்வழக்குகளை மற்ற பிரிவுகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். இவையெல்லாம் தீவிரவாத செயல்கள் மற்றும் நாடு முழுவதுமான, ஒரு குறிப்பிட்ட பாணியில் நடந்து வருவதால், ஏதோ மாநிலத்திலேயே அடக்கி விடலாம் என்ற போக்கில் இருப்பது தவறாகும்.

நவம்பர் 2013 நெல்பேட்டையில்  குண்டு  வெடித்தது: இச்சூழலில் தான், கடந்த ஆண்டு நவ.,20.2013ல், நெல்பேட்டையில், வழக்கறிஞர் அக்பர்அலி காருக்கு அடியிலும், காதர்மொய்தீன் டூவீலரிலும் குண்டு வெடித்தது. இவர்கள் பொறுப்பு வகிக்கும், சுங்கம் பள்ளிவாசலில், கேமரா வைத்தது தொடர்பாக, எச்சரிப்பதற்காகவே, குண்டு வைக்கப்பட்டது என, விசாரணையில் தெரிய வந்தது. இதிலும், சிலர் மீது, போலீசாரின் சந்தேக கண் இருந்தாலும், ‘தொட்டால் சிக்கல்’ என்ற அச்சம் காரணமாக, கண்டும் காணாமல் உள்ளனர். இந்த தைரியத்தில் தான் தொடர்ந்து குண்டு வைத்து, ‘விளையாட்டு’ காட்டுகின்றனர். போலீசார் ‘அமைதி’யாக இருக்கும்பட்சத்தில், மதுரையில் தொடர்ந்து நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பது மட்டும் உண்மை. ஆக முஸ்லிம்களுக்குள் இருக்கும் பிரச்சினைக்கூட வெடிகுண்டு வைப்பார்கள், ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற போக்கும் சரியில்லை. இவையெல்லாம் தீவிரவாதத்தை ஊக்குவித்து, வளர்ப்பதாகவே ஆகும். ஏற்கெனவே கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு விசயத்தில் பாடம் கற்காமல், இப்படியே முஸ்லிம் குழுக்களை, ஏதோ காரணங்களுக்காக தாஜா செய்து கொண்டிருப்பது, அதே குண்டுகளை மடியில் கட்டிக் கொள்வதற்கு சமமாகும்.

சிறிய  அளவிலான  தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி, குண்டுவைப்பது  சகஜமாகிவிட்டது: உண்மையில் பட்கல் என்பவன் தான் இத்தகைய தொழிற்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவன். எளிதில் கிடைக்கும் ‘பொட்டாசியம் நைட்ரேட்’, பாறைகளை உடைக்க, கிணறு தோண்ட உபயோகப்படும் ஜிலேட்டின் குச்சிகள், வெடிகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு குண்டுகளைத் தயாரித்து உள்ளுக்குள் வெடித்து, அதிக சக்தியை உண்டாக்கி அதனால், அச்சக்தி வெளியே வரும் போது, கூர்மையான பொருட்கள் – ஆணிகள், சிறிய இரும்பு குண்டுகள் / பால்ஸ் முதலியவற்றைச் சிதறச் செய்து, அதன் மூலம் அதிகமான பாதிப்பு, பீதி உயிர்ச்சேதம் முதலியவற்றை உருவாக்கல் என்ற ரீதியில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. இந்தியாவில் பல இடங்களில் இந்தியன் முஜாஹித்தீன் மற்ற ஜிஹாதி குழுக்கள் இதனை உபயோகப்படுத்தி வருவதால், எல்லா மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், செக்யூலரிஸம், முஸ்லிம்களை தாஜா செய்தல், ஓட்டு வங்கி முதலிவவை இருப்பதால், இத்தகைய பயங்கரமான விசயங்களும் அமுக்கப் படுகின்றன, மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகின்றன.

இவ்வழக்குகளை  என்..டி.  போன்ற  துறைகளுக்கு   மாற்றுவது / ஒப்படைப்பது  நல்லது: போலீசார் மட்டுமல்ல, இக்குண்டுவெடிப்புகள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்துப் படித்து வருபவர்களுக்கே, இவற்றில் உள்ள ஒரு போக்கு, முறை, சம்மந்தம் முதலியவற்றை கண்டு கொள்ளலாம்க. திண்டுக்கல் முஸ்லிம்களும் இத்தகைய ஐ.இ.டி.குண்டு தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது எடுத்துக் கட்டப் பட்டது[11]. பெங்களூரு குண்டுவெடிப்பிலும் தமிழக முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்[12]. அவர்கள் எல்லோருமே ஏற்கெனவே மற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது[13]. தமிழக ஜிஹாதிகள் சித்தூரில் துப்பாக்கி சூடு, சண்டைகளுக்குப் பிறகு பிடிபட்டபோதும், பல விசயங்கள் வெளிவந்தன[14]. சேலம் ஆடிட்டர் கொலை வழக்கிலும் சிக்கியுள்ளவர்களும், இதர வழக்குகளில் சிக்கியுள்ளனர்[15]. நிலத்தகராறு என்று வைத்துக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டாலும், அதில் ஒரு பிஜேபிகாரரைக் கொலை செய்வதும் ஒரு யுக்தியாக கடைப்பிடிப்பது போலத் தோன்றுகிறது[16]. எனவே, இவ்வழக்குகளை என்.ஐ.டி.போன்ற துறைகளுக்கு மாற்றுவது நல்லது.

© வேதபிரகாஷ்


[1] தினமலர், மதுரையில்மட்டும்தொடர்ந்துகுண்டுவெடிப்பதுஏன்?யார்எனதெரிந்தும்வேடிக்கைபார்க்கும்போலீஸ், சென்னை, 18-03-2014.

[3] தி இந்து, மதுரையில்குண்டுவெடிப்பு: போலீஸார்தீவிரசோதனை, சென்னை, 18-03-2014.

[6] தினமலர், மக்களைகவரகுண்டுவைத்தேன்‘ : நக்சலைட்திருச்செல்வன்திடுக், மார்ச்.14, 2014.

[7] தினமலர், மதுரையில்வெடிகுண்டுவழக்குகள்அதிகரிப்பதுஏன்:ரகசியஅமைப்பின்மீதுசந்தேகம், பிப்ரவரி.18, 2014.