Archive for the ‘திரிணமூல் காங்கிரஸ்’ category

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

ஏப்ரல் 8, 2023

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது; தமிழகத்தில் கட்டிடத் தொழில் பெருகப் பெருக “வட மாநிலத்தவர்” என்ற போர்வையில் லட்சக்கணக்கில் வேலையாட்கள் வந்து குவிகின்றனர். சென்னையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவது, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வது என்பது பலநிலைகளில் நடந்து வருகிறது. அதில் அரசியல் அதிகமாகவே செயல் பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து, “வட மாநிலத்தவர்” போர்வையில் பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது, நிச்சயமாக எல்லாவிதங்களிலும் பிரச்சினை, சட்டமீறல் மற்றும் பெருங்குற்றமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அடக்கி வாசிக்கிறார்கள். ஊடகங்களும் அதனை அமுக்கி விடுகின்றனர் எனலாம். பாலியல் பிரச்சினையில் காட்டும் அளவு கடந்த பாரபட்சம் இதில், இன்னும் பலமடங்குக் காட்டப் படுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குற்றங்கள் அதிகரித்து, கைதாவது அதிகமாகி, அரசாங்க ரீதியில் பதிவாகி வருகின்ற நிலையில் உண்மைகளை மறைக்க முடியாத நிலைக்கும் வந்தாகி விட்டது. ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்றால் வேலைகளே ஸ்தபித்து விடும் என்ற நிதர்சனத்தையும் முதலாளிகள் உணர்ந்து, அந்த உண்மையினை வெளிப்படையாகச் சொல்லவும் செய்து விட்டனர்.

தமிழகத்தவர் ஏன் வேலை செய்வதில்லை?: இருப்பினும், தமிழகத்தில் உள்ளோர் அந்த வேலைகளை ஏன் செய்வதில்லை, செய்ய விரும்பவில்லையா, அத்தகைய மனப்பாங்கு ஏன் உள்ளது போன்ற கேள்விகளும் எழுகின்றன. குறைந்து கூலிக்கு நிறைய வேலை செய்கின்றனர் என்பதை விட அவர்கள் அவ்வாறு செய்யும் பொழுது, இங்குள்ளவர் ஏன் செய்ய முடியாது என்பது தான் முக்கியமான கேள்வியாகிறது. பள்ளி-கல்லூரிகளில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, சினிமா-பொழுது போக்கு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவது, பொழுது போக்குவது, பெற்றோர், பெரியவர், ஆசிரியர்கள் முதலியவர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை தான் தினம்-தினம் நிகழ்ச்சிகளாகி, அவை ஊடகங்களிலும் தாராளமாகவே, விவரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிறகு, இளைஞர்கள் அவற்றிற்கு வ்ருத்தப் பட வேண்டாமோ, தங்களை மாற்றிக் கொள்ள உடனடியாக திருந்தும் வழிகளை நாட வேண்டாமோ? ஆனால், அத்தகைய குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. போதை மருந்து, குடி, செக்ஸ், சினிமா, பொழுதுபோக்கு என்றவற்றில் தான் அவர்கள் உழன்று, தங்களை சீரழித்து, மற்றவர்களை கெடுத்து வருகின்றனர்.

டிசம்பர் 2006ல் எண்ணூரில் வங்கதேசத்தவர் கைது: சென்னை அருகே உள்ள எண்ணூர் படகில் வந்தவர் மீது சந்தேகம் எழ, அவர்களை நிறுத்தினர். அந்தப் படகுகளை வளைத்துப் பிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்[1]. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது[2]. இவர்கள் பிடிபட்டது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், மத்தியபுலனாய்வுப் படையினரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 பேரும் மாலத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் திசைமாறி இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாமோ என்றசந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து 16 பேரிடமும் போலீஸாரும், மத்திய புலனாய்வுப் படையினரும் துருவித் துருவி விசாரணைநடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பிப்ரவரி 2020ல் 40 வங்கதேசத்தவர் திருப்பி வைக்கப் பட்டனர்: முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்[3]. இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்[4]. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கோ பங்களாதேசத்தவர் பலமுறைகளைக் கையாள்கின்றனர் என்று தெரிகிறது. பொதுவாக, பங்களாதேசத்திலிருந்து, மேற்கு வங்காளத்தில் நுழைவது, அங்கிருந்து, அஸ்ஸாம் மூலம் பல மாநிலங்களுக்குப் பரவி செல்வது போன்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்.

வங்கதேசத்தவர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்ததுதொடர் விசாரணை: இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் போலி பாஸ்போர்ட்டுடன் இருவர் பிடிபடுதல்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

செயல்படும் விதம், திட்டம் மற்றும் முடிவுகள்: பங்களாதேசத்திலிருந்து “வொர்க் மர்மிட்” வாங்கிக் கொண்டு மேற்கு வங்காளத்திற்குள் வேலைக்கு வருகின்றனர்.

காலை வேலைக்கு வந்து மாலையில் திரும்பி சென்று விடவேண்டும்.

ஆனால், தினம்-தினம் ஆயிரம் பேர் வந்தால் 100-200 பேர் தங்கி விடுகின்றனர், மறைந்து விடுகின்றனர்>…..

மேற்கு வங்காளத்திற்குள் தங்கியவர்கள் முதலில் ஆதார், ரேஷன், பேன் என்று கார்டுகளை வாங்கி, ஓட்டர் ஐடியையும் வாங்கி விடுகின்றனர்

மேற்கு வங்காளத்திலிருந்து பிறகு மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

இவர்களிடம் இரண்டு நாடுகள் அடையாள அட்டைகளும் இருக்கின்றன. இதனால், சகஜமாக செயல்பட்டு வருகிறனர்.

இவர்களில் உண்மையில் பிழைப்பிற்கு வேலை செய்பவர் யார், கடத்தல்கார்ர்கள் யார், தீவிரவாதிகள் யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சென்று / செயல்பட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் ஊடுறுவல்: 16 வங்கதேசத்தவர் கைது, By Staff Published: Saturday, December 16, 2006, 5:30 [IST]

[2] https://tamil.oneindia.com/news/2006/12/10/arrest.html?story=2

[3] தமிழ்.இந்து, சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியதாக 40 வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பிய போலீஸார்: போலி பாஸ்போர்ட்டுடன் சென்னையில் 2 பேர் சிக்கினர், செய்திப்பிரிவு, Last Updated : 12 Feb, 2020 10:10 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/539183-police.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)

Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph

Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph

பர்த்வான் குண்டுவெடிப்பும், மேற்கு வங்காள போலீஸாரின் நடவடிக்கையும்: காந்தி ஜெயந்தியான 02-10-2014 அன்று மேற்கு வங்காளத்தில் பர்த்வான் என்ற இடத்தில் கரக்கர் என்ற வீட்டில் குண்டு தயாரிப்பின் போது, யதேச்சையாக வெடித்ததில் 2 பேர் – ஷகீல் அஹமது காஜி [ Shakil Ahmed Gazi in Beldanga, Murshidabad] மற்றும் சோவன் மண்டல் [Sovan Mandal] கொல்லப்பட்டனர். இவ்விடத்தில் 90% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்[1]. அதாவது, அவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்துதான் வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. குண்டுவெடிப்பில் மேலும் செயிக் ஹகீம் காயமடைந்தான். கௌஸர் மற்றும் அப்துல் கலாம் என்பவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் அந்த இடம், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தின் மாடியில் இருந்தது. அதிலுருந்து நடந்து செல்லும் தூரத்தில் இன்னும் இரண்டு வீடுகளில் சோதனை நடத்தப் பட்டு, அங்கும் தீவிரவாதிகள் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விரைவு தயாரிப்பு வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள், சிம் கார்டுகள் [improvised explosive devices (IEDs), other explosives and SIM cards] முதலிய கைப்பற்றப் பட்டன. இவ்வீடுகள் பாபுகர் மற்றும் பாத்சாஹி தெருக்களில் உள்ளன[2].  இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் தெரிந்தது, யாரும் குண்டு வைத்து, இப்படி இறக்கவில்லை, ஆனால், வெடி குண்டு தொழிற்சாலையில், யதேச்சையாக குண்டு வெடித்ததில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது, என்பது தெரிந்தது.

Burdwan_blast_building_

Burdwan_blast_building_

மேற்கு வங்க பொலீஸார் ஆதாரங்களை அழித்தனரா?: வெடி குண்டு தொழிற்சாலை என்றவுடன் போலீஸார், மேலிடத்தில் அறிவித்திருக்கலாம், அரசியல்வாதிகள் ஆதரவு-தொடர்பு என்றிருப்பதால், அது மறைக்கப் படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கலாம். இதன் தீவிரத்தை ஆயும் முன்னரே, மேற்கு வங்காள போலீஸார் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்பின. குறிப்பாக, குண்டுவெடித்த இடத்தில் உள்ள ஆதாரங்கள் திரட்டப் படவேண்டும், வெடிக்காமல் உள்ள குண்டுகள் ரசாயன ஆய்வு கூடத்திற்கு அனுப்பி ஆராயப் பட வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம், அந்த வெடிகுண்டுகளை யார் தயாரித்திருக்கக் கூடும், உபயோகப் படுத்தப் பட்ட பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும் போன்ற விவரங்கள் அறிந்து கொள்ல ஏதுவாகும். ஆனால், உடனே, ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காத அளவிற்கு குண்டுவெடித்த இடத்தை உள்ளூர் போலீஸார் சுத்தப் படுத்தி விட்டனர். கிடைத்த குண்டையும் வெடிக்கவைத்ததால், அதைப் பற்றிய ஆதாரங்கள் அறியமுடியவில்லை. மேற்கு வங்காள போலீஸார் வேண்டுமென்றே செய்ததாக தெளிவாகிறது.

Razia Bibi and Alima Bibi

Razia Bibi and Alima Bibi

கைது செய்யப் பட்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள்: சம்பந்தப் பட்ட விசயத்தில் இரண்டு பெண்கள் – ரஜிரா பீபி என்கின்ற ரூமி (Rajira Bibi alias Rumi) மற்றும் அமீனா பீபி (Amina Bibi) தொடர்பு கொண்டிருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு முறை குண்டுகளை [Improvised explosive device (IED)] எடுத்துச் சென்று தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக மொத்தம் கீழ் கண்ட நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர்:

  1. செயிக் ஹகீம் என்கின்ற ஹஸான் சாஹப் [Sheikh Hakim alias Hasan Saheb from Lalgola in Murshidabad district, who was injured in the blast]
  2. ஹாவிஸ் மொல்லா [Hafez Mollah alias Hasan], காயமடைந்தவர்களுள் ஒருவன்.
  3. ரஜிரா பீபி என்கின்ற ரூமி [Rajira Bibi alias Rumi, widow of the suspected terriost Shakil Ahmed who died in the blast] – ஷகீல் அஹமதின் மனைவி.
  4. அமீனா பீபி [Amina Bibi, Hasan Saheb’s wife] – ஹசான் சாஹபின் மனைவி.

பர்த்வான் - கைது செய்யப் பட்டவர்கள்

பர்த்வான் – கைது செய்யப் பட்டவர்கள்

சம்பந்தப் பட்டுள்ளவர்களின் மற்ற விவரங்கள்:

ஷகீல் அஹமது: இவன் பங்களாதேசத்தைச் சேர்ந்தவன். ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் என்ற ஜிஹாதி அமைப்பின் தீவிரவாத வேலையாள். 2006ல் இந்தியாவுக்கு வந்து கரீம்பூர், நாடியா மாகாணம் என்ற இடத்தில் தங்கியவன். மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் என்பவரை சந்தித்தான். அவருடைய மாமா பெண் – ரஜிரா பீபியை திருமணம் செய்து கொண்டான். அவளின் தந்தையை, தனது தந்தையாக – அடையாளமாக வைத்துக் கொண்டு ரேஷன் கார்டையும் பெற்றான். பேடங்கா (மூர்ஷிதாபாத்)வில், ஒரு பர்கா (முஸ்லிம் பெண்களுக்கு பர்தா போன்றவற்றை விற்கும்) கடையினையும் வைத்துக் கொண்டான்.

 

எஸ்.கே. கௌஸர் – தேடப்பட்டு வரும் முக்கியமான குற்றவாளி. சிவப்பு நிற பதிவு செய்யப் படாத பைக்கை உபயோகப்படுத்தியவன்.  ஷகீலுக்கு உதவி செய்து, கரக்கர் வீட்டில் வேலையை ஆரம்பித்து வைத்தவவன். இவன் தான் ஷகீல் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ்  இடையே தொடர்பாளனாக வேலை செய்து வந்தவன்.

 

அப்துல் கலாம் – ஷகீலின் பர்கா கடைக்கு அடிக்கடி வந்து செல்பவன், கூட்டாளி.

 

அமீனா பீபி – ஹகீமின் மனைவி. சென்னை-மூவருடன் தொடர்பு கொண்டவள்.

 

ஹஸன் மொல்லா – புர்பஸ்தலி என்ற இடத்தில் உள்ள ஷூ – காலணி வியாபாரி. ஷகீலுடன் தொடர்பு கொண்டுள்ளவன். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அவனை ஏழு முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். செப்டம்பர் 2 மற்றும் 10 2014 தேதிகளில் ஷகீலுடன் அதிக நேரம் பேசியுள்ளான். பர்த்வானில் உள்ள ஷகீலின் வீட்டிற்கு வந்துள்ளான்.

 

மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் – நாடியாவில், கரிம்பூரில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு. உள்ளூர் மதரஸாவின் காரியதரிசி. ஷகீலுக்கு பாதுகாப்பாக ஒரு வீட்டைக் கொடுத்தவர், தனது மைத்துனியான ரூமியையும் திருமணம் செய்து கொடுத்தார். பிறகு அவனுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்தார். முர்ஷிதாபாதில் இஸ்லாமிய ஆன்மீகத்தைத் தூண்டிவரும் மௌல்வியாக இருக்கிறார்.

கௌஸர் முதலியோர்

கௌஸர் முதலியோர்

வெடிகுண்டு வெடித்த வீடு, மற்ற வீடுகளில் சோதனை: குண்டுவெடித்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த ஒரு வீடியோவில், தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரித்து, வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என்ற காட்சியும் உள்ளது. தவிர அவர்களது ஜிஹாதி பிரச்சார இலக்கியங்களும் இருந்துள்ளன. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தைத் தாக்கும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3]. இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு பர்கா கடை மற்றும் தொழிற்சாலை உள்ளது. அங்கு முஸ்லிம் பெண்களுக்கு வேண்டிய பர்தா போன்ற ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால்,ஆங்கிருந்த பெண்களே குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபயோகப் படுத்தப் பட்டது, ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. அப்பெண்கள் கொடுத்த விவரங்களை வைத்து மேலும் விசாரணை தொடர்ந்தது. இதைத்தவிர அசாமில் ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014

The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014 – Courtesy – twocircles

மேற்கு வங்காள போலீஸாரின் அறிக்கை: ஏற்கெனவே, இப்பிரச்சினை அரசியல் ஆக்கப் பட்ட நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா தெரிவித்ததாவது: “பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி கௌஸரை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியான 2 தீவிரவாதிகள், காயமடைந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பயன்படுத்திய 2 வீடுகள், பாபூர்பர்க், பாத்சாஹி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த கக்ராகர் வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளன. அந்த வீட்டை கண்டுபிடித்து போலீஸார் சென்றபோது, அங்கு யாருமில்லை. வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தன.  ஆனால், வீட்டினுள்ளே மின்விசிறிகள், விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையால், அங்கு வசித்தவர்கள் அவசர கதியில் வெளியேறியது தெரிய வந்தது என்றார் மிர்சா. பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கௌஸர் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார்[5].

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU

[2] http://timesofindia.indiatimes.com/india/Two-more-houses-used-by-blast-suspect-found-in-Burdwan/articleshow/44703795.cms

[3] http://www.ibtimes.co.in/burdwan-blast-militants-planned-blowup-kolkata-airport-24-other-places-bengal-eid-610680

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-burqa-factory-front-for-bomb-making-plant-603330

[5]http://www.dinamani.com/india/2014/10/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/article2468779.ece