Archive for the ‘திமுக’ category

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

 

முஸ்லிம்களின் எச்சரிக்கை தினத்தந்திக்கு

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதிஎதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

ஐமுமுகவின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?

  • தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.

  • முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

  • பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.

  • விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?

  • வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு - அல் - உம்மா

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”

இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.

[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.

http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[5]   On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site.  October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms

[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html

[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp

[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?

ஓகஸ்ட் 4, 2013

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்? AIADMK Iftar காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், .தி.மு.. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5]. Dravidian Iftar or Iftar with Atheits முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. Dravidian Iftar or Iftar with Atheits.2 மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள்.  பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது. Hosni Mubarak, Benjamin Netanyahu, Barrack Obama and others checking their watches for sunsetதீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். BJP Shahnawaz Hussain, Ravi Shankar Prasad, Sushil Kumar Modi at an Iftar party in Patnaமுஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். Iftar menu இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.Iftaar_party_invitation_card_by_Raza786 இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. sponsor-an-iftar-E-Flyerஇதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர். ?????????????????????? 2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.  காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013


[3] தினமணியில் “அறிஞர்கள்” என்றும், மாலைமலரில் “பெருமக்கள்” என்றும் உள்ளது.
[5] Iftar party Chief minister and AIADMK supremo J Jayalalithaa has called off her Iftar party on July 27, following the sudden demise of Yercaud  MLA Perumal. http://timesofindia.indiatimes.com/Iftar-party/speednewsbytopic/keyid-50082.cms
[6] “They came and sat here, and their leader gave a speech appealing for unity among Muslims. That was ironic, for they were the very people who caused the split in our party,” said Fathima, lashing out at the DMK. She had to start a splinter group of the IUML after being sidelined for addressing a press conference ahead of the 2011 Assembly polls, where she had hit out at both her party organisation for making compromises and the DMK for taking the IUML for granted. http://newindianexpress.com/cities/chennai/IUML-group-hosts-Iftar-for-AIADMK-ministers/2013/08/03/article1715558.ece

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)

மார்ச் 15, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)

திமுக-அதிமுக கட்சிகளுடன் கூட்டணி ஏன்? முஸ்லீம் லீக்குகள் அரசியல் ரீதியில் எத்தனை கட்சிகளாக பிரிந்து இருந்தாலும், பிரிதுள்ளது போல இருந்தாலும், காட்டிக் கொண்டாலும் அவர்களின் அரசியல் நாடகங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை[1]. எனவே அவர்கள் அத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் என்பதனை மறுபடியும் நிரூபித்து விட்டார்கள். வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்!

ஒன்று அரசியல் மற்றொன்று மதம்: முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மதக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்கிறார்களா, சித்தாந்த போலித்தனமா, என்ன? மக்களுக்கு ஒன்றுமே புரியாமல் இருக்கலாம். ஆக இத்தகைய கட்சிமாறி போக்கு, நிலையிலா அரசியல் தாக்கம், சித்தாந்த போலித்தனம் முதலியவை அவர்களின் பச்சோந்தித்தனத்தை மக்களை ஏமாற்றிவரும் போக்கை, ஏன் நாட்டிற்கு துரோகத்தை செய்யும் முறையினையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில், நாட்டின் நலன் முக்கியம் என்றால், அதற்கு எதிராக கூட்டணி கட்சிகளின் கோரிக்கைக்களுக்கு ஒப்புக்கொடு அவ்வாறு தேர்தலில் கூட்டு சேரமாட்டார்கள். அரசியல் நிர்ணய சட்டத்தின் சரத்துகளை மீறும் கோரிக்கைகளை மறைமுகமாக செயல்படுத்த மாட்டார்கள். ஆனால், செய்வதை சொல்வோம், சொல்லியதை செய்வோம் என்று வசனம் பேசி, நாட்டை அப்படி சீரழித்து வரும் அரசியல் கட்சிகளை அடையாளங்கொள்ள வேண்டிய காலம் மக்களுக்கு வந்துள்ளது. ஏனெனில் இத்தகைய அரசிய நாடகங்கள், ஊழல் கோடிகளில் நடந்துள்ள நிலையில் நடக்கின்றன. முதலில் தியாகத்தை செய்து விட்டது போல அறிக்கை விட்டார்கள்.

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[2]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார். இப்பொழுது வேறு மாதிரி பேசுகிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை ஆதரிப்போம்! இப்படி அறிவித்தால் கருணாநிதி என்ன செய்வார் என்று பார்க்கிறார்களா? அல்லது பயந்து கொண்டு இன்னொரு தொகுதியைக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா? 3 தொகுதிகளைக் கொடுத்து பின்னர் அதிலும் ஒன்றை பிடுங்கிக் கொண்டதால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒருபிரிவினர் காயிதே மில்லத் பேரனான தாவூத் மியா கான் தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்[3]. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியும் கருணாநிதி முன்னிலையில் இணைந்தன[4].
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் ஆனால் இரட்டை இலையை ஆதரிப்போம் என்றால் என்ன? திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதன் தலைவராக இருப்பவர் காதர் மொஹைதீன். இக்கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை முதலில் கொடுத்தது. மூன்றிலும் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முரண்டு காரணமாக பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து தலா ஒருதொகுதியை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. இது முஸ்லீம் லீக் கட்சியினரிடையே பெரும் மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பாத்திமா சயத் இதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்திருந்தார். மேலும் நெல்லை மாவட்ட முஸ்லீம் லீக், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது[5].

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலை என்ன? இந்த நிலையில் தற்போது கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மறைந்த காயிதேமில்லத்தின் பேரனுமான தாவூத் மியாகான் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இன்று காலை மியாகான் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அக்கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் தாவூத் மியாகான் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்கள் சம உரிமை பெறுவதற்காக காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார். இந்த இயக்கம் தோன்றி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பல்வேறு கட்சியினரிடமும் பலர் இந்த கட்சியை அடகு வைத்து விட்டனர். இதனால் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குழப்பம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே இருந்ததை விட குறைவான பலன்களே கிடைக்கிறது. எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது”, என்று அவர் கூறியுள்ளார்.

வேதபிரகாஷ்

15-03-2011


[2] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

மார்ச் 11, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

 

தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களின் மீது எந்த எதிர்மறையான நோக்கம் இல்லையெனெனும், அரசியல் ரீதியாக முஸ்லீம் லீக் இந்தியாவில் செய்து வரும் அரசியலை விமர்சித்து அலசும் கட்டுரை இது.

 

திராவிட கட்சிகளும், முஸ்லீம் லிக்கும்: ஜின்னா பெரியாருக்கு என்றுமே அரசியல் ரீதியில் உதவியது கிடையாது. ஆனால், பெரியார் தாம் தேவையில்லாமல், ஜின்னாவிடம் போய் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜின்னாவே பெரியாருக்கு வெளிப்படையாக கடிதமும் எழுதி விட்டார். தான் முஸ்லீம்களுக்காகத்தான் போராட முடியுமே தவிர முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முடியாது என்று தெரிவித்தார்[1]. அதுபோல திகவிற்கு பிறகு திமுக முஸ்லீம் லிக்குடன் நெருக்கமாக இருந்தாலும், திமுக தான் முஸ்லீம்களுக்கு நண்பன் என்று காட்டிக் கொள்ள உபயோகப் பட்டதே தவிர, முஸ்லீம் லீக்கினால் திராவிட கட்சிகளுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது என்றதை அவர்கள் தாம் கூறிக்கொள்ள வேண்டும்.

 

முஸ்லீம் லீக்குகள் கட்சிகள் பிரிந்திருந்தாலும் சாதிக்கும் நிலை: முஸ்லீம்களுக்குள் இறையியல் ரீதியில், இனம், மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பலவித காரணிகளால் பற்பல வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் பிரச்சினை என்று வரும்போது, ஒன்றாக வேலை செய்து வருகின்றார்கள். இந்தியா இரண்டாவதற்கு காரணம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தான் என்று காட்டுவது சரித்திரம். என்னத்தான் இந்தியா செக்யூலரிஸத்தில் ஊறினாலும், பாகிஸ்தான் மதவாதத்தில் திளைத்தாலும், பாதிக்கப்பட்டுள்ளது இந்துக்கள்தாம் என்பது அந்தந்த நாட்டு சரித்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன[2]. இந்தியாவில் முஸ்லீம்கள் எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இந்துக்கள் மிருகங்கள் போல் வேட்டையாடப் படுகிறார்கள்[3]. இந்நிலையில், முஸ்லீம் கட்சிகள் பிரிந்துள்ளது போல காட்டிக் கொண்டு, இரண்டு அணியிலும் பங்குகளைக் கேட்டு தமது அரசியல் பலத்தைப் பெருக்கவே வழிகண்டு வருகின்றனர். ஆனால், வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொள்கின்றன[4]. மொத்தத்தில் ஆறு இடங்களை முஸ்லீம் கட்சிகள் பெற்றுவிட்டன. வெற்றிபெற்றதும், அவர்கள் ஒன்றாகத்தான் வேலை செய்யப் போகிறார்கள்.

 

திராவிட கட்சி கூட்டணிகளில் முஸ்லீம் லீக்குகள்-கட்சிகள்: அதிமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிகள் உள்ளன. திமுகவிலும் உள்ளன. “அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்…………..மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக வந்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்[5].  மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது[6]. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்[7]. இருப்பினும், திமுகவில் உள்ள முஸ்லீம் கட்சிகள் வேறுவிதமாக பேசுகின்றன.

 

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[8]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார்.

 

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சசதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

 

முஸ்லிம் லீக் கட்சிகளின் இணைப்பு (10-03-2011): இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புடன், திருப்பூர் அல்டாப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் இணைப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது. இது குறித்து காதர் மொய்தீன், அல்டாப் ஆகியோர் கூறியதாவது: “முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காகவும், அரசியல் களத்தில் ஒருங்கிணைந்த சக்தியாக தி.மு.க., கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்”, என்றனர்[10]. 2002ல் நடந்த ஒரு நிகழிச்சி இங்கு நினைவிற்கு வருகின்றது.

 

அதிமுகவுடன் தங்கள் கட்சி வைத்திருந்த உறவு முறிந்து விட்டதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்சுலைமான் சேட் கூறினார் (05-05-2002). சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது[11]: வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் மறைவு காரணமாகவே தற்போதுஅத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தொகுதியை இந்திய தேசிய லீக்கிற்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பரிசீலனை செய்வதாக அப்போது அவர் உறுதியளித்தார். ஆனால் பாரம்பரியமாகவே முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முஸ்லீம்கள் அல்லாத ஒருவரைஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்துள்ளார். எங்களுடைய எந்த ஆலோசனையையும் கேட்காமலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதால், அதிமுகவுடனானஎங்கள் உறவை நாங்கள் துண்டித்து விட்டோம். முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறிய ஜெயலலிதா, தற்போது அந்தக் கட்சியுடன் உறவுவைத்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருப்பதும் எங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளது. வாணியம்பாடியில் எங்கள் கட்சி போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார்.

 

அரசியல் கட்சிகளிம் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசாட்ர்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

11-03-2011


[1] கே. வி. ராமகிருஷ்ண ராவ், ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் (3), ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதம், பம்பாய், ஆகஸ்டு 17, 1944, http://www.thinnai.com/?module=displaystory&story_id=209011514&format=print&edition_id=20090115

[2] இந்துக்களை ஒழித்துக் கட்டியதன் மூலம் பாகிஸ்தான் சிறுபான்மையினயை பிரச்சினையை அரவே ஒழித்துவிட்டடு போலும்!

[3] இதைப் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரைகளில் இணைதளத்தில் பார்க்கலாம்.

[5] தினமலர், 234 தொகுதிகளிலும் அதிமுக.,கூட்டணி பெறும் : தமுமுக பொது செயலாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195519

[6] அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட், http://pfikaraikal.wordpress.com/2011/02/22/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/

[7] தினமலர், மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/news_Detail.asp?Id=195461

[8] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[10] தினமலர்,  முஸ்லிம் லீக் அமைப்புகள் இணைப்பு,  மார்ச் 11, 2011,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203425