Archive for the ‘திப்பு ஜெயந்தி’ category

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (6)

நவம்பர் 13, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (6)

லூயிஸ் ரைஸ் - திப்பு பற்றி

லூயிஸ் ரைஸ் – திப்பு பற்றி

ஶ்ரீரங்கப்பட்டிடனும், திப்பு சுல்தானும்: லூயிஸ் ரைஸ் என்ற சரித்திராசிரியர் குறிப்பிடுவதாது, “திப்பு இறந்த போது, ஶ்ரீரங்கப்பட்டன கோட்டை வளாகத்தில் தினமும் பூஜை செய்யப் படும் வகையில் இரண்டே கோவில்கள் தாம் இருந்தன. அவைகூட, அவனது ஜாதகத்தைப் பார்த்து அவனுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பவற்றை சொல்லும் ஜோதிடர்களுக்காக விட்டு வைக்கப்பட்டன. மதுவிலக்கு விசயமாக வருவாய் குறைந்ததால், அதனை சரிகட்ட ஒவ்வொரு இந்து கோவிலும் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றின் செல்வம் அபகரிக்கப்பட்டது”[1]. இதுதான் திப்பு சுல்தான் கோவில்களுக்கு மானியம் அளித்த லட்சணம். எம். எச். கோபால், “முசல்மான்களுக்கு வீட்டுவரி, தானியங்களின் மீதான வரி, மற்றும் விற்பனைக்கு என்றெல்லாத பொருட்கள் என்று அனைவற்றிற்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் தலைநகருக்கு அனுப்பப்பட்டனர். முகமதிய மதத்திற்கு மாறியவர்களுக்கு மட்டும் வரிவிலக்கு போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டன. திவான் பூர்ணைய்யாவைத்தவிர மற்ற எல்லா இந்துக்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முசல்மான்கள் பதவிக்கு அமர்த்தப்பட்டனர். வருவாய்துறையில் பாரசீக மொழியில் கணக்குகள் எழுதப்படும் முறை நுழைக்கப்பட்டது. அதுவரை கன்னடத்தில் தான் எழுதப்பட்டு வந்தது, பிறகு வேண்டியவர்களுக்கு மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டது”, என்று எடுத்துக் காட்டுகிறார்[2]. பிரமிளா நெசர்கி (Pramila Nesargi) என்ற பெண்ணிய மகளிர் அமைப்பு தலைவியும், இத்தகைய சரித்திர உண்மைகளை, டிவி-விவாதங்களில் எடுத்துக் காட்டினார். கன்னடத்தை மதிக்காதவனுக்கு எப்படி மதிப்பு கொடுக்கலாம் என்று கன்னடர்கள் பொதுவாக கேட்கிறார்கள்.

இந்தியாவில் வெடிமருந்து- 1000லிருந்து

இந்தியாவில் வெடிமருந்து- 1000லிருந்து

திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் போன்ற வாதம்: இந்தியாவில் கோவில் திருவிழாக்களில் ராக்கெட்டுகளை விட்டார்கள், மேலே சென்று பலவித வண்ணங்கள் பொழிந்தன, என்று ஒரு இத்தாலிய அறுவைசிகிச்சை வல்லுனர் தமிழகத்திற்கு வந்தபோது, பார்த்ததை, தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். வெடியுப்பு, கந்தகம் மற்றும் கரித்துகள்கள் கலந்த பொடியை வாண-வெடிகளுக்கு பயன்படுத்தினர். வெடிமருந்து பாறைகளை உடைக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே உபயோகப்படுத்தப் பட்டது. சிற்பக்கலை, கோவில் கட்டுமான முறை, முதலியவற்றைக் கவனித்தால், 20-30 அடிகள் நீளம் கொண்ட பாறைகள் எவ்வாறு பிளக்கப்பட்டு, அறுக்கப்பட்டு அல்லது நீளத்தில் உடைக்கப்பட்டு தூண்களாக வடிக்கப்பட்டன என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கிணறுகள், ஆழ்கிணறுகள், படிகட்டுகள் கொண்ட ஆழ்கிணறுகள், முதலியவற்றைக் காணும் போதும், வெடிமருந்து உபயோகம் இந்தியாவில் இருந்தது அறியலாம்[3]. மேலும் “வெடியுப்பு” [Potassium Nitrate] என்பதும் அறியப்பட்டிருந்தது. ராஜபுத்திரர்களிடமிருந்து, முகல்களுக்கும், முகல்களிடமிருந்து மற்றவர்களுக்கும் இந்த நுட்பம் பரவியது[4].  அரேபியர்கள் மூலம் ஐரோப்பவிற்கு பரவியது. இடைக்காலத்தில் “வெடியுப்பு” (Saltpetre) இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பிய கம்பனிகள் இதில் ஈடுபட்டிருந்தன. இந்த “வெடியுப்பு” பீரங்களில் வைத்து வெடிக்கப்பட்டு, போரில் உபயோகப்படுத்தப் பட்டன. இந்தியா வெடிமருந்தை, ராக்கெட் போன்றவற்றை அடுத்தவறைக் கொல்வதற்குப் பயன்படுத்தவில்லை. ஏனெனில், பாறைகளை உடைத்து, சாலைகள் போடுவது, கிணறுகள் தோண்டுவது, கோவில்களுக்கான பாறைகளை விநியோகம் செய்தல் என்ற முறைகளில் ஈடுபட்டதனால், அத்தகைய வன்முறை காணப்படவில்லை.

Tipu satanic ring - Was it Ram or Rahim or Allah- fact or myth-making in process

Tipu satanic ring – Was it Ram or Rahim or Allah- fact or myth-making in process

திப்புவின்ராம்பொறித்த மோதிரம்: ஜூலை.27, 2012 அன்று ஆர்தர் சோமர்செட் காலமானபோது, “ரக்லான் சேமிப்பை” காப்பாற்ற வேண்டும் என்ற பிரச்சாரம் இங்கிலாந்தில் நடந்தது[5]. அதில் இருந்தது தான், திப்பு அணிந்ததாக சொல்லப்படும் மோதிரம் என்று தெரிய வந்தது[6]. நவம்பர்.15, 1793 தேதியிட்ட கடிதத்தில், திப்பு, சங்கராச்சாரியாரிடமிருந்து பெற்ற நகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். ஆகவே, அவரிடத்திலிருந்து பெற்ற நகைகளில் மோதிரமும் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்ட, மோதிரத்தை பாதுகாப்பிற்காக, தனது விரலில் அணிந்திருக்கலாம்[7]. அம்மோதிரத்தை தலைகீழாக வைத்துப் பார்த்தால், அதே எழுத்துகள் “அரேபிக்” போன்றே காணப்படுகிறது. அதாவது, அது “ரஹீம்” அல்லது “அல்லா” போன்றே தெரிவதால், ஒருவேளை, அத்தகைய மோதிரத்தை அணிந்திருந்தான் எனலாம். மேலும், 2012லிருந்து தான் இதை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்றும், ஆஸம் கான், திப்புவைப் பற்றிய சர்ச்சைகளையெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாதது போல, மோடியை லண்டனிலிருந்து, அந்த மோதிரத்தைக் கொண்டு வாருங்கள், என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது[8]. தினம்-தினம் எத்தனையோ பேர் லண்டனுக்குச் சென்றுவருகிறார்கள். ஏன் இவரே சென்றிருக்கலாம், ஆனால், மோடியை வாங்கி வரச்சொல்வது, நக்கல்தான் என்று தெரிகிறது. மேலும் கத்தியை வாங்கிவந்த, மல்லையாவை வாங்கி வரச்சொன்னால், சரியாக இருக்கும். ஆகவே, இனி கம்யூனர் அரசியல்வாதிகள், தொடர்ந்து செக்யூலரிஸ விளையாட்டுகள் ஆடிக்கொண்டிருப்பார்கள் எனலாம்.

Sankaracharya and Tipu

Sankaracharya and Tipu

செக்யூலரிஸ மாயையில் சிக்கி உழலும் இந்துகள்: திப்பு சுல்தான் மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார் நட்பு, உறவு மற்றும் குரு-சிஷ்ய விவகாரங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. அப்பவித்தனமான, எதையும் நம்புகின்ற, ஏமாளித்தனமான இந்துக்கள் வேண்டுமானால் நம்பலாம், ஆனால், மற்ற எவரும் நம்பத்தகும் விதத்தில் இல்லை. செக்யூலரிஸ முறையில் இதனை விளக்க வேண்டுமானால், இக்காலத்தில் தேர்தலில் எப்படி “இந்துக்களாக” இருந்தாலும் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு போரிடுகிறார்களோ, முன்னரும், இதேபோல மராத்தியர் மற்ற தென்னிந்திய அரசர்கள் சண்டையிட்டு வந்தார்கள். ஐரோப்பிய சக்திகளை ஒழித்து, இந்திய அரசை நிறுவவேண்டும் என்று மராத்தியர் பாடுபட்டனர். அவ்விதத்தில், அவர்கள் மைசூரின் மீது படையெடுத்தனர். இக்காலத்தில் எப்படி சங்கராச்சாரியார்கள் காங்கிரஸ், பிஜேபி, என்று பல கட்சிகள் / கூட்டணிகளை ஆதரித்து வருகிறார்களோ, அதுபோல 1790 காலத்திலும், சிருங்கேரி சங்கராச்சாரி திப்புவை அதரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை எனலாம். இன்று கூட மதுரை ஆதீனம், கருணாநிதி, வீரமணி போன்றோருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களிடம் பயந்து சாகிறார். ஆகவே, இந்துக்களை வைத்தே, இந்துக்களுக்கு எதிராக, இப்படியொரு யுக்தி மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆராய வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-11-2015

[1] The British historian Lewis Rice who wrote the History of Mysore and Coorg says how in the “…vast empire of Tipu Sultan on the eve of his death, there were only two Hindu temples having daily pujas within the Srirangapattanam fortress. It is only for the satisfaction of the Brahmin astrologers who used to study his horoscope that Tipu Sultan had spared those two temples. The entire wealth of every Hindu temple was confiscated before 1790 itself mainly to make up for the revenue loss due to total prohibition in the country.”

[2] Equally, MH Gopal in his Tipu Sultan’s Mysore: An Economic History says that, “Mussulmans were exempted from paying the house tax and taxes on grain and other goods meant for their personal use and not for trade. Christians were seized and deported to the capital, and their property confiscated. Converts to Islam were given concessions such as exemption from taxes…[Tipu] removed Hindus from all administrative posts and replaced them with Mussulmans with the exception of Diwan Purnaiah…Another change was the introduction of Persian as the medium of accounts in the revenue department. It was so far the practice in Mysore…to make out the revenue accounts in Kannada, fair copies of which were communicated to the amildars who had them translated into Marathi.”

[3] RusellM.S, Chemistry of Fireworks, Springer, 2009, Chapt.1, p.4, 7.

[4] Jermy Black, War in the Early Modern World 1450-1815, Routledge, Taylor & Francis Group, 1999, see.chapter – 5. Warehouse and gunpowder in India c.1000-1850, pp.105-128.

[5] http://www.raglanrescue.co.uk/

[6] http://www.christies.com/lotfinder/jewelry/an-indian-antique-gold-ring-5797668-details.aspx?from=searchresults&intObjectID=5797668&sid=7670f99f-f845-4665-92ca-046be3886694

[7] Of particular interest to the subject of the ring is a letter from Tipu to the Shankaracharya dated November 15, 1793 where he offers his salutation to the Guru and acknowledges receipt of jewellery from the Guru, a Sirapecha, Kalgi (both turban ornaments) and a pair of shawl. So we now know that  exchange of gifts was not just from Tipu Sultan to the Guru but also the other way round. Such a gift as this inscribed ring from the Guru would be treasured by the Sultan and kept as an auspicious token among his dearest possessions. Lord Rama is also called as ‘Maryada Purushottam Rama’; Maryada meaning ‘epitome of  ethical behaviour’ and Purushottam meaning ‘first among men’. Rama was a God and the Sultan but a man. If the Sringeri Shankaracharya did send this ring to Tipu, perhaps he was only pointing to Tipu an ideal that an earthly monarch should aspire for.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[8] http://www.hindustantimes.com/india/bring-back-tipu-sultan-ring-bearing-lord-ram-s-name-azam-to-modi/story-hCpxN8Zq04NR03BtxGwXCK.html

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

நவம்பர் 12, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

ஜெயந்தி கூட்டத்தில் பேசிய விவரங்கள்: சித்தராமைய்யா, கிரிஸ் கார்னாட், பரகூரு ராமசந்திரப்பா, கோ சன்னபசப்பா, பேராசியர் சியிக் அலி, என்.வி. நரசிம்மைய்யா, விரப்ப மொய்லி, முதலியோர் திப்புவைப் புகழ்ந்து பேசினர். கிரிஸ் கார்னாட், திப்பு ஒரு இந்துவாக இருந்திருப்பின், சிவாஜி போன்று இடத்தைப் பெற்றிருப்பான், போற்றப்பட்டிருப்பான் என்று ரீதியில் பேசினார்[1]. அதுமட்டுமல்லாது, “தீபாவளி நாங்கள் திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறோம், இதை நாங்கள் பிஹார் நாள் என்று கூட கொண்டாடுகிறோம்”, என்றெல்லாம் தொடர்ந்து பேசினார். “பெங்களூரில் தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்”, என்றெல்லாம் கூட பேசினார்[2]. சித்தராமைய்யாவும் அவர் பேசியதை ஆமோதித்துப் பேசினார். மற்றவர்களும் திப்பு சுல்தான் செயூலரிஸ ஆட்சியாளர், கோவில்களுக்கு மானியம் வழங்கினான் போன்ற வழக்கமான விசயங்களை அள்ளி வீசினர். அவர்கள் பேசியதெல்லாம் திப்பு ஜெயந்தியை நடத்தினர் என்பதை விட, இந்த சாக்கை வைத்துக் கொண்டு, பிஜேபியைத் தாக்குவதும், இந்துக்களைக் கிண்டல் செய்வதுமாக இருந்தது. இவற்றையெல்லாம் மற்றவர்கள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்: கிரிஸ் கார்னாட் இவ்வாறு சொன்னது, எல்லோரையும் உசுப்பி விட்டுள்ளது.  முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிஷ் கர்னாட் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவரது உளறல்களுக்கு எதிராக நிறைய பேர் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்[3]. குறிப்பாக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான்[4], தான் பேசியதனால் ஏற்பட்டுள்ளா பாதிப்பை உணர்ந்தார் போலும். இதனால், அரண்டு போன கிரிஸ் கார்னாட் புதன் கிழமை 11-11-2015 அன்று[5], “என்னுடைய விமர்சனத்தினால், யாராவது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்……..நான் என்ன பலனைப் பெறப்போகிறேன் (அவ்வாறு விமர்சனம் செய்ததனால்)”, என்று சொன்னதிலிருந்தே, அவரது குற்ற உணர்வும், அதிகப்பிரசங்கித் தனமாக உளறியதும் மற்றும் விரக்தியும் வெளிப்பட்டது. மேலும், சித்தராமையா, “கிரிஸ் கார்னாட் அவ்வாறு பேசியது தப்புதான். …..அவர் ஏன் அத்தகைய விமர்சனம் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் அவ்வாறு பேசியபோது அங்கிருந்தேன். அவர் சொன்னதை மறுத்துப் பேச நினைத்தேன். ஆனால், நான் செய்யவில்லை”, என்று சொன்னதிலிருந்துதான்[6], பிரச்சினையை எந்த அளவுக்கு வகுப்புவாத, ஜாதீய முறையில் மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பியது வெளிப்படுகிறது. அங்கு விழாவின் போது, இவர் ஆதரித்துப் பேசியைதைக் கவனிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது, “அந்தர்-பல்டி” அடிக்கிறார்! அடித்தது, தங்களையே திரும்ப அடிக்கும் நிலை வந்ததை உணர்ந்து ஜகா வாங்கியிருப்பதும் தெரிகிறது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது: கர்நாடகாவில் இவ்வாறு பல இடங்களில் எதிர்ப்பு, போராட்டங்கள் என்று நடந்த வேளையில், தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது[7]. தக்ஷிண கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம். மேலும், இதற்கு சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி [SDPI] என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் செய்தது. அவ்விழாவில் பேசியவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்றிருந்தாலும், சொல்லி வைத்தால் போல, திப்புப் புராணம் பாடியுள்ளது, தமாஷாக இருந்தது எனலாம். அதற்குள், மரடிகேரியில் முஸ்லிம்கள் அனுமததீல்லாமல் ஊர்வலம் நடத்தியுள்ளதாக பிஜேபி குற்றஞ்சாட்டியுள்ளது[8]. ஒரு நபரைப் பற்றி சர்ச்சைகள் உள்ளான என்றபோது, அறிந்தே, அந்நபரது ஜெயந்தி என்று அரசே தீர்மானித்து நடத்தியிருப்பது, மக்களை தூண்டிவிடும் போக்குதான் காணப்படுகிறது. மேலும் பொறுப்புள்ளவர்கள், பொறுப்பற்ற நிலையில் பேசியும் தெளிவாகியுள்ளது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால், ஞானபீடம் விருது வாங்கியவருக்குஙென்ன பேசுகிறோம் என்று தெரியாமலா பேசினார். இவ்வளவு நடந்தும், ஒரு முஸ்லிம் சார்புடைய தளம், “திப்பு ஜெயந்தியை” ஆதரித்து பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்[9]. ஆற்றோரம்.காம் என்ற தளம் சொல்லியிருப்பதை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையாகாவி கயவர்களின் சதியை முறியடித்த கர்நாடக அரசு! சங்பரிவாருக்கு அஞ்சாமல்  “திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்தது![10]: “இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் நடத்தியவரும்,ஆங்கிலேயரை முதன்முதலாக துணிச்சலுடன் எதிர்கொண்ட மாவீரரான திப்பு சுல்தானை மக்கள் மறந்தாலும்,கர்நாடக அரசும் அதன் குடிமக்களும் மறப்பதில்லை.காரணம் திப்பு சுல்தான் பிறந்த வீரமண்தான் கர்நாடக மாநிலம் மைசூர் அவருடைய தியாகத்தை போற்றுவதற்காக வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம். இதை கண்டு பொறாமைப்பட்ட சங்பரிவாரக் கும்பல்கள் அவ்விழாவினை கொண்டாடும் மக்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். 10-11-2015 ன்று தலைநகர் பெங்களூரில் விதான்னா சௌதா பகுதியில் அமைந்திருக்கும் பேண்குவைட் மஹாலில்திப்பு ஜெயந்திவிழாவினை ஊர்மக்கள் ஒன்றுகூடி நடத்தவிருந்தனர். இவ்விழாவிற்கு சங்பரிவார கயவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் கர்நாடக அரசாங்கமே முழு களமிறங்கி அம்மஹாலில் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இணைந்து விழாவினை சிறப்போடு நடத்தி முடித்தனர். அவ்விழாவில் திப்பு சுல்தானின் வீரமும், தியாகமும், இந்தியாவிற்காக அவர் பாடுபட்ட பொதுநலனையும் அதிகாரிகள் பேசினர்! மேலும்,அடுத்த வருடம் முதல் பெருவாரியான மண்டபங்களில் திப்பு ஜெயந்தி விழாவினை அரசே ஏற்று நடத்தும் எனவும், அதற்கு மிரட்டல் விடும் சமூக விரோதிகளுக்கு கடுங்காவல் தண்டனக அளிக்கப்படும் எனவும் அவ்விழாவில் ஆட்சியாளர்கள் உறுதி கூறினர்!” ஆக, நாங்கள் ஷிர்கை ஆதரிக்கிறோம் என்கிறார்களா முஸ்லிம்கள்?

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம்: ஆற்றோரம்.காமலிந்த அளவுக்கு பொய் சொல்வது, செக்யூலரிஸம் கொடுத்த லைசென்ஸ் போலிருக்கிறது. முன்பு 2012ல் கேரளாவில் மாத்ரு பூமி இதழில் சரித்திர உண்மைகளை எடுத்துக் காட்டியபோது “டுசர்கிள்ஸ்நெட்” என்ற முஸ்லிம் இணைதளம் அதனைக் கடுமையாக சாடியது[11]. ஆக, முஸ்லிம்கள் தங்களுக்குள்ள முரண்பாடுகளை வேண்டுமென்றே காபிர்களை வைத்து கலவரங்களை உருவாக்கி, இந்துக்களை இத்தகைய “புதிய ஜிஹாத்” அல்லது “செக்யூலரிஸ ஜிஹாத்” மூலம் கொன்று வருகிறார்கள். இங்கும் அந்த “ஷிர்க்” முரண்பாடு வருகிறது. திப்புவை “ஹஜரத்” ஆக்கி. “பிறந்த நாள்” கொண்டாடுவோம் என்பது, எந்த விதத்தில் ஆசார இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. திப்புவின் முகமே முரன்பாடாக உள்ளது. அதாவது கருப்பு நிறம் மற்றும் குரூர தோற்றத்தில் உள்ள அவனது முகம், உருமாறி, நிறமாறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு மாற்றுவதை எப்படி சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒரு பெரிய மோசடியாகும். சரித்திரவரவியலில் இந்த அளவுக்கு மோசடிகளை செய்து, ஒரு குரூரக் கொடுங்கோலனிடமிருந்து, ஒரு புலியை உருவாக்கியுள்ளது மிகப்பெரிய சரித்திர மோசடி எனலாம்.

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

திப்புவை ஏன் பர்காவும், என்டிடிவியும் ஆதரிக்கின்றன?: சரதிந்து முகர்ஜி (இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசெர்ச்), “காங்கிரஸ் டிப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதின் மூலம் ஜிஹாதை ஊக்குவிப்பது போலிருக்கிறது”, என்று என்டி-டிவி விவாதத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்பொழுது, பர்கா தத் என்ற பெண்மணி, நக்கலாக, என்ன இதை அரசியல்படுத்தும் முறையில் பேசுகிறீர்களே என்று தனது கருத்தை வைத்தார்[12]. மேலும் “In a controversial statement, NDA government-appointed member of Indian Council of Historical Research Saradindu Mukherji says, “Congress is trying to promote jihad” by celebrating birth anniversary of Tipu Sultan”, என்று அந்த இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 60 ஆண்டுகளாக அரசுசார்ந்த நிறுவனங்களில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் சார்புடையவர்கள் தான் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்பொழுது மட்டும், ஏதோ புதியதாகக் கண்டு பிடித்த விதத்தில் இவ்வாறு குறிப்பிடுவதும், பர்கா நக்கலாக பேசுவதும் கவனிக்கத்தக்கது[13]. NDTV-Hindu சேர்ந்து டிவி செனல் நடத்துவதும், அவை தொடர்ந்து இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருவதும், உள்ள பிரச்சினையை ஊக்குவிப்பது போலத்தான் உள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

12-11-2015

[1] தைஜி.வார்ல்ட், Bengaluru: Tipu would have enjoyed status of Shivaji if he was a Hindu: Karnad, நவம்பர்.10.2015.

[2] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367915

[3] http://www.thehindu.com/news/cities/bangalore/protests-over-tipu-jayanti-continues-bjp-targets-karnad/article7866212.ece?ref=relatedNews

[4] http://www.thehindu.com/news/cities/bangalore/girish-karnads-remarks-on-tipu-create-a-stir/article7866381.ece?ref=relatedNews

[5] ….the noted playwright and actor sought to end the controversy, saying, “If anybody has been hurt by my remarks, I apologise… what will I gain by doing it (by making such comments).”

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[6] Mr. Siddaramaiah also said it was a mistake on the part of the Jnanapith award winner to have made such remarks. “It is a mistake. I have told you,” he said. “I do not know why Girish Karnad made such a remark. I was also there (when he made the remark), I wanted to counter but I did not do,” he said.

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[7] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367842

[8] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367973

[9] http://www.aatroram.com/?p=35379

[10] ஆற்றோரம்.காம், திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையா, BY ஹாரிஸ் அஹ்மது ON NOVEMBER 11, 2015

[11] http://twocircles.net/2012nov16/attempts_distorting_history_tipu_sultan.html#.VkPokNIrJdg

[12] NDTV, It’s Jihad by Congress to Celebrate Tipu: Government-appointed Historian,  PUBLISHED ON: NOVEMBER 10, 2015 | DURATION: 2 MIN, 01 SEC 66

[13] http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/it-s-congress-jihad-to-celebrate-tipu-sultan-govt-appointed-historian/390428

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

திப்பு ஜெயந்தி - சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

United Christian Association எதிப்பு-06-11-2015

United Christian Association எதிப்பு-06-11-2015

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும்.  மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.

[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html

[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[4]  தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.

[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.

http://www.business-standard.com/article/news-ians/one-dead-in-clash-over-tipu-sultan-anniversary-115111000719_1.html

[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470

[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.

http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/

[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.

http://www.mangalorean.com/mangaluru-uca-stages-protest-against-state-governments-decision-to-celebrate-tipu-jayanti/

[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.

[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.

http://indianexpress.com/article/india/politics/tipu-sultan-jayanti-protest-vhp-activist-succumbs-to-injuries-in-karnataka/

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf

[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.

[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.

http://www.hindustantimes.com/india/vhp-leader-dies-in-clashes-over-tipu-sultan-s-birth-anniversary-celebrations/story-25FViLDz9rageQiTW9rtwK.html

[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.

http://www.thehindu.com/news/national/karnataka/one-dead-in-stone-pelting-in-kodagu/article7864756.ece