Archive for the ‘தாலிபன் நீதிமன்றங்கள்’ category
பிப்ரவரி 6, 2016
பட்கல் குடும்பமும், அர்மார் குடும்பமும்: வெடிகுண்டு தயாரிப்பும், ஐசிஸ் தொடர்புகளும் – இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதித்துவம் முதலியன!

சுல்தான் அர்மார் கொலையுண்ட பிறகு, ஷபி அர்மார் தலைவனாகிறான்: காரணம், இவரது சகதோரர் சுல்தான் சிரியாவில் நடந்த சம்டையின்போது கொல்லப்பட்டு விட்டார். இதனால் ஷபி வசம் அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன[1]. இந்தியா முழுவதும் ஐஎஸ் ஆமைப்புக்கு ஆட்களைத் திரட்டும் பணிக்காக பல்வேரு கிளைகளை உருவாக்கியவர் ஷபி. சமீபத்தில் இப்படிப்பட்ட ஆளெடுப்பு மையம் ஒன்றைக் கண்டுபிடித்தது உளவுப் பிரிவு. அதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மும்பையைச் சேர்ந்த முடாபிர் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் அர்மார் பேசிய பேச்சையும் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளெடுப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்மார். இதன் மூலம் ஆளெடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், வலுவான அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ்ஸை உருவாக்குவதே இவர்களின் முக்கியப் பணியாக, நோக்கமாக இருந்துள்ளது. மேலும் தனது சகோதரர் உருவாக்கிய அன்சர் உல் தவாஹித் அமைப்பின் பெயரையும் கூட ஜுநுத் அல் கலீபா இ ஹிந்த் என்றும் மாற்றியுள்ளார் அர்மார். இதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் காட்டமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என்பது அவரது எண்ணம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு தவணைளாக ரூ. 6 லட்சம் வரை ஆளெடுக்கும் பணிக்காக செலவிட்டுள்ளாராம் அர்மார்[2].
அர்மார் குடும்பமும், பட்கல் குடும்பமும்: பட்கல் சகோதரர்கள் எப்படி இந்திய முஜாஹித்தீன் ஆரம்பித்து, குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றார்களோ, அதே போல அர்மார் சகோதரர்களும் ஜிஹாதிகளாக இருந்தார்கள். அவர்களைத் தேடிச் சென்ற என்டிடிவி மற்றும் டைம்ச்ஸ்-நௌ இருவிதமான விவரங்களைத் தருகின்றன. என்டிடிவி பற்றியதை மேலே பார்த்தோம். டைம்ஸ்-நௌ நிருபர்களும் அர்மார் குடும்பத்தைத் தேடி பட்கல் நகரத்திற்குச் செல்கின்றனர். முதலில் நயாயத் காலனியில் தங்கியிருந்ததாக அறிந்ததால் அங்கு சென்றனர். ஆனால், அங்கிருந்து அர்மார் குடும்பம் மதீனா காலனிக்குச் சென்று விட்டதாக அறிந்தனர். உடனே, மதினா காலனி, இரண்டாம் குறுக்குத் தெருவில் அக்குடும்பம் தங்கியிருந்த வீட்டை அடைகின்றனர். ஆனால், இப்பொழுது வேறு யாரோ தங்கியிருக்கின்றனர். அவர்கள், அர்மார் குடும்பம் இங்கு தங்கியிருந்தது, ஆனால், இப்பொழுது இல்லை, மேலும் அவர்களைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர்[3]. அதாவது பட்கல் குடும்பம் போல, இந்த அர்மார் குடும்பமும், வீடு மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலிருந்து, அக்குடும்பமே அவர்களுக்கு உடைந்தையாக இருக்கிறது என்று தெரிகிறது. பேட்டிகளில் மட்டும், தங்களது மகன்கள்-மகள்கம் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுபவர்கள், இதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், குடும்பத்தார், குறிப்பாக திருமணம் ஆனவர்கள், மனைவிக்குத் தெரியாமல், இத்தகைய வேலைகளில் ஈடுபட முடியாது. மனைவி அமைதியாக இருக்கிறாள் என்றால், ஒத்துழைக்கிறாள் என்றாகிறது.
இவர்கள் இப்படி இருக்கலாமா? – பெற்றோர்-மற்றோர் ஏன் கண்டுகொள்ளவில்லை?: ஷபி அர்மானுக்குப் பிறகு காலித் அஹமது அலி கான் அல்லது ரிஸ்வான் [Khalid Ahmed Ali Khalid alias Rizwan, 20] என்பவன் இரண்டாவது தளபதியாக இருக்கிறான். மல்வானி என்ற இடத்தைச் சேர்ந்த அயஸ் சுல்தான் என்பவனை மூளைசலவை செய்தத்தில் இவன் முக்கிய பங்கு வகித்திருக்கிறான். அயஸ் சுல்தான் இப்பொழுது காணாமல் போயிருக்கிறான். மொஹம்மது அலீம் [Mohd Aleem (23)] இந்திராநகரிலிருந்து [லக்னௌ, உபி] பிடிபட்டுள்ளவன் இணைதளத்தின் மூலம் ஆட்களை சேர்ப்பது தெரியவந்தது. இவன் வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்புக் என்று எல்லாவற்றிலும் புகுந்து, இளைஞர்களை மூளை சலவை செய்து ஐசிஸ் பக்கம் இழுத்து, சேர்த்துள்ளான்[4]. இது தவிர,
- மொஹம்மது நபீஸ் கான் ஹைதராபாத்
- மொஹம்மது ஷரீப் மௌந்தீன் கான் ஹைதராபாத்
- மொஹம்மது அப்சல் பெஙளூரு
என்று கைது செய்யப்பட்டனர்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் “விஸ்வரூபம்“![5]: தமிழ்.ஒன்.இந்தியா, ரியாஸ் பட்கலுக்கு, நிறைய மரியாதைக் கொடுத்து எழுதியுள்ளது, “கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், யாரைக் கவர்ந்ததோ இல்லையோ, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்து விட்டதாம். இந்தப் படம், அல் கொய்தா அமைப்பின் இந்திய வருகையை அறிவிக்கும் படமாக அமைந்து விட்டதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் கருதினார்களாம். குறிப்பாக கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய இப்படத்தை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான ரியாஸ் பத்கல் அதிகம் விரும்பிப் பார்த்தாராம். அவருக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது இந்தியக் கிளை குறித்த அறிவிப்பை அல் கொய்தா வெளியிட்டது. இருப்பினும் அந்த அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அல் கொய்தாவின் வருகைக்கு முன்பாகவே அதுகுறித்து குறிப்பிட்டுள்ளார் ரியாஸ். விஸ்வரூபம் படத்தை மேற்கோள் காட்டி இதைக் கூறியிருந்தார் ரியாஸ்”.
“இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது” என்று விஸ்வரூபம் முன்னரே கணித்துவிட்டதாம்![6]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “ஒரு நேரத்தில் வலிமையான அமைப்பாக திகழ்ந்த இந்தியன் முஜாஹிதீன் தற்போது பிளவுபட்டு விட்டது. ஒரு பிரிவு அல் கொய்தாவுக்கும், இன்னொரு பிரிவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் ஆதரவாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ரியாஸ் பத்கல், பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவில் இருந்த தனியால் என்ற தனது கூட்டாளியுடன் சாட் செய்துள்ளார். அப்போது தான் விஸ்வரூபம் படம் பார்த்ததாக கூறியுள்ளார் ரியாஸ். அதாவது மார்ச் 25ம் தேதி அப்படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் முடிவில், இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது குறித்த வசனம் இடம் பெற்றதாகவும், அது உண்மைதான் என்றும், விரைவில் அது நடக்கப் போவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அன்றுதான் விஸ்வரூபம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது. தனது உரையாடலின்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களை விட சிறந்தவர்கள் என்றும் பாராட்டியுள்ளார் ரியாஸ்”.
ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள், பாகிஸ்தான் தலிபான்கள் என்று விமர்சித்த ரியாஸ் பட்கல்[7]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “அடி முட்டாள்கள் மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் குறித்தும், பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நிலவரம் குறித்தும் பேசியுள்ளார் பத்கல். இந்தியாவில் உள்ள நமது அமைப்பினர் அனைவரும் ஒன்று திரண்டு, நேட்டோ படையினருக்கு எதிராக, அல் கொய்தாவுக்கு ஆதரவாக தோள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் பத்கல். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும். அல் கொய்தாவுடன் இணைய வேண்டும் என்றும் பத்கல் கூறியுள்ளார். அதேபோல தனது சகோதரரான யாசின் பத்கலுடன் (அவர் பின்னர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விட்டார்) பேசிய பேச்சு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. யாசினுடன் நடந்த உரையாடலின்போது ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள் என்று காட்டமாக வர்ணித்துள்ளார் ரியாஸ் பத்கல். தன்னை ஐஎஸ்ஐ மோசமாக நடத்தியதாகவும், தான் அல் கொய்தாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அதேபோல பாகிஸ்தான் தலிபான்களை அடி முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார். 2013ம் ஆண்டு மே 11ம் தேதி தனது இந்திய அமைப்பினருடன் நடந்த பேச்சின்போது, பாகிஸ்தான் தலிபான்கள் அடி முட்டாள்களாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், இன்று காலை 5 குண்டுவெடிப்புகளை தெஹரிக் இ தலிபான்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் முட்டாள்களாக உள்ளனர். அவர்களுடன் இணைய நான் விரும்பவில்லை. நான் அல் கொய்தாவுடன் இணையவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரியாஸ்”.
வேதபிரகாஷ்
06-02-12016
[1] http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html
[2] Read more at: http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html
[3] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE
[4] The official said that Mohd Aleem (23), the IS suspect arrested from the city’s Indira Nagar area on Friday, was also recruited through a social networking site. “IS modules, still out of reach of intelligence and security agencies, are trying to expand their base in the state, especially west UP, using the same method,” he said.
http://www.hindustantimes.com/india/tech-for-intake-terror-outfits-go-online-for-hiring-new-recruits/story-OMpZiqBqZOU8Kfb83TaJxM.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் “விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].
[6] http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html
[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் “விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].
பிரிவுகள்: அமோனியம், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், கிலாபத், சவுதி, சவுதி அரேபியா, சவூதி அரேபியா, ஜமாத்-உத்-தாவா, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள்
Tags: அன்சார்-உல்-தௌஹீத், அர்மார், இந்துக்கள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, பாகிஸ்தான், புனிதப்போர், முகமதியர், முஜாஹித்தீன், முதாபீர் ஷேக், ஷபி அர்மார்
Comments: Be the first to comment
மே 25, 2013
“அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று கத்தி, நடுத்தெருவில் கோடலியால் வெட்டிக் கொன்ற தீவிரவாதிகள்!
2005ற்குப் பிறக்கும் நடக்கும் தீவிரவாதச் செயல்: ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். 2005 தாக்குதலுக்குப் பிறகு, சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிஸ்டுகளின் தாக்குதல் என்று அறியப்படுவதாக லண்டன் போலீஸார் கூறியுள்ளனர்[1]. அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவம், ஆப்கன் மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, 2005ம் ஆண்டு, பிரிட்டனில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐடிவியில் கட்டப்பட்ட வீடியோவில்[2], ரத்தக்கறைப் படிந்த கைகள், ஒரு கையில் கோடாலியுடன், அந்த தீவிரவாதி பேசுவது பயங்கரமாகத் தான் இருந்தது, “அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்”, என்று வெறிபிடித்தவன் போல பேசினான்.
நடுத்தெருவில் கழுத்தை வெட்டிய தீவிரவாதிகள்: பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை, இரு இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். சாலையில் பலர் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் இருந்த ராணுவ வீரர், என்ன, ஏது என கேட்கும் போதே, அவரை கீழே இழுத்து போட்ட அந்த நபர்கள், ஆட்டின் கழுத்தை நறுக்குவது போல, வீரரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3]. லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர்[4]. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்[5].
“அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் வேலையா என்ற சந்தேகம்: இங்கிலாந்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஆராய்ந்தால், ஐந்தில் ஒருவர் “அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் உறுப்பைனராக இருப்பது தெரிய வருகிறது[6]. அதுமட்டுமல்லாது, அத்தகைய குற்றங்கள் புரிந்து தண்டனைக்குள்ளானவர்களும் அந்த இயக்கரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்[7]. இன்று இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் செய்தித்துறை வல்லுனர்கள் உள்ளூர் தீவிரவாதம், உள்ளூரில் வளர்ந்த தீவிரவாதம், உள்ளூரில் வளர்த்து விட்ட தீவிரவாதம், என்று “இந்திய முஜாஹித்தீன்” போன்ற இயக்கங்களைக் குறிப்பிட்டு வருகின்றனர். எனவே அவ்வாறு பார்க்கும் போது, இது இங்கிலாந்தின் உள்ளூர் தீவிரவாதம் எனலாம். “அல்-முஹாஜிரோன்” முதலில் சவுதி அரேபிடயாவில் 1983ல் ஒமர் பக்ரி முஹம்மது என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் 1986ல் அதற்கு அங்கு தடைவிதிக்கப் பட்டவுடன், பக்ரி இங்கிலாந்துக்கு ஓடி வந்துவிட்டார்[8]. ஹிஜ் உத்-தஹ்ரீர் என்ற சர்ச்சைக்குரிய இயக்கத்தில் 1996ல் சேர்ந்தார், ஆனால், அது தனக்கேற்ற வகையில் தீவிரமாக செயல்படுவதில்லை என்று “அல்-முஹாஜிரோன்” என்ற தனது இயக்கத்தை ஆரம்பித்தார்[9]. இதற்கு தலைவராக அவரும், சௌத்ரி என்பார் துணைத்தலைவருமாக உள்ளனர். 11/9ற்குப் பிறகு “மிகச்சிறந்த 19” என்ற கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, அதில் ஜூலை 7 வெடிகுண்டு போட்டவர்களை “அபாரமான தீரர் 4” என்று போற்றிப் புகழ்ந்தார்[10]. அதாவது, அவ்வாறு உள்ளூர் தீவிரவாதத்தை வளர்த்தார்.
வெட்டிய தீவிரவாதிகள் பிடிப்பட்டது: நடப்பது சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என, அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கருதினர். ஆனால், கழுத்தறுக்கப்பட்ட ராணுவ வீரர், ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும், அலறினர். முதலுதவி ; இங்கிரிட் லோயா – கென்னட் என்ற பெண், ஓடிச் சென்று, கழுத்தறுபட்ட ராணுவ வீரரை தூக்கி, மடியில் கிடத்தி, உயிரைக் காப்பாற்ற, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார். இதனால், கோபம் கொண்ட அந்த இரு இளைஞர்களும், அவளை தாக்க முற்பட்டனர். ரத்தம் சொட்டும் கத்திகளுடன், அவர்கள், அந்தப் பெண்ணை அணுகினர். அவர்களைக் கண்ட, இங்கிரிட் லோயா, “நீங்கள் செய்தது படுகொலை; எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” என, கோபமாக கேட்டார். “இவன், ஆப்கன் சென்று, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தவன். அவனை பழிவாங்கவே இவ்வாறு செய்தோம். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண் அல்லா………. ,” என, கத்தினர்[11]. இவ்வாறு, லோயாவுக்கும், பயங்கரவாதிகள் இருவருக்கும், கோபாவேசமாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, தைரியம் அடைந்த சிலர், அந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில், சிலர், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றி வளைத்தவர்களை நோக்கி, ரிவால்வரை நீட்டிய இளைஞர்கள், சுட்டு விடுவதாக மிரட்டினர். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், நிலைமையை சட்டென புரிந்து, ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த இரு இளைஞர்களையும், காலில் சுட்டு, கீழே வீழ்த்தினர். உடனடியாக பாய்ந்து, கை விலங்கிட்டு, அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர். ஏராளமான ரத்தம் வெளியேறியதால், கழுத்தறுபட்ட ராணுவ வீரர், அந்த இடத்திலேயே இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், படுகாயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டேவிட் கேமரூன் நாடு திரும்பினார்: பிரதமர் திரும்பினார், சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். “கோப்ரா’ என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ முகாம்களுக்கும், ராணுவ கட்டடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் கூடும் இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. “ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது, பயங்கரவாத தாக்குதல் சம்பவம்’ என, பிரதமர், டேவிட் கேமரூன் அறிவித்ததும், லண்டனில் சில இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்தவர் மற்றும், பதிலுக்குப் பதில், வன்முறையில் ஈடுபட திட்டமிட்ட மற்றொருவர் என, இருவர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிரிட் லோயாவுக்கு நன்றி: பயங்கரவாதிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் தப்பாமல் தடுத்து நிறுத்திய, இங்கிரிட் லோயாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரால் தான், மேலும் சில வீரர்கள் படுகொலையில் இருந்து தப்பினர் எனக் கூறி, நன்றி கூறினர். இது குறித்து லோயா கூறும் போது, “நான் முன்னர், நர்சாக பணியாற்றியுள்ளேன் என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டேன். என்னை அவர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களுடன் கோபமாக பேசி, அவர்கள் கவனத்தை திசை திருப்பினேன். அவர்கள் வசம், ரிவால்வர் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த நான், அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ந்து பேச்சு கொடுத்தேன். இல்லையேல், அவர்கள் பலரை சுட்டுக் கொன்றிருப்பர்,” என்றார்.
[6] A study shows that one in five terrorists convicted in Britain over more than a decade were either members of or had previous links to the extremist group al-Muhajiroun. Telegraph, London dated Saturday 25 May 2013
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, 786, ஃபத்வா, அமைதி, அல்-முஹாஜிரோன், அவதூறு, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், சன்னி, சமரசப்பேச்சு, சுன்னி, சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், மதவிமர்சனம், மதவெறி, லண்டன்
Tags: அல்-முஹாஜிரோன்
Comments: 6 பின்னூட்டங்கள்
மார்ச் 22, 2013
தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8]. இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST
கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை
முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.
© வேதபிரகாஷ்
23-03-2013
[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.
[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.
[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.
[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கல்வீச்சு, கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், கொடி எரிப்பு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், பிதாயீன், மசூதி, மதரஸா, மதரஸாக்கள், மதவெறி, ரகசிய சர்வே
Tags: ஃபிதாயீன், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உபி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளே நுழைதல், ஊடுவல், காஷ்மீர இஸ்லாம், சமரசம், ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜிஹாதி தீவிரவாதம், தீவிரவாதம், நேபாளம், பிதாயீன், பெண் தீவிரவாதிகள், முஜாஹித்தீன், ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹிஜ்லி ஷரீப்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 3, 2013
1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்: டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?
© வேதபிரகாஷ்
03-03-2013
பிரிவுகள்: 1971, 786, ஃபத்வா, அசிங்கப்படுத்திய முகமதியர், அல்- பதர், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், அவுட் லுக், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஓட்டு, ஓட்டுவங்கி, கற்களை வீசி தாக்குவது, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், கிழக்கு மித்னாப்பூர், குரூரம், சிட்டகாங், சித்திரவதை, சிறுபான்மையினர், சிவன் கோவில் தாக்கப்பட்டது, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தஸ்லிமா, தஸ்லிமா நஸ்.ரீன், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், துப்பாக்கிச் சூடு, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், புனிதப் போர், மதவாதம், முக்தி வாஹினி, முஜிபுர், முஜிபுர் ரஹ்மான், ரஹ்மான், விடுதலை, ஷேக், ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Tags: ஃபத்வா, அமைதி, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இலங்கை, இலங்கைத் தமிழர், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம் ஜிஹாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கற்பழிப்பு, காபிர், குத்து, குரான், கொல், சிட்டகாங், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜமத்-இ-இஸ்லா, ஜமாத், ஜமாத்-இ-இஸ்லா, ஜிஹாதி தீவிரவாதம், டாக்கா, தமிழர், தலிபான், தாலிபான், நவகாளி, நௌகாளி, புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியர், முக்தி வாஹினி, முஜாஹித்தீன், முஜிபுர், முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், ரஹ்மான், வெட்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஹூஜி
Comments: 11 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 23, 2013
தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்
தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

ஐ.ஈ.டி. விவரங்கள்
கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?
கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்
மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவர்களை பிடிக்க முடியாதா?
வேதபிரகாஷ்
23-02-2013
[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.
[2] Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.
[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அசாதுதீன், அசாதுதீன் ஒவைஸி, அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், ஆப்கானிஸ்தான், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐதராபாத், ஒவைஸி, ஒஸாமா பின் லேடன், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கேரள ஜிஹாதிகள், கோவை, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டிடோனேடர், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தில்ஷுக் நகர், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், பட்கல், பட்டகல், பட்டக்கல், பலுச்சிஸ்தானம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, முஸ்லீம், மூளை சலவை, வங்காள தேசம், வயர் துண்டுகள், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், IED
Tags: அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜிஹாதி, ஜிஹாத், தாலிபான், நேட்டோ, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 8 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 13, 2013
குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

மக்களைக் கொல்லும் மாலிக்: யாஸின் மாலிக் ஒரு முஸ்லீம், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற இந்திய-விரோத, பிரிவினைவாத இயக்கத்தை நடத்தி வருபவன். கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தப் பின்னணியில் அவ்வியக்கத்தினர் உள்ளனர். இஸ்லாமாபாதில் நடந்த உண்ணாவிரத போராட்டதில், பயங்கரவாதி-தீவிரவாதி ஹாவீஸ் சையீத் கலந்து கொண்டுள்ளான். JKLF பேனர் பின்னால் இருக்கிறது. ஆகவே, அக்கூட்டத்தில் அவனைக் கலந்து கொள்ள அழைத்துள்ளாதத் தெரிகிறது. இருப்பினும், மாலிக் மறுத்துள்ளான்[1]. எதற்காக இதிய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, காந்தி கூட, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார் என்றான்[2].

நண்பர்களுடன் உல்லாசம்!

ஆட்டத்தில் கிக் ஏருகிறது போலும்!

அலேக்காக தூக்குதல்!

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[3]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

இருவரையும் பிரித்து விடுகின்றனர்!

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்[4]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[5]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[6]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.
வேதபிரகாஷ்
13-02-2013
பிரிவுகள்: அடிப்படைவாதம், அப்துல் கனில் லோன், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இஸ்லாம், உல்லாசம், ஓட்டு, ஓட்டுவங்கி, ஔரங்கசீப், கசாப், குடி, கும்மாளம், ஜல்ஸா, ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தீய சக்திகளை விரட்டுவது, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், நடனம்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், குடி, கும்மாளம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தாலிபான், தூக்கு, நடனம், புனிதப்போர், மாலிக், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீம்கள், யாஸின், லவ் ஜிஹாத்
Comments: 5 பின்னூட்டங்கள்
நவம்பர் 24, 2012
கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்
ஜிஹாத் தவறு என்றல் இனி ஜிஹாத நடத்துவது கூடாது: “அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன், என்னை மன்னியும். இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது” (“Allah kasam, maaf kar do. Chhod do, aisi galti dobara nahin hogi.”) என்று முணுமுணுத்தாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[1]. அதாவது அல்லாவின் பெயரால் ஜிஹாத் என்று “புனிதப் போரை” நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் – பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று கொன்று குவித்துவிட்டு, “இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது”, என்று பாவ மன்னிப்புப் போல கேட்டு முறையிட்டால் அல்லா மன்னிப்பாரா அல்லது இறந்த உயிர்கள் திரும்பக் கிடைக்குமா? அப்படியென்றால், இப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்கள் தவறு என்றாகிறது. எனவே பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் மற்றவர்களுக்கு இந்த உண்மையைச் சொல்லி அவர்களைத் திருத்த வேண்டும். அல்லாவின் பெயரால் தவறுகள் – இத்தகைய குரூரக் கொலைகள் நடப்பது ஏன்? இனிமேலாவது, தாலிபான், ஹிஜ்பு முஜாஹித்தீன், அல்லா புலிகள், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டு, குண்டுகள் வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வதை நிருத்துவார்களா?
ஜிஹாத் பெயரில் முஸ்லீம்கள் தீவிரவாதச் செயல்களை நடத்துவதை நிறுத்தி விட வேண்டும்: ஜிஹாத் என்பது முஹம்மது நபி காலத்தில் நடத்தப் பட்டது. அப்பொழுது அவருக்கு எதிராக செயல்பட்டவட்கள் தாம் காபிர்கள். எனவே இப்பொழுது அவர் பெயரால் அல்லது இஸ்லாம் / அல்லா பெயரால் ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது தவறு என்றாகிறது. உலகத்தில் முஸ்லீம் அல்லதவர்கள் எல்லோரும் அப்படி காபிர்கள் என்றாகி வுடமாட்டார்கள். அல்லா மன்னிக்கமாட்டார் என்றால், இனி இக்காலத்தில் ஜிஹாத் பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது நிறுத்தப்படவேண்டும். அப்பொழுது, உலகத்தில் உண்மையிலேயே அமைதி நிலவும். பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள், முல்லாக்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் அமைதியான இஸ்லாமை கடைபிடிக்க அறிவுரை சொல்லவேண்டும்.
கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்: தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்ற அமெரிக்கா, பாகிஸ்தான் ஒத்துழைப்புடன், பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்த ஒசாமா இன் லேடனை ரகசியமான முறையில், படை பலத்துடன் சென்று பிடித்தது, கொன்றது, ரகசியமாகவே எங்கோ அவனது உடலை புதைத்தது என்று தான் செய்திகள் வந்தன, வீடியோக்கள் காட்டப்பட்டன. ஆனால், இந்தியாவில், கசாப்பின் தூக்குத் தண்டனை, ஜனநாயக ரீதியில், வெளிப்படையாக நடத்தப் பட்டு, அவனுக்கு எல்லா வசதிகள் (கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு), உரிமைகள் முதலியவை கொடுக்கப்பட்டு (சட்டப்படி வக்கீல், மேல் முறையீடு முதலியவை), தூக்குத் தண்டனை வேண்டுமா-கூடாதா என்று ஊடகங்களில் விவாதம் செய்யப்பட்டு, ……………………கடைசியாக கொடுக்கப்பட்டது (இப்பொழ்ய்து கூட “தி ஹிந்து” வழக்கம் போல மாற்றுக் கருத்துக் கொண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது[2]). அதற்கு முன்னர் கூட, பாகிஸ்தானிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கே உலகத்தில் எல்லா உண்மைகளும் தெரிந்து விடுமோ என்று அவனது உடலைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இவ்விஷயத்தில் நிச்சயமாக, அமைதியை, சாந்தத்தை விரும்ம்பும் இந்தியா தனித்து நிற்கிறது. இதனை பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேதபிரகாஷ்
© 22-11-2012
[2] சயீது ஷா, ஜிஹாத் பூமியின் மத்தியில் ஒரு பெயரித் தேடி அலைந்தது, http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-name-in-jihadi-heartland/article4120446.ece; அதாவது இத்தகைய கருத்து சுதந்திரம் இந்தியாவில் தான் கொடுக்கப் படும், வேறெந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முஸ்லீம் / இஸ்லாமிய நாட்டில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
N. Venkatesan, Keeping the nation in dark, http://www.thehindu.com/opinion/lead/keeping-the-nation-in-the-dark/article4120378.ece
Editorial, The hangman’s justice, http://www.thehindu.com/opinion/editorial/the-hangmans-justice/article4120370.ece
Amruta Bayntal and Soumojit Banerjee, Kasab hangs, justice for 26/11 still elusive, http://www.thehindu.com/news/states/other-states/kasab-hangs-justice-for-2611-still-elusive/article4118491.ece
பிரிவுகள்: அச்சம், அடிமை, அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமெரிக்க ஜிஹாதி, அமைதி என்றால் இஸ்லாமா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்ஜமீன், அல்லா, அல்லா பெயர், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, கசாப், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தியாகப் பலி, துப்பாக்கி, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தொழுகை, பள்ளி வாசல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், vaginoplasty, X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம்
Tags: ஃபத்வா, அஜ்மல், அமெரிக்கா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒசாமா, கசாப், கயிறு, காஷ்மீரம், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தூக்கு, பாகிஸ்தான், புனிதப்போர், மன்னிப்பு, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், மொஹம்மது
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்