Archive for the ‘தஸ்லிமா’ category

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

ஓகஸ்ட் 26, 2016

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

காதர்பாட்சா மீது 8வது மனைவி புகார். தினகரன்

பலதார திருமணங்களில் பெண்கள் சிக்குவது விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது: பலதாரத் திருமணம் நடந்து கொண்டே இருப்பது, பெண்களின் பலவீனத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறாது, ஏனெனில், இப்படி, ஒரு ஆண், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. “வேலைக்குப் போகிகிறானா, இல்லையா?” என்று கூட தெரியாமல், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அவாற்றையும் மீறி, இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன எனும்போது, வியப்பாக இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணிடம் அவ்வளவு எளிதாக ஏமாந்து விடுவாளா என்று நினைக்கும் போது திகைப்பாக உள்ளது. அடிப்படையிலேயே ஏதோ தவறு-தப்பு இருப்பது தெரிகிறது. எந்த பெண்ணும் தனது கற்பை, தாம்பத்தியத்தை அவ்வளவு எளிதாகக் கொடுத்து விடமாட்டாள். அந்நிலையில், ஒரு பெண் தெரிந்து செய்கிறாள் என்றால், கற்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாகிறது. பிறகு, அது மிக்க தீவிரமான சமூகப் பிரச்சினையாகி விடுகிறது.

8 பேரை மணந்தவர் கைது - 23_08_2016_015_023

பலதார திருமணம் மற்றும் பணமோசடி என்ற குற்றங்களில் ஈடுபட்ட காதர் பாட்சா: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதர் பாட்சாவின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1] என்று இப்பொழுது – ஆகஸ்டில் தினமலர் செய்தி வெளியிட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், ஜூலை 25ம் தேதியே, இம்மோசடியில் சம்பந்தப்பட்ட காதர் பாட்சா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 24-07-2026 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[2]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[3] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

சலாமியா பானு மதுரையில் கொடுத்த புகார்: பிறகு எட்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு (28). இவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து அளித்த புகார் மனு[4]: “எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்[5]. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயாருடன் ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது[6].  கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[7].

 காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- 8வது மனைவி புகார்

ஜூன் 26.2016ல் காதர் பாட்சாவுடன் திருமணம்: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் தஸ்லிமா தனது உறவினர் பையன் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனது தாய், தந்தையரின் அனுமதி பெற்று தன்னை காதர்பாட்சா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்வதாக கூறினார். அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்[8]. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா (32). தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு ஜூன் 26.2016ல் திருமணம் நடந்தது”.  ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தஸ்லிமா தன்னை வற்புருத்தி கல்யாணம் செய்து வைத்தாள் என்கிறார்[9].

 8 பேரை மணந்தவர் கைது - Webdunia 22-07-2016

காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லைஎன்ற தோழி: சலாமியா பானு தொடர்கிறார், “அப்போது மணமகனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி நான் தஸ்லிமாவிடம் கேட்டேன். அதற்கு காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்றார். இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். 2 பேரும் எனது தாய் வீட்டில் / புதூரில் உள்ள எங்களது வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது கணவர் காதர்பாட்சா திருமணத்திற்காக வங்கியில் 40 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அப்போது அவர் வேலை விஷயமாக ஒரு வாரம் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தார்.

 8 பேரை மணந்தவர் கைது -தினகரன் - 22-07-2016

பணம், நகையோடு மாயமான காதர் பாட்சா:  சலாமியா பானு தொடர்கிறார்,திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார்[10]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட். 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை வி‌ஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்[11]. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, .டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். .டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதன்பின்னர் ரம்ஜானுக்கு முதல்நாள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது செல்போன்சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த 5 செல்போன் எண்களுக்கும் மாறி, மாறி போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று எனக்கு பயம் வந்து, தஸ்லிமாவிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் திண்டுக்கல்லில் மோசடி : தனிப்படை போலீசார் தேடல், ஆகஸ்ட்.22 2015: 23.56

[2] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1590948

[5] வெதுனியா, 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர், வெள்ளி, 22 ஜூலை 2016 (02:05 IST).

[6] தினத்தந்தி, நகை, பணத்துடன் மாயமாகி விட்டார்: 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 12:29 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 5:00 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-petition-on-her-husband-he-who-married-many-women-116072200004_1.html

[9] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[10] தமிழ்முரசு, 8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார், 23 Jul 2016

[11] http://www.tamilmurasu.com.sg/2016/07/23/216412367-3931.html

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

செப்ரெம்பர் 5, 2013

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1].

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்

சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[2]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[3]. இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[4].

© வேதபிரகாஷ்

05-09-2013


[2] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஓகஸ்ட் 11, 2012

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[1], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

‘Be Ready For A Third Wave Of Radicalization Among Muslim Youth’The Lok Sabha member from Hyderabad warned of the above “if proper rehabilitation does not take place”, while participating in a discussion on August 8, 2012 in the House on the recent Assam violence – ASADUDDIN OWAISI
http://www.outlookindia.com/article.aspx?281958

அவ்வாறு அவர் பேசிய வீடியோ பதிவை இங்கே காணலாம்[2]. மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும்போது, முதல் இரண்டு தடவை எப்பொழுது இந்தியர்கள் அவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஒவைஸி விளக்க வேண்டும். 1947 மற்றும் 1971 ஆண்டுகளை குறிக்கிறாரா அல்லது நடந்துள்ள தீவிரவாத நிகழ்சிகளைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியாகிலும் இந்தியாவை துண்டாடுவோம் என்று வெளிப்படையாகச் சொன்னதால், கூட்டிக் கெடுக்கும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.

டைம்ஸ் நௌ டிவி-செனலிலும் தான் பேசிய வார்த்தைகளை செத்தாலும் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்: மேற்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச நாடுகளினின்று முஸ்லீம்களின் சட்டத்திற்குப் புறம்பான, திருட்டுத்தனமான உள்நுழைவுகள் 1947லிருந்தே நடந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதனை ஊக்குவித்து வந்துள்ளார்கள். 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இதனால்தான், அசாம் கனசங்கிரம் பரிஸத் போராடியபோது, தேசிய குடிமகன்கள் பதிவுப்புத்தகத்தின் அடிப்படையில், அந்நியர்கள் / அயல்நாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அதை எதிர்த்து வருவது முஸ்லீம் இயக்கங்கள்தாம் என்பது வியப்பாகவுள்ளது[4]. 2005 போதும் எதிர்த்தன[5]. இப்பொழுது கூட, அந்த புத்தகத்தை புதுபிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்கின்றன[6].

இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

 

அசாம் ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரியும் விஷயங்கள்: அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பிரெட்னான்டஸ் இதனை எடுத்துக் கட்டியுள்ளார்[7]. கீழ்கண்ட அட்டவளணைகளினின்று முஸ்ளீம்கள் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்[8].

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
அசாம் 41.89 77.42 35.53 14.95 29.3 14.35
இந்தியா 53.25 73.04 19.79 20 29.3 9.3

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
மேற்கு வங்காளம் 21.05 36.67 15.62 14.26 26.1 11.84
இந்தியா 22.8 32.9 10.1 20 29.3 9.3

1961-1991 முப்பது ஆண்டுகள் காலத்தில் அசாமில் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

வருடம்

அசாம்

இந்தியா

இந்துக்கள் முஸ்லீம்கள் இந்துக்கள் முஸ்லீம்கள்
(i) 1951-1961 33.71 38.35 20.29 25.61
(ii) 1961-1971 37.17 30.99 23.72 30.85
(iii) 1971-1991 41.89 77.42 48.38 55.04

இதுதான் முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவல் செய்துள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அசாம் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் –  D. O. No. GSAG.3/98/ dated November 8, 1998, கீழ்கண்டவற்றைக் குறிப்பாக தெளிவு படுத்தியுள்ளார்.

  1. The growth of Muslim population has been emphasised in the previous paragraph to indicate the extent of illegal migration from Bangladesh to Assam because as stated earlier, the illegal migrants coming into India after 1971 have been almost exclusively Muslims.
  1. 21.  Pakistan’s ISI has been active in Bangladesh supporting militant movements in Assam. Muslim militant organisations have mushroomed in Assam and there are reports of some 50 Assamese Muslim youth having gone for training to Afghanistan and Kashmir.
20. முந்தையப் பத்தியில் முஸ்லீம் மக்கட்தொகை எண்ணிக்கை உயர்வு பற்றிச் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது, இது 1971ற்குப் பிறகு சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளவர்கள் எல்லோருமே முஸ்லீம்களாக உள்ளனர்.

  1. பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ பங்களாதேசத்தில் தீவிரவாத இயக்கங்களை ஆதரித்து செயல்பட்டு வருகிறது.  அசாமில் முஸ்லீம்  தீவிரவாத இயக்கங்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரத்திற்குச் சென்று 50 பேர் பயிற்சி பெற்று வந்துள்ளதும் தெரிகிறது

ஊடுருவும் அயல்நாட்டினரை அந்நியர்கள், இந்தியக் குடிமக்கள் அல்லர் என்று பார்க்காமல், அவர்கள் முஸ்லீம்கள் என்ற பார்வையில் பார்ப்பதில் தான் பிரச்சினைகள் வந்துள்ளன. பங்களாதேசத்து முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்று பார்ப்பதை விடுத்து அயல்நாட்டுக் காரர்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தவர்கள் என்று பார்க்க வேண்டும்[9]. இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பங்களாதேசத்திலேயோ, பாகிஸ்தானிலேயோ நுழைந்தால் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா? இதனை முஸ்லீம் தலைவர்கள் ஆதரிப்பார்களா?ஆனால், இந்தியாவில் நுழைந்தால் ஏனிப்படி துரோகத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? அப்படி சொன்னஆல் சோனியாவிற்குப் பொத்துக் கொண்டு வருகிறது? இவ்வளவு விஷயங்கள், புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், சோனியா காங்கிரஸ் ஓட்டு வங்கி, தேர்தல் என்ற கண்ணோட்டத்துடனே இருப்பதால், அனைத்தையும் அனுமதித்து இந்திய மக்களுக்கு தீங்கினை உண்டாக்கி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

11-08-2012


[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[5] The All India United Democratic Front, a party with considerable influence over more than 30 per cent Muslim population in the state, has opposed the proposal to have the 1951 National Register of Citizens or 1952 electoral roll as the cut-off date to identify or define an Assamese.

http://www.telegraphindia.com/1100726/jsp/northeast/story_12726570.jsp

[6] The All Assam Minorities Students’ Union (AAMSU) along with 24 other minority organisations have strongly objected the state cabinet sub-committee’s decision to re-launch the registrar general of citizen registration’s pilot project to update the National Register of Citizens (NRC) of 1951 in three phases from July 1, 2012.

http://articles.timesofindia.indiatimes.com/2012-03-26/guwahati/31239803_1_aamsu-nrc-abdur-rahim-ahmed

[7] 2 cr Bangladeshis in India: Fernandes Says proxy war by Pak main challenge, Tribune News Service, September 27, 2003; http://www.tribuneindia.com/2003/20030928/main1.htm

[9] The Tribune, Monday, February 17, 2003, Chandigarh;http://www.tribuneindia.com/2003/20030217/edit.htm#3

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!

பிப்ரவரி 1, 2012

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!

 

தேர்தல் ஜுரத்தில் காங்கிரஸ் இவ்வாறு செய்கிறதா? காங்கிரஸ் முஸ்லீம்களை தாஜாவ் செய்ய வேண்டும் என்று பலவேலைகளை செய்து வருகிறது. ராஹுல் காந்தி குல்லா போட்டுக் கொண்டு, தாடி வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்தாகி விட்டது. சோனியாவும் பைஜாமா குர்தா போட்டுக் கொண்டு, பிரச்சாரம் செய்து சென்று விட்டார். முல்லாயம் சிங் யாதவோ, தில்லி இமாமை கொண்டு வந்து ஆதரவைக் காட்டி விட்டார். சும்மா இருக்குமா, காங்கிரஸ், சல்மான் ருஷ்டியை அடுத்து தஸ்லிமா நஸ்ரினைப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரது புத்தகத்திற்கு தடை என்று ஆரம்பித்து விட்டது. புரிந்து கொண்ட முஸ்லீம்கள், புத்தக கண்காட்சி திடலுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். நல்ல வேளை, காங்கிரஸ் ஆட்சி நடக்காதத்தால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.

 

புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் தடை செய்வதேன்? ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா, சில அடிப்படைவாத முஸ்லீம்கள் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளது[1]. “தி சாட்டானிக் வெர்சஸ்” (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர். அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு மறுப்பு / தடை: இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவரது விசாவை புதுப்பிக்கக் கூட இந்திய அரசாங்கம் தயங்கியது. அதாவது, தேர்தல் ஜுரம் வந்து விட்டதால், கங்கிரஸுக்கு ஒனறும் புரியவில்லை. இந்நிலையில் அவர் எழுதிய “நிர்பஸான்” (தலைமறைவு வாழ்க்கை) என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா, கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 36வது புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

பிறகு எதிர்ப்புகளை மீறி, புத்தகம் வெளியிடப்பட்டது: “முதலில் அரங்கத்தில் நாற்காலிகள் இல்லை என்றார்கள், பிறகு வசதி இல்லை என்றார்கள்; பிறகு அடிப்படைவாதிகள் வெளியே எதிர்ப்பைத் தெரிவித்து நிற்கிறார்கள் என்றார்கள், கடைசியாக புத்தகம் அங்கு வெளியிட அனுமதி இல்லை என்றார்கள்”, என்று சிபானி முகர்ஜி என்ற புத்தக வெளியீட்டார் கூறினார்[2].  இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும், புத்தகம் வெளியீட்டாளர்களின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்[3]. அதாவது, விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மேடை / மண்டபத்திற்குவெளியே, அப்புத்தகம் வெளியிடப் பட்டது, அதனால், விற்பனைக்கும் வைக்கப் பட்டது[4]. நபரூன் பட்டாச்சார்யா என்ற எழுத்தாளர் மூலம், ஒரு புத்தக விற்பனைக் கூடத்தில் தஸ்லிமா நஸ்.ரீன் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது[5].


[2] “We had booked the auditorium but the organisers told us that it will not be available. Initially they told us that there are no chairs in the auditorium. On probing further they told us that that minority groups were protesting and had approached the city police over the release of the book. To prevent any disturbance in law and order we were asked to cancel the programme” said Shibani Mukherji, publisher, People’s Book Society, the publishers of the book series.

http://www.thehindu.com/news/states/other-states/article2850625.ece?homepage=true

[3] தினமலர், தஸ்லீமாநஸ்ரின்புத்தகம்வெளியிடஎதிர்ப்பு,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=397272

[4] Earlier, the Guild asked the publisher not to release the book after protests were reported from fundamentalists. Taslima’s publisher, People’s Book Society (PBS), thereafter released the autobiography outside the auditorium as a mark of protest.

http://timesofindia.indiatimes.com/india/Taslima-Nasreen-book-released-in-Kolkata-despite-protests/articleshow/11715067.cms

[5] The book was launched by author Nabarun Bhattacharya in the presence of Taslima’s supporters and human rights activists.

http://ibnlive.in.com/news/taslimas-book-launched-despite-protests/226224-40-100.html

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

மார்ச் 20, 2010

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

வேத பிரகாஷ்

அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi

Humar-hammaami-christian-turned-jihadi

அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான்.  அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd

American-jihadi-Boyd

அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork

Najibullaah-zazi-Newyork

  • அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
  • ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
  • நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
  • டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.
Nidal-hassan-Malik-fort-hood

Nidal-hassan-Malik-fort-hood

அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad

bin-laden-of-Internet-cyber-jihad

அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 21-03-2010


[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.

 

[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges

http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects

[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis

[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.

[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.

[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.

[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!

[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!

தஸ்லிமா நஸ்.ரீன், “பர்தா ஹை பர்தா”, கலவரம்!

மார்ச் 3, 2010
தஸ்லிமா நஸ்-ரீன் பிரச்சினை என்ன?

கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சியிலுள்ளது என்ற காரணத்திற்காகவே அவ்வப்போது ஏதாவது பிரச்சினையைக் கிளப்பவேண்டும் என்றமுறையில் காரியங்கள் நடக்கின்றன. செய்திகள் வருகின்றன.

கருணாநிதியோ எடியூரப்பாவைப் புகழ்ந்து தள்ளுகிறார், விழாக்களுக்கெல்லாம் “பன்னி, பன்னி” (கன்னடத்தில் பன்னி / பன்றி என்றால் வாருங்கள் என்று பொருள்) என்று ஆள் விட்டு இல்லை, மந்திரியையே அனுப்பி அழைக்கிறார்! ஆனால் அவர் மாநிலத்தைச் சேர்ந்த தேவ கவுடாவோ கெட்ட வார்த்தயில் (அதை தமிழில் எழுதுவதைவிட அந்த கமல் ஹஸன் ஒரு திரைப்படத்தில் சொன்னதைக் குறிப்பிடலாம்) திட்டுகிறார்! ஆனால் இந்த பாராட்டும், திட்டும் நபர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம்!

மூன்று நாட்களுக்கு முன்பு, பல-அடுக்கு மாடி கட்டிடத்தின் மேலே டீஸல் டேங் இருந்தது, என்று பிரம்மாண்டமாக ஆங்கில டிவி செனல்கள் செய்திகள் வெளியிட்டு அடங்கிவிட்டன.

கர்நாடகா மற்றும் குஜராத்தில் நல்லது நடந்தால் எதுவும் பேச மாட்டார்கள், ஆனால், ஒரு சிறிய அல்லது சம்பந்தமே இல்லாத விஷயம் இருந்தால் அதை தேசிஅ மற்றும் உலகப் பிரச்சினையாக்கிவிடுவார்கள்.

இப்பொழுதும் அத்தகைய தொல்லைதான், ஆனால் பாவம், ஏற்கெனவே இரண்டு மனித உயிர்கள் சென்றுவிட்டன. இப்பிரச்சினையின் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன

சப்தஹிகா என்ற கன்னட பிரபாவின் வார இணைப்பிலே தஸ்லிமா நஸ்-ரீன் எழுதியதாக “பர்தா ஹை பர்தா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெலிவந்திருந்தது. நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த அந்த பத்திரிக்கையில், அது மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது அல்லது ஆங்கிலத்தில் “சிந்து” என்ற தலைப்பில் எழுதப்பட்டதின் தழுவல், முன்பு விளியான விவரம், தேதி,…… என்றெல்லாம் மூலத்தை…………விவரங்களைக் குறிப்பிடவில்லை.

கேட்கவேண்டுமா, உடனே “சியாசத்”: என்ற உருது பத்திரிக்கைத் திரித்து அதைப் பற்றி மார்ச் 1, 2010 அன்று விமர்சனம் செய்து வெளியிட்டது. அதன் பிரதியும் யாருக்கும் கிடைக்கவில்லையாம்!

உடனே பி. எஸ். எடியூரப்பா சொந்த ஊரான சிமோகாவில் எதிர்ப்புப்போராட்டங்கள், கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.

முஸ்லீம்கள் ஹஸனில் “அந்த கட்டுரைக்கு” எதிராக நடத்திய பேரணி!

முஸ்லிம்கள் பச்சைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்”……………கடையடைப்பு, …………….கலாட்டா, ………………கல்வீச்சு………………………., அரசிற்கு எதிராக வசவுகள், …..மிரட்டல்கள், …………போலீஸார் நிலைமைக் காட்டுக்கடங்காமல் போன நிலையில் சுட்டதில்  இரண்டுபேர் இறந்துள்ளனர்– அதாவது சுட்டதில் ஒருவர், கல் எறிதாக்குதலில் ஒருவர் என இறந்துள்ளனர். அலர் காயமடைந்துள்ளனர்.

A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday.
THE HINDU A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday 01-02-2010
படம்- தி இந்து – நன்றி.
unday.
Material from a cushion and cloth store set ablaze by miscreants strewn around on H Siddaiah Road in Shimoga on Tuesday. DH Photo

படம்-டெக்கான் ஹெரால்ட் – நன்றி

செய்திதாள்கள் மன்னிப்புத் தெரிவித்தன. எஃப்.ஐ.ஆர் போட்டு இந்திய குற்றவியல் சட்டத்தின் 153A, 153B and 295A of the IPC (Indian Penal Code) பிரிவுகளில் கக்களைத் தூண்டிவிட்டதற்கும், இரண்டு பிரிவினரிடையில் தப்பெண்ணம் உண்டாக்கியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஸ்லிமா நஸ்-ரீனே தான் அந்த செய்திதாளுக்கு எந்த கட்டுரையும் எழுதவில்லை என்று தமது  அதிரச்சியை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தான், “முஹமது நபி பர்காவிற்கு எதிராக இருந்தார் என்று எப்பொழுதும் குறிப்பிடவில்லை”, என்ரு தெளிவு படுத்தினார். ஆகாவே, இது ஒரு, “திரித்து எழுதப்பட்ட கட்டுரையே’, என்று முடிவாக எடுத்துக் காட்டினார்.

தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை இங்கே படிக்கவும்:  http://taslimanasrin.com/OPINION.pdf

தேடிப்பார்த்ததில் ஏற்கெனவே “அவுட் லுக்” என்ற பத்திரிக்கை 2007ல் தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை அவருடைய சம்மதம் இல்லாமலேயே வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்:  http://www.outlookindia.com/article.aspx?233670

அந்த  Outlook என்ற பத்திரிக்கை பெரும்பலும், முஸ்லீம்களுக்கு சாதகமாக அல்லது அவர்களைத் தூண்டிவிடும் வகையில் எழுதுவது, செய்திகள், கட்டுரைகள் வெலியிடுவது வழக்கம். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு மூலத்தைப் போல உள்ளதென்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்தான் இருந்தது. ஏனெனில் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் தூண்டிவிடும் வகையில் இருந்தன என்று படித்தவர்கள் எடுத்துக் காட்டினர். மேலும் இந்த கட்டுரை வெளியிடப்படும் நேரத்தில்தான் தஸ்லிமா நஸ்-ரீன் இந்தியாவில் நிரந்தர குடியிருப்பாக கோரியது ( permanent residency ) மற்றும் மீலாடி நபியும் வந்தது!

ஆகவே ஹசன் மற்றும் சிமோகாவில் முஸ்லீம்கள் வேண்டுமென்றே பிரச்சினை எழுப்பவே அவ்வாறு செய்ததாகத் தெரிகின்றது. அதாவது இது “திரும்ப-திரும்ப செய்வது” என்ற முறையில் வருகிறது. முன்புகூட ஏற்கெனவே வெளிவந்த ஒரு சிறுகதையை “டெக்கான் ஹெரால்ட்” மொழிபெயர்த்து வெளியிட்டபோது, அந்த செய்திதாளின் அலுவலகத்தைதாக்கி, நொறுக்கியடித்து, தீவைத்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுதும் அதே முறைக் காணப்படுவதாக கையாளப்படுவதாக எடுத்துக் காட்டுகின்றனர். அத்தகைய பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்படுவதும் திட்டமிட்டதாகவே தெரிகிறது.

http://news.outlookindia.com/item.aspx?675677