Archive for the ‘தலித்’ category

“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

மே 6, 2018

தலித்முஸ்லிம்மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

Dalit-muslim clash near Theni, The Hindu 06-05-2018

தேனி சுற்றியுள்ள பகுதிகளில்இருதரப்புமோதல்கள் என்பது, அவ்வப்போது, செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன: ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்[2]. டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசினர்[3]. இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டன. தெருவிளக்குகள் உடைந்தன.. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்[4].ஜனவரி 16-01-2018 அன்று தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது[5]. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்[6]. போலீஸாரைத் தாக்குதல், பெட்ரோல் குண்டுகள் வெடிப்பது, பொங்கலை அடுத்து கலவரங்கள் ஏற்படுத்தல் என்பன, ஒரு திட்டமிட்ட போக்கை எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாக அதில் எஸ்.சிக்களுக்கு பங்கில்லை.

Periyakulam, Muslims attack Hindu houses-news cutting english

ஏப்ரலில் [24—004-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதெல்லாம் கிராமங்களில் அனுசரித்து நடந்து கொள்ளும் பழக்க-வழக்கங்கள் ஆகும். இவரது உடலை மயானத்திற்கு “முஸ்லிம் தெரு” வழியாக எடுத்து செல்லும்போது, முஸ்லிம்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு, சமரசம் செய்தலால், இறுதி சடங்கு நடத்தி முடிக்கப் பட்டது[8]. முதலில் தெருவுக்கு “ஜாதி” பெயர் இருக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் போது, “முஸ்லிம் தெரு” என்று பெயர் உள்ளதே வகுப்புவாதத்தை வளர்க்கும் கோஷ்டிகள் அங்கிருப்பது தெருகிறது. அதே போல “காலனி தெரு” என்று குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சடங்கு நடந்த பிறகு, இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது[9].  இறப்பு முதல்லிய சடங்குகளில் முகமதியர் அந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கக் கூடாது. அமைதியாக இருந்திருந்தால், சாதாரண பிரச்சினை, இவ்வாறான மோதல்-கலவரத்தில் முடிந்திருக்காது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு, 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது[10].

Periyakulam, Muslims attack Hindu houses-6

மே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்க்ம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது[11]. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவற்றை இவ்வீடியோவில் காணலாம்[12].

Periyakulam, Muslims attack Hindu houses-2

சமதர்மம், சமத்துவம் பேசினால் மட்டும் போறாது, கடைப் பிடிக்க வேண்டும்: சமரசப் பேச்சிற்குப் பிறகும், எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது[13]. மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[14]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, பலர் ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. ஏப்ரலில் தொல்.திருமாவளவனின் படம் தாக்கப்பட்டதிலிருந்து, இருதரப்பினருக்கும் விரோதம் இருப்பதாக, உள்ளூரில் சொன்னதாக, “தி இந்து” குறிப்பிடுகிறது[15]. “மனித நேயம்” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொள்வது, மேடைகளில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் இருந்து, நடப்பு வாழ்க்கையில், இவ்வாறு பிணம் விசயத்தில் கூட, கொடூரமாக நடந்து கொண்டது, திகைப்பாக இருக்கிறது. செக்யூலரிஸ நாட்டில், இந்தியர், எங்கு வேண்டுமானாலும், வீடு வாங்கலாம், வாழலாம், என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும் போது, இவ்வாறு, “எங்கள் தெருவுக்கு வராதே……” என்ற நிலை இருப்பது, சமதர்மம் ஆகாது. “தலித்-முஸ்லிம் மோதல்”, தேனி அருகில் – தி இந்து – அடித்தது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய், செக்யூலரிஸப் பழமாக அழுகிய செய்தியைக் கொடுத்துள்ளது! ஏனெனில், “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படி கூடாது என்றாலும், உபயோகித்தது மற்றும் இதுவரை “இரு பிரிவினர் மோதல்” என்று தலைப்பிட்டு, யார்-யார் மோதிக்கொண்டார்கள் என்று மறைக்கும் நிலையில், அவ்வாறு குறிப்பிட்டு, தலைப்பிட்டு போட்டுள்ளது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், “தி இந்து” அவ்வாறு செய்யாது, ஆனால், இப்பொழுது செய்துள்ளது. எனவே இதன் பின்னணி என்ன என்பதும் ஆராய வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

05-05-2018

Periyakulam, Muslims attack Hindu houses-5

[1] புதியதலைமுறை, தேனி அருகே இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: கலை நிகழ்ச்சியின் போது வன்முறை, Web Team, Published : 18 Jan, 2016 01:21 pm

[2] http://www.puthiyathalaimurai.com/news/districts/463-clash-between-two-groups-in-theni.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்பெட்ரோல் குண்டு வீச்சு! – வீடியோ, Posted By: Suganthi Published: Wednesday, April 12, 2017, 10:47 [IST]

[4]  https://tamil.oneindia.com/news/tamilnadu/auto-drivers-throw-petrol-bomb-theni-279543.html

[5] தினகரன், தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது, 2018-01-17@ 08:35:34

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367818

[7] தினகரன், தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு, 2018-05-06@ 02:24:15.

[8] According to the police, when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. They chose the new route as there was another death ritual going on in their regular route. When the procession entered the Muslim Street, some residents protested and a minor clash followed. The police pacified both sides and the Dalits managed to complete the funeral that day. Later, the village witnessed minor skirmishes between the two groups.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-muslim-clash-near-theni/article23791161.ece

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=399384

[10] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு, Posted By: Hemavandhana Published: Sunday, May 6, 2018, 10:47 [IST]

[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/car-vehicles-were-set-on-fire-riots-near-periyakulam-318931.html

[12] தேனி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: போலீசார் ,Published on May 5, 2018; https://www.youtube.com/watch?v=RX_wlPP3bO8

[13] தினமணி, பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்: வீடுகள், வாகனங்களுக்கு தீவைப்பு: 20 பேர் கைது, By DIN | Published on : 06th May 2018 09:16 AM

[14] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2914420.html

[15] The locals said the two groups had been harbouring enmity against each other ever since a portrait of VCK leader Thol. Thirumavalavan was damaged last month.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/clash-between-dalits-and-muslims-near-theni/article23789937.ece?utm_source=tp-tamilnadu&utm_medium=sticky_footer

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?

பிப்ரவரி 10, 2014

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?

 

முதல் திருமணம் சுஜய சந்திரன் 2005

முதல் திருமணம் சுஜய சந்திரன் 2005

முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].

 

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.

சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.

 

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011

வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக  தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர்  அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.

 

இரண்டாவது திருமணம் 2011

இரண்டாவது திருமணம் 2011

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.

 

Yuvansankarraja converting to islam

Yuvansankarraja converting to islam

1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.

 

ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].

 

வேதபிரகாஷ்

© 10-02-2014


[2] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST

 

[10] Yuvan has kept the marriage as a closely guarded secret since it is his second marriage. However, the event was publicized and eventually everyone came to know about it before the Yuvan’s wedding. Remember, Yuvan’s first marriage with Sujaya ended in divorce in 2008 and the promising music director now found Shilpa as his life partnerhttp://www.teluguone.com/tmdb/news/Music-Director-Yuvan-Shankar-Raja-Marriage-en-6135c1.html

[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am

[14] While we tried to reach Yuvan regarding this, a source close to the music director revealed, “Yuvan was very attached to his mother and soon after she passed away, he started missing her a lot. He also met a spiritual guru, but we cannot say what exactly made him follow Islam,” and maintained that, he was definitely not inspired by fellow composer AR Rahman (who had converted to Islam) in his decision.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[15] Yuvan, the source said, has been practicing Islam for almost a year now. “He has been doing namaz five times a day all these months. He is not missing his prayers even when he is at work and ensures that he allots time for it at his studio as well,” said the source. The source added that Yuvan is now in the process of converting to Islam. “Currently, he is planning to convert to Islam and is also thinking of going for a change of name. But, he is yet to decide on these. Since it is his personal decision, his family members respect it.”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!

மார்ச் 18, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2].

முல்லா முலாயம் பேசும் போது கலாட்டா செய்து கத்திய முஸ்லீம்கள்: முல்லா முலாயம் பேச ஆரம்பித்தபோது, வெளிப்படையாக, ராஜா பையாவிற்கு (Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya) எதிராக கோஷங்களை முஸ்லீம் இட்டனர், “அவனை பொறுப்பிலிருந்து விலக்கினால் மட்டும் போறாது, கைது செய்து சிறைல் போடு”, என்று கத்தினர். அதுமட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிரான அரசு ஒழிக என்றும் கோஷமிட்டனர். இவ்வளவும், முலாயம் பேசும் போது, இடை-இடையே நிகழ்ந்ததன. உலேமா-இ-ஹிந்த் ஆட்கள் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது[3]. இறுதியில், ஜமைத் உலாமா ஹிந்தின் பெரிய தலைவரே வந்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது! ஆனால், முல்லா முலாயம் அதை லட்சியம் செய்யவில்லை. நிருபர்கள் கேட்டபோதும், விமர்சிக்கவில்லை[4]. அதாவது முஸ்லீம்கள் என்னத் திட்டினாலும், வசவு பாடினாலும், இந்த ஜென்மங்களுக்கு ரோஷம், மானம், சூடு, சொரணை எதுவும் வராது என்று மெய்ப்பித்திருக்கிறார். உபியில் முஸ்லீம்கள் 20% உள்ளனர்[5], அவர்கள் லோக்-சபா தேர்தலில் முக்கியமான ஓட்டுவங்கியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்ற முஸ்லீமும், காலில் விழும் யாதவும்: மௌலானா அர்ஷத் மதானி, ஜமைத் உலாமா ஹிந்த் இயக்கத்தின் தலைவர் பேசுகையில்[6], “முலாயத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறாம்திருப்பினும் அவரது வார்த்தைகள் காரியங்களாக மாற பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் அரசியலுடன் எந்த சம்பதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்று தமக்கேயுரிய முஸ்லீம் பாணியில் கூறியுள்ளார்.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[7], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[8]. अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ”

முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது, இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருதாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

18-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[3] Mulayam was in the midst of his speech when a group of Jamiat workers started raising slogans asking for former Cabinet Minister Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya’s arrest in the recent murder of a Deputy SP Zia-ul-Haq. The slain police official’s wife has named Raja as the main accused in the murder case. Senior Jamiat leaders faced a tough time trying to control the agitated workers. They were demanding that Raja Bhaiyya should be arrested immediately, and that dropping him from the ministry was not enough.

[4] Anti-Raja Bhaiya slogans were raised in the meeting while Mulayam was addressing the gathering. The SP supremo chose to ignore the matter and refused to comment on it.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[5] Muslims, who constitute around 20 per cent of the state’s electorate, play a decisive role in 25 Lok Sabha seats in the state.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[6] Jamiat president Maulana Arshad Madani thanked Mulayam for his assurances but said Muslims would want to see the words translated into action soon. “We have nothing to do with politics. Our fight is for our ‘qaum’ (community),” he said.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?

ஏப்ரல் 13, 2010

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?

முஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.

அல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.

ஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.

இப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயர்ந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.

ஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.

அதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

Muslims-demanding-reservation

Muslims-demanding-reservation

மிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்!

மண்டல் கமிஷன் தீர்ப்பில் இஸ்லாத்தில் உள்ள ஜாதி கட்டமைப்பு, ஜாதியம் முதலியவை எடுத்துக்  காட்டப் பட்டுள்ளன.

அரேபியத்துவம், பழங்குடிகள் அமைப்பு, அவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள சமூக அடுக்கு முறைகள், மதம் மாறிய பின்னரும், நாட்டுக்கு நாடு அவை எவ்வாறு செயல் படுகின்றன என்பனவற்றை, முஸ்லிம் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இருப்பினும் ஆசார இஸ்லாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முஸ்லிம்கள் உறுதியாக அடித்துச் சொல்கின்றனர். அதாவது, அத்தகைய, ஜாதியம், ஜாதி அமைப்பு, ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்கிறார்கள்……..

தலித்-முஸ்லீம்கள்

தலித்-முஸ்லீம்கள்

இதையும் ஜிஹாத் என்கிறார்கள்!