Archive for the ‘தலாக்-தலாக்-தலாக்’ category

பிணத்தை வைத்து மதவாதம் செய்தல் – மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரை – பெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்-முஸ்லிம்” கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

மே 9, 2018

பிணத்தை வைத்து மதவாதம் செய்தல்மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரைபெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்முஸ்லிம்கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

Ahmadiyya , Kumudam Reporter, 11-06-2009

முகமதியர், முஸ்லிம், துலுக்கர்இவர்களின் போலித்தனம்: இஸ்லாமியர் ஏதோ தாங்கள் ஆகாயத்திலிருந்து நேரே இறங்கிவிட்டவர் மாதிரி பாவித்துக் கொண்டு பேசுவர். முகமதியரோ தங்களது 1300 ஆண்டுகள் பெருமையை வர்ணிப்பர்.  முஸ்லிம்களோ தாங்கள் தான் ஒட்டுமொத்த மனித இனத்தின் எஜமானர் என்பது போல எதேச்சதிகார மதவாதத்தை பிரகடனம் செய்வர். ஆனால், துலுக்கரின் மனங்களில் என்ன இருக்கிறது என்பது ஜிஹாதி குரூர-கொடூர குண்டுவெடிப்புக்காரர்கள், கொலைகாரர்கள் மூலம் 1300 வருடங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அறிவுஜீவித் தனத்துடன், “தலித்-முஸ்லிம்” கூட்டு, ஒற்றுமை மற்றும் ஓட்டு வங்கி என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டிருப்பர். எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பெண்கள் என்று எல்லா ஒடுக்கப்பட்ட, அமுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இவர்களை சேர்த்துவிட்டால், இந்தியாவில் “இந்துக்கள்” 15-25% சதவீதம் தான் என்றும் கணக்குப் போடும் கில்லாடிகள் இருக்கின்றனர்[1]. அந்நிலையில் தான், அவர்களது போலித் தனத்தை “பிண அரசியல்” வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு வன்னியம்மாள் பிணம், மசூதி தெருவு வழியாக செல்லக் கூடாது என்ற மதவெறி-மிருகங்கள் தான், 2009ல் புதைத்தப் பிணதையே தோண்டியெடுத்துள்ளனர். இனி அந்த விவரங்களை கவனிப்போம். கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் [2006-2011] அந்த குரூரம் நடந்தது.

, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan 2010

பாகிஸ்தானில் நடந்து வருவது சென்னையில் 2009ல் நடந்தது: அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவாகும். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் சுன்னி முஸ்லீம்களுடன் வேறுபட்டிருக்கிறார்கள். ஷியாக்களும் “மெஹதி” என்பவரை எதிர்பார்த்துள்ளார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முஸ்லீம்கள் இவர்களை “காபிர்” என்று அறிவித்து புறக்கணிக்கிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் தொடந்து தாக்கப்படுவதுடன், அவர்களது மசூதிகளும் இடிக்கப் பட்டன. அவர்களது பிணங்களும் மற்ற முஸ்லிம்களின் பபரிஸ்தானில் புதைக்க அனுமதி இல்லை[2]. புதைத்தாலும், தோண்டி எடுத்து விடுவர்[3]. அதே நிலைதான், மே 2009ல் சென்னையில் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், இஸ்லாமிய ஆட்சியில், அஹ்மதியா முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன[4]. சமீபத்தில் [மார்ச் 2018] கூட பாகிஸ்தான் நாளிதழில், இது எடுத்துக் காட்டப்பட்டது[5]. இனி சென்னை பிண விவகாரத்தைப் பார்ப்போம்.

Ahmadiyya body exhumed in Chennai - Pudhiya Kalacharam Aug.2009

மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது (01-06-2009): சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். திடீரென்று மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முஸ்லீம்களின் கபரிஸ்தானத்தில் மே 31, 2009 அன்று மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள். இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது. அதாவது இந்துக்கள் “காபிர்கள்” என்பதால், அங்கு புதைக்கப்பட்டது!

Body exhumed Dinakaran 02-06-2009
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் தலைவர் பஷாரத் அஹ்மது கூறியது[6]: சென்னை அஹ்மதியா முஸ்லிம் ஜமா-அத் தலைவர் பஷாரத் அஹ்மது ஞாயிற்றுக்கிழமை செய்திய்யாளர்களிடம் கூறியது, “அஹ்மதி முஸ்லிம் சமயத்தை சேர்ந்த மும்தாஜ் பேகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். உவரது உடலை ஆதம்பாக்கம் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முதலில் அனுமதியளித்த அந்த நிர்வாகம் திடீரென மறுத்தது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை மயானத்தில் முறையாக அனுமதி மெற்று மே 31ல் அடக்கம் செய்தோம், அப்பொழுது சிலர், ‘அஹ்மதி முஸ்லிம்கள், முஸ்லிம்களே அல்லஎன்று கூறி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெர்வித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அவர்கள் உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறியதைத் தொடர்ந்து நாங்கள் நிம்மதியடைந்தோம். அந்த பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப் பட்டு கிருஷ்ணாம்பேட்டை இந்துக்கள் மயானத்தில் அடக்கம் செய்யப் பட்ட தகவலை பத்திரிக்கைகளைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். இது மனிதாபிமானன் அற்ற செயல்,” என்றார் அவர். அதனால், அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்[7].

Ahmadiyya want seperate burial ground- Chennai Dinamani, 08-06-2009

அல்லா சென்னை காஜியை தண்டித்தாரா?: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப் சில நாட்களில் பதவி விலக நேர்ந்தது. அவர் பதவி விலக நேர்ந்ததற்கு, முஸ்லிம் இயக்கங்களில் தீவிரமான கருத்து வேறுபாடுகளும், அரசியலும் இருந்தது. காஜியோ அரசு அதிகாரி என்னை ஏமாற்றி விட்டார், என்றார்[8]. “வக்ப்ஃ போர்ட்” மாற்றியமைக்கப் படுவதால், அவ்வாறு செய்யப்பட்டது, என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப் பட்டது. அஹ்மதியா காஜி, “அல்லா தான் அவருக்கு தண்டனை அளித்தார்,” என்றார். இந்த விவரங்களை, இந்த வீடியோவில் காணலாம்[9]. ஈவு-இரக்கம் இல்லாமல், ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகும், தோண்டியெடுக்க ஆணையிட்டது, அந்த காஜியின் ஞானத்தை கேள்விக் குறியாக்குகிறது. எல்லோருமே குரான், அல்லா பெயரைச் சொல்லி இத்தகைய மனிதத்தன்மையெற்ற காரியங்களை செய்தால், யார் பொறுப்பு என்பதனை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Khaji removed, Deccan Chroniclel, 07-06-2009-3

அஹ்மதியா இறையிலும், அடிப்படைவாததீவிரவாத இஸ்லாமும்: இஸ்லாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாகிஸ்தானில் அஹமதியாக்கள் கொல்லப்படுவதும், அந்நாட்டில் முஸ்லீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற முஸ்லீம்கள் அஹமதியா முஸ்லீம்களை ”காபிர்கள்” என்று தான் நடத்துகிறார்கள்[10]. மொஹம்மது நபியையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இஸ்லாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்[11]. பெண்களுக்கு எல்லா உரிமைகள் இருக்கின்றன என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

Ahmadiyya body exhumed in Chennai IE_08-06-2009.

சகிப்புத் தன்மை அற்ற சென்னை முஸ்லிம்கள்: இஸ்லாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம்.  2009லேயே, சென்னை முகமதியர் இப்படி இருந்தார்கள் என்றால், பத்தாண்டுகளில், 2018ல் – அவர்களது மனப்பாங்கு எப்படி வெறிகொள்ளும். அதுதான், ஐசிஸ்-க்கு ஆள் எடுப்பது, அனுப்பவது என்ற நிலைக்கு வந்துள்ளது, சென்னையிகேயே அத்தகைய பயங்கரங்கள் நடந்துள்ளன. அதனால் தான், வன்னியம்மாள் உடலைக் கூட “தங்கள் தெரு” வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கலவரம் செய்துள்ளார்கள்.

Ahmadiyya , Tamizhaga Arasiyal, 11-06-2009-1

ஜிஹாதி இஸ்லாம் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை: முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள். இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இஸ்லாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள், என்பதெல்லாம் பொய். ஏனெனில், உழைத்து முன்னேறி, சமூகத்தில் அந்தஸ்த்துடன் மற்றவர் போன்று வாழ வேண்டும் என்றால், அடிப்படைவாத, மதவாத, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள், நேரிடையாகவோ-மறைமுகமாகவோ அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது தெருகிறது. குறிப்பாக பெற்றோர், உற்றோர், மற்றவர் தடுக்காமல் இருப்பதோடு, பன உதவியும் செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

09-05-2018


Ahmadiyya , Kumudam Reporter, 11-06-2009-2

[1] “தலித்” போர்வையில், முகமதிய சஞ்சிகைகள் இந்த பொய்யை அதிகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

[2] Express Tribune, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan, Published: November 2, 2010.

[3] https://tribune.com.pk/story/71177/no-place-for-ahmedi-body-in-a-muslim-graveyard/

[4] Daily Times, Forbidden truth: Ahmadis in the social fabric of Pakistan, Pakistan, by Busharat Elahi Jamil, MARCH 13, 2018.

[5] https://dailytimes.com.pk/214057/forbidden-truth-ahmadis-in-the-social-fabric-of-pakistan/

[6] தினமணி, அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் அமைக்க கோரிக்கை, சென்னை, ஜூன். 8, 2009.

[7] Deccan Chronicle,  Jamaath seeks burial ground, Chennai, Jume 11, 2009.

[8] Deccan Chronicale, Official cheated me: Chief Kazi, June 6, 2009.

[9] https://www.youtube.com/watch?v=VrWFxK-SXss

[10] வினவு, அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!, இளநம்பி, –புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009, பக்கம்.9.

[11] https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

 

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது இந்த மாடலுக்கு அறிவு எங்கே போயிற்று? ஒப்புக்கொண்டு படுத்தப் பிறகு கற்பு போயிற்று, என்னை ஏமாற்றி விட்டாள் என்றாள் என்று ஓலமிட்டால் என்ன பிரயோஜனம்?

தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம்: ஏற்கெனவே மணமாகி குழந்தைகள் இருக்கிறார்களே என்பதற்கு, தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்[7]. அதற்கான சம்மதத்தையும் அவரது குடும்பத்தினிடமிருந்து பெறுவேன் என்று வாக்களித்தார்[8]. இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்று எப்படி மெய்பிக்க முடியும்? மதரீதியில் வாக்களித்தபோதே, அவள் உணர்ந்திருக்க வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்றபோது புரிந்து கொண்டிருக்கவேண்டும். முஸ்லீம் அல்லாது பெண்ணும் இதை நம்பக்கூடாது, ஒரு முஸ்லீமும் இப்படி சொல்லி ஏமாற்றக் கூடாது அல்லது தனது செக்ஸிற்காக பெண்களை ஏமாற்றக்கூடாது. “மூதா கல்யாணம்” என்றெல்லாம் பிறகு அவர்கள் சரீயத் சட்டப்படி சொல்லலாம்[9]. ஆனால், பெண்களின் கதி என்ன என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

உடல் நலம் இல்லாதபோது மும்பை வந்து சந்தித்தார்: அதன்பிறகு நான் உடல் நலமின்றி இருந்தபோது மும்பை வந்து என்னை சந்தித்தார்.  என் மீது அன்பு செலுத்தி கவனித்தார். இதனால் நெருக்கம் அதிகமானது. என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பினேன்[10].  என்னை தனது உடல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டார்[11].  பல முறை (15 முறை[12]) உறவு கொண்டார்[13].  போனி கபூர் கூட இப்படித்தான், ஸ்ரீதேவியின் தாயார் உடல்நலக்குறைவோடு இருந்தபோது, உதவி செய்து நட்பு பெற்று, நெருக்கம் கொண்டு, பிறகு திருமணமும் செய்து கொண்டார். நல்லவேளை அப்பொழுது எந்த பிரச்சினையும் வரவில்லை! இதெல்லாம் ஆண்கள் செய்து வரும் கில்லாடி வேலைகள் தாம். இலவசமாக கிடைக்கிறது, அனுபவித்து போகலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆண்கள் இருப்பார்கள் அல்லது அவ்வாறான நிலையை பெண்களே உர்ய்வாக்குவார்கள்.

சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார்: மும்பையில் ஒரு பங்களா வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துக்காக அவரை நான் விரும்பவில்லை. மாடலிங் துறையில் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. ஆனால் ஆசாத் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வாறு லீனா கபூர் கூறினார்.  இந்தப்புகார் பற்றி பாகிஸ்தான் இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது[14]. ஆசாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் லீனா கபூர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லீனா கபூர் சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டு என் பெயரை இணைத்து புகார் கூறியிருக்கிறார் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்[15]. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெருக்கமாக சேர்ந்திருப்பது போல[16] புகைப்படங்களும் வெளியாகியுள்ளன[17]. அதிலிருந்து, நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

15-08-2012


[6] மாலைமலர், திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: பாகிஸ்தான் அம்பயர் மீது மும்பை மாடல் அழகி செக்ஸ் புகார், http://www.maalaimalar.com/2012/08/15113808/marriage-enjoy-pakistan-ampere.html

[7] The complainant alleged that Rauf told her he would marry her and would also get her an apartment. She said that he did disclose his marital status and the fact that he had children but added that religion allowed him to have more than one wife.

http://www.pakistantoday.com.pk/2012/08/15/news/national/indian-model-stumps-pakistani-umpire-with-sex-charges/

[9] இஸ்லாமியச் சட்டப்படி, மூதா கல்யாணம் என்பது ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு மனைவியாக வைத்திற்பது. அதற்காக அவன் “மஹர்” கொடுக்க வேண்டும். http://www.duhaime.org/LegalDictionary/M/Muta.aspx

அந்த “குறிப்பிட்ட காலம்” என்பது ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம்!

சன்னி-ஷியா பிரிவுகளில் இதைப்பற்றி ஒருமித்தக்கருத்துகள் இல்லை:

Most Shia of today have a hard time self-justifying the concept of Mutah. In fact, it is a point which causes many of them to doubt their faith, and rightfully so. It is sad that the Shia elders use false rhetoric to demand that their followers reject logic and morality, to instead blindly accept the idea that prostitution is part of Islam. These Shia leaders will make emphatic arguments such as this:

“The Prophet (صلّى الله عليه وآله وسلّم) did Mutah, and he not only allowed it, but actively encouraged it! We must obey the Prophet (صلّى الله عليه وآله وسلّم) in all matters, and we cannot disagree with him based on our own opinions. If the Prophet (صلّى الله عليه وآله وسلّم) did it, then surely we should do it. Whoever says that Mutah is disgusting is saying that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) is disgusting.”

And some Shia will even go a step further and falsely claim:

“Mutah is even allowed in Sunni Hadith. The only reason Sunnis do not do Mutah is because the second Caliph, Umar, banned Mutah against the orders of the Prophet (صلّى الله عليه وآله وسلّم).” Then, the Shia will procure Sunni Hadith which say that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) allowed Mutah.”

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/articles/mutah/mutah-is-haram.html

சன்னிகள் இத்தகைய முறையை விபச்சாரம் என்றே சொல்கின்றனர்:  “Mutah” translates literally to “pleasure” in Arabic. In the Shia context, Mutah refers to a “temporary marriage.” In the Shia faith, Mutah is actively encouraged and is considered Mustahabb (highly recommended). In reality, Mutah is an abomination, and is nothing less than prostitution.

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/indexb5e7.html?cat=15

[10] The two kept meeting, often when Rauf — who is a member of ICC Elite Umpire Panel — would come over to India to officiate in tournaments including the IPL. “I asked him several times about the marriage and he would always tell me that it would happen soon,” Kapoor told MiD DAY.

[12] நம் தமிழ் இணைதளங்களின் ரசனையே அலாதிதான். இந்த விவகாரங்களையெல்லாம் துல்லியமாகத் தருகிறார்கள் போலும். லெனினையும் மிஞ்சிவிடுவார்கள் போலும்!

http://tamil.oneindia.in/news/2012/08/15/india-me-azad-rauf-had-physical-intimacy-for-15-times-159664.html

அப்துல் ரஹீம் மூன்று, முஹமது இலியாஸ் நான்கு பெண்களை திருமணம் செய்ததால் கைது!

ஜூலை 13, 2010

நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030

தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.

  1. சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
  2. ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
  3. சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ்,  மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
  4. மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!

முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.

மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.

முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].

இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.


[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது,  First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81

[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2

தலாக் செய்யப் பட்ட பெண், தப்பான தீர்ப்பு என்று மௌலானாவை அடித்தாளாம்!

ஜூலை 1, 2010

தலாக் செய்யப் பட்ட பெண், தப்பான தீர்ப்பு என்று மௌலானாவை அடித்தாளாம்!

“தலாக், தலாக், தலாக்”: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[1]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[2]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.

Maulana-thrashed-by-women-for-talaq

Maulana-thrashed-by-women-for-talaq

ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்: ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்[3]. லக்னௌவில் சுல்தான்-அன்னுவல் மத்ராஸி என்ற முஸ்லீம் மடம் இருக்கிறது. மௌலானா அஸ்கர் அலி என்பவர் அங்கு இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். கடந்த புதகிழமையன்று (23-06-2010), மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்றும்  அலி இம்ரான் என்பவர்களுக்கிடையேயுள்ள ஒரு விவாக ரத்து வழக்கில் / தலாக்கில் தீர்ப்பு வழங்கி தலாக்-நாமா என்ற விடுதலைப் பத்திரத்தையும் வழங்கி விட்டார்.

சரியாக ஆராயாமல் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்று கோபம் கொண்ட பெண்கள் மௌலானவை அடித்தனர்: பாதிக்கப்பட்ட மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்ற பெண்களிடம் சொன்னதாகத் தெரிகிறது. உடனே, ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதனால், கோபம் கொண்ட பெண்கள் – ஹீனா, நிஷாத் ஃபாதிமா, அர்ஷி முதலியோர், மத்ரஸாவிற்குச் சென்று, அந்த மௌலானாவை- இவ்வாறு அதிரடியாகத் தாக்கி அடித்தனர். போலீஸ் இதனை அறிவித்துள்ளனர். அடிவாங்கிய மௌலானா வாஸிர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்[4]. பதிலுக்கு பெண்களும், சரியாக விசாரிக்காமல் உண்மைக்குப் புரம்பாக மற்றும் இருதரப்பினரது ஒப்புதலை வாங்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[5].

இந்திய முஸ்லீம்கள் அந்த பெண்ணைப் பாராட்டுவார்களா, குறைகூறுவார்களா? ஏற்கெனவே, அந்த பெண்கள் இஸ்லாமிய அமைப்பிற்கு செட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று, உள்ளூரில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பெண்களோ, தாங்கள் மதத்தை மதிப்பதாகவும், ஆனால், ஆண்கள் இம்முறையால் தங்களது வாழ்க்கையினைக் கெடுத்து விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.


[1] http://www.indianexpress.com/news/triple-talaq-dowry-to-top-agenda-at-aimplb/579755/

[2] http://timesofindia.indiatimes.com/articleshow/757515.cms

[3] http://www.hindu.com/2010/07/01/stories/2010070162670700.htm

[4] http://www.ndtv.com/article/cities/women-thrash-maulana-for-endorsing-one-sided-talaq-34763

[5] http://www.mid-day.com/news/2010/jun/300610-women-thrash-maulana-endorsing-one-sided-talaq-UP.htm?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+mdnews%2Fnational+%28Mid+Day+National+News%29