Archive for the ‘தர்மம்’ category

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057