Archive for the ‘தர்பங்கா’ category

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

புத்தகயாவெடிகுண்டுவிசயத்தில்நிதிஷ்குமார்மெத்தனம்காட்டியது: புத்தகயா வெடிகுண்டு இந்திய-முஜாஹித்தினின் கைவரிசைதான், அவர்களுடையை கைவேலைத் திறன் அதில் காணப்படுக்கிறது என்றெல்லாம் பாட்டுப் பாடியவர்கள், திடீரென்று அடங்கிப் போனதை கவனித்திருக்கலாம். ஈ-மெயில் வந்தது, பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டது, வெடிபொருட்கள் சப்ளை செய்தவன் பிடிபட்டான்[1] என்றெல்லாம் செய்திகள் வந்தன[2]. எப்படி மத்திய மற்றும் பிஹார் அரசுகள் இவ்விசயத்தில் தமது நிலையை மாற்றிக் கொண்டன என்பதனையும் காணலாம்[3]. வழக்கம் போல திவிஜய் சிங் சங்கப்பரிவார் தான் குண்டு வைத்தது என்று டுவிட்டரில் உளறினார் என்றும் செய்திகளை போட்டனர். சையது மக்பூல் என்பவன் ஏற்கெனவே புத்தகயா அவர்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்று எச்சரித்தப் பிறகும் பீஹார் அரசு மெத்தனமாக இருந்தது நினைவிருக்கலாம்[4]. மேலும் தொடர்குண்டுகள் வெடித்தாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை, மற்றும் மிரட்டத்தான் அக்குண்டுகள் வைக்கப்பட்டன என்றும் சோதனையில் தெரியவந்தது. முதலில் புத்தபிட்சு தோற்றத்தில் படம் வெளியிடப்பட்டது. பிறகு வேறு விசயத்தில் கைது செய்யப் பட்ட ஒருவரை “இந்து பூஜாரி புத்த கயாவில் கைது” என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. பிறகு குண்டுவெடிப்பிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளித்தன.

இவன்இந்தியமுஜாஹித்தீனைசேர்ந்தவனா?: பிடிபட்டவன் யாராக இருந்தாலும் அந்தந்த சட்டமீறல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய முஜாஹித்தீனின் கைவேலை தான் இது, என்று ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து செய்திகள் வந்துள்ளன[6]. அவர்களிடமிருந்து, மயன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு பழி வாங்கத்தான் இச்செயல் என்று தகவல் வந்ததாகவும் உள்ளது. ஜார்கண்டில் எவ்வாறு நக்சல்கள் மற்றும் இந்திய முஜாஹித்தீனின் ஜிஹாதிகள் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று புலன்விசாரணை செய்யும் அதிகாரிகளும் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. கடந்த மாதம் ஜூலையிலேயே, அன்வர் முல்லிக் என்பவன் ராணிபந்த், சப்ரா கோட்டம், நாடி மாவட்டம், மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய முஜாஹித்தீனுக்கு வெடிமருந்துப் பொருட்கள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்[8]. ஹைதராபாத்-புத்தகயா குண்டுவெடிப்பில் இருக்கும் ஒற்றுமை மற்றும் குண்டு தயாரிக்கப்படுள்ள முறை இந்திய முஜாஹித்தீனைக் காட்டுகிறது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது[9]. ஆனால், திசைத் திருப்ப “சுக்குமி, ளகுதி, ப்பிலி” போன்ற செய்திகளை ஏன் வெளியிட வேண்டும்? ஆகவே, இந்நிலையில் குழப்பத்தை உண்டாக்கவே, இத்தகைய செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

பீஹாருக்கும், இந்தியமுஜாஹித்தீனுக்கும்தொடர்புஉள்ளாதா?: அதாவது இந்திய-முஜாஹித்தின் என்றால், நாளைக்கு பீஹாரின் தொடர்பு வெளிவரும், அப்பொழுது பீஹாரில் யாரோ உதவியுள்ளனர் என்று தெரிந்து விடும் என்று யாரோ கவனமாக இருக்கின்றனர். அப்படியென்றால், இந்திய-முஜாஹித்தின் சௌகரியமாக பீஹாரில் வேலை செய்து வர யாரோ உதவி செய்து வருகிறார்கள். ஒருவேளை, நிதிஷ்குமாரை மிரட்டி பிஜேபி-கூட்டைக் கலைத்து, காங்கிரஸுடன் நெருங்கி வந்ததற்கு இதுதான் காரணாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இப்பொழுது லல்லு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை! யாசினிடம் இது பற்றி கேட்டபோது, “நல்லது, எங்களைப் போலவே யாரோ அதேப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது” என்றானாம்[10]. அதாவது, இவனும் திக்விஜய சிங் போல, பரூக்கியைப் போல பேசுகிறான் என்பதை கவனிக்கலாம். இந்தியாவில் இப்படி, தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை, பிடிபட்ட தீவிரவாதிகள் கூட இப்படி பேசுவது, இந்தியா எத்தகைய துரோகிகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதாவது, இத்தகைய வெட்டிப்பேச்சுகளில், பொய் பிரச்சாரங்களில் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களைக் கூட மறக்கடித்து விடும் வகையில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதனை அறியவேண்டும்.

பட்டகலில்அவனதுசொந்தக்காரர்கள், நண்பர்கள், மற்றவர்கள்அவனைஒதுக்குவதுஏன்?: இதே மாதிரி கர்நாடகா மாநிலத்தில், மங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் கடற்கரைப் பகுதியில் உள்ள பட்டகல் என்ற நகரத்தில், யாசீனைப் பற்றி விசாரித்தால், ஒருவனை வைத்துக் கொண்டு எங்களை எடை போடாதீர்கள் என்று பொரிந்து தள்ளுகிறார்களாம்[11]. இருப்பினும் முன்னர், அந்த ஊரினர் எப்படி பட்டகல் சகோதரர்களுக்கு உதவினர் என்று விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஏனெனில், உள்ளூர் உதவிகள் இல்லாமல், பொருட்களை வாங்க முடியாது, எடுத்துச் செல்லமுடியாது, விநியோகிக்க முடியாது என்று என்ற நிலையில், பலர் உள்ளனர். அதுல் கரீம் துண்டா விசயத்தில், குடும்பத்தார் ஒட்டு மொத்தமாக அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இங்கோ எரிந்து விழுந்துள்ளதாக சொல்கிறார்கள். “சும்மா, கொஞ்சம் அசிங்கத்தை வைத்துக் கொண்டு, எங்களை இப்படி-அப்படி என்று தீர்மானிக்க வேண்டாம்”, என்கிறார்களாம். மேலும் ஊடகக்காரர்கள் என்றால் அடிக்கவும் வருகிறார்களாம்[12]. ஒரு பக்கத்தில் செய்திகள் இப்படி, மறுபக்கமோ கீழ்கண்டவாறு உள்ளது.

யாசின்பட்கல்உயிரோடு இருப்பதால் குடும்பத்தார்நிம்மதி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதால் அவனது குடும்பத்தார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தேசிய புலனாய்வு துறையினரால் இந்திய-நேபாள எல்லையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான். இந்நிலையில் இது குறித்து அவனது தந்தை ஜரார் சித்திபாபா மற்றும் மாமா யாகூப் பட்கல் கூறுகையில், “அகமது சித்திபாபா (யாசின் பட்கல்) கைது செய்யப்படத்தில் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம்[13]. அவன் இறந்துவிட்டான் என்றே இத்தனை நாட்கள் நினைத்தோம்[14]. என் மகன் அப்பாவி. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போராடுவோம். அவன் மீது குற்றம் இருந்தால் தண்டிக்கட்டும். கடந்த 2005ம் ஆண்டு என் மகன் என்னுடன் துபாய் வந்து ஒரு கடை வைக்க உதவினான். அதன் பிறகு 2007ம் ஆண்டு காணாமல் போனான். இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். யாசின் என்ற பெயரை போலீசாரும், ஊடகங்களும் அவனுக்கு வைத்துள்ளன என்றார். அகமதை பற்றி பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அகமது 1983ம் ஆண்டு பிறந்தான். அவன் 1ம் வகுப்பு முதல் பத்தாவது வரை பட்கலில் படித்தான். ஆனால் அவனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் 2005ல் துபாய்க்குச் சென்றான். 2007லிருந்து அவனுடன் எந்த தொடர்பும் இல்லை”.

போலிஎன்கவுண்ட்டரில்சுட்டுக்கொன்றுவிடுவார்களோஎன்றுபயந்தோம்: எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம் என்று கூறுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றால், தங்களது பிள்ளையை ஒழுங்காக வைத்திருக்கலாமே? “இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்”, என்கின்றனர். பிறகு, உள்ளூர் போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை? மும்பை போலீஸார் விட்டிற்கு வந்தபோது, ஓடிவிட்டான் என்றுள்ளதே, அப்பொழுதே விழித்துக் கொண்டிருக்க வேண்டாமோ? அதாவது துபாயிலிருந்தே காணாமல் போய்விட்டான் என்று நிரூபிக்கப் பார்க்கிறார்கள் போலும்! அப்படியென்றால் தெரிந்தே அனுசரித்து கொண்டு இருந்தார்களா அல்லது பையன் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளான் அதனால் அவனுக்கு நிச்சயம் சொர்க்கம் தான் என்று பூரித்து போய் விட்டார்களா?

© வேதபிரகாஷ்

01-09-2013


 


[4] Indian Mujahideen terror suspect Syed Maqbool, who was freed from Charlapally jail in Hyderabad on remission (good conduct), had revealed during his arrest by Delhi Police in October 2012 that the IM was planning to carry out attacks in Bodhgaya. Maqbool told interrogators that the IM wants to take revenge against attacks on Muslims in Myanmar. He was also questioned during the recent twin blasts in Dilsukhnagar. Maqbool alias Zuber, a former convict, was picked up by the Delhi Police with the help of counter intelligence sleuths from Shaheennagar in October 2012. The key allegation against him was that he was planning a suicide bomb attack in Bodhgaya in Bihar to avenge attacks on Muslims in Myanmar, and also imparted training to those responsible for a couple of low-intensity bomb blasts in Pune in 2012. It is alleged that in July 2012, Maqbool aided other IM terror suspects to do a recce of Dilsukhnagar, Begum Bazaar and Abids in Hyderabad. He was said to be acting on the orders of the most wanted terror suspect, Riyaz Bhatkal.

http://www.deccanchronicle.com/130708/news-current-affairs/article/bodhgaya-blasts-indian-mujahideen-man-had-warned

[7] The angle is being looked into by the NIA even in the recent serial blasts in the Mahabodhi temple in Bodh Gaya, Bihar. Sources in NIA said the attack in Gaya seems to be the work of a new module of the IM. “It is clear that an organised group is behind it. Planting 13 bombs requires planning. It is suspected to be IM but a new module set up in the neighbouring state of Jharkhand could be responsible for the attack,” said an NIA officer. Sources in the NIA said Manzar attended a training camp in Kerala and was given the responsibility of recruiting youths from Jharkhand since he belonged to the state. He is alleged to be an important functionary of the banned Students Islamic Movement of India (SIMI) and later joined the IM. A fresh revelation that Amir Raza Khan, one of the founder members of IM, originally hails from Gaya has led the agencies to probe some of his old contacts. So far, it was believed that Khan was from Kolkata. Support from Pakistan-based terror outfits is also not ruled out. Sources said even in the past Pakistan’s Inter Services Intelligence (ISI) had made attempts to support the Naxalites in India. Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2369414/Terror-web-spreads-Jharkhand-State-revealed-prime-recruiting-ground-Indian-Mujahideen.html#ixzz2c2wX8Ibr; Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[8] A resident of Ranibandh in Chapra sub-division of Nadia district of West Bengal, Mullick was arrested with explosives and counterfeit Indian currency with face value of around Rs 1.90 lakh, according to reports.

http://www.indianexpress.com/news/bodhgaya-blasts-im-explosives-supplier-held-in-bengal/1142659/

[10] When he was questioned by top officers of the Bihar Police and the  National Investigating Agency. Sources say that he denied the Mujahideen’s involvement in a series of bomb blasts in the pilgrimage town of Bodh Gaya in July, but said of the attacks, “Good… it seems there are other people like us working for the same purpose.”

http://www.ndtv.com/article/india/bodhgaya-blasts-show-others-share-our-goal-yasin-bhatkal-allegedly-said-412152