Archive for the ‘தமிழ் நாத்திகன்’ category

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?

மார்ச் 10, 2014

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?

 

இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாம் என்றல் “அமைதி” என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் ஒருபக்கம், ஆனால், ஜிஹாதிகள் இஸ்லாம் பெயரில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போது அவற்றைத் தடுப்பதில்லை. மதத்தின் பெயரால் பாரதத்தை இரண்டாக்கி, பாகிஸ்தானை உண்டாக்கினர். ஆனால், இஸ்லாம் அதனை ஒன்றாக வைத்துக் கொள்ள முடியவில்லை, இரண்டாகி, பங்களாதேசம் உருவானது. செக்யூலரிஸம் பேசி, கம்யூனலிஸத்தில் ஊறிய மதவெறி வகைகள், அரசியல்வாதிகளை ஓட்டுவங்கி பெயரில் மிரட்டியே, இந்தியாவை மிரட்டி வருகின்றனர். ஒருபக்கம், விசுவாசியாக இஸ்லாமின் புகழ் பாடுவது, மறுபக்கம் செக்யூலரிஸ போர்வையில் ஜாதிகளை வைத்துக் கொள்வது மற்றவற்றை தொடர்ந்து கடைப் பிடிப்பது என்று நடித்து வருகின்றனர். இப்பொழுது, தேர்தல் சமயத்தில், மறுபடியும், இஸ்லாம் “ஜாதி இல்லை, ஜாதி உண்டு” என்ற விசயத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது.

 

ஜனவரி  –  பிப்ரவரி 2014களிலேயே   ஆரம்பித்து  விட்ட  இடவொதிக்கீடு  பேரங்கள்: முஸ்லிம்களுக்கு இடவொதிக்கீடு கொடுத்தது கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டனர். முஸ்லிம்களின் ஓட்டுகளைக் கவர திராவிட கழகங்களின் தலைவர்கள் இப்படி மாறிமாறி முஸ்லிம்களை தாஜா பிடிப்பது, தேர்தல் வரும்போது அதிகமாகும் என்பது தெரிந்ததே. ஜனவரி 29.2014 அன்று முஸ்லிம்கள் – தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் [Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) ] கோயம்பத்தூரில், கல்வி நிறுவனங்களில் 3.5% இடவொதிக்கீட்டை  7%க்கு எந்த கட்சி உயர்த்தித்தருமோ  அதற்கு ஓட்டளிப்போம் என்று கோரினர்[1]. 23 கோடி முஸ்லிம்களில் 15 கோடி முஸ்லிம்கள் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள், ராணுவத்தில் 1% தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினர்[2]. ஆகவே இஸ்லாமிய ஓட்டுகள் இப்படித்தான் பேரம் பேசப்படுகின்றன என்று முஸ்லிம்களே ஒப்புக்கொள்கின்றனர். மத்திய அரசும் சென்ற மாதத்தில் [பிப்ரவரி 20.2014] ஆந்திராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 4.5% இடவொதிக்கீடு செய்ய, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது[3]. முன்னர் உச்சநீதி மன்றம் மறுத்தது[4]. இதற்குள் தெலிங்கானா உருவாக்கி விட்டதால், முஸ்லிம்கள் அங்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள்[5]. அங்கு அவர்களது சதவீதம் 18% என்கிறார்கள்! இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று ஊடகங்களே விமர்சித்தன.

 

இரண்டு  சாத்தான்களில், தீயசக்திகளில்  எது  நல்லது  அல்லது  கெட்டது: இருப்பினும், காங்கிரசுக்கு அதைப் பற்றி கவலையில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், கலாட்டா செய்து கொண்டு, இரண்டு திராவிட கட்சிகள் மாநில அளவில், மத்தியில் காங்கிரஸ் என கட்சிகளை மிரட்டியே சாதித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் ஏற்கெனவே இந்த இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் [கருணாநிதி அல்லது ஜெயலலிதா] எது நல்லது அல்லது கெட்டது என்று வெளிப்படையாகவே விவாதித்துள்ளன[6]. உண்மையில், சட்டரீதியில் மத அடிப்படையில் கொடுக்க முடியாது. இதனால், சமூகம் மற்றும் படிப்பறிவில் பிந்தங்கியுள்ள வர்க்கங்கள் [socially and educationally backward classes] என்ற நீதியிலுள்ள இடவொதிக்கீட்டில் இவர்களை பிசி / BC என்று இடவொதிக்கீடு கொடுக்கப் படுகிறது[7]. இதை முஸ்லிம்களின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் ரஹ்மான் கானே ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, இஸ்லாம், குரான், முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, இடவொதிக்கீடுதான் வேண்டும். மிகப்பிற்பட்ட வகுப்பினர் என்றும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுகிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்[8].

 

OBC Reservation to Muslim Minorities

            The Government has already provided reservation to some Muslim communities under Other Backward Classes (OBC) category. The State-wise details   of Muslim community included in the Central List of OBCs as on 24th August 2010 are as follows:

S.no. Name of the state Entry no. In central list Name of the caste  
1. Andhra  Pradesh 37 Mehtar (Muslim)  
2. Assam 13 Manipuri Muslim  
3. Bihar 130 Bakho (Muslim)  
    84 Bhathiara(Muslim)  
    38 Chik(Muslim)  
    42 Churihar(Muslim)  
    46 Dafali (Muslim)  
    57 Dhobi (Muslim)  
    58 Dhunia(Muslim)  
    119 Idrisi or Darzi{M\tslim)  
    5 Kasab(Kasai)(Muslim)  
    91 Madari(Muslim)  
    92 Mehtar }
Lalgbegi }  (Muslim)
Halalkhor}
Bhangi}
 
    93 Miriasin(Muslim)  
    102 Mirshikar(Musiim)  
    103 Momin(Muslim)  
    99 Mukri (Mukcri) (Muslim)  
    67 Nalband(Muslim)  
    63 Nat (Muslim)  
    68 Pamaria (Muslim)  
    109 Rangrez(muslim)  
    111 Rayeen or Kunjra (Muslim)  
    116 Sayees (Muslim)  
    131 Thakurai (Muslim)  
    129 Saikalgarf (Sikligar)(Muslim  
4. Chandigarh NIL    
5. Dadra Nagar Haveli 9 Makarana(Muslim)
6. Daman & Diu NIL  
7. Delhi NIL    
8. Goa NIL    
9. Gujarat 3 Bafan (Muslim)  
    17 Dafar (Hindu Muslim)  
    19 Fakir, Faquir (Muslim)  
    20 Gadhai (Muslim)  
    22 Galiara (Muslim)  
    23 Ganchi (Muslim)  
    24 Hingora (Muslim)  
    28 Jat (Muslim)  
    27 Julaya, Garana, Taria, Tari and Ansari (All Muslim)  
    32 Khatki or Kasai
Chamadia Khatki
Halari Khatki (All Muslim)
 
    43 Majothi Kumbhar
Darbar or Badan
Majothi (All Muslim)
 
    44 Makrani (Muslim)  
    45 Matwa or Matwa-Kureshi (Muslim)  
    40

Mir

Dhabi

Langha

Mirasi (All Muslim)

 
    49 Miyana, Miana (Muslim)  
    54

Pinjara

Ganchi-Pinjara

Mansuri-Pinjara (All Muslim)

 
     59 Sandhi (Muslim)  
    65 Sipai Pathi Jamat or Turk Jamat (All Muslim)  
    70 Theba (Muslim)  
    73 Hajam (Muslim), Khalipha (Muslim)  
    76 Vanzara (Muslim)  
    76 Wagher (Hindu & Muslim)  
10. Haryana nil    
11. Himachal Pradesh nil    
12. J&K nil    
13. Karnataka 13 chapper Band (Muslim)  
    179

Other Muslim excluding:

i)        Cutchi Menon

ii)       Navayat

iii)      Bohra or Bhora or Borah

iv)      Sayyid

v)       Sheik

vi)      Pathan

vii)     Mughal

viii)    Mahdivia/Mahdavi

ix)      Konkani or Jamayati   Muslims

 
 
14. Kerala 39A

Other Muslim excluding:

i)         Bohra

ii)       Cutchi Menmon.

iii)      Navayat

iv)       Turukkan

v)       Dakhani Muslim

 

 
 
15. Madhya Pradesh 59

Islamic Groups:

1. Ranrej

2.Bhishti Bhishti-Abbasi

3. Chippa/Chhipa

4.Hela

5. Bhatiyara

6. Dhobi

7. Mewati,Meo

8.  Pinjara, Naddaf,

Fakir/Faquir,

Behna, Dhunia; Dhunkar, Mansoori

9. Kunjara,Raine

10. Manihar

11. Kasai,Kasab,Kassab, Quasab, Qassab, Qassab-Qureshi

12.Mirasi

13. Barhai (Carpenter)

14.Hajjam(Barber)

Nai (Barber)

Salmani.

15. Julaha-Momin

Julaha-Ansari

Momin-Ansari

16. Luhar,

Saifi,

Nagauri Luhar Multani Luhar

17.Tadavi

18. Banjara, Mukeri, Makrani

19. Mochi

20. Teli

Nayata, Pindari (Pindara)

21.Kalaigar

22.Pemdi

23.Nalband

24. Mirdha(Excluding Jat Muslims)

25. Nat (Other than those included in the SC List)

26. Niyargar,

Niyargar-Multani

Niyaria

27. Gaddi

       
       
       
       
       
       
 16. Maharashtra 187 Chhapparband (including Muslim)  
17 Manipur nil    
18. Orissa nil    
19. Puducherry nil    
20. Punjab nil    
21. Rajasthan 23 Julaha (Hindu &, Muslim)  
22. Sikkim nil    
23. Tripura nil    
24. Tamilnadu 26 Dekkani Muslim  
25. Uttar Pradesh 44 Muslim Kayastha  
    22 Teli Malik (Muslim)  
26. Uttrakhand nil    
27. West Bengal nil    
28. Andaman & Nicobar nil    
29. Mizoram No OBC    
30. Nagaland No OBC    

இவ்வாறு எங்களிடையே ஜாதியில்லை, வேறுபாடில்லை, என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்கள் ஜாதிகள் அடிப்படையில் இடவொதிக்கீட்டைக் கேட்டுப் பெற்று அனுபவித்துதான் வருகிறார்கள். இதெல்லாம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஜாட் / ஜட் இந்துக்களுக்கு பிசி பிரிவில் இடவொதிக்கீடு கொடுத்தால், அது முஸ்லிம்களை பாதிக்குமாம். இப்படியும் கதை உள்ளது[9]. அதாவது, செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸம் மற்றும கட்சிகள் தான் இந்நாடகம் ஆடிவருகின்றன. இதே நாடகம் தான், திராவிடக் கட்சிகளும் அரங்கேற்றி வருகின்றன.

 

வேதபிரகாஷ்

10-03-2014

 


[1] The Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) staged a protest in front of HotelTamil Nadu at Gandhipuram in the city on Tuesday, demanding the state government increase the reservation quota for Muslims to 7 percent from 3.5 percent in educational institutions. They claimed that the TNTJ would support AIADMK in the coming Lok shaba polls if the reservation is increased.

http://webcache.googleusercontent.com/search?q=cache:http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Muslims-stage-protest-demanding-7-per-cent-reservation-in-educational-institutions/articleshow/29523268.cms

[3]  In a politically significant move, the Centre on Wednesday sought the Supreme Court’s nod to provide a 4.5% quota for Muslims in education and jobs on the lines provided in Andhra Pradesh. Abench comprising Justices KS Radhakrishnan and Vikramjit Sen, however, desisted from hearing the matter, but said it would urge the Constitution bench hearing the Andhra case to look into the government’s plea.

http://articles.economictimes.indiatimes.com/2014-02-20/news/47527120_1_constitution-bench-ap-backward-quota

[6]  Md. Ali, TwoCircles.net, Who will be “lesser evil” for Muslims in TN: Amma or Kalaignar?,  28 April 2011 – 12:28pm But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two.

http://twocircles.net/2011apr28/who_will_be_%E2%80%9Clesser_evil%E2%80%9D_muslims_tn_amma_or_kalaignar.html

[7] “Backward Muslims are already getting reservations under BC reservation category of 27 percent as per the Mandal Commission’s recommendations. We are just creating a sub quota within the OBC group as backward minorities were not able to get their share,” Minority Affairs Minister K Rahman Khan said.

ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!

மே 15, 2010

ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!

சரித்திரம் படித்தவனுக்கு ஞாபகம் இருக்கலாம், அதாவது எப்படி ஔரங்கசீப் குரானை கைப்பிரதிகள் எடுத்து விற்றான் என்றெல்லாம் புத்தகத்தில் படித்திருந்ததலிருந்து.

ஆனால், குரான் எடுபடாது, குறள் எடுபடும் என்று கிளம்பியிருக்கிறார், ஒரு ஔரங்கசீப், சங்கத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து! அவர்தான் மாபெரும் ஷேக் மைதீன்!

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை. செம்மொழி சீசனில் கிடைப்பதை அள்ளிக்கொள்ளலாம் என்று ஆரம்பித்தாரோ என்னமோ?

குறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.

இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முஸ்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாதிரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும்  இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.

இதே ஒரு குப்பன், சுப்பன் குரானை அச்சடித்து, விற்று அதில் கிடைக்கும் லாபத்தைப் பங்கிட்டுக் கொடுப்பேன் என்று கிளம்பியிருந்தால், முஸ்ளீம்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி மோகனின் இந்து விரோத பேச்சும்!

திசெம்பர் 14, 2009

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி  மோகனின் இந்து விரோத பேச்சும்!

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு: இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்க நல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 13-12-2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இஸ்லாத்தின் பல பரிமாணங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விவாதிக்கப் பட்டது. அவை அடங்கிய – 89 ஆய்வுக் கட்டுரைகள் – ஆய்வுத் தொகுப்பும் வெளியிடப் பட்டது.

இந்துவிரோத பேச்சு: அதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் பேசிய பேச்சு இந்து விரோதமாக இருந்தது கண்டு சிலர் வியந்தனர். தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு அவர் பேசியவிதம் சரியாகயில்லை. வேடிக்கை என்னவென்றால் அத்தகைய நாத்திகம் பேசுபவர்கள் எப்படி முஸ்லீம்களுடன் ஒத்துப் போகின்றார்கள் என்பதுதான்? அத்தகைய முரண்பாடுகளைக் கவனிப்பவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள், அத்தகைய நாத்திகவாதிகள் இந்து-விரோதிகளாக இருப்பதனால் தான் முஸ்லீம்கள் அவர்களை தங்களது மேடைகளில் இடம் கொடுத்துப் பாராட்டுகின்றனர். கிருத்துவர்களின் போக்கும் இதுமாதிரியே உள்ளது.

லுங்கி கட்டிய முஸ்லீம், சிலுவை போட்ட கிருத்துவன்: தனது தலைவர்கள் லுங்கி கட்டிய முஸ்லீமாக, சிலுவை போட்ட கிருத்துவனாக இருந்தனர் என்று சொல்லி இந்துக்களைத் தாக்கிப் பேசுவது பண்பற்ற முறையாகத் தோன்றியது. பிறகு எதற்கு “இந்து” என்று பல விண்ணப்பங்களில், ஆவணங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்? இத்தகைய போலி நாத்திகர்கள் கோடிக்கணக்காக உள்ள இந்துக்களின் நம்பிக்கையை எடைபோடவும் தகுதியில்லை, விமர்சனிக்கவும் யோக்கியதை இல்லை.

இந்துக்களின் மூடநம்பிக்கை மற்றும் தீவிரவாதம்: திராவிட நாத்திகம் தமிழகத்தில் இருப்பதனால்தான் இந்துக்கள் இங்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்படி அவர்கள் யாதாவது செய்தால், திராவிட சம்மட்டி அவர்களை அடக்கிவிடும், இந்துக்கள் ஏதோ மூடநம்பிக்கை உள்ளவர்கள் போலவும், அவர்களது தீவிரவாதம் அடக்கப்படவேண்டுமானால், அத்தகைய இஸ்லாமிய மாநாடுகள் எல்லா நகரங்களிலும் நடத்தப் படவேண்டும் என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.

“மதத்தால் முஸ்லீம், மொழியால் தமிழன்” என்றால் தமிழர்களில் இந்துக்கள் இல்லையா, அல்லது இந்துக்கள் தமிழர்களாக இல்லையா?: இவ்வாறு முஸ்லீம்கள் பேசி பெருமைக் கொள்ளும்போது, இவர்கள் மட்டும் எப்படி, நாங்கள் நாத்திகர்கள், தமிழர்கள் என்று கூறிக் கொள்ளமுடியும்? மதத்தால் இந்துக்கள், மொழியால் இந்துக்கள் என்றுள்ளவர்கள் என்ன இத்தகைய கூட்டாளிகளைவிட தாழ்ந்தவர்களா? யாரை ஏமாற்ற இத்தகைய வாசகங்கள்? இந்துக்கள் தமிழராக அல்லது தமிழர் இந்துக்களாக இருக்கமுடியாது என்று இப்படி மறைமுகமாக உணர்த்த இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இப்படி பேசுவதற்கு ஒரு பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் என்றிருக்கும் இவருக்கு வெட்கமாக இல்லை? ஏன் அவர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

உயர்ந்தவர் / தாழ்ந்தவர்: தேவையில்லாமல், இந்துக்கள் நடத்தும் விழாக்களில் அவர் கீழே உட்காரவேண்டும், ஆனால் இங்கு மற்றவர்களுடன் மேடையில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தது என்று பேசியதில் பொருளே இல்லை. மேலே மேடையில் அன்று உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள் / உயர்ந்தவர் இல்லை. கீழே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் சிறியவர் / தாழ்ந்தவர் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்ததால், மேடையில் உட்கார்ந்திருக்கின்றனர்!

பேசியதையே திரும்ப பேசுதல்: பேச்சின் முடிவில் 90 மலர்களின் பெயரைச் சொல்லி வாழ்த்தியதும் செயற்கையாக இருந்தது, ஏனெனில், அவர் எல்லா இடங்களிலும் அவ்வாறே பேசுவது சிலருக்குத் தான் தெரியும். அப்படியே “டப்பா அடுத்து வைத்ததினால்” அவ்வாறு கூறுகிறார்! உதாரணத்திற்கு, பாரதியார் பல்கலையில் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா 07-10-2009 அன்று நடந்தபோது, அவ்விழாவில் 90 விதமான மலர்களின் பெயரை கூறி மாணவர்களை சபாபதி மோகன் வாழ்த்தினார்! இங்கும்  இன்று 13-12-2009, அதே பாட்டு பாடி பேச்சை முடித்துக் கொண்டார்!

யார் இந்த நபர்? “நான் உங்களில் (திமுக) ஒருவனாக இருப்பேன்” : சபாபதி மோகன் பேச்சு, பரபரப்பு (10-05-2008): பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப. சீதாராமன் எழுதிய “அதியமான் நெஞ்சமும் -அன்புத் தலைவர் உள்ளமும்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

திமுக கொடுத்த பதவி: வெளியீட்டு விழாவில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சபாபதி மோகன் கலந்து கொண்டு பேசினார். “ இந்த விழாவில் நான் கலந்து கொண்டதன் மூலம் என்றும் உங்களோடுதான் இருப்பேன் என்று கூறிக் கொள்கிறேன். கறுப்புசிவப்பு கரை வேட்டி கட்டியவனாக இல்லாவிட்டாலும் உங்களில் ஒருவனாக இருப்பேன்….இங்கு நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு வீடு பார்ப்பது முதல் எல்லா பணிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தலைவர் உள்ளம் எப்படிப்பட்டது என்பதற்கு நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்தாலே தெரியும். அது எத்தனை பெரிய நாற்காலி என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கு அந்த வாய்ப்பைத் தந்த தலைவரை வணங்குகிறேன்”.
அப்பதவியே சர்சைக்குரியது: சபாபதி மோகனுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கொடுத்ததற்கு பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த பேச்சு குறிப்பிடத்தக்கது. கட்சிமாறிகளுக்குப் பதவி கிடைத்ததால், விசுவாசம் பொங்க பேசி தனது பதவியைத் தக்கவைக்க வேலை செய்து வருகிறார். அதனால் கீழ்கண்டவாறு கருணாநிதி புராணம் பாடுகிறார்!

.ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்குத் தாவி பின்னர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தரான சபாபதி மோகன் பேச்சு: “தனது 14ம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 16ம் வயதில் தமிழ் மாணவர்கள் சங்கம், 17ம் வயதில் அன்பழகனை அழைத்து சங்கம் சார்பில் மாநாடு, 29ம் வயதில் கல்லக்குடி ரயில் மறியல். மேலும், பல போராட்டங்களிலும் கருணாநிதி பங்கு பெற்றார். கடந்த 1958ம் ஆண்டில் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பாட்டு மூலம் நதிகளை இணைத்தார்; தற்போது தனது 84ம் வயதில் நாட்டு நதிகளை இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்”, என்றேல்லாம் பேசுகிறார்!

இந்துக்களுக்கு அடையாளம் இல்லையா? லுங்கி கட்டியவன் முஸ்லீம், சிலுவை போட்டவன் கிருத்துவன் என்றால் இந்து யார்? அவனது அடையாளம் என்ன என்பதுதானே கேட்கப்படுககறது? அதனால்தானே நெற்றியில் குங்குமம், விபூதி, திருமண், பொட்டு என வைத்தால் கேலியும் கிண்டலும் பேசப்படுகிறது? அதற்காகத் தானே கருணாநிதி தமது தொண்டர்களயும் பெயர்சொல்லி என்ன நெற்றியில் ரத்தமா என்று நக்கலாகக் கேட்கிறார்? அதுவே குல்லா போட்டு கஞ்சிக் குடிக்கும்போது அத்தகைய நக்கலும், கிண்டலும், கேலியும் வருவதில்லையே? வந்தாலும் அது இந்துக்களுக்கு எதிராகத் தானேத் திரும்புகின்றன?.

சமய நல்லிணக்க உணர்வு: “இம்மாநாடுகளால் சமய நல்லுணர்வு மலர்ந்திருக்கிறது”, என்று கூறுகிறார்கள்! எப்படி, இங்கு “சமயம்” என்றால் “சந்தர்ப்பம்” என்று பொருள் கொண்டு, இவ்வாறு முஸ்லிம்கள் மற்றும் இந்து-விரோதி திராவிட நாத்திகர்களின் “கூட்டு சமய” உணர்வு, பனப்பாங்கு, அவ்வாறானப் பேச்சுகள் நன்றாக மலர்ந்திருக்கிறது என்கிறார்களா? ஆகவே முஸ்லிம்கள் எந்த சமய, யாருடைய சமய நல்லுணர்வு மலரச் செய்கிறர்ர்கள் என்பதனைத் தெளீவு படுத்த வேண்டும்.

இலக்கியத்தால் மட்டுமே இதயங்களை இணைக்க முடியும்: இத்தகைய இந்து-விரோத பேச்சுகளால் எப்படி இதயங்களை இணைக்கப் போகிறர்கள்? திராவிட நாத்திகம் எப்படி இதற்கு உடன் போகும்? இப்பொழுது கூட இஸ்லாம் இல்லாத இலக்கியத்தை வெறுத்து, தூஷிக்கிறதே? அதாவது குறிப்பாக இந்து இலக்கியங்களை அவமதிப்புச் செய்கிறதே? பிறகென்ன இணக்கம்? புதிய முழக்கம்?

முஸ்லீம்களின் கவனத்திற்கு: ஏற்கெனவே ரம்ஜான் கஞ்சி விழாக்களை அரசியலாக்கி, இந்து விரோத விழாக்களாக மாற்றி உள்ளது அனைவரும் அறிவர். இந்துக்களுக்கும் அத்தகைய உண்ணாநோன்புகள் உண்டு ஆனால், அவர்கள் அப்பெயரில் நிறைய பட்சணங்கள் செய்து சாப்பிடுவர், ஆனால் முஸ்லீம்கள்தான் உண்மையாக 40 நாட்களும் உண்ணாநோன்பு கடைப் பிடிக்கின்றர் என்றெல்லாம் குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டே கருணாநிதி கேலி பேசியது அனைவருக்கும் ஞபகம் இருக்கிறது. இன்றைய வருடம் அந்த கேகிக்கூத்தை பேராசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பழகன் செய்தார்!

இதுப்போலத்தான், இந்த சபாபதி மோகனின் பேச்சு. ரம்ஜான் கஞ்சி குடிக்கும் விழாக்கள் மாதிரி இப்படி எல்லா முஸ்லிம் மேடைகளையும் “நான் நாத்திகன்” என்று சொல்லிக் கொண்டு இந்துக்களை விமர்சனிக்க தொடர்ந்து உபயோகிக்கப் பட்டால், பிறகு இதில் முஸ்லிம்களுக்கும் அத்தகைய நாத்திகர்களுக்கும் தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறான பேச்சுகளைப் பேசுகிறார்கள் என்று கொள்ளவேண்டியதாக உள்ளது.

நிச்சயமாக இப்போக்கு முஸ்லீம்களின் இந்து-விரோத மனப்பாங்கைத் தான் காட்டுகிறது. இப்படி வெறுப்பை, காழ்ப்பை, பகைமையை வளர்ப்பது நல்லதா என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.