Archive for the ‘தமிழகத்து ஜிஹாதி’ category

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் எவ்வாறு வளர்க்கப் படுகின்றன?: அத்தகைய போதனைகள், சின்னங்கள் மற்றும் வேறுபாடுகள் மூலம், சாதாரண தினசரி வாழ்க்கையினையே நடத்த முடியாமல் செய்து, மக்களை அஞ்சி நடுங்க வைத்து கட்டுப் படுத்தி வைக்கும் நிலையாகும். இறுதியாக யதேச்சதிகார, சர்வாதிகார. பாசிஸ, நாசிஸ அடக்குமுறைகள் மூலம் அரசாளும் நிலைக்குக் கொண்டு செல்ல போடும் திட்டமாகும். இதற்கு, பெரும்பாலும், மதம், மதநூல்கள், அவற்றில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை ஆணைகளாக ஏற்றுக் கொண்டு நடந்து கொள்வதும் தீவிரவாதம் ஆகிறது. அவற்றின் மூலம், எதிர்ப்பவர்களை மிகக் கொடுமையான மத தண்டனைகள் மூலம் சித்திரவதை, குரூரமாக கொல்லுதல், அவற்றை படங்கள், வீடியோக்களாக எடுத்துப் பரப்புதல், பார்ப்பவர்களுக்கு, “எங்களை எதிர்த்தால், உங்களுக்கும் இதே நிலை ஏற்படும்,” என்று பயமுருத்தல் முதலியனவும் அடங்கும்.  அவர்கள் குறிப்பிட்ட சொற்கள், சின்னங்கள், குறியீடுகளை அடையாளங்களாக பயன்படுத்துவதால், அந்தந்த சித்தாந்தம், மதநம்பிக்கை மற்றும் தீவிரவாத சார்பு, ஆதரவு, பரிவு, உணர்வு, கொண்ட மக்களும் உதவுவது உண்டு. இதனால், அவர்களுக்கு பலவழிகளில் உதவிகளும் கிடைத்து வருகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத அழிப்பு முறைகள் யாவை?: பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதங்கள் செயல்படும் போது, அதற்கு எதிராக மக்களை பாதுகாக்க வழிமுறைகளையும் கையாள வேண்டியுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு (தீவிரவாத எதிர்ப்பு என்றும் முதலியன), இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அல்லது ஒழிக்க அரசாங்கங்கள், சட்ட அமலாக்கம், வணிகம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறைகள், இராணுவ தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கியது. பயங்கரவாத எதிர்ப்பு என்பது பயங்கரவாதிகளை ஒழுங்குபடுத்தி, மனங்களில் பதிந்துள்ள தீவிரவாதங்களை நீக்கி, நடுநிலையாக்குவதற்கும் முடிவாக கைப்பற்றுவதற்கும் எடுக்கப் படும் முயற்சிக்கள் ஆகும். தேசிய சக்தியின் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உந்துதல், அவர்கள் வைத்திருக்கும் இந்த அமைப்புக்கள் மற்றும் இந்த நெட்வொர்க்குகள் அவர்களை அட்டுப்படுப்படுத்டும் பயத்தை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்தை அல்லது குடிமக்களை அவ்வாறே தீவிரவாதிகளுக்குத் துணை போகாமல் இருக்க வற்புறுத்துவதற்கும் ஏற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும்: இந்த பயங்கரவாதிகளின் இலக்குகளுக்கு ஏற்ப, அவற்றை முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும். அத்தகைய அடிப்படைவாத எண்ணங்களிடன் பேசி, எழுதி வரும், கூட்டங்கள் சேர்க்கும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். தடை செய்யப் பட்ட இயக்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள் கூட தொடர்பு வைத்திருப்பது என்பது சாதாரண விசயம். தகவல் கொடுப்போர், இத்தகைய ஆட்களைப் பற்றி ரகசியமாக விவரங்கள் தரும் நபர்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். விவரஙளையும் சரிபார்த்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் வரையறைகள் பரந்த கிளர்ச்சி, கலவரம், அழிவை உண்டாக்கும் போக்கின் ஒரு பகுதியாக இருந்தால், பயங்கரவாத எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிரான துரிதமாக தகுந்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். ஆயுதப் படைகள் வெளிநாட்டு உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற வார்த்தையை கிளர்ச்சி, சட்டமின்மை அல்லது நாசத்தை அடக்குவதற்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு இந்த அச்சுறுத்தல்கள் உருவாகக்கூடிய நிலைமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன..

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, செயல்முறை ஆரம்பம்: அயர்லாந்து தனிநாடாக இருக்க வேண்டு என்று, ஐரிஸ் ரிபளிக் பார்ட்டி என்ற அமைப்பு போராடி வருகிறது. அது, இதுவரை உருவாக்கப்பட்ட முதல் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு பெருநகர காவல்துறையின் சிறப்பு ஐரிஷ் கிளை ஆகும், பின்னர் அது ஃபெனியன் பயங்கரவாதத்தின்[1] மீதான அதன் நோக்கத்தைத் தாண்டி அதன் நோக்கத்தை விரிவுபடுத்திய பின்னர் சிறப்புப் பிரிவு என்று மறுபெயரிடப்பட்டது. சட்ட அமலாக்க முகவர் இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் இதே போன்ற பிரிவுகளை நிறுவினர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் விரிவடைந்தன. குறிப்பாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய அரசாங்கங்கள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தன, இதில் அதிக வெளிநாட்டு ஒத்துழைப்பு, சிவப்பு அணிகளை உள்ளடக்கிய மாற்றும் தந்திரங்கள், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். வளர்ந்த நாடுகளில் பரபரப்பான தாக்குதல்கள் ஊடக கவனத்தைப் பெற்றாலும், பெரும்பாலான பயங்கரவாதம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு அரசாங்கத்தின் பதில்கள், சில சந்தர்ப்பங்களில், கணிசமான எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்

வேதபிரகாஷ்

07-11-2022


[1] The word Fenian served as an umbrella term for the Irish Republican Brotherhood (IRB) and their affiliate in the United States, the Fenian Brotherhood, secret political organisations in the late 19th and early 20th centuries dedicated to the establishment of an independent Irish Republic.

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.


தமிழகத்தில் முதன்முதலாக என்... செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தினமலர், எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..

https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022

[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

Police warns about spreading false details - 16-02-2020

உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

News cutting, police dissatisfied 16-02-2020

தமுமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2].  இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை.

Sweden support washermenpet demo- nakkeeran-16-02-2020

14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Washermenpet Muslim poster Feb 2020-2

சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6].

Muslims against AIADMK govt.6

முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது.

Muslims against AIADMK govt.4

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

Muslims against AIADMK govt.1

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது.

Muslims against AIADMK govt.3

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

 

Muslims - Modi, Amit Shah effigy burnt-2

உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது

Washermenpet Muslim poster Feb 2020-3

எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Vikatan undue support to Muslis Feb 2020

[1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்),  Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ்

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest

[3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள்சென்னை சிஏ.. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/

[5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

சென்னையில் ஐஎஸ்.தீவிரவாதிகளின் திட்டங்கள்: சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக நாடுகள் பல வற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உளவுத் துறை, மாநில போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2016 ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன், ஜமீல் முகமது என்பவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிர வாத இயக்கும் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது[1]. அதாவது, ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னையிலேயே இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு, ஜல்லிக்க்கட்டு, சசிகலா விவகாரங்களில் இவை மறைக்கப்படுகின்றன.

after_iqbal_failed_twice_to_reach_syria_he_was_advised_to_raise_-money

மைலாப்பூரில் வாழ்ந்த ஐஎஸ் தீவிரவாதி: இக்பால் என்ற வாலிபருடன் ஜமீல் கான் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது[2]. இக்பால் ஐ.எஸ்.இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3]. அந்தவகையில் இக்பால், ஜமீல் முகமதுவிடம் ரூ.65 ஆயிரம் பணம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[4]. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்தநிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 06-02-2017 அன்று தங்க கடத்தலில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சென்னையில் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராஜஸ்தான் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். பின்னர் புழல் சிறையில் இருந்த இக்பாலை ராஜஸ்தான் மாநில நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று முறைப்படி 13-02-2017 அன்று கைது செய்தனர்.

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

ஐ.எஸ்.தீவிரவாதியான ஜமீல் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவே ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக சென்னை மக்கள், ஐஎஸ் எரிமலை மீது உட்கார்ந் திருக்கின்றனர், இந்த வெறியர்கள், என்றைக்கு குண்டு வைப்பர்களோ, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை.

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal

சிரியாவுக்கு செல்ல முடியாது மொஹம்மது இக்பால்: முகமது இக்பாலிடம் 22-02-2017 அன்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது[5]: “முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை  செலுத்தியுள்ளார்[6]. இவ்வளவவுதான், தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஜல்லிக் கட்டு விவகாரத்தில், முஸ்லிம்கள் கலாட்டா செய்தது, இத்தகைய விவகாரங்களை மறைக்கத்தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஓருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுப்பதை விட, அவனது கூட்டாளிகள் யார், எப்பொழுது கைது செய்யப் பட்டார்கள் போன்ற விவகாரங்களைக் கொடுக்கலாம். என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டவர்களின் விவகாரங்கள், அவர்கள் செய்த குற்றம் முதலியவற்றை தனது இணைதளத்தில், தினமும் வெளியிட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

26-02-2017

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal-dainik-bhaskar-photo

[1] The Hindu, Mylapore resident has IS links, Chennai, February 22, 2017 01:18 IST;  Updated: February 22, 2017 01:18 IST.

[2] A resident of Mylapore, who was arrested by intelligence agencies in Rajasthan last month January 2017, has revealed during interrogation that he had links with the Islamic State. A senior officer of the city police said Mohammed Iqbal (32), a resident of Bazaar Street, was arrested based on a tip-off obtained from the Rajasthan Anti-Terrorist Squad.

http://www.thehindu.com/news/cities/chennai/mylapore-resident-has-is-links/article17343462.ece

[3] சென்னை.ஆன்.லைன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபர் கைது, February 21, 2017, Chennai.

[4] http://www.chennaionline.com/article/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] தினகரன், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை, 2017-02-23@ 00:04:40

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

ஜூலை 29, 2013

Indian Secularism

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும்…

View original post 300 more words