Archive for the ‘தங்கக்கட்டி’ category

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-six

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிர‌ஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிர‌ஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting
தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

சுலைமான் செயல்பட்ட விதம்:  “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

moideen-is-operative-ie-cutting-25-10-2016

சிரியாவுக்கு சென்று .எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.

Name in English பெயர் ஊர் / மாநிலம்
Adnan Hussain from Karnataka[4] அட்னன் ஹுஸைன் பட்கல், கர்நாடகா
Mohammed Farhan from Maharashtra மொஹம்மது பர்ஹன் மஹாராஷ்ட்ரா
Sheikh Azhar Al Islam from Kashmir. ஷேக் அஸ்ர் அலி காஷ்மீர்
Abdul Basith, a youth from Hyderabad அப்துல் பஸித் ஹைதரபாத், தெலிங்கானா
Sultan Armar சுல்தான் அர்மர்
Shafi Armar. சஃபி அர்மர்
Subahani Haja Mohiddheen சுபஹனி ஹாஜா மொஹிதீன் கடையநல்லூர், தமிழகம்
Suwalik Mohammed சுவாலிக் முகமது (26) கொட்டிவாக்கம், சென்னை
Suliman  சுலைமான் திருவான்மியூர்

இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]

[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html

[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.

Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.

http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/

[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.

 

தங்கத்தைக் கடத்திய அப்துல்லா, வைரங்களை கடத்திய முகமது ஷபீக்: எல்லாமே வயிற்றில்தான்!

ஒக்ரோபர் 29, 2010

தங்கத்தைக் கடத்திய அப்துல்லா, வைரங்களை கடத்திய முகமது ஷபீக்: எல்லாமே வயிற்றில்தான்!

வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்[1]. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்லா (47). இவர் இன்று காலை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்  விமானம் மூலம் கொழும்புவில் இருந்து சென்னை வந்தார். இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் உஷாராகி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்கு அப்துல்லா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது பைகளை சோதனை செய்ததில் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தியததல் அவர் வயிற்றுக்குள் வித்தியாசமான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அப்துல்லா, 130 கிராம் வீதம் 910 கிலோ எடையுடைய 7 தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 20 லட்சரூபாய். இதனையடுத்து அப்துல்லாவை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னைக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க (இலங்கை) விமான நிலையத்தில் கைது[2]: சென்னைக்கு தங்கம் கடத்த முற்பட்ட இருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்களிடமிருந்து 116 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்கு 15,000 ரூபா அபராதம் அறவிடப்பட்டுப் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதற்கும், மேலேயுள்ள செய்திக்கும் சமந்தம் உள்ளதா என்று தெரியவில்லை. இருப்பினும், தமிழகம் இலங்கைக் கடத்தல்களின் வழியாகிறது என்பது தெளிவாகிறது[3].

கொழும்பிலிருந்து சென்னைக்கு நூதன முறையில் ரத்தினக் கற்கள் கடத்தல்[4]:  கொழும்பிலிருந்து சென்னைக்கு நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினம், வைரகற்களை கடத்தி வந்த இலங்கை நபரை, புறநகர் போலீசார் 26-10-2010 அன்று கைது செய்தனர். கொழும்பிலிருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்னை வரும் ஒரு பயணி, விலை உயர்ந்த நவரத்தின கற்களை கடத்தி வருவதாக சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய செய்தி வந்ததும் போலீஸ் நடவடிக்கை; கமிஷனர் உத்தரவுப்படி, பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் குப்புசாமி, விமான நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், குறிப்பிட்ட விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை கண்காணித்து வந்தனர். பின், ரகசிய தகவலில் கூறப்பட்ட அங்க அடையாளங்கள் கொண்ட ஒருநபரை பின் தொடர்ந்தனர். அந்த நபர், அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு டாக்சியில் ஏற முயன்ற போது தனிப்படை போலீசார் மடக்கினர். விசாரணையில், அவர் இலங்கை, காலேவை சேர்ந்த முகமது ஷபீக் (43) என்பது தெரிந்தது. பின், விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரிடம் சோதனை நடத்தினர். இச்சோதனையில் சந்தேகப்படும்படி எந்த பொருளும் சிக்கவில்லை.

முகம்மது ஷபீக்கின் வயறில் ரத்தினங்கள்: இதையடுத்து, முகம்மது ஷபீக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரின் வயிற்று பகுதியை எக்ஸ்-ரே படம் எடுத்தனர். இதில், முகம்மது ஷபீக்கின் வயிற்றில் வித்தியாசமான வடிவத்தில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. இது குறித்து கேட்டபோது, ஷபீக் உண்மையை கக்கினார். போலீசாரிடம் முகம்மது ஷபீக் கூறுகையில், “இலங்கையை சேர்ந்த ராசிக் என்பவர், என்னிடம் விலை உயர்ந்த நவரத்தின கற்களை கொடுத்தார். விமான நிலைய சோதனையில் சிக்கக் கூடாது என்பதற்காக அவற்றை, பாலிதீன் பாக்கெட்டுக்களில் நிரப்பி, விழுங்கினேன். இந்த வகையில், 42 பொட்டலங்களை விழுங்கி, எடுத்து வந்தேன். சென்னை சேர்ந்ததும் இந்த பாக்கெட்டுக்களை எடுத்து, அங்கு மண்ணடியில் உள்ள மெட்ரோ லாட்ஜில் தங்கியிருக்கும் ஜெய்ப்பூரை சேர்ந்த குமார், ஷபீர், ரபீக் ஆகியோரிடம் ஒப்படைக்கும்படி ராசிக் கூறினார்,’ என்றார்.

வயிற்றிலிருந்து 2,065 நவரத்தினம் மற்றும் வைரக்கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கூறும்போது,”முகமது ஷபீக்கின் வயிற்றிலிருந்து 2 ஆயிரத்து 65 நவரத்தினம் மற்றும் வைரக்கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. மருத்துவ உதவியுடன் ஆறு மணிநேரத்திற்கு பின் வெளியே எடுக்கப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய். முகமது ஷபீக் இதுபோல் மூன்று முறை இலங்கையிலிருந்து நவரத்தினங்களையும், வைரங்களையும் கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது[5]. இந்த நவரத்தின கற்களை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருக்கும் நபரிடம் கொடுப்பதற்கு, முகமது ஷபீக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் கூலி பேசப்பட்டுள்ளது,’ என்றார்.

வாழைப்பழ சிகிச்சை சாதாரணமான விஷயம்தான்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், முகம்மது ஷபீக் விழுங்கிய பாலிதீன் பொட்டலங்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது, “வாழைப்பழங்களை சாப்பிட்டால் பொட்டலங்கள் தானாக வெளியே வந்துவிடும்’ என்று முகம்மது ஷபீக் மருத்துவரிடம் கூறியுள்ளார்[6]. இது மிகவும் சாதாரண விஷயம், தவறுதல்காக கண்ணாடித் துண்டு உள்ளே சென்று விட்டாலோ, விழுங்கி விட்டாலோ அதை எடுக்க வாழைப்ப்பழத்தை சாப்பிட சொல்வர். இதையடுத்து, முகம்மது ஷபீக் தொடர்ந்து 10 வாழைப்பழங்களை உண்டார். அடுத்த சில நிமிடங்களில் முகம்மது ஷபீக்கின் வயிற்றில் இருந்த 42 பொட்டலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தது. எவ்வித மருத்துவ சிகிச்சையும் இன்றி போலீசார், முகம்மது ஷபீக் விழுங்கிய நவரத்தினங்கள் மற்றும் வைரங்களை பறிமுதல் செய்தனர்.

முகம்மது ரஃபி[7], முகம்மது கபிர்[8], முகம்மது ஷஃபிக்[9], யார் இந்த கடத்தல் பேர்வழி? முகம்மது ரஃபி, முகம்மது கபிர், முகம்மது ஷஃபிக், முகம்மது ஷபீக் என்று பலவாறு குறிப்பிடப்படும் இவன் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீலங்காவின் ரஸிக், மண்ணடியில் உள்ள மெட்ரோ லாட்ஜில் தங்கியிருக்கும் ஜெய்ப்பூரை சேர்ந்த குமார், ஷபீர், ரபீக்……………..முதலியோர் யார்? இவர்கள் எல்லோருமே, கடத்தல்காரர்கள் மட்டுமா அல்லது வேறு வேலகளையும் செய்து வருகிறார்களா? தீவிரவாதிகளின் தொடர்பு உள்ளதா? அல்லது சென்னை “பாதுகாப்பான வழியாக” கடத்தல்காரர்கள் பயன்படுத்துகிறார்களா என்ற பல கேள்விகள் எழுகின்றன.

முன்பு மூன்று முறை இலங்கையிலிருந்து நவரத்தினங்களையும், வைரங்களையும் கடத்தி வந்தானாம்! இதுபோல் மூன்று முறை இலங்கையிலிருந்து நவரத்தினங்களையும், வைரங்களையும் கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது. அப்படியென்றால், ஏற்கெனவே பத்து கோடி வைரங்கள் சென்றுவிட்டன. மண்ணடி, மெட்ரோ லாட்ஜ்……………..முதலியவை விசாரிக்கப்படவேண்டும். எண்.245, தம்புச் செட்டித் தெருவில் மெட்ரோ பேலஸ் கெஸ்ட் ஹவுஸ் என்று தான் உள்ளது. இந்த தடவையும் ஜெய்ப்பூரை சேர்ந்த குமார், ஷபீர், ரபீக்……………..முதலியோர் வந்தார்களா, ஓடிவிட்டார்களா?

எல்.டி.டி.ஈக்குப் பிறகு முஸ்லீம் இயக்கங்களின் ஆளுமை: நவரத்தினம், வைரகற்களை சட்டத்திற்குப் புறம்பாக சுரங்கள் அமைத்து தோண்டியெடுத்தல், கடத்துதல், வியாபாரம் செய்தல் முதலியன எல்.டி.டி.ஈயிற்கோ, மற்ற கடத்தல் கும்பல்களுக்கோ புதியதான விஷயமல்ல.

Conflict resolution[10]: This funding normally gets arranged through an NGO and there is enough reason to believe that Bishop Tutu, being a patron of ‘International Alert’ has been droned with tendentious propaganda about the Sri Lankan situation for years. International Alert is an NGO whose activities often became the subject of controversy even in other countries where it purportedly worked to ‘resolve conflicts’. They claim specialization in the trade of ‘conflict resolution’ but up to now it is not known where they have resolved national or international conflict successfully. In Sierra Leone, they offered their service to resolve the conflict between the ‘Shinning path’ rebels and the Government. ‘Shinning path’ is an organization very much like the LTTE for its brutality to civilians, recruitment of child soldiers and illegal moneymaking by diamond mining and smuggling. The Government expected ‘International Alert’ to work their magic of ‘conflict resolution science’ but eventually the IA became so patronizing of the rebels the conflict became worse.

Diamond smuggling: The Sierra Leone Government, having realized that in the guise of resolving conflict the ‘resolutionists’ have become stakeholders in the diamond smuggling industry, ejected them from the country. Hence the modus operandi of these new fangled conflict ‘resolutionists’ is to eventually become part of the problem and their initial pontifications are only a platform.

அப்படிப்பட்ட தொழில்களில் மூலமாக எல்.டி.டி.யின் ஆண்டு வருமானம் – 2000-01, $ 48-72 மில்லியன்களாக இருந்தது[11], அதாவது ரூ.200-300 கோடிகளாக இருந்தன. அதன் பலம் குறைந்த பிறகு, முஸ்லீம் இயக்கங்கள் ஈடுபடுவது தெரிகிறது.

வயற்றில் வைத்துக் கடத்துவது: விலையுயர்ந்த வைரங்கள், போதைப் பொருட்கள் முதலியவற்றை வயற்றில் வைத்துக் கடத்துவது, தொடை தசையில் / குதத்தில் மறைத்து வைத்து கடத்துவது, முதலியன பழைய முறைகள் தாம். இருப்பினும் ஒரே வாரத்தில் இப்படி இரண்டு கடத்தல் விவகாரத்தில் வயிற்றில் மறைத்து இலங்கஒயிலிருந்து சென்னக்கு எடுத்து வந்திருப்பதால், ஒரே கூட்டம் வேலை செய்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

வேதபிரகாஷ்

© 28-10-2010


 

[1] தினமலர், வயிற்றுக்குள் வைத்து தங்கம் கடத்தியவர் கைது, அக்டோபர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=116282

[2] வீரகேசரி, தங்கம் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது,      வீரகேசரி இணையம் 10/29/2010 4:17:25 PM http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28191

[3] வேதபிரகாஷ், தமிழகம் இலங்கைக் கடத்தல்களின் வழியாகிறது: தொழில் கைமாறியதா, ஆட்கள் மாறிவிட்டார்களா?, http://lawisanass.wordpress.com/2010/10/28/srilankan-smuggling-through-tamilnadu/

[4] தினமலர், நூதன முறையில் நவரத்தினம், வைரம் கடத்திய இலங்கை நபர் கைது, அக்டோபர் 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115033

[5] முன்பே இவ்வழி பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

[11] Daniel Byman, Trends in outside support for insurgent movements, National Secuirity research division (RAND), USA, 2001, p.88.