பிப்ரவரி 23, 2013
தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்
தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

ஐ.ஈ.டி. விவரங்கள்
கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?
கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்
மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவர்களை பிடிக்க முடியாதா?
வேதபிரகாஷ்
23-02-2013
[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.
[2] Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.
[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அசாதுதீன், அசாதுதீன் ஒவைஸி, அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், ஆப்கானிஸ்தான், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐதராபாத், ஒவைஸி, ஒஸாமா பின் லேடன், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கேரள ஜிஹாதிகள், கோவை, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டிடோனேடர், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தில்ஷுக் நகர், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், பட்கல், பட்டகல், பட்டக்கல், பலுச்சிஸ்தானம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, முஸ்லீம், மூளை சலவை, வங்காள தேசம், வயர் துண்டுகள், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், IED
Tags: அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜிஹாதி, ஜிஹாத், தாலிபான், நேட்டோ, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 8 பின்னூட்டங்கள்
நவம்பர் 11, 2011
அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!
அத்வானி கொலை முயற்சி: அத்வானி கொலை முயற்சி வழக்கில் பைப் வெடிகுண்டு வைத்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா (26), மற்றும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் (22), ஆகிய இருவரையும் சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்[1]. இவர்களிடம் இருந்து குண்டு வைக்க பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷா, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் பலரை தேடி வருகின்றனர். மொபைல் போன் மூலம் அம்பலம்: ஆலம்பட்டி பகுதியில் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்த போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரை மேலூரைச் சேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான இவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, பாலத்தின் அடியில் குண்டு வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் புலன் விசாரணை நடக்கிறது.
Two Islamic fundamentalists — Abdul Rahman alias Abdullah (26) of Nelpettai and Ismath (22) of Simmakkal — said to be sympathisers of extremist Imam Ali, were arrested here on Tuesday in connection with the alleged attempt on BJP leader L K Advani’s life during his visit to the temple town last week. Sources said a third person was detained in rural Thirumangalam late on Tuesday night. A hunt is on for their accomplices[2]. |
இருவர் கைது, மற்றவர் தலைமறைவு: மதுரையில் பழக்கடை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் (சிக்கந்தர் பாட்சாவின் மகன், நெல்பேட்டை) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இஸ்மத் (காஜா ஹுஸைனின் மகன், சிம்மக்கல்) ஆகிய இருவரையும் கைது செய்ததாகத் தெரிவித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி சேகர்[3], முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் இவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இவர்கள் மீது ஏற்கெனவே சிறு சிறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்[4].
கேரளாவிற்கு (பெங்களூருக்கு / ஆந்திராவிற்கு) ஏன் தப்பிச் செல்ல வேண்டும்? இதுகுறித்து ஏ.டி.ஜி.பி.,சேகர் கூறுகையில், “இந்த வழக்கில் முதல்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், சதித்திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இரண்டொரு நாளில் தெரியவரும்,” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் ஆவணங்களில் ஏற்கெனவே அத்தகையவர்களின் பட்டியல் உள்ளது[5]. அவர்களை கைது செய்ய சிறப்புபடை போலீசார் கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளனர். ஆனால் எங்களூர் அல்லது ஆந்திரபிரதேசத்தில் பதுங்கியிருக்கலாம் என சில ஊடகங்கள் கூறுகின்றன[6]. ஆகவே அத்தகைய குற்றங்கள் செய்பவர், குற்றஞ்சாட்டப்படுபவர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாவர் என அனைவரும் இவ்வாறு பதுங்குவது என்பது வாடிக்கையாகயுள்ள்து தெரிகிறது. அதாவது அவ்வாறு அவர்கள் சென்றால், உதவக்கூடியவர்கள், மறைந்துகொள்ள இடங்கள், வேண்டிய வசதிகள் முதலிய ஏற்பாடுகள் உள்ளன என்று தெரிகிறது. இதில் உள்ள அபாயத்தைக் கவனித்து முஸ்லீம் நண்பர்கள் இத்தகைய தீவிரவாதம், பயங்கரவாதம் இன்னும் இருப்பதை, வளர்வதை, வளர்ந்து வருவதை ஆதரிக்கக் கூடாது; அச்செயல்களில் ஈடுபடுபர்களுக்கு ஆதரவு / உதவி செய்யக் கூடாது. இடம்-பொருள்-பணம் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது. இந்திய நாட்டு சரித்திரத்தில் முஸ்லீம்கள் ஆண்ட காலத்தில் இந்துக்களுக்கு என்ன சித்திரவதைகள், அவமானங்கள், தீங்குகள், கஷ்டங்கள், என்னவேல்லாம் நேர்ந்துள்ளதன என்பதனை நினைவில் கொண்டு, தேசப்பிரிவினை ஏற்பட்டுக் கூட இந்தியாவிலேயே இருப்போம் என்று முடிவு செய்த முஸ்லீம்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இக்கால முஸ்லிம்களை மாற்றவேண்டும். சேர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
In a breakthrough in the case of pipe bomb that was planted on the scheduled route of BJP leader L.K. Advani, the special investigation team of the CB-CID arrested two persons on Tuesday. The accused were named as Abdul Rahman, 26, son of Sikkander Basha, of Nelpettai in Madurai and Ismath, 22, son of Khaja Hussain, of Simmakkal in Madurai. An official release[7] said the two were arrested for their “involvement in the perpetration of the crime.” Police said Rahman was related to Muslim fundamentalist Imam Ali who was killed in an encounter in Bangalore in September 2002. |
என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூத்த தலைவர் எல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[8].
தேடப்பட்டுவரும் குற்றாஞ்சாட்டப்பட்டவரின் நண்பரின் மனு: சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், “நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்[9].
தேசிய லீக் கட்சி (முஸ்லீம் அரசியல் கட்சி) எழுதிய கடிதம்: “இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவும் இல்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. எனவே பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, என்று மனுவில் கூறியுள்ளார்[10]. இந்த மனு விசாரணைக்கு வந்தது.
போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது: போலீஸார் தரப்பில், “பக்ருத்தீன் என்பவர் கைது செய்யப்படவும் இல்லை அல்லது சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவுமில்லை. ஆனால், தலைமறைவாகியுள்ளார்[11]. மனுதாரர் வேண்டுமென்றே இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கிஞ்சித்தேனும் எந்த ஆதாரமும் இல்லை[12]. அடிப்படையே இல்லாதது, வெறுமையானது, பொய்யானது[13]. ஆகவே தள்ளுபடி செய்யப்படவேண்டும்”. என்று வாதிடப்பட்டது.
நீதிபதிகள் தள்ளூபடி செய்தது: நீதிபதிகள் குறிப்பிட்ட கேள்விகள் கேட்டபோது மனுதாரர் தரப்பில் சரியான பதில் சொல்லப்படவில்லை. பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மனுதாரர் குறிப்பிடும் பக்ரூதினை போலீசாரை கைது செய்யவில்லை என்றும் போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகிறார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்[14]. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்[15]. இப்பட்ரி நீதிமன்றங்களில், உள்ள சட்டங்களின் படி, வழக்குகளைத் தொடுத்து திசைத் திருப்பலாம். ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?
[11] In a counter affidavit in response to a Habeas Corpus plea filed by one M Abdullah, Inspector of CB-CID Madurai unit’s SIT R Krishnarajan said Bakrudeen was neither arrested nor detained illegally by the team as claimed by the petitioner but was absconding.
[12] Abdullah had come up with such “a bald and baseless” allegation only to defame CB-CID, the affidavit claimed.
பிரிவுகள்: அஜிராபானு, அடையாளம், அந்நியசெலாவணி, அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இமாம், உள்துறை சூழ்ச்சிகள், காஃபிர், குரூரம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டிடோனேடர், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், டைம், த.மு.மு.க, தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், பலிக்கடா, மனித நேய மக்கள் கட்சி, மனித வெடிகுண்டு, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், மனுதாரர், முஜாஹித்தீன், Uncategorized
Tags: அத்வானி, அத்வானி கொலை, அத்வானி கொலை திட்டம், ஆள்கொணர்வு மனு, இமாம் அலி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குற்றச்சாட்டு, கைது இல்லை, கொலை முயற்சி: கைது, சட்டவிரோதமாக அடைத்து வைப்பு, ஜிஹாத், முஸ்லீம்கள்
Comments: 4 பின்னூட்டங்கள்
நவம்பர் 5, 2011
பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!
பள்ளிக்குச் செல்லாத அப்துல் மஜீத் குப்பைத்தொட்டியிலிருந்து டிடோனேரை எடுத்தல்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தில் மு.ந.அ.தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத். முகமது அன்சாரி. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்[1]. அப்துல் முஜீத் (14) அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மற்றொரு செய்தி: இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளான். அப்போது, அது திடீரென்று வெடித்தது[2]. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸார் விசாரணை: மாணவன் கையில் டெட்டனேட்டர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்[3]. பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு[4]? என்ற தலைப்பில் இப்படி ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பன்றியைக் கொல்ல வாங்கும் வெடிகூட எப்படி குப்பையில் கிடைக்கிறது, அதை எப்படி சிறுவன் எடுக்கிறான், எடுத்தவன், வயர்களை இணைக்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு சிறுவர்கள் அறிவில்லாமல் இருக்கும் போது, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குப்பைத்தொட்டியில் எளிதாக கிடைக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது அல்லது போட்டிருக்கக் கூடாது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல் எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தமாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5].
பன்றி வெடியால் அப்பாவி சிறுவன் காயம்: அப்பாவி சிறுவன் தெரியாமல் செய்திருக்கும் பட்சத்தில் முதலில் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. “ஆனால் பரப்பரப்பு செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத ஆரம்பித்தனர்”, என்கிறது அந்த இனைத்தளம்[6]. மேலும், “ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக் கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது”, என்றும் கூறுகிறது[7]. பன்றியைக் கொன்றுவிட்டு அல்லது அவ்வாறு உபயோகப் படுத்திய பிறகு, ஏன் அப்படி டிடோனேடரை அஜாக்கிரதையாக விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவில்லை.
எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்கள், வன்முறை, மனப்பாங்கு வளரும் விதம்: பன்றியைக் கொல்ல, கிணறு தோண்ட, பாறைகளை உடைக்க, ரோடு போட, குவாரிகளில் உபயோகப்படுத்த என பல காரியங்களுங்கு வெடிப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, அவ்வாறு வெடிப்பொருட்களை வாங்குபவர்கள் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை. மற்ற வகை வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் எப்படி கிடைக்கின்றன என்று ஏற்கெனவே விளக்கியுள்ளேன்[8]. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளதால் தான் சிறுவர்களுக்கு அத்தகைய எண்ணம் வருகிறது. கத்தியைப் பார்த்தவுடன் கழுத்தை வெட்ட வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராது. அப்படி வந்தால், அத்தகைய காட்சிகளைப் பார்த்து, மனத்தில் பதிய வைத்துக் கொண்டதாலும், மனம் அதற்கேற்றப்படி பழகிப்போனதாலும் பயமின்றி அத்தகைய மனம் உருவாகி விடுகிறது. இன்றைய திரைப்படங்களிலேயே, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது போல, குண்டுகள் வெடிப்பது போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். சிறுவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளில் பெரும்பாலாக துப்பாக்கியை வைத்து சுடுவது, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது, குண்டுகள் வெடிப்பது, மனிதர்களை கண்டபடி சுட்டுக் கொல்வது………….என்றுதான் உள்ளன. அவ்வளவு ஏன் சிறுவர்களுக்கு துப்பாக்கி பொம்மைகள் அல்லது பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெற்றோர்களே தயாராக உள்ளார்கள். அஹிம்சை பேசும் நாட்டில் தூக்க்குத் தண்டனைத் தேவையா என்று கேட்கும் தமிழ்நாட்டில்[9], முதலில் இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வேதபிரகாஷ்
05-11-2011
[6] The Hindu, Boy injured in mysterious blast, Tirunelveli, November 5, 2011
A mysterious explosion near Tenkasi on Thursday evening in which a school boy sustained injuries has triggered suspicion among the police that the explosive material might have been meant for use against senior Bharatiya Janata Party leader L.K. Advani during his Jan Chetna Yatra at Tenkasi, but discarded later.
http://www.thehindu.com/news/cities/Madurai/article2600388.ece
[9] இன்று டிவியில் “வீரவாண்டி” படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
பிரிவுகள்: அத்வானி, டிடோனேடர், டெட்டனேட்டர், பன்றி, பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள்
Tags: அத்வானி, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், டெட்டனேட்டர், திருநெல்வேலி, தென்காசி, பன்றி, பரவும் தீவிரவாதம், பேட்டரி கட்டைகள், மனப்பாங்கு, மனம், முஸ்லீம்கள், ரத யாத்திரை, ரதம், வன்முறை, வயர் துண்டுகள்
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்