Archive for the ‘ஜோதிடம்’ category

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (5)

நவம்பர் 12, 2015
The Sword of tipu sultan - praises Allah for killing kafirs

The Sword of tipu sultan – praises Allah for killing kafirs

மைசூர் மஹாராஜாவும், திப்பு சுல்தானும்: திப்பு சுல்தான் உடையாரிடமிருந்து அரசை அபகரித்துக் கொண்டான். தானாக எந்த அரசையும் உருவாக்கிவிடவில்லை. அப்பொழுது, கர்நாடகம் “மைசூர்” கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. “மைசூர் மஹாராஜா” என்று ஒரு மதிப்பு இருந்தது. “நீ என்ன பெரிய மைசூர் மஹாராஜாவா?” என்று சாதாரண மக்கள் கேட்கும் அளவுக்கு அவர் இருந்தார். கலை, விஞ்ஞானம், இசை போன்றவை ஆதரிக்கப்பட்டன. இதனால், “மைசூர்” என்ற அடைமொழியுடன் பல வார்த்தைகள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இசை, கலை என்று பல உருவாகின. சமையலைப் பொறுத்த வரையில் மைசூர் பாகு, மைசூர் ரசம், மைசூர் போண்டா, மைசூர் பகோடா, என்று அன்றும், மைசூர் சந்தன சோப், மைசூர்பா என்று இன்றும் பல தோன்றின. கர்நாடக சங்கீதம், இசை என்ற வழக்கும் உருவாகின. கலைஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், என்று பலரும் மைசூர் அரசால் ஆதரிக்கப்பட்டனர். ஆனால், திப்புவின் ஆட்சியில் பாரசீகத் திணிப்பு இவற்றை தடுத்தது. ஜிஹாதி மதவெறியில் அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பது மட்டில், அவன் இந்திய தேசியவாதியாகி விட முடியாது. தன்னுடைய வாழ்விற்காக அவன் பலவழிகளைக் கையாண்டான். பிரான்ஸ், இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அதற்காகத்தான். ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று தனது கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

Studio fire during shooting of tele-serial 'The Sword of Tipu Sultan kills more than 40- 1989

Studio fire during shooting of tele-serial ‘The Sword of Tipu Sultan kills more than 40- 1989

கத்தி அல்லது குல்லாமற்றும்திப்புவின் கத்தி: “கத்தி அல்லது குல்லா” என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தான்[1]. ஆனால், முஸ்லிம் ஆசிரியர்கள் அவற்றை வேறுவிதமாக திரித்து விளக்கம் கொடுத்து, அவனை “ஆங்கிலேருக்கு எதிரான போராளி” போன்று சித்தரிக்கின்றனர்[2]. “கத்தி” என்றால் கத்தி முனையில் மதமாற்றம், அதாவது, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள் அல்லது செத்து மடி”, என்ற குரூரமான கொள்கையைக் கடைபிடித்தான். அதனால் “கத்தி” என்றால், “இந்துக்களுக்கு சாவு” என்ற பொருளாகியது. அதனால் தான் “திப்புவின் கத்தி” (The sword of Tipu Sultan) என்றபோது, அவர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அது அவர்களின் மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய கௌரவத்தை இழிவுபடுத்துவதாக இருந்தது. ஆனால், மல்லையா போன்றவர்கள் அதனை ஆதரிக்க முயன்றனர். கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், அப்பொழுதைய கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[3].

Tipu letters - cap or sword policy followed

Tipu letters – cap or sword policy followed

திப்புமற்றும்திப்புவின் கத்தி” – தீயசக்திகளின் சின்னங்கள்: கர்நாடகா மற்றும் கேரள கடற்கரையில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றும், மதமாற்றம் செய்தும், குரூரங்களை செய்ததால், திப்பு ஒரு தீயசக்தி, துர்தேவதை (evil force), விலக்கப்பட வேண்டியது ஒன்று, “சபிக்கப்பட்ட பெயர்” (cursed name) என்ற விதத்தில் கருதப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் கூட அப்பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பதில்லை. அவர்களது பாஷையில் சொல்வதானால், இரண்டுமே “சைத்தானின் சின்னங்கள்” ஆகும்[4]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது கர்நாடகாவில் காங்கிரஸ் போன்ற  கட்சிகள் அத்தகைய தீய சக்தி, தீய சின்னங்களை வைத்து ஆதாயம் தேட பார்க்கின்றன. ஆனால், இவற்றைப் பின்பற்றியவர்கள் அழிவைத்தான் தேடினர்.

Tipu satanic force killing many Hindus- Hindukush

Tipu satanic force killing many Hindus- Hindukush

தியசக்தி திப்பு அழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபனமானது: திப்பு சுல்தான் கத்தி [“Sword of Tipu Sultan”] என்ற தொலைக்காட்சி தொடரை தூர்தர்ஷனில் 1990ல் காண்பித்தனர், பிப்ரவரி 8. 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர்[5]. இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[6]. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது. கத்தியை வாங்கிய மல்லையாவும் திவாலா நிலையை அடைந்து, பல குடும்பங்களின் வாழ்க்கையினைக் கெடுத்தான். இப்பொழுதும், சித்தராமைய்யாவின் “திப்பு ஜெயந்தி” இரண்டு உயிர்பலிகளைக் கொண்டது. இன்னும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும்.

Tipu satanic force killing many kafirs- Hindukush

Tipu satanic force killing many kafirs- Hindukush

திப்புவின் ஜோதிட நம்பிக்கை: திப்புவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருந்தது. இதனால், தனது அரசவையில் பிரத்யேகமாக ஜோதிடர்களை வைத்திருந்தான். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தான். இவ்விதத்தில் தான் அவன் சில கோவில்களுக்கு மானியம் கொடுத்தது, பூஜை செய்தது போன்றவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் மீதான மதிப்பு அல்லது உண்மையிலேயே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் 1790ற்குப் பிறகு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதால், அவனது அத்தகைய ஈடுபாடு அதிகமாகியது. சிருங்கேரி சங்கராச்சாரியுடனான தொடர்பும் இவ்வகையில் ஏற்பட்டது தான். அவருடைய காலில் விழுந்தான் என்றும் குறிப்புகள் உள்ளன[7]. இதையெல்லாம், ஆசாரமான முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

The real Tipu sultan, tyrant- believing horoscope

The real Tipu sultan, tyrant- believing horoscope

ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி: ஔரங்கசீப் கூட கோவில்களுக்கு மானிய வழங்கினான் என்று சில சரித்திராசிரியர்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம், இக்கால கருணாநிதி போன்றது. அவரும் தங்களால் தான் திருவாரூர் ஆழித்தேர் ஓடியது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அந்த ஆளின் இந்து-விரோதத்தை எல்லோரும் அறிவர். அவர் காலத்திலும் சில கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்தது. அதாவது முதலமைச்சர் என்ற ரீதியில், இந்து அறநிலைத் துறையின் கீழ் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதால், அழைப்பு இதழ்களில் முதல் பக்கத்திலேயே, கருணாநிதியின் புகைப்படம் தான் போடப்பட்டது. இதெல்லாம் சாதாரண விசயம். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும், அவை தானாக நடந்திருக்கும். அதாவது பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதினால், அரசு ஆதரவு இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், காலக்கிரமப்படி நடக்கவேண்டிய கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.  கருணாநிதிக்கும் ஜோதிட நம்பிக்கை உள்ளது. ஆகவே, இவர்கள் (ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி) கோவில்களுக்கு மானியம் கொடுத்தது அந்த ரீதியில் தான்! இனி திப்பு விவகாரத்தை விவரரமாகப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-11-2015


[1] Tipu Sultan’s notorious jihâd – Islamic war-slogan – was SWORD (death) or CAP (Islamic honour, i.e. forcible conversion), a cruel option for a hapless Hindu population.

[2]  Prof. B. Shaik Ali, International Relations of Tipu Sultan, Islamic Voice, Monthly,   Vol 13-02 No:146    *   FEBRUARY 1999/ RAMADAN 1419H ;email: editor@islamicvoice.com

http://islamicvoice.com/february.99/tippu.htm=

[3] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

[4] If Tipu Sultan was a much-loved and respected Muslim ruler, as claimed by his present-day admirers, why is it that even Muslim do not name their children as Tipu, either in Mysore or in Malabar? Obviously, the name itself is a cursed name. Anyway, that is the belief in the entire West Coast and Mysore

[5] http://indiatoday.intoday.in/story/studio-fire-during-shooting-of-tele-serial-the-sword-of-tipu-sultan-kills-more-than-40/1/323127.html

[6] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[7] When the astrologers predicted an approaching malefic period from 1790 onwards and the combined forces of the British, the Nizam and the Marathas started surrounding Srirangapatanam, Tipu Sultan panicked and therefore did some good deeds – offering land-grants and even pujas and feeding Brahmin – mainly to ward off the evil effects and to get assistance from his Hindu subjects in his war efforts. He was reported to have even fallen prostrate before His Holiness Sringeri Shankaracharya and sought the latter’s pardon and blessings (Sakthan Thampuran by P. Raman Menon, and History of Mysore by Lewis Rice).