Archive for the ‘ஜீஹாதிகள்’ category

ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

23-10-2022 அன்று ஐஎஸ் பாணியில் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4].  இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5].  இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.

ஐசிஸ், ஜிஹாத் முதலிய வாசகங்கள் கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.

தன்னிச்சையாக நடத்தப் பட்ட தீவிரவாத செயலா, கூட்டு முயற்சியா போன்ற வாதவிவாதங்கள்செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஜிஹாதி புத்தகங்கள், இலக்கியம் முதலியவை கண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.

முபீன் ஒரு சுயமான தீவிரவாதி, அவனுக்கு அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை: “அவருடைய உக்கடம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வெடிகுண்டு தயாரித்தல், ஜிஹாத் மற்றும் பிற மதங்களைப் பற்றிய அவரது வெளிப்படையாகத் தெரிகிறது. நாங்கள் விசாரித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கருத்துப்படி, ஜமேஷா முபீன் இந்திய முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தினத்தந்தி, கோவையில் கார் வெடிப்பு: முபின் .எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சி தரும் பின்னணி, நவம்பர் 4, 3:31 pm

[2] https://www.dailythanthi.com/News/State/car-blast-in-coimbatore-mubin-is-terrorist-stunning-background-829318?infinitescroll=1

[3] தமிழ்.ஒன்.இந்தியா, உடல் முழுக்கஷேவ்’! ’விஸ்வரூபம்பாணியில் தயாரான ஜமேஷா முபின்! கோவை கார் வெடிப்பில் வெளியானபகீர்,’ By Rajkumar R Published: Friday, November 4, 2022, 9:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/coimbatore/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast-483633.html

[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.

[6] மாலைமுரசு, ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5

[7] https://malaimurasu.com/Key-documents-found-in-Jamesha-Mubeens-house-link-to-ISIS

[8] கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

Sakthi by SAKTHI November 4, 2022

[9] https://www.news4tamil.com/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast/

[10] The News Minute, Coimbatore blast: Handwritten notes recovered from Jamesha Mubin’s house, THURSDAY, NOVEMBER 03, 2022 – 16:53

[11] https://www.thenewsminute.com/article/coimbatore-blast-handwritten-notes-recovered-jamesha-mubin-s-house-169553

[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST

[13] https://www.timesnownews.com/india/coimbatore-car-blast-documents-talking-about-jihad-kafirs-and-muslims-recovered-from-jamesha-mubins-house-article-95273880

[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST

[15] https://www.republicworld.com/india-news/politics/in-coimbatore-blast-case-docs-on-jihad-and-radicalisation-found-at-deceased-mubins-house-articleshow.html

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-six

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிர‌ஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிர‌ஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting
தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

சுலைமான் செயல்பட்ட விதம்:  “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

moideen-is-operative-ie-cutting-25-10-2016

சிரியாவுக்கு சென்று .எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.

Name in English பெயர் ஊர் / மாநிலம்
Adnan Hussain from Karnataka[4] அட்னன் ஹுஸைன் பட்கல், கர்நாடகா
Mohammed Farhan from Maharashtra மொஹம்மது பர்ஹன் மஹாராஷ்ட்ரா
Sheikh Azhar Al Islam from Kashmir. ஷேக் அஸ்ர் அலி காஷ்மீர்
Abdul Basith, a youth from Hyderabad அப்துல் பஸித் ஹைதரபாத், தெலிங்கானா
Sultan Armar சுல்தான் அர்மர்
Shafi Armar. சஃபி அர்மர்
Subahani Haja Mohiddheen சுபஹனி ஹாஜா மொஹிதீன் கடையநல்லூர், தமிழகம்
Suwalik Mohammed சுவாலிக் முகமது (26) கொட்டிவாக்கம், சென்னை
Suliman  சுலைமான் திருவான்மியூர்

இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]

[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html

[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.

Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.

http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/

[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.

 

அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

ஒக்ரோபர் 14, 2013

அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் [Jamiat-e-Ahle Hadith (JeH)] என்ற இயக்கத்திலன் தலைவர் மௌலானா சௌகத் ஷா [Moualana Shoukat Shah] தீவிரவாதிகளால் 08-04-2011 அன்று கொலை செய்யப்பட்டார்[1]. இவரும் பிரிவினையை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவர்[2]. லஸ்கர்-இ-தொய்பா தாங்கள் தாம் அவரைக் கொன்றது என்று ஒப்புக் கொண்டது[3]. அதன் தளபதி, ஜாவித் முன்சி பில்லா பாபா மற்றும் நிஸார் கான் முதலியோரை தான் தான் படையில் சேர்த்துக் கொண்டான் என்றும் ஒப்புக் கொண்டான். 2010ல் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, வெடிமருந்துகளை எடுத்துச் சென்றதாகவும் விவரித்தான். பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றை சேர்த்து இஸ்லாமிய இறையியலோடு இணைத்து, ஜிஹாத் என்ற கொள்கைகளில் நியாயப் படுத்தி, மக்களைக் கொன்று வரும் போது, அவர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை நன்றாகவே அறிய முடிகின்றது[4].

கொலையாளிகளைக்கண்டுபிடிக்கஉருவாகப்பட்டகுழு: வேடிக்கை என்னவென்றால், அக்குழுவில் இடம் பெற்றவர்களே பிரிவினைவாதிகள் தாம்[5]:

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் [Mirwaiz Umar Farooq],
  2. சையது அலி ஷா ஜிலானி [Syed Ali Shah Geelani],
  3. யாசின் மாலிக் [Yasin Malik],
  4. செயிக் மொஹம்மது ஹஸன் [Shiekh Mohammad Hassan – Jamaat-e-Islami chief],
  5. குலாம் ரசூல் மாலிக் [Ghulam Rasool Malik acting president of the Jamiat Ahle Hadith],
  6. மௌல்வி அப்பாஸ் அன்சாரி [Moulvi Abbas Ansari Shia leader}
  7. ஆகா சைது ஹஸான் [Agha Syed Hassan, Shia leader].

ஆகவே, இவர்களே, ஒருவரை ஒருவர் கொன்று கொள்வர், அடையாளம் கண்டு கொள்வர் அல்லது காட்டிக் கொள்வர்-கொல்வர். மறுபடியும் ஜிஹாத் என்று கிளம்பி விடுவர். இவர்களால் எப்படி அமைதி வரும்?

சையதுஅலிஷாஜிலானியின்இரட்டைவேடங்கள், இரட்டைநாக்குகள், முரண்பட்டபேச்சுகள்முதலியன:  இந்திய அரசாங்கம், இப்பொழுது தேவையில்லாமல் இந்த பிரிவினைவாதியை ஆதரித்து வருகிறது. அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வருகின்றது. ஆனால், இவர் தீவிரவாதிகளையும் ஊக்குவித்து வருகிறார். மௌலானா சௌகத் ஷா (1956-2011) கொலையுண்ட பொழுது ஜிலானி ஷா, காலிப்புகளைப் போல கொலை செய்யப்பட்டிருகிறார் என்று பெருமையாகச் சொல்லி, தேற்றியிருக்கிறார். இந்நிலையில் பிடிபட்டுள்ள ஜாவித் முன்சி பில்லா பாபா [Javed Munshi Billa Papa] மற்றும் நிஸார் கான் [Nisar Khan] என்ற கொலையாளிகளை பக்ரீத் போது (15-10-2013) விடிவிக்குமாறு இஸ்லாமிய இயக்கங்கள் வெளிப்படையாக, அதிரடியாக கேட்டு வருகின்றன[6]. இதில் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதிகளின் ஆதரவாளர், சையது அலி ஷா ஜிலானியும் [Syed Ali Shah Geelani] அடங்குவார். ஜிலானி தனது மகனின் கொலைகாரர்களை “முஜாஹித்தீன்” என்று வர்ணித்திருப்பதை ஆட்சேபித்துள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த, அமீனா பேகம் என்கின்ற மௌலானா சௌகத் ஷாவின் தாயார், ஜிலானி எப்படி இவ்வாறு கேட்க முடியும் என்று குமுறியுள்ளார்.

முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள்என்றெல்லாம்யார்யார்என்றுஅடையாளம் காண் வேண்டும்: கொலைகாரகளுக்கும், முஜாஹித்தீன்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள வேண்டும். அன்றொரு மாதிரி, இப்பொழுது ஒரு மாதிரி பேசுவதை விடவேண்டும், செய்துள்ள பாவத்தை யாரும் மறக்க முடியாது, அல்லாவை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்[7] என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்[8]. ஒமர் அப்துல்லா அரசாங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. இஸ்லாம் பெயரில் இன்று யார்-யார் எல்லாம் “ஜிஹாத்” என்று கிளம்பி விட் உகிறார்கள். முஸ்லிம்களையே, முஸ்லிம்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

© வேதபிரகாஷ்

14-10-2013


[5] Tehreek-ul-Mujahideen presented its report to the Investigation Committee established by the separatist groups to probe Shah’s murder. The committee has among its members Mirwaiz Umar Farooq, Syed Ali Shah Geelani, Yasin Malik, Jamaat-e-Islami chief Shiekh Mohammad Hassan, acting president of the Jamiat Ahle Hadith Ghulam Rasool Malik and Shia leaders Moulvi Abbas Ansari and Agha Syed Hassan.

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws290811Kashmir.asp

[6] Mother of slain Jamiat leader flays Geelani – PTI –  Srinagar, Oct 13 (PTI) The mother of slain Jamiat-e-Ahle Hadith (JeH) leader Moualana Shoukat Shah today criticised hardline Hurriyat Conference leader Syed Ali Shah Geelani for reportedly demanding release of her son’s alleged killers. Shah’s mother, Ameena, expressed astonishment over the press statements by some outfits including that of Geelani, “who are time and again issuing statements in favour of the killers” of her son.