Archive for the ‘ஜிஹாதி அமெரிக்கர்’ category

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

மார்ச் 20, 2010

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

வேத பிரகாஷ்

அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi

Humar-hammaami-christian-turned-jihadi

அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான்.  அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd

American-jihadi-Boyd

அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork

Najibullaah-zazi-Newyork

  • அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
  • ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
  • நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
  • டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.
Nidal-hassan-Malik-fort-hood

Nidal-hassan-Malik-fort-hood

அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad

bin-laden-of-Internet-cyber-jihad

அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 21-03-2010


[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.

 

[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges

http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects

[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis

[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.

[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.

[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.

[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!

[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்!

மார்ச் 20, 2010

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.

ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!

LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

https://i0.wp.com/img.thesun.co.uk/multimedia/archive/01002/Jihad_Jane_682_1002325a.jpg

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].

பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!