கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

கோவை கார் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தொடரும் விசாரணை, சோதனை முதலியன: கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர், என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் உள்ள 6 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். கோவை மாநகர தனிப்படை போலீசார் கோவையில் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல பேரின் வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர்[1]. மேலும் போலீசார் நடத்திய விசாரணையின் படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பால் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டினர்[2].

யார் இந்த 53 அல்லது 100 பேர் இளைஞர்கள்?: 53, 100 பேர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இந்த இளைஞர்கள் யார் என்று குறிப்பிடப் படவில்லை. அவர்களது பெயர்களும் தெரிவிக்கப் படவில்லை. நல்லது, ஏனெனில், விசாரணை நடந்து வரும் பொழுது, எல்லா விவ்ரங்களையும் வெளிப்படையாக சொல்லி விடமுடியாது. ஆனால், உலாமாக்களை வைத்து கவுன்சிலிங், ஆலோசனை என்றெல்லாம் குறிப்பிடும் பொழுது, அவர்கள் முஸ்லிம்கள் என்றாகிறது. ஏனெனில், உலாமாக்கள் அவ்வாறு மற்றவர்களுக்கு கவுன்சிலிங், ஆலோசனை சொல்ல மாட்டார்கள். ஆகவே, செக்யூலரிசத் தனமாக, இவ்விவரங்கள் ஊடகங்களில் எளியிடப் படுகின்றன என்பது தெரிகிறது. ஒன்று பாதுகாப்பு, ரகசியம் காக்கப் படவேண்டும் என்றால், அதற்கான முறைகளை அரசாங்கம் தொடந்து செய்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர், அங்கு, சந்தேகிக்கப் படும் வகையில் ஏதோ நடக்கிறது எனும் போது, அதை கவனிக்கப் பட வேண்டும். தொடர்ந்து வெடிகுண்டு சம்பந்தப் பட்ட ரசாயனங்கள் விற்கப் படுகின்றன, வாங்கப் படுகின்றன என்றாலும், கவனிக்கப் படவேண்டும். குவாரி போன்றவற்றிக்கு என்று வாங்கி, மற்ற காரியங்களுக்கு உபயோகிக்கப் படுகின்றன எனும்பொழுதும், அவை கவனிக்கப் படவேண்டும். இவையெல்லாம் தாண்டித் தான், இத்தகைய வெடிப்புகள் நிகழ்கின்றன.

உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணை: என்.ஐ.ஏ இவ்வழக்கை எற்றுக் கொண்டதாக ஏற்கெனவே செய்தி வந்து விட்டது. ஆனால், உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாநகரில் 70 பேர் முதல் 100 பேர் வரை ஐ.எஸ். இயக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு உள்ளது தெரியவந்தது[3]. தற்போது போலீசார் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்[4]. அவர்களது பட்டியல், விவரங்களும் தயாரிக்கப் பட்டு வருகின்றன[5]. இதையடுத்து அவர்களுக்கு உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளனர்[6], போன்ற செய்திகளும் தொட்ர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமாக, செய்திகள் வாசிக்கும் வாசகர்களுக்கு, மத்திய அல்லது மாநில உளவுத்துறை போலீசார், அல்லது என்.ஐ.ஏ அல்லது யார் விசாரணை நடத்துகிறார்கள் என்ற குழப்பம் ஏற்படலாம். ஒருவேளை விசாரணை நடக்கும் பொழுது, அவர்களால், முழுவிவரம் கொடுக்கப் படாதல் நிலை இருக்கலாம். அப்பொழுது, ஊடகங்கள் முரண்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது.

ஏற்கனவே கைதான ஆம்பூர் மாணவன் வீட்டில் சோதனை[7]: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது வீட்டில் மத்திய உளவு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மீர் அனாஸ் அலி தனது லேப்டாப்பை உடைத்ததாக தெரிகிறது[8]. உளவுதுறையினர் அந்த லேப்டாப் மற்றும் அவரது இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக மீர் அனாஸ் அலி செயல்பட்டு வந்ததும், வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று ஆம்பூரில் உள்ள அனாஸ் அலி வீட்டிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வந்து சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனாஸ் அலி வீட்டில் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதா, இல்லையா?: ஆனால், தமிழ்.இந்து, இது போல செய்தி வெளியிட்டுள்ளது[9], “கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியது. அவரது வீட்டுக்கு அருகில் ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மிர் அனாஸ் அலி 90 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டில் வழக்கு தொடர்பாக வருவாய்த் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை[10] என்றனர்.” அதாவது, தினகரன், “வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றும், தமிழ்.இந்து, “எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை,” என்று போலீஸார் சொன்னதாகவும் செய்திகள் வந்துள்ளன. கோவை கும்பலுக்கும், இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற நிலைதான் தெரிகிறது.

தென்னகத்தில் உள்ள தீவிரவாத இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்: தீவிரவாதம் தமிழகம், கேரளா, கர்நாடகா என்றெல்லாம் இணைந்துள்ளது என்பது கடந்த குண்டுவெடிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். விசாரணையின் போது, இந்த மூன்று மாநில போலீசார், என்ஐஏ போன்றோர் வந்து செல்வது அறிந்த விசயமே. இதே போல தெலிங்கானா-ஆந்திரா தொடர்புகலும் உள்ளன. இந்த மூன்று மாநில எல்லைகள் அருகிலுள்ள இடங்களில் காடுகள், மறைவான இடங்கள், ரிசார்ட்டுகள் என்றெல்லாம் இருப்பது தெரிந்த விசயமே. கனிமங்கள், மரங்கள் தொடர்ந்து கடத்தப் பட்டு, கேரளாவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. ஐஎஸ் தீவிரவாத சார்பு கொண்டவர்கள், விருப்பம் மிக்கவர்கள், மனதளவில், சித்தாந்த ரீதியில் ஆதரிப்பவர்கள், …………………………..போன்றவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குள் இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவற்றை கண்காணிக்க முடியுமா-முடியாதா என்பதை சாதாரண மக்கள் ஆராய்ச்சி செய்ய முடியாது.
வேதபிரகாஷ்
07-11-2022

[1] தமிழ்.இந்து, கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 53 இளைஞர்களை கண்டறிந்து போலீஸ் கண்காணிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 06:48 AM, Last Updated : 06 Nov 2022 06:48 AM.
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/893049-police-surveillance-of-53-youths-in-coimbatore-for-pro-isis-stance-3.html
[3] தீக்கதிர், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு, வாவட்ட செய்திகள், நவம்பர் 5, 2022.
[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/turmeric-price-hike-makes-farmers-happy
[5] தமிழ்.முரசு, 60 இளையர்களுக்கு நல்வழிப் பயிற்சி, 7 Nov 2022 05:30
[6] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20221107-99204.html
[7] தினகரன், கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-06@ 00:37:1.
[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811864
[9] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்பூர் இளைஞர் வீட்டில் சோதனை, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 07:00 AM; Last Updated : 06 Nov 2022 07:00 AM
[10] https://www.hindutamil.in/news/tamilnadu/893045-ambur-youth-house-raided-with-links-to-isis-2.html
அண்மைய பின்னூட்டங்கள்